என் மலர்
ஆன்மிகம்
- இன்று இரவு புஷ்பப் பல்லக்கு, சந்தனம் சாத்துபடி நிகழ்ச்சியும் நடைபெறும்.
- 11-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானது, மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மற்றும் ஆடி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் அன்னம், சிம்மம், அனுமன், கருடன், யானை, வாகனங்களிலும், மறவர் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேவியருடன் அழகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். இன்று இரவு புஷ்பப் பல்லக்கு, சந்தனம் சாத்துபடி நிகழ்ச்சியும் நடைபெறும்.
பாதுகாப்பு பணிக்காக 1000 போலீசாரும், 40 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாளை தீர்த்தவாரியும், 11-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜப் பெருமாள் ரதோற்சவம்.
- உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-24 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி பிற்பகல் 2.26 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : திருவோணம் மாலை 4.04 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை
இன்று ஆவணி அவிட்டம். ரிக் யஜுர் உபாகர்மா. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ரதோற்சவம். இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி. வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜப் பெருமாள் ரதோற்சவம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-பண்பு
மிதுனம்-நன்மை
கடகம்-பாராட்டு
சிம்மம்-வெற்றி
கன்னி-ஆதரவு
துலாம்- வெற்றி
விருச்சிகம்-செலவு
தனுசு- தெளிவு
மகரம்-இன்பம்
கும்பம்-முயற்சி
மீனம்-நற்செயல்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எதிரிகள் விலகும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.
ரிஷபம்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் சிறப்பாகப் பணியாற்றிப் பாராட்டுப் பெறுவீர்கள்.
மிதுனம்
விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். தொழிலில் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
கடகம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கன்னி
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
துலாம்
தட்டுப்பாடுகள் அகல கட் டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டிய நாள். எதிர்பார்த்த தொகை வந்தாலும் இருமடங்காக செலவு வரும். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.
விருச்சிகம்
முன்னேற்றம் கூடும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பஞ்சாயத்துகள் சாதகமாகும். வீடு வாங்கும் அமைப்பு உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும்.
தனுசு
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வரலாம்.
மகரம்
மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
கும்பம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தாமதமாக சில வேலைகளை செய்ய ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்குள் முடித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை மாறும்.
மீனம்
வளர்ச்சி கண்டு மற்றவர்கள் பெருமைப்படும் நாள். கடனாகக் கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். உறவினர்கள் உதவி கிட்டும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.
- திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
- செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது.
மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் எல்லா வளமும் கிடைக்கும். லட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்க 12 வழிகள் உள்ளன.
1. தன்னம்பிக்கை மற்றும் தெய்வநம்பிக்கை வேண்டும்.
2. சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.
3. காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும்.
4. வரும் சந்தர்ப்பங்களை நழுவவிடக்கூடாது.
5. உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும்.
6. தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.
7. செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.
8. திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
9. செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது.
10. லாபத்தால் மகிழ்ச்சியும், நஷ்டம் வந்தால் வருத்தமும் அடையக்கூடாது.
11. சுயநலம் அறவே இருக்கக் கூடாது.
12. எந்த சூழலிலும் கடன் வாங்கவே கூடாது.
மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே லட்சுமியின் அருளைப் பெற முடியும்.
- வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது.
- லட்சுமியின் கைகளில் இருந்தே வில்வம் தோன்றியது என்று காத்யாயனர் கூறுகிறார்.
லட்சுமிக்கு மிகவும் பிடித்தமான இலை வில்வம் என்பது பலருக்குத் தெரியாது. திருவஹிந்திரபுரத்தில் தாயாருக்கு வில்வ அர்ச்சனையே செய்யப்படுகிறது.
வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது. சவுபாக்கிய சஞ்சீவினியில் லட்சுமி வில்வக்காட்டில் மரத்தடியில் தவம் செய்பவளாக வருணிக்கப் பட்டுள்ளது.
வாமன புராணத்தில் லட்சுமியின் கைகளில் இருந்தே வில்வம் தோன்றியது என்று காத்யாயனர் கூறுகிறார்.
காளிகா புராணத்தில் லட்சுமி வில்வமரங்கள் அடங்கிய காட்டிலேயே தவம் செய்தாள் என்று குறிப்பிடுகிறது.
- கோவிலின் நுழைவுவாசலில் ஐந்து நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது.
- முருகன் சன்னிதியில் விபூதிக்கு பதிலாக கரும்பினால் செய்யப்பட்ட கருப்பு சாம்பல்தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சேலம் - நாமக்கல் எல்லைப் பகுதியில், திருச்செங்கோடு வட்டம் காளிப்பட்டி என்னும் கிராமத்தில் கந்தசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தென்றல் தவழும் கிராமங்கள், பசுமை போர்த்திய வயல்வெளிகள், ஓங்கி உயர்ந்த மலைகள் நிறைந்த பகுதியில் கம்பீரமாய் காட்சியளிக்கிறது இந்த முருகன் கோவில்.
தல வரலாறு
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் முருக பக்தர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளை ஒட்டி, கடும் விரதம் இருந்து காடு, மேடுகளை தாண்டி, விஷ ஜந்துக்களை பொருட்படுத்தாமல் பாத யாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட ஒரு ஆண்டில் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் விரதம் இருந்து பழனிக்கு செல்ல ஆயத்தமானார்.
அப்போது அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ''இனி நீ என்னைத் தேடி பழனி வரத் தேவையில்லை. உனது இடத்திலேயே நான் குடியிருக்க விரும்புகிறேன். எனக்கு இங்கே கோவில் எழுப்பு'' என்று அருள்கூறி மறைந்து விட்டார். அதன்படி கட்டப்பட்டது தான் இந்த காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில்.

கோவில் தோற்றம்
கோவில் அமைப்பு
இந்த கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலயம் மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. கோவிலின் நுழைவுவாசலில் ஐந்து நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது. ஆலயத்தின் மூலவராக கந்தசாமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கோவிலின் வெளியே வடக்குப் பகுதியில் இடும்பன் சன்னிதி உள்ளது. அதைத்தொடர்ந்து விநாயகர் சன்னிதி காணப்படுகிறது. சனீஸ்வரர், வேலாயுதசாமி உபசன்னிதிகளும் உள்ளன.
இந்தப் பகுதியில் எவரேனும் பாம்பு கடித்து மயங்கி விட்டால், உடனடியாக அவரை இந்த கோவிலில் உள்ள மண்டபத்திற்கு அழைத்து வருகின்றனர். இந்த கோவிலில் இருக்கும் பூசாரி, முருகப்பெருமானின் அபிஷேக தீர்த்தத்தையும், விபூதியையும் கொடுத்த பிறகு சிறிது நேரத்தில் விஷம் இறங்கி விடுகிறதாம்.
இங்கே முருகன் சன்னிதியில் விபூதிக்கு பதிலாக கரும்பினால் செய்யப்பட்ட கருப்பு சாம்பல்தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம் மருத்துவ குணங்கள் கொண்டதாக கருதப்படுகிறது. இதனை அருமருந்து என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள். கரிய நிறத்தில் மணல் போல இது இருக்கும். இந்த பிரசாதம் தயாரிக்க சுற்றிலும் உள்ள கரும்பு விவசாயிகள் தாங்களே மனமுவந்து வந்து கோவிலுக்கு கரும்புகளை தந்து மகிழ்கிறார்கள். பக்தர்கள், தங்கள் நிலத்தில் கரும்பு பயிரிட்டதும், ''நடப்பாண்டு, பிரசாத திருநீறு நாங்கள் கொண்டு வந்து தருகிறோம்'' எனக் கூறி, ஓராண்டுக்கு முன் வாக்களிப்பர்.
அதன்படி விரதமிருந்து, கரும்பு சக்கைகளை எரித்து கிடைக்கும் சாம்பலை சுத்தப்படுத்தி, கோவிலில் கொடுக்கின்றனர். இப்படி பக்தியுடன் கொடுக்கப்படும் சாம்பலை, மூலவர் முன் வைத்து சிறப்பு பூஜை செய்து, வேறு எந்த கலப்பும் செய்யாமல், அப்படியே பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மணம் எதுவும் இல்லாத இந்த பிரசாதம் மனிதர்களுக்கு மட்டுமல்லாது கால்நடைகளின் நோய்களையும் தீர்க்கும் மகத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
திருவிழாக்கள்
இந்த கோவிலில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் எனக் கூறப்படுகிறது. வைகாசி விசாகம் போன்ற நாட்களில் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
குடும்பத்தில் சிக்கல், வியாபாரத்தில் நஷ்டம், தேவையில்லாத அச்சம் உள்ளிட்டவற்றால் அவதிப்படக் கூடியவர்கள் இங்கு வந்து காளிப்பட்டி கந்தசாமியை மனதார பிரார்த்தனை செய்து, கோவிலில் இருக்கும் இடும்பன் சன்னிதியில் கொடுக்கப்படும் மை பிரசாதத்தைப் பெற்று தினமும் நெற்றியில் வைத்து வழிபட்டால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும் என்றும், குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அகலும் என்றும், தேவையில்லாத பயம் விலகும் என்றும் கூறப்படுகிறது. பில்லி, சூனியம் போன்ற செய்வினைகள், இடும்பன் சன்னிதியில் தயாரித்து கொடுக்கப்படும் இந்த சிறப்பு வாய்ந்த மையினால் விடுபட்டு உள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் தைப்பூச விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தேரோட்டமும் நடைபெறும். அந்த திருவிழாவில் திரும்பிய திசையெல்லாம் காவடி ஆட்டம், உருளுதண்டம், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்மிப்பாட்டு என்று தமிழர்களின் பாரம்பரிய கலைகள் பக்தி பரவசத்துடன் களைகட்டுகிறது.
இந்த கோவிலில் வைகாசி விசாக நாளில் உற்சவர் வீதி உலா நடைபெறும். அப்போது காளிப்பட்டி கந்தசாமியை வணங்கினால் கவலைகள் முழுவதுமாக நீங்கிவிடும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த கோவிலில் இரண்டு கால பூஜை நடைபெறுகின்றது.
கோவில், காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
சேலம் - திருச்செங்கோடு சாலையில் திருச்செங்கோட்டிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் காளிப்பட்டி முருகன் கோவில் அமைந்துள்ளது.
- மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் 23-ந்தேதி சனிக்கிழமை நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணியில் இருந்து 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
2-ம் திருவிழா அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மதியம் 12 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. 3-ம், 4-ம், 5-ம், 6-ம் திருவிழா ஆகிய 4 நாட்களிலும் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15-க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. 5-ம் திருவிழா 18-ந்தேதி இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.
20-ந்தேதி 7-ம் திருவிழா அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 5 மணியில் இருந்து 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவை, காலை 9 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பர பவனியும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
8-ம் திருவிழா 21-ந்தேதி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15-க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. 9-ம் திருவிழா 22-ந்தேதி சுவாமி சேர்க்கையை பொறுத்து பூஜை காலங்கள் மாறுபடும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் 23-ந்தேதி சனிக்கிழமை நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15-க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.
தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 11, 12-ம் திருவிழா நாட்களில் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று 12-ம் திருவிழாவோடு விழா நிறைவு பெறுகிறது.
- வரலட்சுமி விரதம்.
- தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-23 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தசி பிற்பகல் 2.51 மணி வரை பிறகு பவுர்ணமி.
நட்சத்திரம் : உத்திராடம் பிற்பகல் 3.47 மணி வரை பிறகு திருவோணம்.
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகனுக்கு பால் அபிஷேகம்
இன்று பவுர்ணமி. வரலட்சுமி விரதம். திருவோண விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. பட்டினத்தடிகள் குருபூஜை. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால்அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மாற்றம்
ரிஷபம்-மதிப்பு
மிதுனம்-போட்டி
கடகம்-பொறுமை
சிம்மம்-அமைதி
கன்னி-ஜெயம்
துலாம்- செலவு
விருச்சிகம்-இன்பம்
தனுசு- முயற்சி
மகரம்-நற்செயல்
கும்பம்-தெளிவு
மீனம்-லாபம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
ரிஷபம்
கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும் நாள். புதிய உத்தியோகத்திற்காக எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்துமுடிப்பீர்கள்.
மிதுனம்
பக்கத்தில் உள்ளவர்களால் சிக்கல்கள் ஏற்படும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.
கடகம்
தகராறு செய்தவர்கள் தானாக விலகும் நாள். தடைகள் அகலும். தன வரவு திருப்தி தரும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும்.
சிம்மம்
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். பெரியவர்களின் யோசனையால் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
கன்னி
பணத்தேவைகள் உட னுக்குடன் பூர்த்தியாகும் நாள். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
துலாம்
முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். கூடப்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்
மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். சேமிப்பு உயரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். பாராட்டுகளை பெறுவீர்கள். பயணம் பலன் தரும்.
தனுசு
யோகமான நாள். அதிகாலையிலேயே வரவு வந்து சேரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
மகரம்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீண் விவகாரங்கள் வீடு தேடி வரலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை சமாளிக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
கும்பம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். பண வரவு திருப்தி தரும்.
மீனம்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். பிரச்சனைகள் தீரும். எண்ணிய காரியங்கள் எளிதில் முடியும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
- தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான்.
- விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.
லட்சுமி நெல்லி மரத்திலும் வாசம் செய்கிறாள். அந்த ''நெல்லி'' அருநெல்லி மரமல்ல, சாதாரண பெருநெல்லி மரமே ஆகும். நெல்லிக் கனியை ஆமலகம் என்று கூறுவார்கள். நெல்லியை அரைத்து தேய்த்துக் குளித்தால் உடம்பின் அழுக்குகளையும், நெல்லிக்கனியை சாப்பிட்டால் நம் உடம்புக்குள் உள்ள அழுக்குகளையும் நீக்கும்.
அதனாலயே அப்பழுக்கற்ற தூய தலைவன் விஷ்ணுவுக்கு அமலன் என்ற பெயர் உண்டு. அதுமட்டுமல்ல தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான். தாத்ரீ என்ற பதம் பூமாதேவியை குறிக்கும். ஆம் பூமாதேவியும் தேவியின் அம்சம்தானே.
ஹரிபலம் என்றாலும் நெல்லிக்கனிதான் இது விஷ்ணுவைக் குறிக்கும் பெயராகும். எனவே பல இடங்களில் விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.
நெல்லி மரத்தின் நிழலில் நின்று தானம் செய்வதும் அன்னமளிப்பதும் மிகுந்த சிறப்புமிக்கது. அதிக பலன்களை தரக்கூடியது. நெல்லி இலைகளால் விஷ்ணுவையும் மகாலட்சுமியையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்.
- துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.
- துளசியில் கருந்துளசி எனும் கிருஷ்ண துளசி, வெள்ளை துளசி, காட்டுத் துளசி எனப் பலரகங்கள் உள்ளன.
துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும். துளசியை துளசி, திருத்துழாய் என்றும் சொல்வார்கள். இந்த சொற்களுக்கு தெய்வீக சக்தி என்பதே பொருளாகும். துளசியில் கருந்துளசி எனும் கிருஷ்ண துளசி, வெள்ளை துளசி, காட்டுத் துளசி எனப் பலரகங்கள் உள்ளன.
பாற்கடலில் அமிர்தம் கடைந்த காலத்தில் விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீதன்வந்த்ரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அப்போது ஏற்பட்ட ஆனந்த மிகுதியால் விஷ்ணுவுக்கு ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட்டு அதில் சில துளிகள் அமிர்த கலசத்தினுள் விழுந்தது. அதுவே மரகதப் பச்சை நிறத்தில் ஸ்ரீதுளசி தேவியாக உருவெடுத்தது என்று சொல்வார்கள். அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்ள தேவர்களும் அசுரர்களும் சண்டையிட்ட போது அந்த அமிர்த கலசத்திலிருந்து மேலும் சில துளிகள் பூமியில் விழ அவையே பூமியெங்கும் துளசிச் செடிகளாக உற்பத்தியாயின என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
துளசிதேவி பகவானிடம் பெற்ற வரத்தின்படியே வீட்டில் துளசி மாடம் வைத்து அதற்கு பூஜை செய்பவர்களுக்கும், துளசி பறித்து அதன் திவ்யதளங்களால் விஷ்ணுவை லட்சுமியை அர்ச்சிப்பவர்களுக்கும், இருவரும் சகல சவுபாக்கியங்களையும் தந்து நிறைவில் விஷ்ணு லோகத்திலும் இடம் தந்து அருளுகின்றார்கள்.
நம்மைப் பெற்றெடுத்து வளர்த்து பேணிக்காத்த நம் தாயாரை மதித்துக் காப்பாற்றி அவள் அருளாசிகளைப் பெறுவதும், தந்தையை பக்தி சிரத்தையுடன் உபசரித்து ஆசி பெறுவதும், துளசிச்செடி வைத்து அதற்கு பூஜித்து சேவைகள் புரிவதும் இம்மூன்றும் மனிதருக்கு உத்தம கதியை தரவல்ல சேவைகள் என மகான்கள் கூறி உள்ளனர்.
- ஓம் அம்ருதலட்சுமியே போற்றி ஓம் அனந்தலட்சுமியே போற்றி
- ஓம் சத்யலட்சுமியே போற்றி ஓம் சர்வலட்சுமியே போற்றி
ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்தர சதநாமாவளி
ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அத்ரூஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அன்னலட்சுமியே போற்றி
ஓம் அபயலட்சுமியே போற்றி
ஓம் அலங்காரலட்சுமியே போற்றி
ஓம் அஸ்வாரூடலட்சுமியே போற்றி
ஓம் அஷ்டபுஜலட்சுமியே போற்றி
ஓம் அஷ்டாதசபுஜலட்சுமியே போற்றி
ஓம் அம்ருதலட்சுமியே போற்றி
ஓம் அனந்தலட்சுமியே போற்றி
ஓம் ஆதிலட்சுமியே போற்றி
ஓம் ஆனந்தலட்சுமியே போற்றி
ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
ஓம் இந்திரலட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வர்யலட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார ரூபியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கனகலட்சுமியே போற்றி
ஓம் கற்பகலட்சுமியே போற்றி
ஓம் கனகாபிஷேகலட்சுமியே (20) போற்றி
ஓம் கன்யாலட்சுமியே போற்றி
ஓம் கமலாலட்சுமியே போற்றி
ஓம் கிருபாலட்சுமியே போற்றி
ஓம் கீர்த்திலட்சுமியே போற்றி
ஓம் கோலட்சுமியே போற்றி
ஓம் கோலாபுரிலட்சுமியே போற்றி
ஓம் சத்யலட்சுமியே போற்றி
ஓம் சர்வலட்சுமியே போற்றி
ஓம் சம்பத்ஸ்வரூபியே போற்றி
ஓம் சந்தானலட்சுமியே (30) போற்றி
ஓம் சாந்தலட்சுமியே போற்றி
ஓம் சாகரோத்பவலட்சுமியே போற்றி
ஓம் சித்தலட்சுமியே போற்றி
ஓம் சிவானந்தலட்சுமியே போற்றி
ஓம் சுபலட்சுமியே போற்றி
ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
ஓம் சுவர்ணலட்சுமியே போற்றி
ஓம் சுஸ்மிதலட்சுமியே போற்றி
ஓம் சுகாசனலட்சுமியே போற்றி
ஓம் சௌபாக்யலட்சுமியே (40) போற்றி
ஓம் ஸ்திதலட்சுமியே போற்றி
ஓம் சௌந்தர்யலட்சுமியே போற்றி
ஓம் சுவர்க்கலட்சுமியே போற்றி
ஓம் ஸைன்யலட்சுமியே போற்றி
ஓம் ஜயலட்சுமியே போற்றி
ஓம் ஜகல்லட்சுமியே போற்றி
ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
ஓம் ஜேஷ்டலட்சுமியே போற்றி
ஓம் ஷ்ட்புஜலட்சுமியே போற்றி
ஓம் ஷோடசலட்சுமியே (50) போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தனதலட்சுமியே போற்றி
ஓம் தயாலட்சுமியே போற்றி
ஓம் தான்யலட்சுமியே போற்றி
ஓம் த்ரிகுணலட்சுமியே போற்றி
ஓம் த்வாரலட்சுமியே போற்றி
ஓம் த்விபுஜலட்சுமியே போற்றி
ஓம் த்விபுஜவீரலட்சுமியே போற்றி
ஓம் திவ்யலட்சுமியே போற்றி
ஓம் தீபலட்சுமியே (60) போற்றி
ஓம் தைர்யலட்சுமியே போற்றி
ஓம் துளசிலட்சுமியே போற்றி
ஓம் துக்கநிவாரணியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் நித்தியலட்சுமியே போற்றி
ஓம் பாலலட்சுமியே போற்றி
ஓம் பங்கஜலட்சுமியே போற்றி
ஓம் பிரம்மசோதரியே (70) போற்றி
ஓம் பிரசன்னலட்சுமியே போற்றி
ஓம் பிரகாசலட்சுமியே போற்றி
ஓம் பில்வலட்சுமியே போற்றி
ஓம் பூலட்சுமியே போற்றி
ஓம் புவனலட்சுமியே போற்றி
ஓம் பூஜ்யலட்சுமியே போற்றி
ஓம் பூர்ணலட்சுமியே போற்றி
ஓம் போகலட்சுமியே போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் மாயாலட்சுமியே (80) போற்றி
ஓம் மோஷலட்சுமியே போற்றி
ஓம் மோஹனலட்சுமியே போற்றி
ஓம் யக்ஞலட்சுமியே போற்றி
ஓம் யந்திரலட்சுமியே போற்றி
ஓம் யோகலட்சுமியே போற்றி
ஓம் யௌவனலட்சுமியே போற்றி
ஓம் ராஜலட்சுமியே போற்றி
ஓம் ராஜ்யலட்சுமியே போற்றி
ஓம் ரம்யலட்சுமியே போற்றி
ஓம் ரூபலட்சுமியே (90) போற்றி
ஓம் லட்சுமியே போற்றி
ஓம் லங்காதகனியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஓம் வரதலட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் விஸ்வலட்சுமியே போற்றி
ஓம் வித்யாலட்சுமியே போற்றி
ஓம் வீரலட்சுமியே போற்றி
ஓம் வீர்யலட்சுமியே போற்றி
ஓம் ஞானலட்சுமியே போற்றி
ஓம் ஹம்சவாகினியே போற்றி
ஓம் ஹருதயலட்சுமியே போற்றி
ஓம் ஹிரண்யலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீசக்ரலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீசூக்தலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீப்ரதனாலட்சுமியே போற்றி






