என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவணித் திருவிழா"

    • மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் 23-ந்தேதி சனிக்கிழமை நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணியில் இருந்து 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    2-ம் திருவிழா அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மதியம் 12 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. 3-ம், 4-ம், 5-ம், 6-ம் திருவிழா ஆகிய 4 நாட்களிலும் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15-க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. 5-ம் திருவிழா 18-ந்தேதி இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.

    20-ந்தேதி 7-ம் திருவிழா அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 5 மணியில் இருந்து 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவை, காலை 9 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பர பவனியும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

    8-ம் திருவிழா 21-ந்தேதி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15-க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. 9-ம் திருவிழா 22-ந்தேதி சுவாமி சேர்க்கையை பொறுத்து பூஜை காலங்கள் மாறுபடும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் 23-ந்தேதி சனிக்கிழமை நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15-க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

    தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 11, 12-ம் திருவிழா நாட்களில் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று 12-ம் திருவிழாவோடு விழா நிறைவு பெறுகிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உபகோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
    திருச்செந்தூர் சுப்பிர மணியசுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா கடந்த 18-ந்தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.

    இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு பூஞ்சப்பரத்திலும், இரவு 7மணிக்கு அம்மன் பூத, சிம்ம, காளை, வேதாள, அன்னம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் பவனி வந்து சவுக்கையில் சேர்க்கை ஒளிவழிபாட்டுக்கு பின்பு கோவில் சேர்தல் நடைபெற்றது.

    10-ம் திருவிழாவான இன்று காலை சிம்ம லக்கனத்தில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று மாலை 4மணிக்கு அம்மனுக்கு சுப்பிரமணியசுவாமி கோவில் நாழிக்கிணறு மண்டகப்படியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு அம்மன் சண்முக விலாசத்தில் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி சண்முகருக்கு எதிர் சேவை ஒளிவழிபாடு ஆகி,எட்டு வீதிகளிலும் பவனி வந்து சவுக்கையில் சேர்க்கை ஒளிவழிபாடு பின்பு கோவில் சேர்தல் தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    ×