என் மலர்
ஆன்மிகம்
- சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-18 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி நள்ளிரவு 1.11 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : ஆயில்யம் பிற்பகல் 2.32 மணி வரை பிறகு மகம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
இன்று சஷ்டி விரதம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். மாயவரம் ஸ்ரீ கவுரிமயூர நாதர் புஷ்ப விமான பவனி. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். சோமாசி மாற நாயனார் குரு பூஜை. திருச்சி அருகில் உத்தமர் கோவில் என்கிற பிட்சாடனார் கோவிலில் ஸ்ரீ சிவபெருமான் சூரிய பிரபையில் புறப்பாடு. காஞ்சீபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனக மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்.
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், சாத்தூர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி, பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-செலவு
கடகம்-ஆதரவு
சிம்மம்-சுகம்
கன்னி-வெற்றி
துலாம்- நற்செயல்
விருச்சிகம்-நன்மை
தனுசு- அமைதி
மகரம்-தெளிவு
கும்பம்-பக்தி
மீனம்-இன்பம்
- முடிந்து போன உங்களுடைய வாழ்க்கை மீண்டும் நல்லபடியாக தொடர ஆரம்பிக்கும்.
- ஒரு சில வாரங்களில் உங்களுடைய பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
வராகி அம்மனை அனைத்து தினங்களிலும் வழிபடுவது சிறப்பு தான் என்றாலும் சனி ஹோரையில் பஞ்சமி தினமான இன்று வழிபடுவது உங்கள் குடும்பத்திற்கே நன்மையை கொடுக்கும்.
சனிக்கிழமை வராகி வழிபாடு ஏன் சிறந்தது என்று தெரியுமா?
சனிக்கிழமை பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபாடு செய்து வந்தால் நிச்சயமாக நம்முடைய கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். முடிந்து போன உங்களுடைய வாழ்க்கை மீண்டும் நல்லபடியாக தொடர ஆரம்பிக்கும். வீட்டில் இருப்பவர்கள் யாருக்காவது தீராத நோய் பிரச்சனை இருக்கலாம். அல்லது வருமானத்திற்கே வழி இல்லாமல் வாழ வழி இல்லாமல் நடுவீதியில் நிற்கக்கூடிய நிலைமை இருந்தாலும் கூட நம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிடித்து வைத்து அதை வராகி என்று நினைத்து வழிபாடு செய்தால், இந்த உலகத்தில் வாழ்வதற்கு உண்டான தகுதி அனைத்தும் உங்களைத் தேடி வரும்.
சனிக்கிழமைகளில் வாராகி அம்மனை எப்படி வழிபாடு செய்வது?
சனிக்கிழமை சனி ஹோரை நேரத்தில் வாராகி அம்மன் படத்தை துடைத்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். வராகி அம்மனின் திருவுருவப் படம் இல்லை என்று கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் திருவுருவப்படம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. சிறிது மஞ்சளில் பன்னீர் ஊற்றி குழைத்து, மஞ்சள் பிள்ளையார் போல பிடித்து வைத்து அதை வராகித் தாயாக நினைத்துக் கொண்டு வழிபட நற்பலன் கிடைக்கும். ஒரு செம்பருத்திப்பூ இல்லை என்றால், நீல நிற சங்குப்பூ, சிவப்பு நிற அரளிப்பூ வைத்து கூட அலங்காரம் செய்து கொள்ளலாம்.
மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் பத்து வெண் கடுகுகளை போட்டு, தீபம் ஏற்றி பூஜையறையில் வைத்து விடுங்கள். நைவேதியமாக ஒரு டம்ளர் பானகம் வைத்தால் கூட போதும். பூஜை அறையில் ஏற்றி வைத்த தீபத்திற்கு முன்பு அமர்ந்து வராகி அம்மனை மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டும். உங்கள் கஷ்டங்களை சொல்லி, அந்த கஷ்டம் சரியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் ஒரு சில வாரங்களில் உங்களுடைய பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வர சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும்.
கடன் தொல்லை, வறுமை, பண பிரச்சனை போன்றவைகள் நீங்கும்.
எதிர்பாராத ஆபத்துகளும், விபத்துக்களும் விலகி ஓடும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வாக்கு பலிதம் ஏற்படும், நீண்ட நாள் நோய்கள் குணமாகும். தீவினை கோளாறுகள் நீங்கும்.
சுபகாரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கி குடும்பத்தில் மங்கல காரியங்கள் நடைபெறும்.
உங்கள் வாழ்க்கையில் ஒளி வீச வாரம் தோறும் வரும் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் இந்த தீபத்தை ஏற்றி வராகி அம்மனுக்கு முன்பு அமர்ந்து கொள்ளுங்கள்.
- பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்கின்றனர்.
- வைகாசி மாதத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி வைகாசி மாதத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
வருகிற 10-ந்தேதி பகல் 12.32 மணிக்கு பவுர்ணமி தொடங்கி 11-ந்தேதி பகல் 1.52 மணி வரை நீடிக்கிறது. அந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம்.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-17 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி நள்ளிரவு 1.27 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : பூசம் பின்னிரவு 2.05 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் காலை பூச்சப்பரத்திலும், இரவு சுவாமி ரிஷப வாகனத்திலும் பவனி. மாயவரம், திருவாடானை, திருப்பத்தூர், நயினார் கோவில், ஆழ்வார் திருநகரி, காஞ்சி குமரக்கோட்டம் முருகப் பெருமான் கோவில்களில் உற்சவம் ஆரம்பம். மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-துணிவு
ரிஷபம்-மேன்மை
மிதுனம்-நலம்
கடகம்-நிறைவு
சிம்மம்-ஆதரவு
கன்னி-சுகம்
துலாம்- வரவு
விருச்சிகம்-செலவு
தனுசு- ஆக்கம்
மகரம்-அன்பு
கும்பம்-தெளிவு
மீனம்-நிறைவு
- மகா சிவராத்திரி அன்று தணிகை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.
- முருகப்பெருமான் கோபம் தணிந்து அருளும் தலம் என்பதால், திருத்தணியில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாவது படைவீடாகத் திகழ்வது திருத்தணிகை. இந்த ஆலயத்தில் வழங்கப்படும் விபூதி, சந்தனம் ஆகிய பிரசாதங்கள் தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன என்பது பக்தர்கள் நம்பிக்கை.
திருத்தணிகையில் பக்தர்கள் எடுக்கும் காவடி வித்தியாசமாக இருக்கும். நீண்ட குச்சியின் ஒரு முனையில் பூக்களும், மற்றொரு முனையில் அர்ச்சனைப் பொருள்களும் கட்டி காவடி எடுப்பது திருத்தணியில் மட்டுமே உள்ள வழக்கம்.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், திருத்தணி மலையின் கீழ் பகுதியில் உள்ள ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து, 'முருகனுக்கு அரோகரா' என்ற சரண கோஷத்துடன் பக்தர்களால் சுமந்து செல்லப்படும் 1008 பால் குடங்கள், மலை மேல் உள்ள முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது கண் கொள்ளாக் காட்சி.
மகா சிவராத்திரி அன்று தணிகை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.
இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், மூலவர் உட்பட எல்லா சன்னிதிகளையும் தரிசித்த பிறகு, நிறைவாக இங்குள்ள ஆபத்சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
திருமால் ஆலயங்களைப் போன்று, முருகனின் திருப்பாத சின்னத்தை (சடாரி) பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவது, திருத்தணிக் கோவிலின் தனிச்சிறப்பு.
முருகப்பெருமான் கோபம் தணிந்து அருளும் தலம் என்பதால், திருத்தணியில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.
காதர் என்னும் இஸ்லாமியரால் கட்டப்பட்ட நவாப் மண்டபத்தில் ஆடிக்கிருத்திகை போன்ற திருவிழா காலங்களில் இஸ்லாமிய நண்பர்கள் வாத்தியம் இசைக்கின்றனர்.
வள்ளலார், கண்ணாடியில் முருகப்பெருமானின் தரி சனத்தைக் கண்டு அருள்பெற்றவர். அந்த முருகப்பெருமான், திருத்தணிகை முருகப்பெருமான் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவருட்பா நூலில் `சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்' என்ற பாடலில், முருகனின் திருவருள் தரிசனம் பெற்ற அற்புதத்தைப் பற்றி வள்ளலார் கூறியுள்ளார்.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
- திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-16 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி பின்னிரவு 2.14 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : புனர்பூசம் பின்னிரவு 2.08 மணி வரை பிறகு பூசம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை
இன்று சதுர்த்தி விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படை வீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.
மிலட்டூர் ஸ்ரீவிநாயகப் பெருமாள் புறப்பாடு. தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சனம். மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. இருக்கன்குடி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமாளுக்கு கிளி வாகனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-லாபம்
மிதுனம்-நலம்
கடகம்-நட்பு
சிம்மம்-உவகை
கன்னி-ஈகை
துலாம்- செலவு
விருச்சிகம்-உயர்வு
தனுசு- சுகம்
மகரம்-சுபம்
கும்பம்-சளிப்பு
மீனம்-இன்பம்
- இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் வருகிற 5-ந் தேதி ஆகும்.
- ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை ஜூன் 14-ந் தேதி திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்படும்.
அதன்படி ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் வருகிற 5-ந் தேதி ஆகும்.
இதற்காக சபரிமலை கோவில் நடை 4-ந் தேதி திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மறுநாள் (5-ந் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரதிஷ்டை தின பூஜைகள் தொடங்குகிறது.
தொடர்ந்து நடைபெறும் வழிபாட்டுக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அதன் பிறகு ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை ஜூன் 14-ந் தேதி திறக்கப்படுகிறது.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-15 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை பின்னிரவு 3.28 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : திருவாதிரை பின்னிரவு 2.37 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சனம், தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவர் கூட புறப்பாடு. சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகுரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.
ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. குறுக்குத் துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-உறுதி
மிதுனம்-ஆர்வம்
கடகம்-கவனம்
சிம்மம்-சுகம்
கன்னி-தாமதம்
துலாம்- புகழ்
விருச்சிகம்-நலம்
தனுசு- நன்மை
மகரம்-உயர்வு
கும்பம்-உழைப்பு
மீனம்-மாற்றம்
- இன்று அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தி.
- சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் பூத வாகனத்தில் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-14 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பிரதமை காைல 7.03 மணி வரை
பிறகு துவிதியை பின்னிரவு 3.49 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : மிருகசீர்ஷம் பின்னரவு 3.28 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம், திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
இன்று அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தி. சுபமுகூர்த்த தினம். சந்திர தரிசனம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் பூத வாகனத்தில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளிங்குடி, ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அபயப்பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-ஆக்கம்
மிதுனம்-சோர்வு
கடகம்-ஆசை
சிம்மம்-திறமை
கன்னி-பரிவு
துலாம்- பக்தி
விருச்சிகம்-பரிவு
தனுசு- உறுதி
மகரம்-தனம்
கும்பம்-பயணம்
மீனம்-நிம்மதி
- சிவகாசி விசுவநாதர் பூத வாகனத்தில் பவனி.
- திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
27-ந் தேதி (செவ்வாய்)
* சிவகாசி விசுவநாதர் விழா தொடக்கம்.
* மன்னார்குடி ராஜ கோபால சுவாமி புறப்பாடு.
* சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
28-ந் தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* சிவகாசி விசுவநாதர் பூத வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
29-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.
30-ந் தேதி (வெள்ளி)
* சதுர்த்தி விரதம்.
* குரங்கணி முத்து மாலையம்மன் வருசாபிஷேகம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லித் தாயார் பவனி.
* திருத்தணி முருகப் பெருமான் கிளிவாகன சேவை.
* சமநோக்கு நாள்.
31-ந் தேதி (சனி)
* சிவகாசி விசுவநாதர் காலை பூச்சப்பரத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் பவனி.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
1-ந் தேதி (ஞாயிறு)
* சஷ்டி விரதம்.
* திருநெல்வேலி பிட்டாபுரத்தி அம்மன் உற்சவம் ஆரம்பம்.
* மாயாவரம் கவுரிமாயூர நாதர் புஷ்ப வாகனத்தில் பவனி.
* உத்தமர் கோவிலில் சிவபெருமான் சூரிய பிரபையில் புறப்பாடு.
* நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி விழா தொடக்கம்.
* கீழ்நோக்கு நாள்.
2-ந் தேதி (திங்கள்)
* மதுரை கூடலழகர் வைகாசி உற்சவம் ஆரம்பம்.
* நயினார்கோவில் நாகநாதர் காலை இந்திர விமானத்திலும், இரவு பூத வாகனத்திலும் பவனி.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விழா தொடக்கம்.
* கீழ்நோக்கு நாள்.
- சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் உற்சவம் ஆரம்பம்.
- ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-13 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அமாவாசை காலை 9.09 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: கார்த்திகை காலை 6.02 மணி வரை பிறகு ரோகிணி மறுநாள் விடியற்காலை 4.24 மணி வரை பிறக மிருகசீர்ஷம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி உள்பட முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் உற்சவம் ஆரம்பம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திர வைபவம். திண்டுக்கல் ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை, ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சாந்தம்
ரிஷபம்-செலவு
மிதுனம்-வரவு
கடகம்-தாமதம்
சிம்மம்-இன்பம்
கன்னி-உறுதி
துலாம்- திடம்
விருச்சிகம்-சிறப்பு
தனுசு- உவகை
மகரம்-ஆதரவு
கும்பம்-அமைதி
மீனம்-பாராட்டு
- ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் தங்க ரதக்காட்சி.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-12 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி காைல 11.30 மணி வரை பிறகு அமாவாைச
நட்சத்திரம்: பரணி காலை 7.36 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சர்வ அமாவாசை, கார்த்திகை விரதம், திருவல்லிக்கேணி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்
இன்று சர்வ அமாவாசை. கார்த்திகை விரதம். ராமேஸ்வரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது நன்று. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் தங்க ரதக்காட்சி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவிடை மருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில் பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமானுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சாந்தம்
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-சாதனை
கடகம்-வரவு
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-திடம்
துலாம்- உறுதி
விருச்சிகம்-அமைதி
தனுசு- களிப்பு
மகரம்-பாராட்டு
கும்பம்-ஆதரவு
மீனம்-சிறப்பு






