என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது.

    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது. தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக போரில் தேவர்களை வென்று, கடைசியாக சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்குவிஜயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    சுந்தரேசுவரராக பிரகாஷ் பட்டர் மகன் கவுதம், மீனாட்சி அம்மனாக சிவசேகரன் பட்டர் மகன் சத்தியன் வேடம் தரித்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது. அப்போது பல்வேறு சீர்வரிசைகள் பெண் வீட்டின் சார்பில் வழங்கப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக திருமண மண்டபம் மற்றும் பழைய கல்யாண மண்டபம் ரூ.35 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    மீனாட்சி அம்மனுக்கு பூண் பூட்டும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    முன்னதாக இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாப்பிள்ளை அழைப்பாக சித்திரை வீதிகளை வலம் வந்தனர். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி ஊர்வலமாக வடக்கு-மேற்கு ஆடி வீதியில் திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினர்.

    இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணி அளவில் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

    இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் தங்கஅம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.

    • மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுவிட்டது.
    • மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது கூடவே பிரியாவிடை என்ற அம்மனும் சுவாமியுடன் உடன் இருப்பார்.

    மதுரையின் அரசி மீனாட்சி அம்மனுக்கு, சுந்தரேசுவரருடன் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மீனாட்சியின் திருமணம் அன்று எப்படி நடந்தது என்று ஸ்தானீக பட்டர் ஹலாஸ் கூறியதாவது:-

    மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுவிட்டது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். திருமணத்திற்கு நாள் குறித்தது முதல் மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறைந்து காணப்பட்டது. மீனாட்சியிடம் உறுதி அளித்த நாளில் நானே நேரில் வந்து திருமணம் செய்து கொள்வேன் என்று சுந்தரேசுவரராகிய சிவபெருமான் கூறியிருந்தார். அதன்படி புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணி கலன்களாகவும் கொண்டு காட்சி தரும் சிவபெருமான் அன்று மணக்கோலத்தில் சுந்தரேசுவரராக மதுரை மாப்பிள்ளையாக வந்தார். அவரது திருமுகத்தை கண்டு மதுரை மக்கள் பரவசம் அடைந்து தரிசித்தனர்.

    மேலும் முக்கோடி தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தார்கள். திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தேவசேனா உடனும் பவளக்கனிவாய் பெருமாளும் நேரில் வந்து திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். இது தவிர வியாக்ரபாதர், பதஞ்சலி மகரிஷிகளும் உள்ளிட்ட முனிவர்கள் இறைவனின் திருமணக்கோலத்தை காண மணமேடையில் காத்து இருப்பார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மீனாட்சி திருக்கல்யாணம் வைபவம் இன்று காலை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நிகழ இருக்கிறது.

    மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது கூடவே பிரியாவிடை என்ற அம்மனும் சுவாமியுடன் உடன் இருப்பார். அவர் சுந்தரேசுவரரை விட்டு ஒரு கணமும் பிரியாத அம்மன். அதனால் தான் அந்த அம்மனுக்கு பிரியாவிடை என பெயர் வந்தது. மீனாட்சி அம்மனுக்கு பட்டத்தரசியாக மக்களை காக்கும் பொறுப்பு அதிகம் இருக்கிறது. அதே நேரத்தில் தன்னுடைய கணவரையும் பாதுகாக்க வேண்டும். ஆதலால் கணவனின் மீது கொண்ட அன்பு காரணமாகத்தான் பிரியாவிடை அன்னையாக காட்சி தருகிறாள்.

    ஆட்சியையும் மக்களையும், கவனிக்கும் தன்னால் கணவனை கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை மீனாட்சி அம்மனுக்கு வந்திருக்கிறது. அதனால் தான் பிரியாவிடை உருவத்தில் சொக்கநாதருடன் கூடவே உற்சவ அன்னையாக பிரியாவிடை நாயகியாக வலம் வருகிறாள் என்றார்.

    • மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-25 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : ஏகாதசி பிற்பகல் 3.16 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : உத்திரம் இரவு 11.23 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை, எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள்

    ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி

    இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம். சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்ப பல்லக்கிலும் பவனி. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் ரதோற்சவம். திருஉத்திரகோச மங்கை ஸ்ரீ மங்களேஸ்வரி அம்மன் சிவலிங்க பூஜை செய்தருளிய காட்சி. குறுக்குத் துறை ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.

    ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுரிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்-பெருமை

    சிம்மம்-ஈகை

    கன்னி-உழைப்பு

    துலாம்- கவனம்

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- வரவு

    மகரம்-நிறைவு

    கும்பம்-கடமை

    மீனம்-இரக்கம்

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். சிறந்த சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் பெரியகோவில் விளங்கி வருகிறது.

    தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதில் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் முத்துமணி அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து காலை 6 மணிக்கு தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்.பி, போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழாக்குழு தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து, தேருக்கு முன்பாக விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 'ஆரூரா, தியாகேசா' என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்டியது. தேரானது 4 ராஜவீதிகளில் அசைந்தாடி சென்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

    மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். இன்று பிற்பகலில் தேர் நிலையை வந்தடையும்.

    தேரோட்ட விழாவில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்படி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நடமாடும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு துறை வாகனமும் தேரை பின்தொடர்ந்தவாறு சென்றது. பெரிய கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டதால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. 

    • மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திக்விஜயம் செய்தருளல்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-24 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : தசமி பிற்பகல் 2.03 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : பூரம் இரவு 9.26 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான் மண்டபம் எழுந்தருளல். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திக்விஜயம் செய்தருளல். திருப்பனந்தாள் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி தருதல். தூத்துக்குடி ஸ்ரீ நடராஜப் பெருமாளுக்கு உருகு சட்ட சேவை, வெட்டிவேர் சப்பரத் தில் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.

    ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருபெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அபிவிருத்தி

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-ஓய்வு

    கடகம்-தாமதம்

    சிம்மம்-லாபம்

    கன்னி-நட்பு

    துலாம்- பக்தி

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- ஜெயம்

    மகரம்-பயணம்

    கும்பம்-போட்டி

    மீனம்-வரவு

    • பூஜை முறைகளை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
    • சிவபெருமானை பொருத்தவரை அவருக்கு வெப்பம் என்பதே பிடிக்காது.

    அக்கினி நட்சத்திர காலம் தொடங்கி விட்டது. 28-ந்தேதி தான் அக்கினி நட்சத்திரம் நிவர்த்தியாகும். இந்த இடைப்பட்ட நாட்களில் வெயில் வாட்டி வதைத்து விடும். இடையிடையே மழை பெய்யும் என்று சொல்கிறார்கள்.

    கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதுபோல நாம் வழிபடும் தெய்வங்களுக்கும் கோடை வெயில் தோஷத்தை நிவர்த்தி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்வது உண்டு. இதற்கான பூஜை முறைகளை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

    பொதுவாக அக்கினி நட்சத்திரம் என்பது சூரிய பகவான் பரணி நட்சத்திரத்தின் 3-ம் பாதத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தை கடக்கும் வரையிலான நாட்களைக் குறிக்கும். அதாவது சூரிய பகவான் 20 டிகிரியில் இருந்து 43 டிகிரி வரை பயணிக்கும் காலமாகும்.

    இந்த காலக் கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சிவபெருமானை பொருத்தவரை அவருக்கு வெப்பம் என்பதே பிடிக்காது. அவர் குளிர்ச்சியை விரும்புபவர். இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.

    அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. இதனால் தேவர்களை காப்பாற்றுவதற்காக சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

    இதன் காரணமாக சிவபெருமானின் உடல் முழுவதும் வெப்பம் பரவியது. அவரது நெற்றிக்கண்ணும் வெப்பத்தால் தகித்தது. இதனால் சிவபெருமான் தலையில் கங்கையையும் நிலாவையும் சூடினார்கள். அப்படி இருந்தும் சிவபெருமானின் உடல் வெப்பம் குறையவில்லை.

    இதனால் அவர் உடல் சூட்டை தணிக்க அபிஷேகங்கள் செய்தனர். இடைவிடாது செய்யப்பட்ட அந்த அபிஷேகங்கள் காரணமாக, சிவபெருமான் அபிஷேகப் பிரியராக மாறினார். சிவபெருமானுக்கு நாம் எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அவர் உடலும், உள்ளமும் குளிர்ச்சியாகி, மனம் மகிழ்ந்து நமக்கு நல்ல வரங்களை தந்தருள்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

    எனவே அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்தும், விதமாக அபிஷேகங்கள் செய்வார்கள். அதில் முக்கியமானது தாரா அபிஷேகமாகும்.

    தாரா அபிஷேகம் என்பது சிவலிங்கத்துக்கு மேல் ஒரு பாத்திரம் கட்டி, அதன் அடியில் சிறு துளையிட்டு, அதில் இருந்து சொட்டு, சொட்டாக லிங்கம் மீது தண்ணீரை விழ வைப்பதாகும். இந்த தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள்.

    அதில் நிரப்பப்படும் தண்ணீரில் பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்படும். அந்த நறுமணத் தண்ணீர் சொட்டு, சொட்டாக விழும் போது, சிவபெருமானின் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியாகி விடுவார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் அக்கினி நட்சத்திர நாட்களில் தினமும் ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை 10 மணிக்கு பூஜையின்போது அண்ணாமலையார் மீது தாரா அபிஷேக பாத்திரம் தொங்க விடப்படும்.

    சாயங்காலம் சாயரட்சை பூஜை நடக்கும் வரை அண்ணாமலையார் மீது சொட்டு, சொட்டாக தாரா பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் வாசனைத் திரவியங்கள் கலந்த தண்ணீரை அண்ணாமலையார் ழுமுமையாக பெற வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் அலங்காரம் செய்ய மாட்டார்கள்.

    அண்ணாமலையாருக்கு வழக்கமாக சாற்றப்படும் கிரீடம், நாகாபரணம், கவசம் உள்ளிட்டவை தாராபிஷேகம் சமயத்தில் இடம் பெறாது. இதன் காரணமாக தாரா அபிஷேகம் தண்ணீரை பெற்று அண்ணாமலையார் குளிர்ச்சி பெறுகிறார்.


    சைவத்தில் சிவபெருமானே.... நாம் வாழும் உலகமாக கருதப்படுகிறார். சிவபெருமானின் உக்கிரம் தணிய வேண்டுமானால், பூமி குளிர வேண்டும். இதை கருத்தில் கொண்டும் அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு தாரா அபிஷகம் செய்யப்படுகிறது.

    தாரா அபிஷேகம் செய்யப்படுவதால் திருவண்ணாமலை ஆலயத்தின் தினசரி வழிபாட்டு முறைகளில் எந்தவித மாற்றமும் செய்யமாட்டார்கள். வழக்கமான நேரங்களில் உரிய வழிபாட்டை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக லிங்கத்துக்கு சந்தனப் பொட்டு வைத்து, "ஓம் நமச்சிவாய" மந்திரத்தை சொல்லி, வெறும் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்தாலே பலன் கிடைக்கும் என்பார்கள். ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யும்போது அண்ணாமலையார் மனம் குளிர்ந்து அதிகமான பலன்களை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கையாகும்.

    தாரா அபிஷேகம் செய்ய, தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவி செய்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தன விருத்தி ஏற்படும். நோய்கள் நீங்கும்.

    சர்க்கரை கலந்த பாலை தாராபிஷேகம் செய்தால் கெட்ட சக்திகள் நம்மை அணுகாது. தீய எண்ணத்துடன் நம்முடன் பழகுபவர்கள் விலகி சென்று விடுவார்கள். பயம் நீங்கும்.

    தாராபிஷேகம் தவிர பொதுவாக சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்தால் தோல் நோய் குணமாகும். கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் முக்தி பெறலாம்.

    இதுபோல அக்கினி நட்சத்திர நாட்களில் எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் பெறலாம் என்று நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    அருகம்புல் தண்ணீரால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

    நல்லெண்ணை அபிஷேகத்தினால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    பசும்பால் அபிஷேகத்தினால் அனைத்து வித நன்மைகளும் கிடைக்கும்.

    தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம் கிடைக்கும்.

    பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.

    சர்க்கரை அபிஷேகம் துக்கத்தை போக்கும்.

    புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் லாபம் வரும்.

    இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல சம்பத்தும் கிட்டும்.

    உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

    அரைத்தெடுத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.

    வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.

    அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோட்சம் மற்றும் தீர்க்க ஆயுள் கிட்டும்.

    திராட்சை ரசம் கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும்.

    பேரிச்சம்பழம் ரசத்தினால் அபிஷேகம் செய்தால் எதிரிகள் இல்லாமல் போவர்.

    நாவல்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கியம் கிட்டும்.

    மாம்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.

    மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும்.

    எலுமிச்சம் பழ தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆத்மஞானம் உண்டாகும். பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் மன தைரியம் பெறலாம்.

    தயிர் அபிஷேகத்துக்கு உதவினால் குடும்பத்தில் செல்வம் பெருகும். இளநீர் அபிஷேகம் செய்தால் மகிழ்ச்சி உண்டாகும். பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் சுகமான வாழ்வு அமையும்.

    அக்கினி நட்சத்திர நாட்களில் உங்களுக்கு வசதியான ஒரு நாளில் அண்ணாமலையாருக்கு இந்த அபிஷேகங்களை செய்யலாம்.

    அக்கினி நட்சத்திரம் நிறைவு பெறும் போது கடைசி 3 நாட்கள் அதாவது 26, 27, 28-ந்தேதிகளில் 1008 கலசாபிஷேகம் செய்வார்கள். காலை 10 மணிக்கு உச்சிக்கால பூஜை தொடங்கும்போது 1008 கலசாபிஷேகத்தை நடத்துவார்கள்.

    1008 கலசங்களில் நிரப்பப்பட்ட நீரை அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்வதை நேரில் பார்ப்பது அளவு கடந்த புண்ணியத்தைத் தரும். அக்கினி நட்சத்திர நாட்களில் அண்ணாமலையாரை குளிர்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக மதியம் தயிர் சாதத்தை நைவேத்தியமாக படைப்பதும் வழக்கத்தில் உள்ளது.

    அக்கினி நட்சத்திர நாட்களில் அண்ணாமலையாருக்கு மட்டுமின்றி அவரது அடியார்களுக்கும் உதவி, சேவை செய்தால் அபரிமிதமான பலன்களைப் பெற முடியும். திருவண்ணாமலையில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் உள்ளனர்.

    ஒரே ஒரு சிவனடியாருக்கு அக்கினி வெயிலை சமாளிக்க நீங்கள் குடை வாங்கி கொடுக்கலாம். கதராடை, செருப்பு, விசிறி போன்றவை வாங்கிக் கொடுக்கலாம். சிவனடியார்கள் மனம் குளிர்ச்சி அடைந்தால் அண்ணாமலையாரும் மனம் குளிர்ந்து உங்களை ஆசிர்வதிப்பார்.

    • கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.
    • திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-22 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை.

    திதி : அஷ்டமி நண்பகல் 1.02 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம் : ஆயில்யம் இரவு 6.51 மணி வரை. பிறகு மகம்.

    யோகம் : சித்த, மரணயோகம்.

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் நந்தீஸ்வரயாளி வாகன புறப்பாடு. திருவையாறு ஏழுர் திருவிழாவில் சுவாமி ஐயாறப்பர் உமையம்மன் வடிவம் கொண்டு தன்னைத்தானே பூஜித்தருளல். திண்டுக்கல் ஸ்ரீபத்மகிரீஸ்வரர் புறப்பாடு. திருப்பனந்தாள் ஸ்ரீசிவபெருமான் சகோபுரஸ்கித விருஷப சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.

    திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீபூவண்ணநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். நத்தம் ஸ்ரீவிஜயபாசனப் பெருமாள் கோவில்களில் காலையில் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-நிறைவு

    மிதுனம்-விருத்தி

    கடகம்-வரவு

    சிம்மம்- கடமை

    கன்னி-உதவி

    துலாம்- ஆதாயம்

    விருச்சிகம்- பெருமை

    தனுசு- நன்மை

    மகரம்-நலம்

    கும்பம்-புகழ்

    மீனம்- ஆதரவு

    • இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
    • சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-21 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சப்தமி நண்பகல் 1.20 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : பூசம் இரவு 6.19 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    அக்னி நட்சத்திரம் ஆரம்பம், சுப முகூர்த்த தினம்

    இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம். சுப முகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு காலை திருமஞ்சனம். திரிசிராமலை ஸ்ரீ சிவபெருமான் கைலாச வாகனம் அம்பாள் அன்ன வாகனத்தில் பவனி. வீரபாண்டி ஸ்ரீ கவுரிமாரியம்மன் புறப்பாடு. சீர்காழி ஸ்ரீ சிவபெருமான் வெள்ளி ரதத்தில் உலா கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர், பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில்களில் பவனி. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கண்ணியம்

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-கடமை

    சிம்மம்-கவனம்

    கன்னி-நலம்

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- புகழ்

    மகரம்-ஜெயம்

    கும்பம்-உறுதி

    மீனம்-திடம்

    • வேத மந்திரம் முழங்க பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச் சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரமோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும் சாமிக்கும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் பல்லக்கில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. வருகிற 7-ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடைபெற உள்ளது. பின்னர் விமானத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனம், மங்களகிரி வாகனம், 10-ந்தேதி காலை வெண்ணைத் தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் விழா வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் கம்பீரமாக எழுந்தருள்வார். பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாடவீதியில் சென்று வந்து நிலை அடையும்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்கிறார்கள். அன்று இரவு தீர்த்த வாரி அவரோகணம், 12-ந்தேதி மட்டையடி உற்சவம், இரவு இந்திர விமானத்தில் வீதியுலா, 13-ந் தேதி புஷ்ப யாகம், 14-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) வேல்விழி மற்றும் நிர்வாகத்தினர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று சஷ்டி விரதம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-20 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சஷ்டி பிற்பகல் 2.04 மணி வரை

    பிறகு சப்தமி

    நட்சத்திரம் : புனர்பூசம் இரவு 6.16 மணி வரை பிறகு பூசம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சஷ்டி விரதம், திருநள்ளாறு சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

    இன்று சஷ்டி விரதம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அலங்காரம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் வேடர் பரிலீலை இருவரும் குதிரை வாகனத்தில் பவனி. தூத்துக்குடி ஸ்ரீ அம்பாள் திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல். திருக்கடையூர் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களேஸ்வரி சிம்ம வாகனத்தில் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆர்வம்

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-பணிவு

    கடகம்-சலனம்

    சிம்மம்-கடமை

    கன்னி-சிறப்பு

    துலாம்- ஊக்கம்

    விருச்சிகம்-நலம்

    தனுசு- நிறைவு

    மகரம்-இரக்கம்

    கும்பம்-வெற்றி

    மீனம்-புகழ்

    • ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில்.
    • தொட்டில் கட்டி குழந்தை வரம் வேண்டுவோருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    ஆடி மாதம் என்றாலே 'அம்மன் மாதம்' என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆறு வகையான இறை வழிபாட்டில் சக்தியை கடவுளாக வழிபடும் நெறி 'சாக்தம்' என்பதாகும். சக்தி வழிபாட்டில் ஆதிசக்தியான அன்னை பராசக்தியே மூலக் கடவுளாக போற்றப்படுகிறாள். கிராம தேவதைகளான காவல் தெய்வங்களை வழிபடுவது கிராம மக்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் மரபுகளில் ஒன்று.

    பெரும்பாலான கிராமங்களில் மாரியம்மன் அல்லது காளியம்மன் பெயரிலே ஆலயம் அமையப்பெற்றிருக்கும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ளது ஒழுகை மங்கலம் கிராமம். இங்கு மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற ஒரு தலம் சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலாகும்.

    தல வரலாறு

    புராண காலத்தில், இந்த இடம் அடர்ந்த காடுகளாக இருந்தது. இந்த வனத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கமாக இருந்து வந்தது. அப்போது ஒரு நாள் மாடு மேய்ப்பவர், தனது பசு ஒரு இடத்தில் நின்று தானாகவே பால் சுரந்து பூமியில் வழிந்தோடுவதை கண்டார். இதை பார்த்ததும் அவர் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். மறுநாளும் அதே இடத்தில் அந்த பசு பால் சொரிவதை கண்டார். இவ்வாறு தினமும் இந்த நிகழ்வு நடந்தது. இதையடுத்து அந்த இடத்தில் ஏதோ அற்புத சக்தி இருப்பதை உணர்ந்த அவர், அந்த இடத்தை தோண்டினார். அப்போது அங்கு மாரியம்மன் சிலை வெளிப்பட்டது. அன்னையே தான் இருக்கும் இடத்தை இந்த நிகழ்வின் மூலம் உணர்த்தியுள்ளதை மக்கள் அறிந்தனர். பின்பு சுயம்புவாக வெளிப்பட்ட அந்த அம்மனை அந்த பகுதி மக்கள் வழிபட தொடங்கினர். பசுவின் பால் (ஒழுகை) சொரிந்து, சிலை வெளிப்பட்டதால், அந்த இடம் ஒழுகை மங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

     

    கோவில் நுழைவு வாசல்

    கோவில் அமைப்பு

    இந்த கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் ஆகும். இக்கோவில், நுழைவு வாசலுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாசலை கடந்ததும் துவஜ ஸ்தம்பம், பலிபீடம் காணப்படுகிறது. அதை கடந்ததும் கருவறையில் சுயம்புவாக அம்மன் காட்சி அளிக்கிறாள். அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் உள்ளது. கோவில் வளாகத்தில் சீதளா பரமேஸ்வரி, விநாயகர், நாகர்கள் சன்னிதிகள் உள்ளன.

    கோவிலின் எதிரில் கருப்பண்ண சுவாமி, காத்தவராயன், பேச்சி அம்மன் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். இதன் அருகிலேயே கோவில் தீர்த்தம் உள்ளது. அதன் கரையில் கிழக்கு நோக்கி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் தென் மேற்கு மூலையில் தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது.

    பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கும், தம்பதிகளிடையே ஒற்றுமை பலப்படவும், செழுமையான வாழ்வு மற்றும் எதிர்கால சந்ததியினர் நலனுக்காகவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். கோவில் குளத்தில் மிளகு, சர்க்கரை, உப்பு சேர்த்து கரைத்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் கட்டிகள் போன்றவையும், மனதில் உள்ள கவலைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருமண வரம் வேண்டி வரும் பக்தர்கள், கோவிலின் வேப்ப மரத்தில் மஞ்சள் நூல் கட்டி வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும். இங்கு தொட்டில் கட்டி குழந்தை வரம் வேண்டுவோருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் பெருந்திரளாக பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை செய்தும், சிலர் பொங்கல் வைத்தும் வாழிபாடு செய்கிறார்கள். முடி காணிக்கை செலுத்துதல், மண்ணால் ஆன உடல் உறுப்பு பொம்மைகளை செய்து அம்மனுக்கு வேண்டுதலாக நிறைவேற்றுகின்றனர்.

    திருவிழாக்கள்

    சித்திரை தமிழ் புத்தாண்டு தினம், பங்குனி பெருந்திருவிழா, புரட்டாசி நவராத்திரி மற்றும் தைப் பொங்கல் ஆகியவை இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆடிப் பெருக்கு நாளில் தீர்த்தவாரி, மகிமலை ஆற்றின் கரையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்களில் உள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அம்மனின் அருளை பெறுகின்றனர்.

    கோவில் தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக நடை திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில், திருக்கடையூரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஒழுகை மங்கலம் கிராமம். ஒழுகை மங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்கு திசையில் சுமார் 250 மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

    • அமிர்தம் கிடைப்பதற்காக அசுரர்களும், தேவர்களும் இணைந்து, திருப்பாற்கடலைக் கடைந்தனர்.
    • கயிலாயம் சென்ற சலந்தரன், சிவபெருமானை யுத்தத்திற்கு அழைத்தான்.

    மகாவிஷ்ணுவின் கையில் பல ஆயுதங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை, சங்கு- சக்கரம். இவை இரண்டும் கொண்டிருப்பதால் விஷ்ணுவை, 'சங்கு சக்கரதாரி' என்றும் அழைப்பார்கள். காக்கும் கடவுளான விஷ்ணு, சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்ததன் பலனாக, இந்த சங்கு - சக்கரத்தைப் பெற்றார். அது பற்றி இங்கே பார்க்கலாம்.

    சங்கு பெற்ற கதை

    அமிர்தம் கிடைப்பதற்காக அசுரர்களும், தேவர்களும் இணைந்து, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து முதலில் ஆலகால விஷமும், அதன் பின்னர் பல்வேறு தெய்வீக பொருட்களும், தெய்வ கன்னிகளும், தேவதைகளும், சில உப தெய்வங்களும் கூட வெளிவந்தனர். அப்படி கடலில் இருந்து தோன்றிய அற்புதப் பொருட்களில் ஒன்றுதான், சங்கு. பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு 'நமசிவாய' என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால், 'பாஞ்ச ஜன்யம்' எனப்பெயர் பெற்றது.

    ஈசனின் திருக்கரத்தில் இருந்த அந்த சங்கினைப் பெற, விஷ்ணு விருப்பம் கொண்டார். அதற்காக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, காலம் தவறாமல் சிவ பூஜை செய்தார். பல காலம் செய்த பூஜையின் பலனாக, விஷ்ணுவுக்கு ஈசனால் சங்கு வழங்கப்பட்டது. இப்படி ஈசனிடம் இருந்து விஷ்ணு சங்கை பெற்ற தலம், 'திருசங்கை மங்கை' என்று வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஈசனுக்கு சங்கநாதர், சங்கேசுவரர் ஆகிய பெயர்கள் உள்ளன.

    சக்கரம் பெற்ற கதை

    சமுத்திர ராஜனுக்கும், கங்காதேவிக்கும் பிறந்தவன், சலந்தரன். இவன் தன் செய்கையின் காரணமாக அசுரனாக வளர்ந்தான். தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். இந்திரனை ஓடஓட விரட்டிய சலந்தரன், படைப்புக் கடவுளான பிரம்மனையும் தாக்க முற்பட்டான். அவனிடம் இருந்து தப்பிய பிரம்மன், விஷ்ணுவிடம் சரணடைந்தார். இதையடுத்து சலந்தரனுடன் விஷ்ணு போரிட்டார். இருவராலும் ஒருவரை ஒருவர் வெல்லவும் முடியவில்லை, கொல்லவும் முடியவில்லை. இருவரும் களைப்படைந்தனர்.

    பின்னொரு நாளில் கயிலாயம் சென்ற சலந்தரன், சிவபெருமானையும் யுத்தத்திற்கு அழைத்தான். அப்போது ஈசன், "உனக்கு ஒரு சோதனை வைக்கிறேன். அதில் வென்றால் உன்னுடைய போரிடுகிறேன்" என்றார். சலந்தரனும் ஒப்புக்கொண்டான். உடனே சிவபெருமான், தரையில் தன் கால் கட்டை விரலால் ஒரு வட்டம் வரைந்தார். பின்னர் "இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம்" என்றார். சலந்தரனும் அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து, தன் தலை மீது வைத்தான். அப்போது அந்த வட்டம், சக்கரமாக மாறி சுழலத் தொடங்கியது. அது சலந்தரனின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியது.

    சிவபெருமானால் உருவான அந்த சக்கரம் எதிர்காலத்தில் பயன்படும் என்று கருதிய விஷ்ணு, அதனைப் பெறுவதற்காக பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் இருந்த சிவபெருமானை பூஜித்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தார். ஒரு நாள், ஆயிரம் பூவில் ஒரு பூ குறைந்தது. உடனே விஷ்ணு சற்றும் யோசிக்காமல் தன்னுடைய கண்களில் ஒன்றை தோண்டி எடுத்து, அதனை மலராக கருதி, சிவனுக்கு பூஜை செய்தார். அந்த பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான், உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த சக்கரத்தை, விஷ்ணுவுக்கு வழங்கினார்.

    ×