என் மலர்tooltip icon

    வழிபாடு

    • வார ராசிபலன்
    • 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்

    தனுசு

    அரசு வேலை முயற்சி வெற்றி தரும் வாரம். 5ம் அதிபதி செவ்வாய் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரிக்கிறார். இது மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு. அரசாங்க வேலைக்கான முயற்சியில் வெற்றி உண்டு. அரசுப் பணியில் இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் வந்து சேர உத்தரவு வரும். குடும்பத்தில் நிம்மதி கூடும்.

    தன யோகம் சிறப்பாக அமையும். வீடு, வாகன யோகம் உண்டாகும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. சமுதாய அங்கீகாரம் அதிகரிக்கும். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் ஏற்படும். கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள்.

    குலதெய்வ அருள் கிட்டும். தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேற்படிப்பிற்கான முயற்சி கை கூடும். காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவல் படைத்து வழிபடவும்.

    மகரம்

    வெற்றிமேல் வெற்றி கிடைக்கும் வாரம். உப ஜெய ஸ்தானமான 3ம் இடத்திற்கு சனி, செவ்வாய் சம்மந்தம் உள்ளது. மனதில் நிறைவும், நெகிழ்சியும் உண்டாகும். பூர்வீக சொத்தை பிரிப்பதில் உடன் பிறந்தவர்களுடன் நிலவிய சர்ச்சைகள் விலகும். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள்.

    திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும். பங்குச் சந்தையில் புதிய முதலீடுகள் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பட்ட வேதனைகளும் சோதனைகளும், சாதனைகளாக மாறும். தந்தையின் ஆலோசனை பயன் தரும்.

    பிரிந்த தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். திருமணத் தடை அகலும். அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். வழக்குகளில் வெற்றி உறுதி. அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறையினரும் பிரபலமடைவார்கள். பண விசயத்தில் யாரையும் நம்பக்க கூடாது. கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடவும்.

    கும்பம்

    பணவரவு, வருமானம் கூடும் வாரம். ராசியில் ராகு பகவான் உள்ளார். லாப ஸ்தான பலத்தால் வருமானம் அதிகரிக்கும். புதிய வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வரும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். புதிய சொத்துக்களின் பத்திரப் பதிவு நடக்கும்.

    வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். தாய், தந்தை பொருள் உதவி செய்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகளால் முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்யலாம்.

    நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும். வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு பால் சாதம் படைத்து வழிபடவும்.

    மீனம்

    துன்பங்களும், துயரங்களும் முடிவுக்கு வரும் வாரம். ராசியில் உள்ள வக்ர சனிக்கு 2,9-ம் அதிபதி செவ்வாயின் பார்வை உள்ளது. திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். செய்த தர்மம் தலை காக்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம்.

    தடைப்பட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். நடுத்தர வர்க்கத்தின் வருமானம் உயரும்.வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.

    தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சீராகும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவல் படைத்து வழிபடவும்.

    • வார ராசிபலன்
    • 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்

    சிம்மம்

    புதிய சொத்துக்கள் சேரும் வாரம். ராசிக்கு இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் நான்காம் அதிபதி செவ்வாய் நிற்கிறார். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் அகலும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட மனபேதம் சீராகும்.

    வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

    மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும். 12.8.2025 அன்று காலை 6.10 மணி முதல் 14.8.2025 அன்று காலை 9.06 மணி வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. முறையான உடல் ஆரோக்கியத்தை காக்க முழு உடல் பரிசோதனை அவசியம். கோகுலாஷ்டமியன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு திரட்டுப்பால் வைத்து வழிபடவும்.

    கன்னி

    சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் நிற்பதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். புதியவற்றை சாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம்.

    பிள்ளைகளின் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். சிலர் வீடு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவீர்கள் சுப செலவிற்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். வயது முதிர்ந்த பெண்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

    கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். 14.8.2025 அன்று காலை 9.06 மணி முதல் 16.8.2025 அன்று காலை 11.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைப்பின் மேல் ஆர்வம் குறைந்து அதிர்ஷ்டத்தின் நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும். கோகுலாஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அதிரசம் வைத்து வழிபடவும்.

    துலாம்

    திருப்பு முனையான வாரம். கோட்சார குரு மிகச் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    சேமிப்புகள் கூடும். சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். திருமணத் தடை அகலும். திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு விரும்பிய மண வாழ்க்கை அமையும். பெண்களுக்கு இது மிக மகிழ்ச்சியும் உற்சாகமும் தரக் கூடிய காலமாகும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

    16.8.2025 அன்று காலை 11.43 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வட்டி தொழில், சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்களுக்கு கொடுத்த பணம் வசூலாகுவதில் தடை, முறையற்ற ஆவணங்களால் வம்பு, வழக்கு, பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடவும்.

    விருச்சிகம்

    தந்தையால் உயர்வு அடையும் வாரம். தந்தைக்கு காரக கிரகமான சூரியன் பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களின் தொழில் வளர வாழ்வாதாரம் உயர தந்தை உதவி செய்வார். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

    வெளிநாட்டு வணிகம், உணவுப் பொருட்கள், ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் நல்ல பலன் தரும். கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். அலுவலக வேலை தொடர்பாக வெளிநாடு சென்று வருவீர்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு லட்டு படைத்து வழிபடவும்.

    • வார ராசிபலன்
    • 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்

    மேஷம்

    புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் வாரம். 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குரு செவ்வாய் சனி பார்வை. இந்த அமைப்பு நல்ல எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக அமையும். லவுகீக உலகில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் அடைவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சி தரும் இனிய சம்பவங்கள் நடைபெறும்.

    தலைமைப் பண்பு மிகுதியாகும். கவுரவப் பதவிகள் தேடி வரும். நீண்ட கால திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். குல கவுரவத்தை கட்டி காப்பீர்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம். உள்நாட்டு பணம், வெளிநாட்டு பணம் உங்கள் கையில் தாராளமாக புழங்கும்.

    எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். ஆயுள் ஆரோக்கியம் பற்றிய பயம் அகலும். கோகுல அஷ்டமி அன்று வெண்ணை படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.

    ரிஷபம்

    லாபகரமான வாரம். தன லாப ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் ரிஷப ராசிக்கு சாதகமாக உள்ளது. தீராத மன சஞ்சலம் தீரும் காலம் வந்து விட்டது. தாராள தன வரவால் குடும்பத்தில் குதூகலம் கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். பட்ட கடனும், நோயும் தீரும் காலமும் வந்து விட்டது. வழக்குகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும்.

    ஆயுள் சார்ந்த பயம் விலகும். உடம்பும், மனதும் புத்துணர்ச்சியடையும். புத்திர பிராப்தம் சித்திக்கும். பங்குச் சந்தை ஆதாயம் கூடும். அதிர்ஷ்ட பொருள் வரவு மனதை மகிழ்விக்கும். தொழில் முயற்சிக்கு ஏற்ற லாபம் நிச்சயம் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசாங்க வேலை, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும்.

    அனைத்து பிரிவினருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ற அரசின் ஆதரவு கிடைக்கும். புதிய எதிர்பாலின நட்பால் சில அசவுகரியம் உண்டா கலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடவும்.

    மிதுனம்

    மகிழ்ச்சியான வாரம். ஒரு ஜாதகத்திற்கு பலம் தருவது கேந்திரங்கள். தற்போது மிதுன ராசிக்கு கேந்திர ஸ்தானங்கள் பலம் பெறுகிறது. மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். சில சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான புதிய முயற்சிகள் திட்டங்கள் பலிதாகும். புதிய சொத்துக்களின் சேர்க்கை ஏறபடும்.

    தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும். வேலை பளுவும், அலைச்சலும் அதிகரிக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

    பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும். புகழ் அந்தஸ்து கவுரவம் கிடைக்கும். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகும். வழக்கு விசாரணையில் தீர்ப்பு சாதகமாகும். கோகுல அஷ்டமி அன்று வெண் பொங்கல் படைத்து ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.

    கடகம்

    சிறிய முயற்சியில் பெரிய தடைகள் அகலும் வாரம். ராசியில் சூரியன் நிற்பதால் தலைமைப்பதவி தேடி வரும்.பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை வராது. வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் உங்களின் திறமைக்கு நல்ல மதிப்பும் கிடைக்கும். அரசு வருமானம் ஆதாயம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

    உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். பாக்கிய ஸ்தான சனி பகவான் புதிய தொழில் முதலீட்டிற்கு தூண்டினாலும் ராகு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுய ஜாதக தசா புத்திக்கு ஏற்ப தொழிலில் அகலக் கால் வைப்பது நல்லது. பேராசையின் காரணமாக தவறான செயலில் ஈடுபடாத வரை ராகு, கேதுக்களால் பெரிய பாதிப்பு ஏற்படாது.

    பருவ வயதினருக்கு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். 12.8.2025 அன்று காலை 6.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகலாம். பிறருக்கு பரிதாபப்பட்டு ஜாமீன் போடக்கூடாது. உணவு கட்டுப்பாடு அவசியம். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு எள்ளுருண்டை படைத்து வழிபடவும்.

    • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-25 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பிரதமை நண்பகல் 1.44 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம் : அவிட்டம் பிற்பகல் 3.53 மணி வரை பிறகு சதயம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சி காமாட்சியம்மன், இருக்கன்குடி, சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்

    இன்று காயத்ரி ஜபம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி விமான பவனி. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் வீதியுலா. வடமதுரை ஸ்ரீ சவுந்திர ராஜப்பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் சப்தாவர்ணம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-பரிவு

    மிதுனம்-நன்மை

    கடகம்-மாற்றம்

    சிம்மம்-யோகம்

    கன்னி-வரவு

    துலாம்- மேன்மை

    விருச்சிகம்-சிந்தனை

    தனுசு- கவனம்

    மகரம்-பெருமை

    கும்பம்-திறமை

    மீனம்-உயர்வு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முன்வருவர்.

    ரிஷபம்

    புகழ் மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய செய்தியொன்று வந்து சேரலாம். உத்தியோக நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.

    மிதுனம்

    உடன்பிறப்புகள் உதவிக் கரம் நீட்டும் நாள். காலை நேரத்திலேயே மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். வியாபார விருத்திக்கு புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள்.

    கடகம்

    கடமையில் தொய்வு ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லலாம். வாங்கல், கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.

    சிம்மம்

    சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கலாம்.

    கன்னி

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். விரயமுண்டு. திடீர் இடமாற்றம் ஒரு சிலருக்கு ஏற்படலாம். உத்தியோகத்தில் நேற்று ஏற்பட்ட பிரச்சனை இன்றும் தொடரும்.

    துலாம்

    மனக்குழப்பம் அகலும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தொழிலில் மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும்.

    விருச்சிகம்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்றை கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    தனுசு

    யோகமான நாள். நட்பால் நன்மை கிட்டும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தொலைபேசி மூலம் கேட்கும் செய்தி மகிழ்ச்சி தரும். வருமானப் பற்றாக்குறை அகலும்.

    மகரம்

    வரவு திருப்தி தரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கும்பம்

    மனக்கலக்கம் அகலும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.

    மீனம்

    புகழ் கூடும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    • இன்று இரவு புஷ்பப் பல்லக்கு, சந்தனம் சாத்துபடி நிகழ்ச்சியும் நடைபெறும்.
    • 11-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானது, மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மற்றும் ஆடி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் அன்னம், சிம்மம், அனுமன், கருடன், யானை, வாகனங்களிலும், மறவர் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேவியருடன் அழகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். இன்று இரவு புஷ்பப் பல்லக்கு, சந்தனம் சாத்துபடி நிகழ்ச்சியும் நடைபெறும்.

    பாதுகாப்பு பணிக்காக 1000 போலீசாரும், 40 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாளை தீர்த்தவாரியும், 11-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜப் பெருமாள் ரதோற்சவம்.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-24 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பவுர்ணமி பிற்பகல் 2.26 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : திருவோணம் மாலை 4.04 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை

    இன்று ஆவணி அவிட்டம். ரிக் யஜுர் உபாகர்மா. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ரதோற்சவம். இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி. வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜப் பெருமாள் ரதோற்சவம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-பண்பு

    மிதுனம்-நன்மை

    கடகம்-பாராட்டு

    சிம்மம்-வெற்றி

    கன்னி-ஆதரவு

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-செலவு

    தனுசு- தெளிவு

    மகரம்-இன்பம்

    கும்பம்-முயற்சி

    மீனம்-நற்செயல்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    எதிரிகள் விலகும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.

    ரிஷபம்

    கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் சிறப்பாகப் பணியாற்றிப் பாராட்டுப் பெறுவீர்கள்.

    மிதுனம்

    விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். தொழிலில் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    கடகம்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    சிம்மம்

    அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.

    கன்னி

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

    துலாம்

    தட்டுப்பாடுகள் அகல கட் டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டிய நாள். எதிர்பார்த்த தொகை வந்தாலும் இருமடங்காக செலவு வரும். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.

    விருச்சிகம்

    முன்னேற்றம் கூடும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பஞ்சாயத்துகள் சாதகமாகும். வீடு வாங்கும் அமைப்பு உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும்.

    தனுசு

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வரலாம்.

    மகரம்

    மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கும்பம்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தாமதமாக சில வேலைகளை செய்ய ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்குள் முடித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை மாறும்.

    மீனம்

    வளர்ச்சி கண்டு மற்றவர்கள் பெருமைப்படும் நாள். கடனாகக் கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். உறவினர்கள் உதவி கிட்டும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.

    • திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
    • செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது.

    மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் எல்லா வளமும் கிடைக்கும். லட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்க 12 வழிகள் உள்ளன.

    1. தன்னம்பிக்கை மற்றும் தெய்வநம்பிக்கை வேண்டும்.

    2. சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.

    3. காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும்.

    4. வரும் சந்தர்ப்பங்களை நழுவவிடக்கூடாது.

    5. உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும்.

    6. தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.

    7. செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.

    8. திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.

    9. செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது.

    10. லாபத்தால் மகிழ்ச்சியும், நஷ்டம் வந்தால் வருத்தமும் அடையக்கூடாது.

    11. சுயநலம் அறவே இருக்கக் கூடாது.

    12. எந்த சூழலிலும் கடன் வாங்கவே கூடாது.

    மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே லட்சுமியின் அருளைப் பெற முடியும்.

    • வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது.
    • லட்சுமியின் கைகளில் இருந்தே வில்வம் தோன்றியது என்று காத்யாயனர் கூறுகிறார்.

    லட்சுமிக்கு மிகவும் பிடித்தமான இலை வில்வம் என்பது பலருக்குத் தெரியாது. திருவஹிந்திரபுரத்தில் தாயாருக்கு வில்வ அர்ச்சனையே செய்யப்படுகிறது.

    வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது. சவுபாக்கிய சஞ்சீவினியில் லட்சுமி வில்வக்காட்டில் மரத்தடியில் தவம் செய்பவளாக வருணிக்கப் பட்டுள்ளது.

    வாமன புராணத்தில் லட்சுமியின் கைகளில் இருந்தே வில்வம் தோன்றியது என்று காத்யாயனர் கூறுகிறார்.

    காளிகா புராணத்தில் லட்சுமி வில்வமரங்கள் அடங்கிய காட்டிலேயே தவம் செய்தாள் என்று குறிப்பிடுகிறது.

    • கோவிலின் நுழைவுவாசலில் ஐந்து நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது.
    • முருகன் சன்னிதியில் விபூதிக்கு பதிலாக கரும்பினால் செய்யப்பட்ட கருப்பு சாம்பல்தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    சேலம் - நாமக்கல் எல்லைப் பகுதியில், திருச்செங்கோடு வட்டம் காளிப்பட்டி என்னும் கிராமத்தில் கந்தசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தென்றல் தவழும் கிராமங்கள், பசுமை போர்த்திய வயல்வெளிகள், ஓங்கி உயர்ந்த மலைகள் நிறைந்த பகுதியில் கம்பீரமாய் காட்சியளிக்கிறது இந்த முருகன் கோவில்.

    தல வரலாறு

    சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் முருக பக்தர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளை ஒட்டி, கடும் விரதம் இருந்து காடு, மேடுகளை தாண்டி, விஷ ஜந்துக்களை பொருட்படுத்தாமல் பாத யாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட ஒரு ஆண்டில் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் விரதம் இருந்து பழனிக்கு செல்ல ஆயத்தமானார்.

    அப்போது அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ''இனி நீ என்னைத் தேடி பழனி வரத் தேவையில்லை. உனது இடத்திலேயே நான் குடியிருக்க விரும்புகிறேன். எனக்கு இங்கே கோவில் எழுப்பு'' என்று அருள்கூறி மறைந்து விட்டார். அதன்படி கட்டப்பட்டது தான் இந்த காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில்.

     

    கோவில் தோற்றம்

    கோவில் அமைப்பு

    இந்த கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலயம் மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. கோவிலின் நுழைவுவாசலில் ஐந்து நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது. ஆலயத்தின் மூலவராக கந்தசாமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கோவிலின் வெளியே வடக்குப் பகுதியில் இடும்பன் சன்னிதி உள்ளது. அதைத்தொடர்ந்து விநாயகர் சன்னிதி காணப்படுகிறது. சனீஸ்வரர், வேலாயுதசாமி உபசன்னிதிகளும் உள்ளன.

    இந்தப் பகுதியில் எவரேனும் பாம்பு கடித்து மயங்கி விட்டால், உடனடியாக அவரை இந்த கோவிலில் உள்ள மண்டபத்திற்கு அழைத்து வருகின்றனர். இந்த கோவிலில் இருக்கும் பூசாரி, முருகப்பெருமானின் அபிஷேக தீர்த்தத்தையும், விபூதியையும் கொடுத்த பிறகு சிறிது நேரத்தில் விஷம் இறங்கி விடுகிறதாம்.

    இங்கே முருகன் சன்னிதியில் விபூதிக்கு பதிலாக கரும்பினால் செய்யப்பட்ட கருப்பு சாம்பல்தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம் மருத்துவ குணங்கள் கொண்டதாக கருதப்படுகிறது. இதனை அருமருந்து என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள். கரிய நிறத்தில் மணல் போல இது இருக்கும். இந்த பிரசாதம் தயாரிக்க சுற்றிலும் உள்ள கரும்பு விவசாயிகள் தாங்களே மனமுவந்து வந்து கோவிலுக்கு கரும்புகளை தந்து மகிழ்கிறார்கள். பக்தர்கள், தங்கள் நிலத்தில் கரும்பு பயிரிட்டதும், ''நடப்பாண்டு, பிரசாத திருநீறு நாங்கள் கொண்டு வந்து தருகிறோம்'' எனக் கூறி, ஓராண்டுக்கு முன் வாக்களிப்பர்.

    அதன்படி விரதமிருந்து, கரும்பு சக்கைகளை எரித்து கிடைக்கும் சாம்பலை சுத்தப்படுத்தி, கோவிலில் கொடுக்கின்றனர். இப்படி பக்தியுடன் கொடுக்கப்படும் சாம்பலை, மூலவர் முன் வைத்து சிறப்பு பூஜை செய்து, வேறு எந்த கலப்பும் செய்யாமல், அப்படியே பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மணம் எதுவும் இல்லாத இந்த பிரசாதம் மனிதர்களுக்கு மட்டுமல்லாது கால்நடைகளின் நோய்களையும் தீர்க்கும் மகத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

    திருவிழாக்கள்

    இந்த கோவிலில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் எனக் கூறப்படுகிறது. வைகாசி விசாகம் போன்ற நாட்களில் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    குடும்பத்தில் சிக்கல், வியாபாரத்தில் நஷ்டம், தேவையில்லாத அச்சம் உள்ளிட்டவற்றால் அவதிப்படக் கூடியவர்கள் இங்கு வந்து காளிப்பட்டி கந்தசாமியை மனதார பிரார்த்தனை செய்து, கோவிலில் இருக்கும் இடும்பன் சன்னிதியில் கொடுக்கப்படும் மை பிரசாதத்தைப் பெற்று தினமும் நெற்றியில் வைத்து வழிபட்டால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும் என்றும், குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அகலும் என்றும், தேவையில்லாத பயம் விலகும் என்றும் கூறப்படுகிறது. பில்லி, சூனியம் போன்ற செய்வினைகள், இடும்பன் சன்னிதியில் தயாரித்து கொடுக்கப்படும் இந்த சிறப்பு வாய்ந்த மையினால் விடுபட்டு உள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் தைப்பூச விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தேரோட்டமும் நடைபெறும். அந்த திருவிழாவில் திரும்பிய திசையெல்லாம் காவடி ஆட்டம், உருளுதண்டம், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்மிப்பாட்டு என்று தமிழர்களின் பாரம்பரிய கலைகள் பக்தி பரவசத்துடன் களைகட்டுகிறது.

    இந்த கோவிலில் வைகாசி விசாக நாளில் உற்சவர் வீதி உலா நடைபெறும். அப்போது காளிப்பட்டி கந்தசாமியை வணங்கினால் கவலைகள் முழுவதுமாக நீங்கிவிடும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த கோவிலில் இரண்டு கால பூஜை நடைபெறுகின்றது.

    கோவில், காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    சேலம் - திருச்செங்கோடு சாலையில் திருச்செங்கோட்டிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் காளிப்பட்டி முருகன் கோவில் அமைந்துள்ளது.

    • மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் 23-ந்தேதி சனிக்கிழமை நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணியில் இருந்து 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    2-ம் திருவிழா அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மதியம் 12 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. 3-ம், 4-ம், 5-ம், 6-ம் திருவிழா ஆகிய 4 நாட்களிலும் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15-க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. 5-ம் திருவிழா 18-ந்தேதி இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.

    20-ந்தேதி 7-ம் திருவிழா அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 5 மணியில் இருந்து 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவை, காலை 9 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பர பவனியும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

    8-ம் திருவிழா 21-ந்தேதி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15-க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. 9-ம் திருவிழா 22-ந்தேதி சுவாமி சேர்க்கையை பொறுத்து பூஜை காலங்கள் மாறுபடும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் 23-ந்தேதி சனிக்கிழமை நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15-க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

    தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 11, 12-ம் திருவிழா நாட்களில் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று 12-ம் திருவிழாவோடு விழா நிறைவு பெறுகிறது.

    ×