என் மலர்tooltip icon

    வழிபாடு

    • நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
    • திருப்பதியில் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்து நாட்காட்டி முறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிக மாதங்கள் வரும் ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் மாதம் 18-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை முதல் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது.

    நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

    இந்த ஆண்டு நடைபெற்ற 2 பிரம்மோற்சவ விழாக்களில் மொத்தம் 11 லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். 57.64 லட்சம் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

    33.78 லட்சம் பேர் உணவு சாப்பிட்டு உள்ளனர். 4.29 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.47.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது.

    திருப்பதியில் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.
    • முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்தில் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி 6 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி பிற்பகல் 3.21 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: திருவோணம் பிற்பகல் 3.40 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. மகா நவமி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். குலசேகரப் பட்டினம் முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்தில் காட்சி. பொய்கை யாழ்வார் திருநட்சத்திர வைபவம். சிருங்கேரி சாரதாம்பாள் காம தேனு கஜ, அசுவ பூஜை. கூத்தனூர் சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-பரிவு

    மிதுனம்-பொறுமை

    கடகம்-தனம்

    சிம்மம்-பொறுப்பு

    கன்னி-தாமதம்

    துலாம்- வரவு

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- நட்பு

    மகரம்-மாற்றம்

    கும்பம்-அன்பு

    மீனம்-நலம்

    • இந்த நாள் நவராத்திரி கொண்டாட்டங்களின் முடிவைக் குறிக்கிறது.
    • மாநிலத்திற்கு மாநிலம் மகாநவமி கொண்டாட்டங்கள் மாறுபடும்.

    மகா நவமி அல்லது மஹாநவமி என்பது நவராத்திரி கொண்டாட்டங்களின் இறுதி நாளாகும். இந்த நாள் நவராத்திரி கொண்டாட்டங்களின் முடிவைக் குறிக்கிறது. இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் மகாநவமி கொண்டாட்டங்கள் மாறுபடும்.

    மகா நவமி வரலாறு

    மகிஷாசுரன் அசாதாரண சக்தி கொண்ட ஒரு அரக்கன். இருப்பினும், அசுரர்கள் (அசுரர்கள்) எப்போதும் கடவுளுக்கு எதிரான போரில் தோற்றனர். தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டதால் சோர்வடைந்த மகிஷாசுரன் விஷயங்களை மாற்றுவதாக உறுதியளித்தார். உறக்கம், உணவு, வாழ்வின் அனைத்து வசதிகளையும் தியாகம் செய்து, பிரபஞ்சத்தையும் அனைத்து உயிர்களையும் படைத்த பிரம்மாவை பல ஆண்டுகளாக தியானித்தார். அவர், அசையாத பக்தியுடனும் கவனத்துடனும், பிரம்மாவிடம் வேண்டினார்.

    பிரம்மா மகிழ்ச்சி அடைந்தார். அவர் மகிஷாசுரனிடம் தோன்றி, தான் எதையும் கேட்கலாம், அவருடைய விருப்பம் நிறைவேறும் என்று கூறினார். மகிஷாசுரன் பிரம்மாவிடம் தன்னை வெல்ல முடியாத வரம் கேட்டார். எந்த மனிதனும் கடவுளும் என்னைத் தோற்கடிக்க முடியாது, என்றார். தன் ஆணவத்தில், எந்தப் பெண்ணாலும் தன்னை வெல்ல முடியாது என்று மகிஷாசுரன் நம்பினான். பிரம்மா அவருக்கு வரம் அளித்தார்.

    பின்னர் மகிஷாசுரன் தனது பயங்கர ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டான். விரைவில் அவர் பூமியைக் கைப்பற்றினார். அடுத்து, கடவுளின் அரசரான இந்திராவின் சொர்க்க வாசஸ்தலத்தைத் தாக்கி, அதையும் கைப்பற்றினார். கடவுள்கள் அவன் மீது வீசிய வலிமைமிக்க ஆயுதங்கள் அனைத்தும் பயனற்றவை. மகிஷாசுரன் வெல்ல முடியாதவராகத் தோன்றினார், தேவர்கள் உதவியற்றவர்களாக இருந்தனர்.

    அப்போது அனைவரது பார்வையும் பார்வதி தேவியின் பக்கம் திரும்பியது. அவள் உடனே துர்காவின் அவதாரத்தை எடுத்தாள். துர்க்கைக்கு 10 கைகளும், உக்கிரமான கண்களும், தங்க ஆபரணங்களும் இருந்தன. அவள் அழகாக இருந்தாள், ஆனால் பயங்கரமானவள். சிங்கத்தின் மீது ஏறி மகிஷாசுரனுடன் போரில் இறங்கினாள்.

    மகிஷாசுரன் சக்தி வாய்ந்தவன் மற்றும் மனித மற்றும் எருமை வடிவங்களுக்கு இடையில் மாற்றும் திறனைக் கொண்டிருந்தான். துர்காவும் மகிஷாசுரனும் ஒன்பது நாட்கள் சண்டையிட்டனர். 10 ஆம் நாள், துர்க்கை மகிஷாசுரனின் இதயத்தில் மண்வெட்டியால் குத்தி அவனைக் கொன்றாள்.

    இவ்வாறு, மகிஷாசுரனால் கிட்டத்தட்ட வீழ்த்தப்பட்ட வானத்திலும் பூமியிலும் கொண்டு வரப்பட்ட பயங்கரத்தை துர்கா தேவி முடிவுக்குக் கொண்டுவந்தாள்.

    அன்றில் இருந்து, அந்த நாளை மஹா நவமியாகவும், 10 -ம் நாள் விஜயதசமியாகவும் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பண்டிகைகளையும் மக்கள் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் ஆயுத பூஜை. இது முக்கியமாக கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரியின் ஒன்பதாம் நாள் திருவிழா தசராவின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்படுகிறது, அந்த வகையில் நாளை ஆண்டு மகா நவமி கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து தசரா புதன்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நம் தொழிலுக்கு பயன்படுத்தும் உபகரணங்கள், வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்களை வைத்து வணங்குவார்கள், இது சாஸ்திர பூஜை அல்லது அஸ்திர பூஜை என்றும் அழைக்கப்படுகிறது.

    நவராத்திரியின் ஒன்பதாம் நாளில், அம்மன் துர்க்கையாக வணங்கப்பட்டு, கரும்புத் தண்டுகளை சமர்பிக்க வேண்டும். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நாளில் கன்யா பூஜை நடைமுறையில் உள்ளது. கன்யா பூஜையில், ஒன்பது இளம் பெண்கள் (பருவமடையாதவர்கள்) வீடுகளுக்கு அழைக்கப்பட்டு, பூரி, சனா கி சப்ஜி, கீர் மற்றும் ஹல்வாவுடன் விருந்துண்டு. இச்சிறுமிகள் தேவியின் ஒன்பது வடிவங்களாகக் கருதப்பட்டு, அவர்களின் பாதங்களைக் கழுவி, நெற்றியில் திலகம் இட்டுக் கவுரவிக்கப்படுகிறார்கள்.

    கேரளாவில் மகாநவமிக்கு ஒரு நாள் முன்னதாக அஷ்டமி அன்று சரஸ்வதி பூஜை செய்யப்படுகிறது. மகாநவமி நாள் ஓய்வு நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் மக்கள் புதிய செயல்களைத் தொடங்க மாட்டார்கள், குழந்தைகள் இந்த நாளில் படிப்பதில்லை.

    காஷ்மீர், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் நவராத்திரி கொண்டாட்டங்கள் நவமிக்குப் பதிலாக அஷ்டமி அன்று முடிவடைகின்றன. அஷ்டமி, நவராத்திரியின் எட்டு நாள் துர்க்கையின் வடிவமான பார்வதியின் பிறந்த நாளாகவும் கருதப்படுகிறது.

    • கொலு படிகளை ஒற்றைப்படையில் தான் வைக்க வேண்டும்.
    • கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது.

    நவராத்திரி என்றால் கொலு பொம்மை தான் முதலில் நமது நினைவிற்கு வரும். கொலுப் படிகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் வைக்க வேண்டும். எனவே கொலு படிகள் அமைக்கும் போது 3 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் வைக்கலாம். கொலு படிகள் அமைக்கும் போது கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும்.

    கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது. மேலே உள்ள படியில் இறைவனின் பொம்மைகளை வைப்பார்கள். ஆதற்கு கீழே ரிஷிகள் முனிகள் சித்தர்கள் போன்ற பொம்மைகள், அதற்கு கீழே மனிதர்கள், பின் விலங்குகள்,பறவைகள், போன்றவற்றை வைப்பார்கள். அதாவது கொலு படிகளில் கீழிருந்து ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, ஐந்தறிவு, ஆறறிவு, ரிஷிகள், தெய்வங்கள் என்ற வரிசையில் பொம்மைகளை அடுக்கி வைத்து கொலுப் படிகளின் நடுவில் கலசம் வைப்பார்கள்.

    நவராத்திரி கொலுப் படியில் இருக்கும் கலசத்திற்கு தினமும் மஞ்சள், குங்குமம், அட்சதை மற்றும் பூக்கள் மற்றும் வஸ்திரம் சார்த்தி பூஜித்தி வருவார்கள். மாலையில் தினமும் சுண்டல் செய்து நிவேதனம் செய்து வீட்டில் கொலு பார்க்க வருபவர்களுக்கு வழங்க வேண்டும். பத்து நாட்கள் முடிந்த பிறகு கலசத்தில் வைத்த தேங்காயை வைத்து இனிப்பு பண்டங்களைச் செய்யலாம்.

    ஒரு சிலர் வீட்டில் பத்து நாட்களும் விளக்கு எரிய வைப்பார்கள். இதற்கு அகண்ட தீபம் என்று பொருள். இதில் மூன்று வித எண்ணெய் நல்லெண்ணெய், நெய் இலுப்பெண்ணெய்)அல்லது ஐந்து வித எண்ணெய் கலந்து தீபம் ஏற்றலாம்.

    கொலுப்படி மற்றும் பொம்மைகள் வைக்க இயலாதவர்கள் எளிமையாக வீட்டில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் படத்தை வைத்து அதற்கு முறையாக பூஜைகள், நைவேத்தியங்கள் படைத்து எளிய முறையில் வழிபடலாம்.

    நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் காலை மாலை என இரண்டு வேளை பூஜை செய்ய வேண்டும். அம்மன் பற்றிய பாடல்களை பாடுவார்கள். வீட்டிற்கு அக்கம் பக்கம், தெரிந்தவர்கள் மற்றும் விருந்தினர்களை அழைத்தது வெற்றிலை, பாக்கு, மஞ்சள் பழம், தட்சினை சுண்டல், மற்றும் நீங்கள் விரும்பினால் ஏதாவது பரிசுப்பொருட்கள அல்லது ரவிக்கை போன்றவற்றை அவரவர் தகுதி மற்றும் விருப்பத்திற்கேற்ப கொடுக்கலாம்.

    சிறு குழந்தைகள் வந்தால் அவர்கள் வயதிற்கேற்ற பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இந்த ஒன்பது நாட்களுள் ஏதாவது ஒரு நாள் ஒரு கன்னிப் பெண்ணை அழைத்து உணவளித்து வெற்றிலை, பாக்கு உடை எடுத்து அளிக்கலாம். இதனை செய்வது மிகவும் சிறப்பு.

    இத்தகைய சிறப்புமிக்க்க நவராத்திரி பண்டிகையையொட்டி சென்னை வடபழனியை சேர்ந்த பிரேமலதா-அரவிந்தன் தம்பதி லண்டனில் உள்ள தனது வீட்டில் கொலு வைத்துள்ளனர்.

     அதேபோன்று சென்னை தி.நகர் தண்டபாணி தெருவை சேர்ந்த சங்கர்-லட்சுமி தம்பதியினர் நவராத்திரி பண்டிகையை யொட்டி தங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளார்கள்.

    • விரதம் இருந்தும் வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.
    • பூண்டு, வெங்காயத்தையும் ஒதுக்கி வைப்பதுண்டு.

    நாடு முழுவதும் கொண்டாடப்டும் பண்டிகைகளுள் ஒன்று நவராத்திரி. பலரும் வீட்டில் கொலு வைத்து வழிபாடு நடத்துவார்கள். விரதம் இருந்தும் வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அதற்கு ஏற்ப உணவுக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பார்கள். சில உணவுப்பொருட்களை அறவே தவிர்ப்பார்கள். பெரும்பாலும் அசைவத்தை தவிர்க்கும் நிலையில் பூண்டு, வெங்காயத்தையும் ஒதுக்கி வைப்பதுண்டு.

    நவராத்திரியின் போது பூண்டு, வெங்காயத்தை தவிர்ப்பதற்கு காரணங்களும் இருக்கின்றன. இந்து மதத்தில் உணவுப்பொருட்கள் ராஜசம், தமாசம், சாத்வீகம் என மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் சாத்வீக உணவுகள் ஆன்மிக உணர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

    பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி அல்லாத புரத உணவுகள் சாத்வீக உணவுகளாக குறிப்பிடப்படுகின்றன. இவற்றை சாப்பிடுவதன் மூலம் மனதை அடக்க முடியும். சகிப்பு தன்மை, கருணை, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் இயல்பாகவே வெளிப்படவும் செய்யும். உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியையும் அளிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை விரைவாக நீக்கும்.

    விரதத்தின்போது சாத்வீக உணவுகளை உட்கொண்டால் எளிதில் ஜீரணமாகும். அதனால் சாப்பிட்ட உணவுகள் செரிமானமாவதற்கு குறைந்த நேரமே செலவாகும். அதனால் குடல் இயக்கங்களுக்கு ஓய்வு கிடைக்கும். உடலும் சோர்வின்றி இருக்கும். மேலும் சாத்வீக உணவு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும். மன நலனையும் மேம்படுத்தும். அதனால்தான் நவராத்திரியின்போது சாத்வீக உணவுகளை சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கிறார்கள்.

    ஆயுர்வேதத்தின்படி வெங்காயம், பூண்டு இவை இரண்டும் தாமசம் வகை உணவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகை உணவுகள் மனம், ஆன்மாவிற்கு இடையூறு ஏற்படுத்ததக்கூடியவையாக குறிப்பிடப்படுகின்றன. உணர்ச்சிகள், ஆசைகளை தூண்டுவது, பேராசை கொள்ள வைப்பது, மந்தநிலை, மனச்சோர்வு அடைவது போன்ற குணங்களை தூண்டக்கூடியவையாக கருதப்படுகின்றன.

    வெங்காயத்தை பொறுத்தவரை உடல் உஷ்ணத்தையும் ஏற்படுத்தக் கூடியது. பூண்டு உணர்ச்சிகளை, ஆசைகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் எதிர்மறையாக செயல்படக்கூடியது. அதனால் நவராத்திரி விரதத்தின்போது அவைகளை உட்கொள்வது நல்லதல்ல என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

    • எரிமலையின் மீது கட்டப்பட்டிருப்பதுதான் அதற்கு சிறப்பு
    • எரிமலை குமிழ் மீது இதனை கட்டமைத்திருக்கிறார்கள்.

    பிரான்சின் `எகில்ல' என்னும் இடத்தில் அமைந்துள்ள தேவாலயம் தனித்துவமிக்கது. அது எரிமலையின் மீது கட்டப்பட்டிருப்பதுதான் அதற்கு காரணம். கி.பி 969-ம் ஆண்டு செயலிழந்த நிலையில் இருந்த எரிமலை குமிழ் மீது இதனை கட்டமைத்திருக்கிறார்கள். இதன் உயரம் 85 மீட்டர்கள் (279 அடி). எரிமலையின் மேற்பரப்பு 57 மீட்டர் (187 அடி) விட்டம் கொண்டது.

    இந்த தேவாலயத்திற்கு பாறை வழியாகத்தான் சென்றடைய வேண்டும். அதற்காக 268 படிக்கட்டுகள் பாறை மீது பிரத்யேகமாக செதுக்கப்பட்டிருக்கிறது. இதன் கட்டுமானத்தை பிஷப் கோடெஸ்கால்க் தொடங்கி வைத்தார். இவர் கி.பி 951-ம் ஆண்டு புனித யாத்திரை முடித்து திரும்பியதை கொண்டாடுவதற்காக தேவாலயத்தை கட்டினார். பாறை படிகளில் ஏறும்போது களைப்படைந்தால், இடை இடையே ஓய்வெடுப்பதற்கான இடங்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    தேவாலயத்தின் நுழைவாயிலில் கிறிஸ்து, கன்னி மேரி, செயின்ட் மைக்கேல், செயின்ட் ஜான் மற்றும் செயின்ட் பீட்டர் ஆகியோரின் உருவங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறம் பல ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 12-ம் நூற்றாண்டின்போது, இந்த தேவாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பல நூற்றாண்டுகளாக, தேவாலயம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டுள்ளது. 1275-ம் ஆண்டு மணி கோபுரம் இடிந்து விழுந்தது. அது 19-ம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டது. ஓவியங்கள் மீது மீண்டும் வர்ணம் பூசப்பட்டன.

    1955-ம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், தேவாலயத்தை ஆராய்ச்சி செய்தபோது பலி பீடத்தில் புனிதமான பொருட்களின் புதையல் ஒன்றை கண்டுபிடித்தனர். உலோக சிலுவை, 11-ம் நூற்றாண்டின் மர சிலுவை உட்பட புனித கலைப்பொருட்களின் தொகுப்புகள் அதில் இருந்தன. அவை இப்போது சுவரில் இரும்பு கூண்டுக்கு பின்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எரிமலை மீது அழகுற காட்சி அளிக்கும் இந்த தேவாலயம் உலகம் முழுவதும் இருந்து பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

    • இன்று காலை தங்க தேரோட்டம்.
    • சிவப்பு இக்சோரா மலர் மாலையால் சுவாமி அலங்கரிப்பு

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி பிரகாசமான சிவப்பு `இக்சோரா மலர்' மாலையால் அலங்கரிக்கப்பட்டு, சூரிய நாராயணமூர்த்தியாக எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதன் பிறகு இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சந்திரபிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, நவநீத கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் இரவு 9 மணியில் இருந்து 10 மணிவரை நவராத்திரி கொலு, ஆஸ்தானம் நடந்தது.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை)  தங்கத்தேரோட்டம், இரவு 8 மணியில் இருந்து 9 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.
    • தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தூத்துக்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் தங்களது வலது கையில் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்தனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவில் வளாகத்தில் தசரா பிறை அமைத்து தங்கியிருந்து ஒருவேளை மட்டும் பச்சரிசி உணவு உண்டு அம்மனை வழிபடுகின்றனர்.

    விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக சிவன், பிரம்மன், விஷ்ணு, விநாயகர், முருகபெருமான், ராமர், லட்சுமணர், நாராயணர், கிருஷ்ணர், காளி, அனுமார் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்களையும், அரசன், குறவன், கரடி, கிளி உள்ளிட்ட வேடங்களையும் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் தசரா பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று காணிக்கை வசூலிக்கின்றனர்.

    அப்போது கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளையும், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர். இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

    தசரா திருவிழாவையொட்டி, குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபடுகின்றனர். விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு நாள் இரவிலும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணியளவில் கடற்கரையில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பார்கள்.

    • மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா.
    • இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும்

    தூத்துக்குடி:

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சியில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    6-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இ்க்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஏராளாமான பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.

    7-ம் திருநாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 6.30 மணி வரை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி வந்தார். மாலை 4.30 மணிக்கு மகிஷாசுரன் வீதி உலா நடைபெற்றது. மாலை 4 மணி முதல் 8 மணி வரை சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜ லட்சுமி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
    • தசரா குழுவினர் வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகிறார்கள்.

    உடன்குடி:

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    8-ம் நாளான இன்று காலை முதல் இரவு 7 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள், மாலை 3 மணி முதல்சமய சொற்பொழிவு, பரத நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜ லட்சுமி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    ஏராளமான தசரா குழுவினர் கூட்டம் கூட்டமாக வந்து காப்பு கட்டினர்.

    இன்று காலையிலே தசரா குழுவினர் வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகிறார்கள்.

    அனைவரும் 10-ம் நாளான நாளை மறுநாள் (24-ந்தேதி) கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள். அன்று இரவு தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் கடற்கரையில் நடைபெறுகிறது.

    தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து அரசு துறையினருடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி செயல் அலுவலர் ராம சுப்பிரமணியன், கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து உள்ளனர். 

    • குலசை முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்துடன் காட்சி.
    • மதுரை மீனாட்சி கொலு மண்டபத்தில் மகிஷா சுரமர்த்தினி அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி 5 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி மாலை 5.36 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.11 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று துர்காஷ்டமி. திருவோண விரதம். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்துடன் காட்சி. மதுரை மீனாட்சி கொலு மண்டபத்தில் மகிஷா சுரமர்த்தினி அலங்காரம். உத்திரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சந்திரசேகரர் புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரியநாராயணருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-ஆசை

    மிதுனம்-நன்மை

    கடகம்-உதவி

    சிம்மம்-தனம்

    கன்னி-அன்பு

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- நிறைவு

    மகரம்-தடை

    கும்பம்-உழைப்பு

    மீனம்-பண்பு

    • செவ்வாய் பகவானை வழிபட விரைவில் சொந்த வீடு அமையும்.
    • ஒன்பது செவ்வாய் அபிஷேக செய்து வழிபட வீடுகட்டும் கனவு நிஜமாகும்.

    * சிவப்பு நிற மலர்களால் செவ்வாய்க்கிழமை செய்யாய் ஓரையில் செவ்வாய் பகவானை நினைத்து அர்ச்சனை செய்து வர விரைவில் சொந்த வீடு அமையும்.

    * நிலம் அமைத்து வீடு அமைய தாமதம் ஆகும்போது திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கி ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை 1008 முறை உச்சரித்து அந்த ஆலயத்திலேயே ஆறு மணிநேரம் தங்கி அங்குள்ள கடல் நீரை எடுத்து வந்து மஞ்சள் கலந்து வீட்டு கட்டும் இடத்தை சுற்றி தெளிக்க வேண்டும்.

    * வீடு அமையாதவர்கள், நிலங்களே கிடைக்காதவர்கள், வீடு அமைவதே கஷ்டம் என்று ஏங்குபவர்கள் சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாய் அன்று அபிஷேகம் செய்து வணங்கிவர வீடுகட்டும் கனவு நிஜமாகும்.

    * வீடு, வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்பு பாத்திரத்தை தானமாக கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    * ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்க கொடுத்தால் வீடு வாங்கவும், வீடு கட்டவும் வாய்ப்புகள் அமையும் என்பது ஐதீகம்.

    ×