என் மலர்tooltip icon

    வழிபாடு

    அஷ்டமியில் கிருஷ்ணர்- நவமியில் ராமர்
    X

    அஷ்டமியில் கிருஷ்ணர்- நவமியில் ராமர்

    • இருவரையும் எப்போதும் ஒதுக்குகிறார்கள்" என்றும் மிகுந்த வேதனையுடன் திருமாலிடம் முறையிட்டன.
    • மனக்கவலையைப் போக்க நினைத்த எம்பெருமான் அவைகளிடம் ஒரு வாக்குறுதியை அளித்தார்.

    ஒரு முறை திதிகளான அஷ்டமியும், நவமியும் திருமாலை தரிசிக்க வைகுண்டம் சென்றன. பெருமாளின் தரிசனத்தைப் பெற்ற அவை தங்களின் மனவருத்தத்தை அவரிடம் கூறத் தொடங்கின. "மக்கள் எந்த ஒரு விசேஷத்தையும் அஷ்டமி, நவமி ஆகிய இரு நாள்களில் செய்வதில்லை என்றும், எங்கள் இருவரையும் எப்போதும் ஒதுக்குகிறார்கள்" என்றும் மிகுந்த வேதனையுடன் திருமாலிடம் முறையிட்டன.

    அவைகளின் மனக்கவலையைப் போக்க நினைத்த எம்பெருமான் அவைகளிடம் ஒரு வாக்குறுதியை அளித்தார். அஷ்டமி, நவமியை மக்கள் கொண்டாடும் வகையில் அந்த இரு நாள்களில், தான் அவதாரம் எடுப்பதாகக் கூறினார். தனது வாக்குறுதியை நிறைவேற்றவே அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும், நவமி திதியில் ராமனாகவும் அவதரித்தார். அந்த இரு தினங்களையே நாம் கோகுலாஷ்டமியாகவும், ராமநவமியாகவும் கொண்டாடி வருகிறோம்.

    Next Story
    ×