திருக்கோவிலூர் நகராட்சியில் தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை

தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர தி.மு.க. செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்று வருகிறது.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் முருகன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்..
திருக்கோவிலூரில் நகர திமுக செயலாளர் கோபி தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம். அருகில் நகர மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரிகுணா, நகர அவை தலைவர் குணா மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
திருக்கோவிலூரில் நகர திமுக செயலாளர் கோபி தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம். அருகில் நகர மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரிகுணா, நகர அவை தலைவர் குணா மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
Published on

கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலூர் நகர தி.மு.க. சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர தி.மு.க. செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்று வருகிறது. 11-வது வார்டு பகுதிகளில் நகர்மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் முருகன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர தி.மு.க. அவை தலைவர் குணா, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர், தொ.மு.ச நிர்வாகி சரவணன், மண்ணெண்ணை கடை செல்வம், பட்டறை சரவணன், இளைஞர் அணி நிர்வாகி கார்த்தி மற்றும் டிரைவர் சிவா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியின் போது திமுகவில் இணைந்த அனைவருக்கும் நகர திமுகவைத் தலைவர் குணா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு புத்தகம், இலவச சேலை மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பரிசாக வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com