என் மலர்tooltip icon

    ராசிபலன்

    weekly rasipalan- தனுசு முதல் மீனம் வரை 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்
    X

    weekly rasipalan- தனுசு முதல் மீனம் வரை 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்

    • வார ராசிபலன்
    • 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்

    தனுசு

    அரசு வேலை முயற்சி வெற்றி தரும் வாரம். 5ம் அதிபதி செவ்வாய் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரிக்கிறார். இது மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு. அரசாங்க வேலைக்கான முயற்சியில் வெற்றி உண்டு. அரசுப் பணியில் இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் வந்து சேர உத்தரவு வரும். குடும்பத்தில் நிம்மதி கூடும்.

    தன யோகம் சிறப்பாக அமையும். வீடு, வாகன யோகம் உண்டாகும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. சமுதாய அங்கீகாரம் அதிகரிக்கும். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் ஏற்படும். கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள்.

    குலதெய்வ அருள் கிட்டும். தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேற்படிப்பிற்கான முயற்சி கை கூடும். காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவல் படைத்து வழிபடவும்.

    மகரம்

    வெற்றிமேல் வெற்றி கிடைக்கும் வாரம். உப ஜெய ஸ்தானமான 3ம் இடத்திற்கு சனி, செவ்வாய் சம்மந்தம் உள்ளது. மனதில் நிறைவும், நெகிழ்சியும் உண்டாகும். பூர்வீக சொத்தை பிரிப்பதில் உடன் பிறந்தவர்களுடன் நிலவிய சர்ச்சைகள் விலகும். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள்.

    திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும். பங்குச் சந்தையில் புதிய முதலீடுகள் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பட்ட வேதனைகளும் சோதனைகளும், சாதனைகளாக மாறும். தந்தையின் ஆலோசனை பயன் தரும்.

    பிரிந்த தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். திருமணத் தடை அகலும். அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். வழக்குகளில் வெற்றி உறுதி. அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறையினரும் பிரபலமடைவார்கள். பண விசயத்தில் யாரையும் நம்பக்க கூடாது. கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடவும்.

    கும்பம்

    பணவரவு, வருமானம் கூடும் வாரம். ராசியில் ராகு பகவான் உள்ளார். லாப ஸ்தான பலத்தால் வருமானம் அதிகரிக்கும். புதிய வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வரும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். புதிய சொத்துக்களின் பத்திரப் பதிவு நடக்கும்.

    வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். தாய், தந்தை பொருள் உதவி செய்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகளால் முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்யலாம்.

    நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும். வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு பால் சாதம் படைத்து வழிபடவும்.

    மீனம்

    துன்பங்களும், துயரங்களும் முடிவுக்கு வரும் வாரம். ராசியில் உள்ள வக்ர சனிக்கு 2,9-ம் அதிபதி செவ்வாயின் பார்வை உள்ளது. திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். செய்த தர்மம் தலை காக்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம்.

    தடைப்பட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். நடுத்தர வர்க்கத்தின் வருமானம் உயரும்.வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.

    தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சீராகும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவல் படைத்து வழிபடவும்.

    Next Story
    ×