என் மலர்
வழிபாடு
- முருகரையும், வள்ளியையும் வழிபட கணவனின் அன்பும், அனுசரணையும் பெருகும்
- உயர் பதவிகள் கிடைக்க திருவண்ணாமலையாரை வழிபடலாம்.
* சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கடன், பொன், பொருள் எதுவும் கொடுக்க கூடாது. கொடுத்தால் திரும்பி வராது. கண்டிப்பாக கடனாளி ஏமாற்றிவிடுவார்
* கணவன் அன்பாக நடந்துகொள்ள விசாக நட்சத்திரத்தில் மனைவியானவள் விரதம் இருந்து முருகரையும், வள்ளியையும் வழிபட கணவனின் அன்பும், அனுசரணையும் பெருகும் திருமணம் ஆகாத பெண்கள் நல்ல வரன்கள் அமையவும் இதை செய்யலாம்.
* நீண்டகால நோய்களுக்கு பரிகாரம், மரண பயத்திற்கு பரிகாரம் மற்றும் ரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட, மாந்ரீகம் கற்க கேட்டை நட்சத்திரத்தை தேர்தெடுக்கலாம்.
* எதிரிகளை வெற்றிகொள்ள, ஏவல், பேய், பில்லி சூனியங்களில் இருந்து விடுபட பரிகாரங்களை அவிட்டம் நட்சத்திரத்தில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* அரசியலில் வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர் பதவிகள் கிடைக்க திருவண்ணாமலையாரை தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
* முக்கியமான காரியங்களுக்காக வெளியில் செல்லும்போது மஞ்சள் தூள் அல்லது விரலி மஞ்சள் கட்டையை எடுத்துச்செல்லும்போது போகிற காரியம் தடையில்லாமல் நல்லது நடக்கும்.
* நோய் வந்து அவதிப்படுபவர்கள் ஒரு சிறிய மண் சட்டியில் ஒரு மஞ்சள் லட்டு, ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்ப்பட்டவரின் தலையை 8 முறை வலதுபுறமாக மட்டும் சுற்றி அதனை நான்கு முக்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் மதியம் 12 மணிக்கு போட்டுவிட நோய்கள் விலகும்.
* வேலை, இண்டர்வியூ, புதிய தொழில் முயற்சி, எந்த முயற்சி தொடங்கும் முன் சம்பந்தப்பட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்றுமுறை வலதுபுறமாக பாசிபயறை சுற்றினால் போல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை எடுத்து பறவைகளுக்கு கொடுக்க வேண்டும். இது வெற்றியை தேடித்தரும்.
* திருவோணம் நட்சத்திரம் அன்று விஷ்ணு கோவிலுக்கு சென்று துளசி மாலை போட்டு துவரம்பருப்பு பாயாசம் சாமிக்கு நெய்வேத்தியம் செய்து தானம் அளிக்க நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
* தீருவீழிமலை சென்று படிக்காசு வைத்து வணங்கி வந்தால் பணவருவாய் அதிகரிக்கும்.
* திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவனை வணங்கிவிட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் பலவருடங்களாக தீராத நோயும் எளிதில் குணமாகும்.
* வறுமை நீங்க ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.
* பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மிருகசீஷ நட்சத்திரத்தில் முருகரை வழிபட்டுவிட்டு பின்னர் சென்று கேட்டால் கட்டாயம் கிடைக்கும்.
- பதினெட்டாம் படிகளுக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும்.
- ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு ஐப்பசி மாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோவிலில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை நடைபெற்து.
சபரிமலையில் பதினெட்டாம் படிகளுக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பதோடு சபரிமலை ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே பெரும்பாலான பக்தர்கள் படி பூஜை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
- நவநீதகிருஷ்ணர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா.
- இ்க்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வாழ்நாள் கூடும்.
தூத்துக்குடி:
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.
5-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இ்க்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வாழ்நாள் கூடும் என்பது ஐதீகம். இதனால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.
6-ம் நாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தசரா திருவிழாவையொட்டி பல்வேறு நாட்கள் விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள், நேர்த்திக்கடனாக சிவன், பிரம்மன், விஷ்ணு, முருகபெருமான், கிருஷ்ணர், ராமர், லட்சுமணர், நாராயணர், அனுமர், காளி போன்ற பல்வேறு சுவாமி வேடங்களையும், அரசன், குறவன், கரடி, கிளி உள்ளிட்ட வேடங்களையும் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவிலில் பிறை அமைத்து குழுவாக தங்கியிருந்து அம்மனை வழிபடுகின்றனர். அவர்கள் பல்வேறு வேடங்களையும் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வேடம் அணிந்த தசரா பக்தர்கள் வீதி வீதியாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தசரா திருவிழா களைகட்டியது.
10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணியளவில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூலித்த பக்தர்கள், கோவில் உண்டியலில் காணிக்கையை செலுத்தி, கடலில் புனித நீராடி விரதத்தை முடித்து கொள்கின்றனர்.
- அனுமன் வாகன வீதிஉலா.
- இன்று இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமன் வாகனத்திலும் இரவு யானை வாகனத்திலும் மலையப்பசாமி வீதிஉலா வந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை ராமவதாரத்தை விளக்கும் வகையில் அனுமன் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, 'கோதண்டராமர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. கலைக் குழுவை சேர்ந்தவர்கள் ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் வேடமிட்டு ஆடி, பாடி சென்றனர். நாட்டிய, நடன, இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஜீயர் சுவாமிகள் வேத மந்திரங்களை ஓதினார். பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடினர்.
அதைத்தொடர்ந்து கஜேந்திர மோட்சத்தை விளக்கும் வகையில் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
- 27 அடி உயர புஷ்பக விமான வீதிஉலா.
- ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி பவனி.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 27 அடி உயர புஷ்பக விமான வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி கோவர்த்தனகிரி மலையை தாங்கும் ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி பவனி வந்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை 4 மணியளவில் புஷ்பக விமான வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, கோவர்த்தனகிரிமலைைய தனது சுண்டு விரலால் தாங்கும் ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்திலும், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாா்கள் ருக்மணி, சத்தியபாமா அலங்காரத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அனுமன் வாகனச் சேவையில் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி சோர்வடைந்ததால், அவர் தனது உபய நாச்சியார்களுடன் புஷ்பக விமானத்தில் எழுந்தருளி இளைப்பாறினார்.
இந்த தனித்துவமான புஷ்பக விமானம் தென்னங்குருத்தோலைகளால் தயாரிக்கப்பட்டது. புஷ்பக விமானம் 27 அடி உயரம், 15 அடி நீளம், 14 அடி அகலம் மற்றும் ஒரு டன் எடை கொண்டது. அதில் 6 வகையான பாரம்பரிய மலர்கள் பயன்படுத்தப்பட்டன.
புஷ்பக விமானம் மூன்று நிலைகளில் வடிவமைக்கப்பட்டது. முதல் நிலையில் அஷ்ட லட்சுமிகள், 2-வது நிலையில் அஷ்ட நாகங்கள், 3-வது நிலையில் திருநாமங்கள், கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் இருபுறமும் ஆஞ்சநேயர், கருடன் உருவம் அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் சேலத்தைச் சேர்ந்த 20 பேரும், திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டத்துறையைச் சேர்ந்த 10 பேரும் அற்புதமான புஷ்பக விமானத்தைத் தயார் செய்தனர். அதை அவர்கள் வடிவமைக்க ஒரு வாரம் கடுமையாக உழைத்ததாக தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த காணிக்கையாளரும் பக்தருமான ராம்பிரசாத்பட் புஷ்பக விமானத்தின் கவர்ச்சிகரமான வடிவமைப்பை காணிக்கையாக வழங்கினார்.
- திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- குலசை முத்தாரம்மன் பூச்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்துடன் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 4 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி இரவு 7.41 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: பூராடம் இரவு 6.33 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர், திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் பூச்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்துடன் காட்சி. திருப்பரங்குன்றம் ஆண்டவர் கோவர்த்தனாம்பிகைக்கு மகிஷாகர மர்த்தினி அலங்காரம். திருவனந்துரம், திருவட்டாறு சிவபெருமான் புறப்பாடு. திருகுறுகைபிரான், சேனை முதலியார் திருநட்சத்திர வைபவம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-புகழ்
மிதுனம்-பொறுப்பு
கடகம்-அன்பு
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-ஆர்வம்
துலாம்- விவேகம்
விருச்சிகம்-நற்சொல்
தனுசு- ஊக்கம்
மகரம்-நற்செயல்
கும்பம்-மாற்றம்
மீனம்-பிரீதி
- 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.
- அர்ஜுனனுக்கு தேர் ஓட்டியதால் கிருஷ்ணருக்கு `பார்த்தசாரதி’ என்று பெயர்.
விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ண பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான ஆலயம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. பார்த்தன் என்ற பெயருடைய அர்ச்சுனனுக்கு, சாரதியாக இருந்து தேர் ஓட்டியதால், கிருஷ்ணருக்கு `பார்த்தசாரதி' என்ற பெயர் வந்தது. அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்து, கீதையை உபதேசம் செய்து, மகாபாரதப் போரை வெல்ல உதவியாக இருந்த கிருஷ்ணனுக்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.
சுமதிராஜன் என்ற மன்னர் திருமால் பக்தராக இருந்தார். அவருக்கு குருஷேத்ர போரில் பார்த்தனுக்கு சாரதியாக (தேரோட்டி) இருந்த கிருஷ்ணரை தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தனது விருப்பத்தை திருமாலிடம் தெரிவிக்க, திருமாலும் அவ்வண்ணமே காட்சி கொடுத்து அருள்பாலித்தார். தான் விரும்பிய கோலத்தில் கிருஷ்ணரைக் கண்டு மகிழ்ந்த மன்னர், அதேகோலத்தில் இத்தலத்தில் கோவில் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.
போரில் பார்த்தனுக்கு சாரதியாக இருந்தபோது, கிருஷ்ணர் கையில் எந்த ஆயுதமும் இல்லை. அதேபோல இத்தலத்திலும், ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி அருள்பாலிக்கிறார். பார்த்தன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகள் அனைத்தையும் தானே முன்னின்று ஏற்றுக்கொண்டு, அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்தார் கிருஷ்ணர். அப்போது கிருஷ்ணரின் முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் இருக்கும்.
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பார்த்தசாரதியின் முகத்திலும் வடுக்கள் காணப்படுகின்றன. திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மை கொண்டது என்ற தத்துவத்தை அனைவரும் உணர்வதுண்டு. மூலவர் வேங்கடகிருஷ்ணராக இருந்தாலும் உற்சவர் பார்த்தசாரதி பெயரிலேயே இக்கோயில் அழைக்கப்படுகிறது.
முதலாம் நரசிம்மவர்ம பல்லவ மன்னரால் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. சோழர்கள் இந்த ஆலயத்தை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். கிருஷ்ணர், நரசிம்மர், ராமர், வராகர் போன்ற மகாவிஷ்ணுவின் திருமேனிகளை இங்கே தரிக்க முடியும். ராமர் மற்றும் நரசிம்மர் சன்னிதிகளை அடைய தனித்தனி வாசல்கள் இருக்கின்றன. பல நுணுக்கமான அலங்காரக் குடைவு வேலைப்பாடுகளை, இக்கோவிலில் உள்ள கோபுரங்கள் மற்றும் தூண்களில் காணலாம்.
- தேவாரப் பாடல் பெற்ற 275 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று.
- திருவான்மியூர் பகுதியில் மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
சென்னை திருவான்மியூர் பகுதியில் மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நோய் தீர்க்கும் தெய்வமாக `மருந்தீஸ்வரர்' என்ற பெயரில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். அகத்திய முனிவருக்கு தெய்வீக மருத்துவ முறைகளை உபதேசித்ததால், இத்தல இறைவனுக்கு `மருந்தீஸ்வரர்' என்ற பெயர் வந்ததாக தல வரலாறு சொல்கிறது.
தேவாரப் பாடல் பெற்ற 275 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. அந்த காலத்தில் சோழ நாட்டை பல்லவம், ஆந்திரம் போன்ற ராஜ்ஜியங்களுடன் இணைத்த வடப்பெருவழி எனும் முக்கிய சாலையில் இந்த கோவில் இருந்ததை வரலாற்றுச் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த பாதைதான் இன்றைய ஈ.சி.ஆர் எனும் கிழக்குக் கடற்கரைச் சாலையாக உருமாறியுள்ளது.
தினமும் இங்கிருக்கும் இறைவனுக்கு கோ பூஜையுடனே மற்ற பூஜைகளும் செய்யப்படுகிறது. இந்த கோவிலின் கர்ப்பகிரகத்திற்கு மேலிருக்கும் விமானம் சதுர்வஸ்தம் என்ற முறையில் கட்டப்பட்டது. இங்கு கோவில் கொண்டிருக்கும் மருந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்ட பின்பு, பிரசாதமாக தரப்படும்.
விபூதியை உண்பதால் எப்படிப்பட்ட தீராத நோய்களும் குணமாகி விடுமாம். மேலும், இத்தல விருட்சமான வன்னி மரத்தைச் சுற்றி வந்து வழிபடுவதால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்திக்கான வழி கிடைக்கும் என்பது ஐதீகம்.
- லட்சுமி தேவியின், எட்டு அவதாரங்களை இக்கோவிலில் தரிசிக்கலாம்.
- அஷ்டலட்சுமியின் அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமாகும்.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் எழுந்துள்ளது, அஷ்டலட்சுமி கோவில். செல்வத்துக்கும் செழிப்புக்கும் வழிகாட்டும் கடவுளாக பூஜிக்கப்படும் லட்சுமி தேவியின், எட்டு அவதார கோலங்களை இக்கோவிலில் தரிசிக்கலாம்.
விஷ்ணுவின் துணைவியே லட்சுமி தேவி என்பது யாவரும் அறிந்ததே. தனம், தான்யம், கஜம், சந்தானம், வீரம், விஜயம், வித்யா போன்ற பாக்கியங்களை அருளும் அஷ்டலட்சுமியின் அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமாகும். கடற்கரையை ஒட்டியே வீற்றிருக்கும் இந்தக் கோவில் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவற்றில் எட்டு அவதார வடிவங்களும் வெவ்வேறு பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தைரியலட்சுமி மற்றும் தான்ய லட்சுமி ஆகியோர் அருள்புரிகின்றனர். ஆனால் இரண்டாவது தொகுதியில் உள்ள மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவை வணங்கிய பின்னரே, மற்ற தெய்வ வடிவங்களை வணங்கவேண்டும் என்ற ஐதீகம் பின்பற்றப்படுகிறது. எனவே மூன்றாவது தளத்தில் உள்ள சந்தானலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் கஜலட்சுமியையும், நான்காவது தளத்தில் தனலட்சுமியையும் வழிபட்ட பின்னர் முதல் தளத்தில் உள்ள லட்சுமிகளை வழிபடலாம்.
- உலக உயிர்களுக்கு பாதிப்பு உண்டானது.
- வனப்பகுதி, மூலிகைத் தாவரங்கள் நிறைந்த மருத்துவ குணம் மிகுந்த பகுதி.
சென்னையின் புறநகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில். திருவேற்காடு எனும் பெயருக்கு `தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிறைந்த வனம்' என்பது பொருளாகும். முன் காலத்தில் இப்பகுதியில் இருந்த வனப்பகுதி, மருத்துவ குணம் மிகுந்த மூலிகைத் தாவரங்களை கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
தலபுராண கதைகளின்படி தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாக திரிந்தார். அந்த சமயத்தில் அவர் சூரியக் கடவுளுக்கு அருள்வாக்கு சொல்வதற்காக சென்றுள்ளார். அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் தேவியை அவமதித்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட தேவி கருமாரியம்மன், சூரியக்கடவுளின் இடம் விட்டு அகன்றார்.
இதனால் சூரியனின் பிரகாசம் மறைந்தது. உலகம் இருண்டு, உலக உயிர்களுக்கு பாதிப்பு உண்டானது. தன் தவறை உணர்ந்த சூரியன், தேவியிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது தேவியானவர், வாரத்தின் 7-வது நாளை தேவி கருமாரி தினமாக கடைப்பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கான விசேஷ தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது.
- தாயாரின் திருவடியை பக்தர்கள் சேவித்தால் செல்வம் பெருகும்.
திருச்சி திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில் விசேஷமானதாக கருதப்படும் நவராத்திரி உற்சவம் கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்தில் இருந்து நவராத்திரி கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி, நவராத்திரி உற்சவத்தின் 5-ம் நாளான நேற்று வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது.
இதையொட்டி நேற்று மாலை 3.30 மணி அளவில் கமலவல்லி நாச்சியார் (தாயார்) மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க உள் வீதிகளில் அரையர் சேவையினை கேட்டபடி வலம் வந்தார். அப்போது கமலவல்லி நாச்சியார் சந்திர சூரியன் சவுரி கொண்டை, நெத்தி பட்டை, கலிங்க தொரா, காசு மாலை, முத்து மாலை, பவள மாலை, தங்க நெல்லிக்காய் மாலை, வைரத்தாலான பெருமாள் பதக்கம், வலது ஹஸ்தத்தில் கிளி, இடது ஹஸ்தத்தில் திருவாபரணங்கள், வைர திருமாங்கல்யம், பாத சலங்கை,தோடா (சிலம்பு) அணிந்திருந்தார்.
பின்னர் நவராத்திரி மண்டபத்தில் பொற்பாதங்கள் (திருவடி) தெரிய மாலை 4 மணிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து பொதுஜனசேவை மாலை 6 மணி வரை நடைபெற்றது. பின்னர் 6.15 மணிக்கு தாயாருக்கு அமுது செய்விக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை கொலுவில் தாயார் வீற்றிருந்தார்.
அதைத்தொடர்ந்து இரவு 8 மணி முதல் இரவு 8.45 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. பின்னர் இரவு 9 மணிக்கு நவராத்திரி மண்டபத்தில் இருந்து தாயார் மூலஸ்தானத்துக்கு புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
தாயாரின் திருவடியை பக்தர்கள் சேவித்தால் செல்வம் பெருகும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம். இதனால் உறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தாயார் திருவடி சேவையை கண்டு தரிசித்து சென்றனர்.
- முத்தாரம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- பாலசுப்பிரமணியர் கோலத்தில் அம்மன் திருவீதி உலா.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் 4-ம் நாள் நிகழ்ச்சியில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் பத்திரகாளி, கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவிலில் தினமும் முத்தாரம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நான்காம் திருநாளான நேற்று முன்தினம் இரவு மயில்வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர். இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் பக்தர்களுக்கு எல்லாநலமும்கிடைக்கும் என்பது ஐதீகம். ஐந்தாம் நாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை சமய சொற்பொழிவு, ஆன்மிக சொற்பொழிவு, வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






