என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகத்தில்   அ.தி.மு.க.  உறுப்பினர் சேர்க்கை
    X

    தியாகதுருகத்தில்   அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை

    தியாகதுருகத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை

    • தியாகதுருகத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    :தியாகதுருகத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர அவைத் தலைவர் அய்யம்பெருமாள், துணை செயலாளர் கிருஷ்ணராஜ் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி வரவேற்றார். நகர செயலாளர் ஷியாம் சுந்தர் தலைமை தாங்கி தியாக துருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    குறிப்பாக இளை ஞர்கள், இளம்பெண்கள் மற்றும் புதிய வாக்காளர்களையும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து வார்டு செயலாளர்களிடம் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார். இதில் நகர பொருளாளர் பாண்டு, மாவட்ட பிரதிநிதி வேலுமணி, ரமேஷ், இளைஞரணி செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர இணை செயலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×