search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நவராத்திரி பிரம்மோற்சவம்: சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
    X

    நவராத்திரி பிரம்மோற்சவம்: சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

    • இன்று காலை தங்க தேரோட்டம்.
    • சிவப்பு இக்சோரா மலர் மாலையால் சுவாமி அலங்கரிப்பு

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி பிரகாசமான சிவப்பு `இக்சோரா மலர்' மாலையால் அலங்கரிக்கப்பட்டு, சூரிய நாராயணமூர்த்தியாக எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதன் பிறகு இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சந்திரபிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, நவநீத கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் இரவு 9 மணியில் இருந்து 10 மணிவரை நவராத்திரி கொலு, ஆஸ்தானம் நடந்தது.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தங்கத்தேரோட்டம், இரவு 8 மணியில் இருந்து 9 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.

    Next Story
    ×