என் மலர்
ஆன்மிகம்
- ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
- வாசலில் நின்ற வரலட்சுமியை பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள்.
ஒரு சமயம் லட்சுமிதேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வந்தாள். ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருந்தது.
மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தாள். நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து அந்த இல்லத்தரசி சுலோகங்களாக சொல்லிக் கொண்டு இருந்தாள்.
வாசலில் நின்ற வரலட்சுமியை பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள். மனையை போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அந்த சுமங்கலி இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடந்தது. அதாவது லட்சுமிதேவி எங்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வருவாள்.
- அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும்.
- வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையில் இருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்க வேண்டும்.
எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
கொஞ்சம் சாஸ்திரபடி விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விநாயகர் பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணபிரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.
இந்த விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து சகல சவுபாக்கியங்களையும் பெற்றனர்.
ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம். அருகம்புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம் என்பது சான்றோர் வாக்கு!
கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இடவேண்டும். கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும். மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும்.
அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும். நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும். பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும். உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகுதான் நாம் நிவேதனம் உண்ண வேண்டும். அன்று முழுவதும் பக்தி சிந்தனையுடன் அஷ்டலட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம். அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்தரமாக நிறைந்திருக்கும்! அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயாசம் செய்யலாம். இவ்விரதத்தை கடைபிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் உண்டாகும். வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சவுபாக்கியங்களையும் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.
- ஒரு கலசத்தை எடுத்து, அதனை சுற்றி மஞ்சள் கயிற்றை கட்ட வேண்டும்.
- குத்துவிளக்கேற்றி வைத்து, கலசத்துக்கு மலர்மாலை கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் சுமங்கலிப் பெண்கள் பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து அழகாக அலங்கரிக்க வேண்டும். பூஜை அறையை மெழுகி கோலமிட்டு மண்டபம் அமைக்க வேண்டும். அதன்பின் வரலட்சுமியின் படம் வைத்து, அதற்கு அலங்காரம் செய்ய வேண்டும். வரலட்சுமி படத்தின் முன்னர் ஒரு வாழை இலையை விரித்து, அதன்மேல் பச்சரிசியை பரப்ப வேண்டும். அதன்மேல் தேங்காய், எலுமிச்சை, பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து, லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும்.
ஒரு கலசத்தை எடுத்து, அதனை சுற்றி மஞ்சள் கயிற்றை கட்ட வேண்டும். அந்த கலசத்தில் அரிசியை நிரப்பி, அதன் மேலே குங்குமம் தடவிய முழுத் தேங்காயை வைக்க வேண்டும். அந்த கலசத்தை இலையில் பரப்பிய அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பூஜையில் மஞ்சள் தடவிய ஒன்பது இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்பு சரடை வைக்க வேண்டும். மஞ்சள் கயிறு என்பது மங்கலத்தின் அறிகுறி ஆகும். வரலட்சுமியுடன் அஷ்ட லட்சுமிகளையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது.
குத்துவிளக்கேற்றி வைத்து, கலசத்துக்கு மலர்மாலை கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் மீது மகாலட்சுமியின் முக பிம்பத்தை பதிக்கலாம். முதலில் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு பூஜையை தொடங்க வேண்டும். பின்பு வரலட்சுமி தேவிக்கான பாடலை பாடி, பூக்களை தூவி தீபங்கள் காட்ட வேண்டும். பூஜையின் முடிவில் ஒன்பது முடிச்சு போட்ட மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பின்பு அனைவருக்கு பிரசாதங்கள் வழங்கலாம்.
வரலட்சுமி விரதமிருந்து வழிபட்டால் அஷ்ட லட்சுமிகளான ஆதி லட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெய லட்சுமி, சந்தான லட்சுமி, கஜ லட்சுமி, வித்யா லட்சுமி ஆகியோரை வணங்கிய பலன்கள் ஒருசேர கிடைக்கும் என்பது ஐதீகம்.
வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பதால், மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும், குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும், கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடு நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். வரலட்சுமியை வழிபட்டு அஷ்ட ஐஸ்வரியங்களையும், வாழ்வின் அனைத்து வளங்களையும் பெறுவோம்.
- சாருமதி தினமும் லட்சுமி தேவியை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
- தன் பெற்றோரின் நிலைமையை அறிந்த சியாமபாலா, ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள்.
வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும், அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்க வேண்டியும் சுமங்கலிப் பெண்கள் கடைப்பிடிக்கும் விரதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு பெண்கள் கடைப்பிடிக்கும் முக்கிய விரதங்களில் இந்த வரலட்சுமி விரதமும் ஒன்று. இந்த வரலட்சுமி விரதம் உருவானது குறித்து பல புராணக் கதைகள் கூறப்படுகிறது.
மகத நாட்டில் குந்தினபுரம் என்ற ஊரில் சாருமதி என்ற பெண், தன் கணவன், மாமனார், மாமியார் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். சாருமதி தினமும் லட்சுமி தேவியை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் தன் குடும்பத்தில் உள்ளவர்களையும் இறை அம்சமாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். இதனால் மனம் மகிழ்ந்த வரலட்சுமி, அவளது கனவில் தோன்றி, ''உனது பக்தியால் மனம் மகிழ்ந்தோம். என்னை நினைத்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் குடிகொள்வேன்'' என்றார். மேலும் கனவில் வரலட்சுமி விரதம் இருப்பதற்கான வழிமுறைகளையும் தேவி அருளினார்.
மறுநாள் அதிகாலையில் கண் விழித்ததும், தன் கனவில் கண்டவற்றை குடும்பத்தினரிடம் கூறினாள் சாருமதி. இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனைவரும் இந்த சிறப்புவாய்ந்த வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டனர். அதன்படி விரதம் இருந்து வரலட்சுமியின் அருளை பெற்றனர். இவர் விரதம் இருந்து பெற்ற நன்மைகளை பார்த்த அந்நாட்டு மக்கள் ஒவ்வொரு வரும் அந்த வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க தொடங்கினர்.
பத்ரச்ரவஸ் என்ற மன்னன், மகாவிஷ்ணுவின் தீவிர பக்தனாக இருந்தார். அவரது மனைவி சுரசந்திரிகா. இந்த தம்பதிகளுக்கு சியாமபாலா என்ற மகள் இருந்தாள். இவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். தன் மகள் மீது அதிக அன்பு கொண்டிருந்த சுரசந்திரிகா அவளது பிரிவு தாங்காமல் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தாள்.
ஒரு சமயம் மகாலட்சுமி தேவி, வயதான சுமங்கலியின் வேடத்தில் சுரசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தார். மகாலட்சுமி, சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாக கூறி, அதை கடைப்பிடிக்கும் படி எடுத்து கூறினார். ஆனால் தன் மகளை பிரிந்த வருத்தத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ யாசகம் கேட்டு வந்திருப்பதாக கருதி அவமானப்படுத்தி வெளியே விரட்டி விட்டாள்.
விரட்டப்பட்ட லட்சுமி தேவியை, அரசியின் மகளான சியாமபாலா சமாதானப்படுத்தினாள். அத்துடன், லட்சுமி தேவியிடம் இருந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கான முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்றாள். இதையடுத்து பக்தியுடன் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தாள். விரதத்தின் மகிமையில் அவள் செல்வ செழிப்பு பெற்று சிறப்பாக வாழ்ந்து வந்தாள். ஆனால் லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோர், எல்லாவற்றையும் இழந்து வறுமையின் பிடியில் சிக்கி ஏழ்மையில் வாடத் தொடங்கினர்.
தன் பெற்றோரின் நிலைமையை அறிந்த சியாமபாலா, ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால் இங்கிருந்த அனுப்பிய தங்கம் எல்லாம் அவர்கள் செய்த தீவினையால் கரியாக மாறி போனது. இதை கேள்விப்பட்டு வருந்திய சியாமபாலா, தன் தாயான சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப் பற்றி சொல்லி பூஜை செய்யும்படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்து பூஜை செய்தாள். அதன்பிறகு விரதத்தின் பலனால் இழந்த செல்வங்கள் பெற்று மீண்டும் சுகவாழ்வு வாழ தொடங்கினாள்.
சித்திரநேமி என்றவள் தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள், தேவர்களுக்கிடையே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நடுவராக இருந்து நியாயமான தீர்ப்பு வழங்குவாள். ஒரு சமயம் கயிலாயத்தில் சிவ பெருமானும், பார்வதி தேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பார்வதி தேவி, ''நாதா நான் உங்களை ஜெயித்து விட்டேன்'' என்றார். ஆனால் அதை மறுத்தார் சிவபெருமான். இதனால் சிவனுக்கும், பார்வதி தேவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியில் இருவரும் சித்திரநேமியிடம் இதற்கான தீர்ப்பை கேட்டனர். அவள், பரமசிவன் தான் போட்டியில் வெற்றி பெற்றதாக கூறினார். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, ''நீ பொய் சொன்னதால் குஷ்டரோகியாகி பொலிவிழந்து தவிப்பாயாக'' என்று சாபமிட்டார். இதையடுத்து தன்னை மன்னித்து அருளும்படி வேண்டினாள் சித்திரநேமி. உடனே மனம் இரங்கிய பார்வதி தேவி, ''நதிக்கரையில் வரலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் உனக்கு ஏற்பட்ட இந்த நிலை மாறும்'' என்று சாபவிமோசனம் அருளினார். சித்திரநேமியும் அவ்வாறே விரதம் இருந்து வரலட்சுமியை வழிபட்டு நோய் நீங்கி சாபவிமோசனம் பெற்றாள்.
- அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது.
- விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்-செல்வ வளம் சேரும்.
வரலட்சுமி விரதம் இருக்க வீடு அல்லது கோவில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும்.
சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம், குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேசபூஜை செய்ய வேண்டும்.
அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள் கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும். நைவேத்தியமாக கொழுக்கட்டை படைக்கலாம்.
பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும். இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்- செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் உண்டாகும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித செல்வங்கள் கிடைக்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் மாறும்.
ரிஷபம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்களைத் தவிர்க்கவும். உடல்நலனுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். அன்றாட பணிகள் நன்றாக நடைபெறும். சகோதர வழியில் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
கடகம்
குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.
சிம்மம்
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும்.
கன்னி
நிதிநிலை உயரும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடைபெறும்.
துலாம்
காலை நேரம் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் உதவியோடு தொழில் முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
விருச்சிகம்
நன்மைகள் நடைபெறும் நாள். பாசத்தோடு பழகியவர்கள் நேசக்கரம் நீட்டுவர். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள்.
தனுசு
செல்வாக்கு மேலோங்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொலைதூரப் பயணங்கள் உறுதியாகும்.
மகரம்
வரன்கள் வாயில் தேடி வந்து சேரும் நாள். பாசம்மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். வாகனமாற்ற சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
கும்பம்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிம்மதிக்காக வழிபாட்டை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.
மீனம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அருகில் உள்ளவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-22 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திரயோதசி பிற்பகல் 2.45 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : பூராடம் நண்பகல் 3 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சனம், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். வடமதுரை ஸ்ரீ சவுந்திர ராஜப் பெருமாள் திருக்கல்யாணம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தபசு காட்சி விருஷபாரூட தரிசனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.
ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தாமதம்
ரிஷபம்-அன்பு
மிதுனம்-நன்மை
கடகம்-பக்தி
சிம்மம்-ஆசை
கன்னி-பணிவு
துலாம்- நிம்மதி
விருச்சிகம்-வெற்றி
தனுசு- உவகை
மகரம்-ஈகை
கும்பம்-ஆர்வம்
மீனம்-பொறுமை
- 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
- மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையையே சிவனாக வழிபடுவதால் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.43 மணி முதல் மறுநாள் 9-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 2.18 மணிவரை உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, ஏசு சபை குருவானார்.
- புதுமை ஊற்றுதான் மாதாவின் அருமருந்து என்பதை கண்டு கொண்டார்.
திருத்தலம்
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற அடைக்கல மாதா திருத்தலம் அமைந்துள்ளது. உடல் நலம், திருமண வரம், குழந்தை பேறு வேண்டுபவர்கள் அடைக்கல மாதாவை மனமுருகி வழிபட்டால் வேண்டுதல் நிறை வேறும் என்பது ஐதீகம்.
தல வரலாறு
தஞ்சையை ஆண்ட ஷாஜி என்பவர் 1682-ம் ஆண்டு முதல் 1711-ம் ஆண்டு வரை கத்தோலிக்க கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 'தஞ்சை நாட்டு நீரோ' என்று அழைக்கப்பட்ட அவர் ஜோசப் கர்வாலோ அடிகளாரை சிறைப்படுத்தி கொன்றார். பின்னர் அவரது தம்பி சரபோஜி 1711-ம் ஆண்டு அரியணை ஏறினார். அவராவது கிறிஸ்தவர்களுக்கு கருணை காட்டுவார் என்று எதிர்பார்த்த மக்கள் ஏமாந்து போயினர். கொடுமைகளின் கோரத்தை தாங்க முடியாத கிறிஸ்தவர்கள் தங்களது உயிரையும், உயிரினும் மேலான கத்தோலிக்க நம்பிக்கையையும் காத்து கொள்ளும் பொருட்டு கொள்ளிடம் ஆற்றை தாண்டி தப்பித்து வந்து நடுகாட்டில் குடியேறினர்.
முதன் முதலில் புளியங்குடியில் இருந்து சில கிறிஸ்தவா்கள் ஏலாக்குறிச்சியில் குடியேறி கூரையால் வேயப்பட்ட தேவாலயத்தை நிறுவினர். முதல் மறை பரப்பு பணியாளராக ஏலாக் குறிச்சி வந்தவர் தஞ்சை சைமன் கர்வோலா அடிகளார். அவர் 1705-ம் ஆண்டு மதுரை மறை மாநிலத்தை விட்டு, திருவாங்கூர் சென்றதால் தந்தை மானுவேல் மச்சாடோ அடிகளார் ஏலாக்குறிச்சியில் பணியாற்றினார்.
வீரமாமுனிவர்
இதையடுத்து, இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, ஏசு சபை குருவானார். 1710-ம் ஆண்டு கோவா துறைமுகம் வந்து இறங்கிய ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி 1716-ம் ஆண்டு ஏலாக்குறிச்சியில் 3-வது பங்கு தந்தையாக பணியாற்றினார். அந்த ஆண்டிலே ஏலாக்குறிச்சியில் அழகிய ஆலயம் ஒன்றை கட்டி எழுப்பினார். அதில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவில் இருந்து கொண்டு வந்த மாதா சிலையை நிறுவினார். அந்த மாதாவுக்கு 'அடைக்கல மாதா' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். பின்னர் அவர் ஏலாக்குறிச்சியில் தங்கியிருந்து பல இடங்களுக்கு சென்று மாதாவின் புகழை பறைசாற்றினார்.
ஏசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு செய்தியை தமிழ் கூறும் நல்லுலகு அறிய வேண்டுமானால் ஏசுவின் மறை உண்மைகளை தமிழிலேயே கூற வேண்டும். தமிழனாகவே வாழ வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து தமிழ் கற்று, தமிழ் மீது காதல் கொண்டு தமிழ் இலக்கண இலக்கியங்களை நுணுக்கமாக ஆராய்ந்து தேம்பாவணி என்ற தேன் சொட்டும் காப்பியத்தை படைத்தார். ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்ற தன் இயற்பெயரை 'வீரமாமுனிவர்' என்று மாற்றிக் கொண்டார்.
இவர் தனது இறுதி காலமான 1747-ம் ஆண்டு வரை 36 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு நூல் என்று 36 தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். அதில் புனித வளவனாரை போற்றி இயற்றிய தேம்பாவணியும், ஏலாக்குறிச்சி அடைக்கல மாதாவை போற்றி எழுதிய திருக்காவலூர் கலம்பகமும் குறிப்பிடத்தக்கவை. அவரது சிலை திருத்தல வளாகத்தில் உள்ளது.
தீராத நோயை தீர்த்த மாதா
அப்போதைய காலக்கட்டத்தில் ஏலாக்குறிச்சியை உள்ளடக்கிய அரியலூர் பகுதியை ஆண்ட சிற்றரசன் அரங்கப்ப மழவராய நயினார் என்ற மன்னர் ராஜப்பிளவை என்னும் தீராத நோயினால் மரணத்தை எதிர்நோக்கி கொண்டிருந்தார். மருத்துவ முறைகள் அனைத்தும் பயனற்று போகவே, அவர் ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா திருத்தலத்தை நாடி வந்தார். அப்போது, வீரமாமுனிவர் மன்னரின் வேதனையை கண்டு மாதாவை நோக்கி மாதாவே நீயல்லால் மன்னரின் நோயை யார் தீர்ப்பார்? என வேண்டி பச்சிலையை தேடி சென்றார். அப்போது சுட்டெரிக்கும் வெயில் காலம் புல்லெல்லாம் பொசுங்கிப்போன கடுங்கோடை, வறண்டு போன பூமியில் இருந்து தண்ணீர் கொப்பளித்து (மாதா குளம்) வந்ததை கண்ட வீரமாமுனிவர் இது மாதாவின் புதுமை, புதுமையோ புதுமை என பூரித்து போனார்.
புதுமை ஊற்றுதான் மாதாவின் அருமருந்து என்பதை கண்டு கொண்டார். சற்று தாமதியாமல் நீரோட சேற்றை அள்ளி மன்னரின் ராஜப்பிளவை கட்டியில் பூசினார். என்ன விந்தை அன்றே மன்னர் குணமடைந்தார். 7 ஆண்டுகளாக தூங்காத மன்னர் வலியின்றி தூங்கினார். குணமாக்க முடியாத நோயை அடைக்கல மாதா பாதம்பட்ட மண்ணே குணமாக்கியது. இதனால் நன்றி காணிக்கையாக ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா திருத்தலத்திற்கு அப்போதே மன்னர் அரங்கப்ப மழவராய நயினார் 175 ஏக்கர் நிலத்தை காணிக்கையாக வீரமாமுனிவரிடம் அளித்தார். மன்னர் அளித்த நில சாசனம் (கல்வெட்டு) இன்றும் ஏலாக்குறிச்சியில் மாதா புதுமைக்கு சாட்சியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
53 அடி உயர வெண்கல மாதா சிலை
1980-ம் ஆண்டு திருத் தலம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 2000-ம் ஆண்டு தமிழக அரசு ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா திருத்தலத்தை சுற்றுலா தலமாக அங்கீகரித்தது. திருத்தலத்தின் பின்புறம் உள்ள மாதா குளத்தில் ஜெப மாலை பூங்கா அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டில் மாதா குளத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான 53 அடி உயரமுள்ள மாதாவின் வெண்கல சொரூபம் (சிலை) அமைக்கப்பட்டது. மத, இன வேறுபாடின்றி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் ஏலாக் குறிச்சி அடைக்கல மாதா திருத்தலத்தை தேடி வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
திருத்தலத்தில் தினமும் காலை 6 மணி மற்றும் 11.30 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி மற்றும் 11.30 மணிக்கும் திருப்பலி நடைபெறும். மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 11 மணிக்கு மாதா குளத்தை சுற்றி சிறிய தேர்ப்பவனி, மாதத்தின் 2-ம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அருங்கொடை ஜெபமும், திருப்பலியும் நடைபெறும். ஈஸ்டர் பண்டிகைக்கு பின்வரும் 2-ம் சனிக்கிழமை திருத்தல ஆண்டு பெருவிழாவின் கொடியேற்றமும், 3-ம் சனிக் கிழமை அலங்கார தேர்ப்பவனியும் நடக்கிறது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நிதிநிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். நினைத்தது நிறைவேறும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் உண்டு.
ரிஷபம்
எதிலும் கவனம் அதிகம் தேவைப்படும் நாள். வீணான குழப்பம் தோன்றும். மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை.
மிதுனம்
உற்சாகமாக பணிபுரியும் நாள். தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
கடகம்
யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் தூரதேச பயணத்திற்கு உறுதுணை புரியும். பயணம் பலன் தரும்.
சிம்மம்
அலைபேசி வழித்தகவலால் ஆனந்தம் அடையும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
கன்னி
வம்பு, வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். பெரிய மனிதர்களின் ஆலோசனையால் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்.
துலாம்
நட்புவட்டம் விரிவடையும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
விருச்சிகம்
ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டும் நாள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.
தனுசு
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழில் வியாபாரத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை செய்வீர்கள். சொத்துகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மகரம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதியவர்கள் அறிமுகமாவர். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். கணிசமான தொகை கைகளில் புரளும். திருமண முயற்சி கைகூடும்.
கும்பம்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ் கூடும். பேச்சாற்றலால் பிரபலங்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை மேலதிகாரிகள் கற்றுத் தருவர்.
மீனம்
சிக்கல்கள் விலகி சிறப்புகள் வந்து சேரும் நாள். மறதியால் விட்டுப்போன பணி உத்திகளை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-21 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி பிற்பகல் 2.09 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : மூலம் நண்பகல் 1.43 மணி வரை பிறகு பூராடம்
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் சிவன் கோவில்களில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி
இன்று பிரதோஷம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் பொங்கல் பெருவிழா. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் விருஷப சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தின கிரீஸ்வரர் கோவில்களில் மாலைக்கு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீஅபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-செலவு
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-ஆதாயம்
கடகம்-வரவு
சிம்மம்-தாமதம்
கன்னி-நன்மை
துலாம்- சுகம்
விருச்சிகம்-பெருமை
தனுசு- நலம்
மகரம்-கீர்த்தி
கும்பம்-உழைப்பு
மீனம்-உதவி
- ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி, தனது பரிவாரங்களுடன் திருவில்லிபுத்தூர் வந்து கொண்டிருந்தார்.
- வழக்கில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் சக்தி இந்த பெருமாளுக்கு உண்டு என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மலை மீது இந்த கோவில் அமைந்துள்ளது.
ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி, தனது பரிவாரங்களுடன் திருவில்லிபுத்தூர் வந்து கொண்டிருந்தார். அப்போது இந்த தலத்தை கடந்தபோது நாரதர், ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் முடிந்துவிட்டது என்று கூறினார். இதையடுத்து திருப்பதிக்கு திரும்ப முடிவு செய்தார், வெங்கடாசலபதி. எனினும் ஆண்டாள் அவரை தடுத்து, இத்தலத்தில் தங்கி தனக்கும், இங்குள்ள மக்களுக்கும் அருள்பாலிக்குமாறு வேண்டிக் கொண்டாள்.
ஆண்டாளின் வேண்டுக்கோளை ஏற்று, இந்த மலையின் உச்சியிலேயே தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார், வெங்கடாசலபதி.
திருப்பதி கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை செலுத்துகின்றனர். ஆதலால் இந்த தலத்தை 'தென்திருப்பதி' எனவும் பக்தர்கள் அழைப்பர்.
மலையின் மேல் உள்ள பெருமாள் சன்னிதியை அடைய 150-க்கும் மேற்பட்ட படிகளை ஏறி செல்ல வேண்டும். இங்குள்ள பெருமாள் ஒன்பதடி உயர திருமேனியுடன் அற்புதமாக காட்சி தருகிறார். திருப்பதியில் இருப்பது போன்றே நின்ற கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
ஆலயத்தில் கருடாழ்வார், நரசிம்மர், கிருஷ்ணர் ஆகியோர் உள்பட பல்வேறு சன்னிதிகள் இங்குள்ளன. மலை அடிவாரத்தில் தாமரை மலர்கள் நிறைந்த 'கோனேரி தீர்த்தம்' உள்ளது. இந்த தீர்த்தத்தில் குளித்தால் சகல பாவங்களில் இருந்தும் விடுபடலாம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
வழக்கில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் சக்தி இந்த பெருமாளுக்கு உண்டு என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆதலால் வழக்கில் ஏதேனும் செல்வத்தை இழக்கும் சூழ்நிலை வந்தால் பக்தர்கள் இந்த குன்றின் மேல் உள்ள பெருமாளை மனமுருக வேண்டுகின்றனர். அவர்களின் வேண்டுதல்களும் உடனே நிறைவேறி விடும். திருப்பதியை போல பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடி இறக்க இங்கு வருகின்றனர். இந்த கோவிலில் கோ தானம் செய்வது சிறப்பு.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளையும் முதல் விளைப்பொருட்களான நெல், பருத்தி, மிளகாய் மற்றும் பயறு வகைகளை சீனிவாச பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்துவர். இந்த கோவிலில் உள்ள பெருமாளை வேண்டினால் சகல பாக்கியங்களையும் தந்து வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல மாதந்தோறும் பவுர்ணமியன்று கருடசேவை நிகழ்ச்சி நடக்கும். சாதி, மதம் பேதமின்றி அனைவருக்கும் இந்த பெருமாள் குல தெய்வமாக விளங்குகிறார்.
இந்த கோவில் நடை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கும். 3 கால பூஜைகள் நடைபெறுகிறது.






