என் மலர்
ஆன்மிகம்
- துர்க்கை பூஜை வழிபாட்டு குழுவினர் திருவிளக்கு பூஜைகளும் நடத்தி வருகின்றார்கள்.
- பத்ரகாளி அம்மன் கோவிலில் உள் வளாகத்தில் ஆஞ்சநேயர் இருப்பது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களது வேண்டுதல்களும் விரைவில் நிறைவேறியும் வருகின்றது.
இதில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடி வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் துர்க்கை பூஜை வழிபாட்டு குழுவினர் திருவிளக்கு பூஜைகளும் நடத்தி வருகின்றார்கள். அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ராகு, கேது, சனி தோஷம் விலகும்.
சிறப்பு தலமாகவும் விளங்குகிறது. பத்ரகாளி அம்மன் கோவிலில் உள் வளாகத்தில் ஆஞ்சநேயர் இருப்பது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்லும் போது சனியால் ஏற்படும் இன்னல்கள் தணிந்து, நன்மைகள் நடைபெறுவது இந்த கோவில் சிறப்பு அம்சமாகும்.
மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய பேறு, நோய் தீர்க்கும் அம்மனாகவும் அந்தியூர் பத்ரகாளியம்மன் விளங்கி வருகிறார். இதனால் பண்டிகை காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது தொன்று தொட்டு வழக்கமாக நடந்து வருகிறது.
- இருவரையும் எப்போதும் ஒதுக்குகிறார்கள்" என்றும் மிகுந்த வேதனையுடன் திருமாலிடம் முறையிட்டன.
- மனக்கவலையைப் போக்க நினைத்த எம்பெருமான் அவைகளிடம் ஒரு வாக்குறுதியை அளித்தார்.
ஒரு முறை திதிகளான அஷ்டமியும், நவமியும் திருமாலை தரிசிக்க வைகுண்டம் சென்றன. பெருமாளின் தரிசனத்தைப் பெற்ற அவை தங்களின் மனவருத்தத்தை அவரிடம் கூறத் தொடங்கின. "மக்கள் எந்த ஒரு விசேஷத்தையும் அஷ்டமி, நவமி ஆகிய இரு நாள்களில் செய்வதில்லை என்றும், எங்கள் இருவரையும் எப்போதும் ஒதுக்குகிறார்கள்" என்றும் மிகுந்த வேதனையுடன் திருமாலிடம் முறையிட்டன.
அவைகளின் மனக்கவலையைப் போக்க நினைத்த எம்பெருமான் அவைகளிடம் ஒரு வாக்குறுதியை அளித்தார். அஷ்டமி, நவமியை மக்கள் கொண்டாடும் வகையில் அந்த இரு நாள்களில், தான் அவதாரம் எடுப்பதாகக் கூறினார். தனது வாக்குறுதியை நிறைவேற்றவே அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும், நவமி திதியில் ராமனாகவும் அவதரித்தார். அந்த இரு தினங்களையே நாம் கோகுலாஷ்டமியாகவும், ராமநவமியாகவும் கொண்டாடி வருகிறோம்.
- வாக்கு கொடுத்தபடி சிறையில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்தார், வசு தேவர்.
- இறுதியில் தன் தாய் மாமனான கம்சனை கொன்று சிறையில் இருந்த தன் தாய் - தந்தையரை மீட்டார்.
காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் முக்கியமான பத்து அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணர் அவதரித்த நாளையே 'கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடுகிறோம். இந்த பண்டிகை இந்தியா முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
கம்சன் என்ற மன்னன் மதுரா நகரை ஆண்டு வந்தான். இவன் மக்களை கொடுமைப்படுத்தி, பல பாவங்களை செய்தான். கம்சன், தன் சகோதரியான தேவகியை வசுதேவருக்கு திருமணம் செய்து கொடுத்தான். ஒரு நாள் கம்சன், இருவரையும் தனது தேரில் அழைத்து செல்லும் போது, ஒரு அசரீரி கேட்டது. ''கம்சா... உன் சகோதரியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும்'' என்று ஒலித்தது.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கம்சன், தன் சகோதரி என்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அப்போது வசுதேவர், ''எங்களுக்கு பிறக்கும் குழந்தையால் தானே உங்கள் உயிருக்கு ஆபத்து. எங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தையையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்'' என்று உறுதி அளித்தார். இதையடுத்து இருவரையும் சிறையில் அடைத்தான் கம்சன்.
வாக்கு கொடுத்தபடி சிறையில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்தார், வசு தேவர். இவ்வாறு பிறந்த ஏழு குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டன. இந்த நிலையில் 8-வது முறையாக தேவகி கர்ப்பமானாள். இந்த குழந்தையையும் கம்சன் கொன்று விடுவான் என்று பயந்த வசுதேவர், விஷ்ணுவிடம் குழந்தையை காக்கும்படி மன்றாடி வேண்டினார். அன்று இரவு வசுதேவனின் கனவில் தோன்றிய விஷ்ணு, ''உனக்கு பிறக்க போகும் ஆண் குழந்தையை, அதே நாளில் பிறக்கும் எனது தீவிர பக்தனான நந்தகோபனின் குழந்தைக்கு பதிலாக மாற்றி வைத்து, அந்த பெண் குழந்தையை எடுத்து வா'' என்று கூறினார்.
சிறையில் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதியில் நள்ளிரவில் எட்டாவது குழந்தையாக அவதரித்தார் கிருஷ்ணர். கிருஷ்ணரின் மகிமையால் சிறையின் கதவுகள் திறந்தன. காவலாளிகள் மயக்கம் அடைந்தனர். வசுதேவர் குழந்தையை எடுத்து கொண்டு வெளியேறினார். மழை பெய்து யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வசுதேவருக்கு ஆற்றை கடக்க யமுனை பாதை அமைத்து கொடுத்தது. வசுதேவர் குழந்தையை தன் தலை மேல் வைத்து ஆற்றை கடந்தார். அப்போது ஐந்து தலை நாகம் குழந்தைக்கு குடையாக வந்தது.
வசுதேவர் கோகுலத்தை அடைந்ததும் நந்தகோபனின் வீட்டுக் கதவுகள் திறந்து இருந்தன. மெதுவாக தனது குழந்தையை அங்கு வைத்துவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து கொண்டு சிறைச்சாலையை வந்தடைந்தார், வசுதேவர். சிறைச்சாலையில் நுழைந்ததும் சிறை காவலாளிகள் மயக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டனர். பின்பு வசுதேவருக்கு குழந்தை பிறந்திருப்பதை கம்சனிடம் தெரிவித்தனர்.
உடனே விரைந்து வந்த கம்சன், ''என்னை கொல்லப் போவது ஒரு பெண் குழந்தையா'' என்று சிரித்தபடி, அந்த பெண் குழந்தையை கையில் எடுத்து கல்லில் தூக்கி எறிந்தான். ஆனால் அந்த குழந்தை, ''உன்னை கொல்ல பிறந்த குழந்தை கோகுலத்தில் வளர்ந்து வருகிறது. காலம் வரும்போது உன்னை கொல்வான்'' என்று கூறி மாயமாக மறைந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கம்சன், தனது பணியாட்களை அனுப்பி கோகுலத்தில் கிருஷ்ணர் இருப்பதை உறுதி செய்தான். பிறகு அந்த குழந்தையை கொல்ல பூதகி என்ற அரக்கியை அனுப்பினான். அந்த அரக்கி தன் மார்பில் விஷத்தை தடவி, கிருஷ்ணருக்கு பால் கொடுப்பது போல் கொல்ல நினைத்தாள். ஆனால் கிருஷ்ணர் அந்த அரக்கியின் மூச்சுக் காற்றை நிறுத்தி கொன்றார்.
இதை அறிந்த கம்சன் கோபம் கொண்டு, ஷகாட்சுரா என்ற அரக்கனை அனுப்பினான். அந்த அரக்கன் வண்டியின் சக்கரமாக மாறி, கிருஷ்ணரை சக்கரத்தால் நசுக்கி கொல்ல நினைத்தான். ஆனால் சக்கரத்தை எட்டி உதைத்து அவனை கொன்றார், கிருஷ்ணர். இவ்வாறு பல அரக்கர்களை அனுப்பி கிருஷ்ணரை கொல்ல நினைத்த கம்சனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் அனுப்பிய அனைத்து அரக்கர்களையும் குழந்தை பருவத்திலேயே கொன்றார் கிருஷ்ணர். கோகுலத்தில் கிருஷ்ணர் கோபியர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார். வெண்ணெய் திருடனாக பல குறும்புத்தனங்கள் செய்து கோகுலத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இறுதியில் தன் தாய் மாமனான கம்சனை கொன்று சிறையில் இருந்த தன் தாய் - தந்தையரை மீட்டார்.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
கிருஷ்ண ஜெயந்தி அன்று, வாசலில் இருந்து வீட்டுக்குள் வரை குழந்தையின் பாத சுவடுகளை வரைவார்கள். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அன்றைய தினம் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடங்கள் அணிவித்து மகிழ்வார்கள்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டை சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலம் இடுவார்கள். வீட்டில் மாவிலையால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்து, பல வகையான பலகாரங்கள் தயார் செய்து கிருஷ்ணரை வழிபாடு செய்வார்கள். அனைத்து வைணவ கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் கலந்துகொண்டு வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணர் வரலாற்றையும், பெருமையையும் காதால் கேட்டாலே போதும் பல புண்ணியங்கள் வந்துசேரும்.
- கிருஷ்ணரை வழிபடுவதால், மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
கிருஷ்ணரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபடுவதால், வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, கல்வி, ஞானம் மற்றும் செல்வ வளம் பெருகும் என்று நம்பப்படுகிறது. மேலும், கர்ம வினைகள் நீங்கி, துன்பங்கள் விலகி, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
மகிழ்ச்சியும், அமைதியும்:
கிருஷ்ணரை வழிபடுவதால், மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். தீய எண்ணங்கள் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் பெருகும்.
கல்வி மற்றும் ஞானம்:
கிருஷ்ணர், அறிவின் வடிவமாக கருதப்படுகிறார். அவரை வழிபடுவதன் மூலம், கல்வி மற்றும் ஞானம் மேம்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
செல்வ வளம்:
கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், செல்வ வளம் பெருகும். வீட்டில் உள்ளவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கர்ம வினைகள் நீங்கும்:
கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், முந்தைய கர்ம வினைகளால் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
குடும்பத்தில் சுபிட்சம்:
கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
துன்பங்கள் நீங்கும்:
கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், தீராத நோய்கள் நீங்கும் மற்றும் துன்பங்கள் விலகும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபடுவதால், மேற்கூறிய பலன்களைப் பெறலாம்.
- தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர்.
- தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.
கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருவதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். தெய்வ சிந்தனையுடனும் வலம் வர வேண்டும். ஓடுவது, வேகமாக நடப்பது, சப்தம் எழுப்புவது, தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.
விநாயகரை ஒரு முறையும், சூரிய பகவானை இரண்டு முறையும், சிவபெருமானை மூன்று முறையும், விஷ்ணுவை நான்கு முறையும், லட்சுமி தாயார் அல்லது அம்பிகையை ஐந்து முறையும், அரசமரத்தை ஏழு முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும்.
தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-30 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சப்தமி நள்ளிரவு 1.40 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம் : அசுவினி காலை 10.04 மணி வரை. பிறகு பரணி.
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகனுக்கு பால் அபிஷேகம்
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருவிழா. கோவை கந்தே கவுண்டர்சாவடி மாகாளியம்மன் தேரோட்டம். பெருவயல் ஸ்ரீமுருகப்பெருமான் திருவீதி உலா. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தாமதம்
ரிஷபம்-ஆதாயம்
மிதுனம்-சிந்தனை
கடகம்-உழைப்பு
சிம்மம்-உதவி
கன்னி-ஆசை
துலாம்- பயணம்
விருச்சிகம்-சாதனை
தனுசு- விவேகம்
மகரம்-விருத்தி
கும்பம்-களிப்பு
மீனம்-கவனம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
புகழ் கூடும் நாள். புதிய மனிதர்களின் சந்திப்பால் நன்மை அடைவீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.
ரிஷபம்
நாடாளும் நபர்களின் நட்பால் நலம் சேரும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தலைமைப் பொறுப்புகள் தானே வரலாம். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.
மிதுனம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.
கடகம்
வளர்ச்சி கூடும் நாள். பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உதாசீனப்படுத்தியவர்களே உங்கள் உதவி கேட்டு வரலாம். பழைய பிரச்சனைகள் படிப்படியாக மாறும்.
சிம்மம்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணையும் நாள். நண்பர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். ஆதாயம் தரும் காரியம் ஒன்றில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.
கன்னி
மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும் நாள். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் உருவாகும். எடுத்த காரியங்களை நிறைவேற்ற இயலாது.
துலாம்
எதிரிகள் உதிரியாகும் நாள். குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல், வாங்கல்களில் ஆதாயம் உண்டு. கவுரவப் பதவிகள் வரலாம். உத்தியோக மாற்றம் உறுதியாகும்.
விருச்சிகம்
நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். விழாக்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம்.
தனுசு
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீட்டில் சுபகாரியம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
மகரம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும். தொழில் ரீதியான பிரச்சினைகளுக்கு முடிவெடுக்க முடியாமல் திணற நேரிடும். விரயங்கள் உண்டு.
கும்பம்
முன்னேற்றம் ஏற்படும் நாள். தகுந்த நபர்களின் ஆலோசனைகள் தக்க விதத்தில் கைகொடுக்கும். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
மீனம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வரவும், செலவும் சமமாகும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் வழிகாட்டுவர்.
ரிஷபம்
கேட்ட உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும்.
மிதுனம்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்ட வருமானம் தானாக வந்து சேரலாம்.
கடகம்
வருமான உயர்விற்கு வழிபிறக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணியை தொடருவீர்கள். அரசு வேலைக்காக எடுத்த முயற்சி அனுகூலம் தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
சிம்மம்
முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களுக்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
கன்னி
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
துலாம்
இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வருமோ, வராதோ என்று நினைத்த பணவரவொன்று இன்று கைக்கு கிடைக்கலாம்.
விருச்சிகம்
எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். பாக்கிகள் வசூலாகி பண வரவைப் பெருக்கும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர்.
தனுசு
திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். தொழில் பங்குதாரர்களால் பிரச்சனை ஏற்படும். மறதி அதிகரிக்கும். தன்னம்பிக்கையைத் தளரவிட வேண்டாம்.
மகரம்
அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர் தொழிகளின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரலாம்.
கும்பம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலைத் தனித் தொழிலாக மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். பஞ்சாயத்துகளில் நல்ல முடிவு கிடைக்கும். பயணம் பலன் தரும்.
மீனம்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
- ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்.
- திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-29 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பஞ்சமி காலை 6.24 மணி வரை பிறகு சஷ்டி பின்னிரவு 3.46 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : ரேவதி காலை 11.38 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ஸ்ரீராமருக்கு திருமஞ்சனம், திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
இன்று சஷ்டி விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-கண்ணியம்
மிதுனம்-பொறுமை
கடகம்-நலம்
சிம்மம்-வெற்றி
கன்னி-அமைதி
துலாம்- ஜெயம்
விருச்சிகம்-சாந்தம்
தனுசு- வரவு
மகரம்-மாற்றம்
கும்பம்-உண்மை
மீனம்-கடமை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பயணங்களால் வெற்றி கிட்டும் நாள். சுபச் செய்திகள் வீடு தேடி வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடல்நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.
ரிஷபம்
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். அரைகுறையாக நின்ற பணி மீதியும் தொடரும். சேமிப்புகளை உயர்த்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்
இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறலாம். குடும்பச்செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள்.
கடகம்
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.
சிம்மம்
அதிக விரயங்கள் ஆட்கொள்ளும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை கூறுவர். தொழிலில் புதியவர்களை நம்பி செயல்பட வேண்டாம்.
கன்னி
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். வெளியூர் பயணமொன்றால் கையிருப்புக் கரையும்.
துலாம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். இருப்பினும் செலவு நடைகளும் கூடும். உத்தியோகத்தில் இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை தோன்றும். வாகன பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிகம்
பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். வாகனம் வாங்கும் வாய்ப்பு கைகூடும்.
தனுசு
வரவும், செலவும் சமமாகும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளைத் தொடருவீர்கள். ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டியதற்கு ஆதாயம் கிடைக்கும்.
மகரம்
யோகமான நாள். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.
கும்பம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாள். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். ஆற்றல் மிக்கவர்கள் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர்.
மீனம்
வருமானப் பற்றாக்குறை அகலும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் சிக்கல் தீர வழிகாட்டுவர். வியாபார விருத்தியுண்டு. உடல்நலனில் கவனம் தேவை. நட்பால் நன்மை உண்டு.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- திருப்பெருத்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-28 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி காலை 8.38 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : உத்திரட்டாதி நண்பகல் 1.06 மணி வரை பிறகு ரேவதி
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கும், மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராம சுவாமிக்கும் திருமஞ்சன சேவை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சன சேவை.
திருப்பெருத்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-கடமை
மிதுனம்-பெருமை
கடகம்-மேன்மை
சிம்மம்-நிறைவு
கன்னி-யோகம்
துலாம்- தெளிவு
விருச்சிகம்-சிறப்பு
தனுசு- நிறைவு
மகரம்-உழைப்பு
கும்பம்-யோகம்
மீனம்-நட்பு
- கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும்.
- வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும்.
நாளை (புதன்கிழமை) பஞ்சமி திதியாகும். நாளை காலை 6.36 மணிக்கு பஞ்சமி திதி நேரம் தொடங்குகிறது. 14-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4.24 மணி வரை பஞ்சமி திதி உள்ளது. இந்த ஆடி மாதம் தேய்பிறையில் வரும் இந்த பஞ்சமி திதிக்கு "ரக்ஷா பஞ்சமி" என்று பெயர். இந்த பஞ்சமி தினத்தில் செய்யப்படும் வராகி வழிபாடு மிக மிக முக்கியமானதாகும்.
பொதுவாகவே பஞ்சமி தினத்தில் செய்யப்படும் வராகி வழிபாட்டுக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும் என்பார்கள். ஆனால் ஆடி மாத தேய்பிறையில் செய்யப்படும் வராகி வழிபாடு இரட்டிப்பு பலன்கள் தரக்கூடியதாகும்.
இந்த ஆடி மாதத்தில் இந்த பலனை நீங்கள் பெற வேண்டுமானால் முதலில் வராகி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...
வராகி என்ற பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராகி. சப்த கன்னிகள் என்னும் ஏழு பேரில் ஐந்தாவதாக உள்ளவள். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்).
அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கவுமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி.
இவர்களில் பெரிதும் மாறுபட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதமாகும். பொதுவாக மஞ்சள் உடையும், முக்கியமாக கலப்பையும், உலக்கையும் (வாக்கு தண்டம் என்றும் சொல்லுவார்கள். ஆக தண்டம் ஏந்தியவள்) கொண்டவள் . பல ஊர்களில் சிவன் கோவிலில் தென்முக கடவுளுக்கு எதிரில் வரிசையாக வீற்றிருப்பார்கள். நெல்லையப்பர் கோவில் வராகி அதி அற்புதமாய் இருப்பாள். தஞ்சை பெரிய கோவிலில், தனியாக சந்நிதி அமைய பெற்றவள்.
ஆனைக்காவின் அம்மை ஜம்புகேஸ்வரி (அகிலாண்டேஸ்வரி அம்மை) வராகி சொரூபமே. அது தண்டநாத பீடமாகும். ஆகவே தான் அன்னை அங்கே நித்திய கன்னியாக குடி கொள்கிறாள்.
கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும். அது தாய்மைக்கும் முந்தைய உன்னதமான நிலை.
வராகி வராகரின் சக்தி என்றும், எமனின் சக்தி(நீதி தெய்வம்) என்றும் சொல்லப்படுகிறாள். அதில் வராகி அவதாரத்தோடு சொல்லப்படும் செய்தி வராகியின் தத்துவத்தை உணர்த்தி விடும்.
வராகம் என்றால் என்ன? பன்றி. வராக மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராகிதான். என்ன உதவி தெரியுமா?
பன்றிக்கு இயல்பிலேயே வானை நோக்கும் சக்தி கிடையாது. எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராக அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன் மூக்கின் நுனியில் {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி} வைக்க வேண்டும். ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா. ஆக அந்த உந்துதலுக்கு (உயர்த்துதலுக்கு) உதவியவள் தான் வராகி. ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.
வராகி வழிபாடு நமக்கு நம்மை உணர்தலை, உயிரை உணர்த்துதலை பலனாய்த் தரும். அதாவது குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை.
குண்டலினி மேலேழுந்தால் என்ன லாபம் என்றால் உண்மையாக குண்டலினியை ஆக்கினையில் வைத்து தவம் செய்ய செய்ய எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும். எதிரிகள் குறைவார்கள். ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. மேலும் குண்டலினி உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது. இதனால் தான் வராகிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்.
வராகி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
ஆனால் ஒரு விஷயம், வராகி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வராகி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.
ஆனால் வராகி துடியானவள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், ஸ்ரீ வராகிக்கு உகந்ததாக இரவு நேர வழிபாட்டைச் சொல்வர். எனவே, இருள் கவ்விய மாலை வேளையில், வராகியை தரிசித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.
வராகிக்கு பூமி கீழ் விளையும் பனங்கிழங்கு, கருணைக்கிழகு போன்ற பலவகைக் கிழங்கு வகைகளை அன்னைக்குப் படைத்துப் பிரசாதமாக வாங்கிச் செல்வது விசேஷம்.
திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும். நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் வராகியை வழிபடுவது சிறப்பு. மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் வழிபட வேண்டும். நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமையிலும், கடன் தொல்லை அகல புதன் கிழமைகளிலும், குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளிலும் ஸ்ரீ வராகியை வழிபட வேண்டும்.
பார்வதிதேவியின் போர்ப்படைத்தளபதியாக இவள் விளங்குவதாக சக்தி வழிபாட்டு நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வராகி, பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள். இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராகி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு. இவளது திருநாமம் ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் போதிக்கின்றன.
நம் உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி ஸ்ரீ வராகி தேவி. மிக எளிய முறையில் வழிபாடு செய்தாலே மனமிரங்கி வரங்கள் அளித்திடும் தன்மை கொண்டவள் ஸ்ரீ வராகி தேவி.
பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களைபவள் என்று ஸ்ரீ வராகி மாலா போற்றுகின்றது. இத்தகைய சிறப்புடைய வராகிக்கு தமிழகம் முழுவதும் ஆலயங்கள் இருக்கின்றன. நமது சென்னையில் பல ஆலயங்களில் வராகிக்கு சன்னதி இருந்தாலும் தனி ஆலயம் என்று பார்த்தால் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அருகில் இருக்கும் வராகி அம்மன்தான் அனைவருக்கும் தெரிய வரும். சைதாப்பேட்டை நுழைவு வாயலில் பிரதான சாலை ஓரத்திலேயே இந்த அம்மன் வீற்றிருந்து தன்னை நம்பிக்கையோடு நாடி வரும் பக்தர்களை வருந்த விடாமல் பலன்களை கொடுத்து கொண்டு இருக்கிறாள். இந்த வராகியை வராகி வள்ளி என்றும் அழைக்கிறார்கள். சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வராகி அம்மன் ஆலயம் இந்த இடத்தில் உள்ளது.
இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பல தரப்பினருக்கும் நம்பிக்கை தெய்வமாக வராகி அம்மன் இருந்து வருகிறார்.
2015-ம் ஆண்டு இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு 3 அடி உயரத்தில் வராகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறார். இந்த ஆலயத்தில் வருடத்திற்கு 3 நவராத்திரி கொண்டாடப்படுகிறது. முதல் நவராத்திரி வசந்த நவராத்திரி. அந்த நவராத்திரியின் போது அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். 2-வதாக ஆஷாட நவராத்திரியையொட்டி 10 நாட்கள் விழா நடைபெறும். 10-வது நாளில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அடுத்த நவராத்திரி சாரதா நவராத்திரி. இந்த நவராத்திரியையொட்டி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
மாதத்திற்கு 2 முறை பஞ்சமி வரும். அதில் ஒன்று வளர்பிறை பஞ்சமி, 2-வது தேய்பிறை பஞ்சமி. இந்த 2 பஞ்சமியும் அம்மனுக்கு மிகுந்த விசேஷ நாளாகும். இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் சிறப்பாக நடைபெறும். அம்மனுக்கு வளைகாப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி மாதம் 3-வது வாரம் வள்ளி அம்மனுக்கு கூழ் படைத்தல் நடக்கும். வைகுண்ட ஏகாதசிக்கு அன்னாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுவது சிறப்பு. வராகி அம்மன் கோவிலில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறுவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல நோயாளிகள் இங்கு வந்து வராகி அம்மனின் அருளால் பூரண குணமாகி செல்கின்றனர். பல ஆண்டுகளாக தீராத வழக்குகள் அம்மனின் அருளால் முடிவுக்கு வந்ததால் பக்தர்கள் பலர் நேரில் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு நன்றி செலுத்தி செல்கின்றனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் இங்கு வந்து வழிபட்டு பதவி உயர்வு மற்றும் பலன்களை பெற்று செல்கின்றனர். மேலும் பல அதிசயங்கள் கோவிலில் நடந்து உள்ளது. பிரார்த்தனை நிறைவேறிய பணக்காரர்கள் பலர் கோவிலில் வந்து சேவை செய்கின்றனர்.
ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும் போது கர்ப்பிணி பெண்களை அமர வைத்து பூஜை செய்யப்படுகிறது. அடுத்ததாக குழந்தை இல்லாத பெண்களை அமர வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
வளைகாப்பு நிகழ்ச்சி பூஜையில் அமர்ந்த பெண்கள் பலருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து உள்ளது. நெல்லை மாவட்ட ஜமீன் பரம்பரையை சேர்ந்த ஒருவர் திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியமில்லாமல் மனமுடைந்து இருந்தார். இந்த கோவிலைப் பற்றி கேள்விப்பட்டு அம்மனை தரிசித்து சென்றார்.
கோவிலில் தரிசனம் செய்து சென்ற சில நாட்களிலேயே அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்த அற்புதம் நிகழ்ந்து இருக்கிறது. கோவிலில் தினந்தோறும் நடக்கும் அன்னதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய வெளிமாநில பக்தர்கள் பலர் விமானத்தில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். பெரும்பாலானோர் மலேசியாவில் இருந்து வருகின்றனர்.
வராகி அம்மனுக்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கும் தொடர்பு உள்ளது. காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பது போல் வராகி அம்மனும் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு கோவில் மூடப்படும். மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு 9½ மணிக்கு கோவில் மூடப்படும்.






