என் மலர்

  நீங்கள் தேடியது "ஆர்ப்பாட்டம்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நல வாரிய பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • முறைசாரா தொழிலாளர்கள் நல வாரிய பதிவை நேரடியாக பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

  காஞ்சிபுரம்:

  காஞ்சிபுரத்தில் முறைசாரா தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  முறைசாரா தொழிலாளர்கள் நல வாரிய பதிவை நேரடியாக பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும், பணப்பயன் கேட்டு முறையிட்ட மனுக்களை காலத்துடன் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  பென்ஷன் தொகை ரூ.3000 மாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு கட்சியினர் காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நல வாரிய பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்கம் மாவட்ட தலைவர் திருஞானம், சிஐடியு மாநிலச் செயலாளர் முத்துக்குமார், சிவப்பிரகாசம், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களைஎழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் இன்று கட்டுமான, முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி நலவாரிய அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

  மதுரை

  மதுரையில் இன்று கட்டுமான, முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  தொழிலாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய சர்வர் செயல்பாட்டை தடையில்லாமல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  பணியிடத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உதவி நிதி 2 ஆண்டுகளாக கிடைக்கப்பெறாத நிதி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை மரணமடைந்த தொழிலாளர் குடும்பத்திற்கு 3 மாதத்திற்குள் உதவி நிதியை வழங்க வேண்டும்.

  முறைசார தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகைகள் ஒரு மாதத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ஆயுள் சான்று கொடுத்த தொழிலாளர்களுக்கு உடனடியாக பென்சன் தொகையை வழங்க வேண்டும். 60 வயது முடிந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும், 55 வயதில் பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும்.

  தமிழக அரசு அறிவித்துள்ள வீட்டு வசதித் திட்டத்தை எளிமைப்படுத்தி தேவையில்லாத ஆவண ங்களை கேட்பதை கைவிட வேண்டும். திருமண உதவி பெறுவதற்கு தேவையில்லாத ஆவ ணங்கள் கோருவதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானம் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் மதுரை எல்லீஸ்நகரில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாநகர் மாவட்டச் செயலாளர் தெய்வராஜ், தலைவர் கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் அரவிந்தன், தலைவர் கண்ணன், கட்டுமான தொழிலாளர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், புறநகர் மாவட்டச் செயலாளர் மணிக்குமார், மாநில பொருளாளர் லூர்துரூபி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதிய தமிழகம் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • அப்பாவி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளித்திடவேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

  தூத்துக்குடி:

  விளாத்தி்குளம் தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் புதியதாக காற்றாலைகளை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  இதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் விளாத்திகுளம் பகுதி விவசாயிகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், உமையனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

  விளாத்திகுளம் தாலுகாவிற்குட்பட்ட அருங் குளம், ஜக்கம்மாள்புரம், வள்ளிநாயகபுரம், மந்திகுளம், இலந்தைகுளம், லட்சுமி நாராயணபுரம், விரிசம்பட்டி, நெடுங்குளம், கன்னிமார்குட்டம், தத்தனேரி, துவரந்தை, குறளயம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.

  மானாவாரி பயிர் சாகுபடியை மட்டுமே நம்பி வாழ்ந்துவரும் இப்பகுதி விவசாய நிலங்களில் தற்போது தனியார் காற்றாலை நிறுவனத்தினர் புதியதாக காற்றாலை நிறுவும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். காற்றா லைகள் அமைப் பதற்காக நில உரிமை யாளர்களான விவசாயி களிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் அத்துமீறி இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

  இதனால், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்துவரும் விளாத்திகுளம் தாலுகா பகுதி விவசாயிகள் வரும் காலங்களில் விவசாயமே செய்யமுடியாத அளவிற்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு கால்நடை களுக்கான மேய்ச்சல் தொழிலும் முடங்கியுள்ளது.

  விவசாய நிலங்களை பாழ்படுத்துவது குறித்து தட்டிக்கேட்கும் விவசாயிகள், பொதுமக்கள் மீது போலீசில் பொய் புகார் கொடுத்து வருகின்றனர். அத்துமீறி விவசாய நிலங்களை பாழ்படுத்தி வரும் தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு ஆதரவாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறையினர் இருந்து வருவது கண்டனத்திற்குரியதாகும்.

  பாதிக்கப்பட்டுவரும் அப்பாவி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளித்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

  இதில், இளைஞரணி நிர்வாகிகள் காமராஜ், கதிரவன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரிஷிவந்தியத்தை: தாலுகாவாக அறிவிக்க கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை ரிஷிவந்தியத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்கவும், அரசு கல்லுாரி அமைக்கக் கோரியும் பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரிஷிவந்தியத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார்.

  முன்னாள் மாவட்ட செயலாளர் அமுதமொழி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார், விழுப்புரம் மத்திய மாவட்ட செய லாளர் பாலசக்தி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டுதனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை ரிஷிவந்தியத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • இதில் பலர் கலந்து கொண்டு கோசமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்க திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆன்லைன் பதிவில் உள்ள குறைகளை சரிசெய்யவேண்டும். ரூ.3000 பென்சன் வழங்கவேண்டும். இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம், திருமணநிதி ரூ.50ஆயிரம் வழங்கவேண்டும். திண்டுக்கல் மாவட்ட நலவாரிய அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை பூர்த்திசெய்யவேண்டும்.

  மாவட்ட கண்காணிப்புகுழுவை உடனடியாக அமைத்து மாதம் ஒருமுறை கூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.

  மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் முருகேசன், தீத்தான், புஷ்பம், பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • சட்டமன்ற உறுப்பினர் வீட்டை இன்று முற்றுகையிட போவதாக இந்து முன்னணியினர் அறிவித்திருந்த நிலையில் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

  திருப்பூர் :

  திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் குடியிருப்பதற்கான உரிமம் மட்டுமே பெற்றுவிட்டு மத வழிபாட்டுத் தலமாக மாற்றியதாக அப்பகுதி பொதுமக்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது .

  இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த வியாழக்கிழமை பள்ளிவாசலுக்கு அதிகாரிகள் சீல் வைக்க சென்றதை அடுத்து திருப்பூர் மாநகரம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றது. இதனை அடுத்து நீதிமன்றம் 3 நாள் அவகாசம் வழங்கியது .இந்நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில். இந்து முன்னணியினர் தூண்டுதலின் பேரில்தான் வழக்கு தொடுக்கப்பட்டிருந்ததாகவும் பள்ளிவாசலுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டால் பதற்றமான சூழல் ஏற்படும் என கடிதம் அனுப்பி இருந்தார்/

  அதில் இந்து முன்னணி குறித்து அவதூறாக குறிப்பிடப்பட்டிருந்ததாக இந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர் . இந்நிலையில் இந்து முன்னணி குறித்து அவதூறாக செய்திகளை பரப்பிய சட்டமன்ற உறுப்பினரை கண்டிக்கும் வகையிலும் உடனடியாக உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பள்ளிவாசலுக்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தியும் புதிய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  மாநில செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

  ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் வீட்டை இன்று முற்றுகையிட போவதாக இந்து முன்னணியினர் அறிவித்திருந்த நிலையில் வீட்டிற்கு மாநகர காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து நடைபெற்றது

  கரூர்:

  பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கரூரில் அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து அகிலஇந்திய முற்போக்குப் பெண்கள் கழகம் சார்பில் மாவட்ட அமைப்பாளர் பிலோமினாமேரி தலைமையில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள், சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய கோரியும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர்.
  • ஆர்ப்பாட்டம் நடத்தாமல் கோரிக்கை மனுவினை தாசில்தார் ரவிச்சந்திரனை சந்தித்து விவசாயிகள்அளித்தனர்.

  வேதாரண்யம்:

  வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு எள், பயிறு, உளுந்து சாகுபடி பயிர்களுக்கு நிவராணம் கேட்டும், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய கோரியும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்நடத்த வட்டாரவிவசாய சங்க தலைவர் ராஜன், விவசாய சங்க செயலாளர் ஒளிச்சந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

  அதனை தொடர்ந்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா பேச்சுவார்த்தை நடத்தினார்.

  இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தாமல் கோரிக்கை மனுவினை தாசில்தார் ரவிச்சந்திரனை சந்தித்து விவசாயிகள்அளித்தனர் .

  பின்னர் மண்டல துணை தாசில்தார் ரமேஷ், சமூக நல தாசில்தார் ரவி, துணை தாசில்தார் வேதையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது இப்பிரச்சினைகுறித்து நாளை தாலுகா அலு வலகத்தில்வி வசாயிகள், வேளா ண்மைதுறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யபடும் என தாசில்தார் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நுண்கடன் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வசூல் குழு மூலம் பொதுமக்களிடம் கடன்களை வலுக்கட்டாயமாக வசூல் செய்வதை தடுக்க வேண்டும்.
  • மக்களின் இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி சட்ட விரோதமாக பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் .

  திருப்பூர் :

  தனியார் நிதி நிறுவனங்கள் கடன்களை வசூலிப்பதில் உள்ள குறைகளை கண்டித்து திருப்பூர் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம் சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது .

  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் க.பிரகாஷ் தலைமை தாங்கினார் . அமைப்பு செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார் . நிறுவனத்தலைவர் இப்ராகீம் பாதுஷா சிறப்புரையாற்றினார் . இதில் , சில நுண்கடன் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வசூல் குழு மூலம் பொதுமக்களிடம் கடன்களை வலுக்கட்டாயமாக வசூல் செய்வதை தடுக்க வேண்டும்.கடனில் சிக்கி தவிக்கும் மக்களின் இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி சட்ட விரோதமாக பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் . இது போன்றவர்களை போலீசார் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மண்டல செயலாளர் பிரகாஷ் , பொதுச்செயலாளர் வேல்முருகன் , தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் , அமைப்பாளர் மணி மாறன் , ஆலோசகர் அபுதாஹிர் , இளைஞரணி தலை வர் பாரூக் , செயலாளர் ராஜ்குமார் உள்பட மாநில , மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தொழிலாளர்களின் குறைகளுக்கும், ஓய்வு பெற்றவர்கள் கோரிக்கைக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும்
  • பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தங்கமணி தலைமை வகித்தார்.

  புதுக்கோட்டை:

  ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவங்கி நடத்தி முடிக்க வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளியை வெறும் கையோடு அனுப்பக் கூடாது,

  தொழிலாளர்களின் குறைகளுக்கும், ஓய்வு பெற்றவர்கள் கோரிக்கைக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என கேட்டு பொன்னமராவதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மற்றும் சிஐடியு பொன்னமராவதி கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தங்கமணி தலைமை வகித்தார்.

  நிர்வாகிகள் சிவஞானம், ராஜேந்திரன், சின்னச்சாமி, மனோகரன், வீரய்யா,சிஐடியு கிளை செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரயில்வேயை தனியார் மயமாக்கக்கூடாது. ரயில்களை தனியாருக்கு விடக்கூடாது.
  • சுகாதாரப் பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவேண்டும்

  கரூர்

  கரூரில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து எஸ்ஆர்எம்யு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ராணுவத்தில் குறுகிய கால வேலை திட்டமான அக்னிபாத் அமல்படுத்துவதை கண்டித்து சேலம் கோட்ட தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) கரூர் கிளை சார்பில் கிளை செயலாளர் எம்.அன்பழகன் தலைமையில் கரூர் ரயில் நிலைய சந்திப்பு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  துணை செயலாளர்கள் கணேஷ், சுந்தர், ராஜசேகர், பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  ராணுவத்தில் அமல்படுத்தப்பட்ட தற்காலிகப்பணி திட்டம் நாளை ரயில்வே துறைக்கும் வரலாம். ரயில்வேயை தனியார் மயமாக்கக்கூடாது. ரயில்களை தனியாருக்கு விடக்கூடாது. சுகாதாரப் பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print