என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இன்று மாத சிவராத்திரி.
    • வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-11 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திரயோதசி நண்பகல் 1.56 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம் : அசுவினி காலை 9.14 மணி வரை பிறகு பரணி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சி காமாட்சியம்மனுக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை

    இன்று மாத சிவராத்திரி. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனக மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். சுழற்சிங்க நாயனார் குரு பூஜை. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்ம னுக்கு காலையில் பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி, பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-சுபம்

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-உறுதி

    கன்னி-திறமை

    துலாம்- களிப்பு

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- வரவு

    மகரம்-மாற்றம்

    கும்பம்-உயர்வு

    மீனம்-மேன்மை

    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்காரம்.
    • ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-10 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவாதசி மாலை 4.22 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : ரேவதி காலை 10.52 மணி வரை பிறகு அசுவினி

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சனிப்பிரதோஷம், திருவல்லிக்கேணி கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை

    இன்று சனிப் பிரதோஷம். குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரிஸ்வரர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவில், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதப் பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-பரிசு

    மிதுனம்-உழைப்பு

    கடகம்-பாராட்டு

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-இன்பம்

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- பரிசு

    மகரம்-ஆசை

    கும்பம்-பயணம்

    மீனம்-உற்சாகம்

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    • திருமாலிருஞ்சோலை, ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-9 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி மாலை 6.44 மணி வரை. பிறகு துவாதசி.

    நட்சத்திரம் : உத்திரட்டாதி நண்பகல் 12.25 மணி வரை. பிறகு ரேவதி.

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை

    இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை. மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

    ஸ்ரீபெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு, ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெருதிருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. பழனி ஆண்டவர் பவனி வரும் காட்சி. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். திருமாலிருஞ்சோலை, ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-உண்மை

    கடகம்-வெற்றி

    சிம்மம்-தாமதம்

    கன்னி-வெற்றி

    துலாம்- தெளிவு

    விருச்சிகம்-பக்தி

    தனுசு- நற்செயல்

    மகரம்-மேன்மை

    கும்பம்-அமைதி

    மீனம்-மகிழ்ச்சி

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலை சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-8 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : தசமி இரவு 8.58 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : பூரட்டாதி நண்பகல் 1.49 மணி வரை பிறகு உத்திரட்டாதி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் தெப்ப உற்சவம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

    ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலை சாற்று வைபவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆக்கம்

    ரிஷபம்-ஆசை

    மிதுனம்-தனம்

    கடகம்-நிறைவு

    சிம்மம்-உதவி

    கன்னி-உறுதி

    துலாம்- பாராட்டு

    விருச்சிகம்-பணிவு

    தனுசு- ஆர்வம்

    மகரம்-தெளிவு

    கும்பம்-போட்டி

    மீனம்-வரவு

    • ஆலயத்தின் முன் மண்டபத்தின் மேலே மயில்மீது சுப்பிரமணியர் அழகாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
    • இந்த கோவிலில் ஆண் வாரிசு வேண்டி வருவோர், முருகனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, வழிபட்டால் நிச்சயமாக ஆண் வாரிசு கிடைக்கும்.

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். குன்றிருக்கும் இடங்கள் மட்டுமல்லாமல் அழகன் முருகனுக்கு ஊர்கள்தோறும் பல ஆலயங்கள் உள்ளன. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அமைந்திருக்கும் பாலமுருகன் கோவில் பற்றி இங்கு பார்ப்போம்.

    தல வரலாறு

    நூறு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் நிறைந்த கிராமமாக சேத்தியாதோப்பு இருந்துள்ளது. இங்கு வசித்த மக்கள் தீப்பாய்ந்தநாச்சியார் ஆலயத்திற்கும், கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்திற்கும் சென்று வணங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

    இந்த ஊரில் ஒரு தீவிர முருக பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் பழனி, சுவாமிமலை, மருதமலை, திருச்செந்தூர், திருத்தணி, என அறுபடை வீட்டுக்கும் செல்வதே தன்னுடைய முதல் பணியாக கொண்டவர். முருகனின் பணியே முதல் பணி என வாழ்ந்து வந்த இவர், தன் வீட்டுக்கு அருகிலேயே ஒரு வேல் வைத்து அதை வணங்க ஆரம்பித்தார்.

    வேலு நயினார் என்பவர் இவரின் தீவிர முருக பக்தியைக் கண்டு, இவருக்காக ஓடுகள் வேய்த கட்டிடம் ஒன்றைக் கட்டி அதில் வள்ளி தெய்வானை சமேதராக பாலமுருகனை பிரதிஷ்டை செய்தார். பின்பு நூதன ஆலயமாக அமைக்கப்பட்ட இந்த ஆலயம், தற்போது கடலூர் மாவட்டத்தின் சிறப்புவாய்ந்த முருகன் ஆலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    ஆலய அமைப்பு

    இந்த ஆலயம் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. ஆலயத்தின் முன் மண்டபத்தின் மேலே மயில்மீது சுப்பிரமணியர் அழகாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவரின் இருபுறமும் துவார பாலகர் கள் கம்பீரமாக நிற்கின்றனர். அவர்களை வணங்கி விட்டு மகா மண்டபத்திற்குள் சென்றால் முதலில் நாம் தரிசிப்பது வேல், பலிபீடம், மயில். இதன் இடது பக்கம் இடும்பன், வலப்பக்கம் கடம்பன் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தில் அர்த்த மண்டபம் கிடையாது.

    கருவறை வாசலில் விநாயகர், வள்ளி- தெய்வானை உடனாய பால முருகன் உற்சவர் சிலை உள்ளது. கோவில் கருவறையில் வள்ளி- தெய்வானையுடன் பாலமுருகன் கிழக்கு முகம் நோக்கி நின்றகோலத்தில் அற்புதமாய் காட்சி தருகிறார். கோவில் பிரகாரத்தில் விநாயகர், ஆதிபாலமுருகன் மற்றும் வள்ளி தெய்வானை சிலைகளும், செங்காளியம்மன் சன்னிதியும் அமைந்துள்ளது.

    பிரார்த்தனைகள்

    இந்த கோவிலில் ஆண் வாரிசு வேண்டி வருவோர், முருகனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, வழிபட்டால் நிச்சயமாக ஆண் வாரிசு கிடைக்கும். அப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு முருகனின் திருநாமங்களில் ஒன்றைத்தான் பக்தர்கள் பெயராக சூட்டுகிறார்கள்.

    எந்த பிரச்சினையாக இருந்தாலும் முருகன் சன்னிதி முன்பு மாவிளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சகல பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைப்பார் வேலன் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க, நல்ல வேலை அமைய வேலனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து, பச்சை பட்டாடை அணிவித்து பிரார்த்தனை செய்தால் கல்வியையும், வேலையையும் வேலவன் அளிக்கிறான்.

    பேச்சுத்திறன் வராத குழந்தைகள், இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு தேனும், திணைமாவும் வைத்து பூஜை செய்து அதை அருட்பிரசாதமாக வாங்கி சாப்பிட்டால் நாளடைவில் பேச்சுத்திறன் வருவதாகவும் கூறுகிறார்கள். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை வளரவும், குடும்பத்தில் பிரச்சினைகள் தீரவும் வள்ளி, தெய்வானை, பாலமுருகனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்கின்றனர்.

    திருவிழாக்கள்

    ஆண்டு திருவிழாவாக பங்குனி உத்திரம் ஒரு நாள் உற்சவம் நடைபெறும். அன்று காலையில் ஆற்றங்கரையில் இருந்து காவடிகள், பால்குடம் என அனைத்தும் வீதியை சுற்றி கோவிலை வந்தடையும். பின்பு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறும்.

    வைகாசி விசாகம் அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எம்பெருமான் காட்சி தருவார். மாதந்தோறும் கிருத்திகை, சஷ்டி, விசாகம் நட்சத்திரம் ஆகிய மூன்று தினங்களிலும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெறுகிறது.

    கோவில் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு என்ற ஊரில் அமைந்துள்ளது பாலமுருகன் கோவில்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-7 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : நவமி இரவு 10.59 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : சதயம் பிற்பகல் 2.57 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், மதுராந்தகம் ஏரிகாத்த கேதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கேதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு.

    திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தாண சயனத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அபயப்பிரதான ஸ்ரீ ரங்கநாயகர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பரிவு

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்-அனுகூலம்

    சிம்மம்-உதவி

    கன்னி-செலவு

    துலாம்- வரவு

    விருச்சிகம்-பக்தி

    தனுசு- உயர்வு

    மகரம்-மகிழ்ச்சி

    கும்பம்-முயற்சி

    மீனம்-பாசம்

    • சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்
    • காரைக்குடி கொப்புடை அம்மன் தெப்ப உற்சவம்.

    20-ந்தேதி (செவ்வாய்)

    * காரைக்குடி கொப்புடை அம்மன் ரத உற்சவம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    21-ந் தேதி (புதன்)

    * காரைக்குடி கொப்புடை அம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * திருக்கூடல்மலை முத்துமாணிக்க சுவாமிகள் குருபூஜை.

    * மேல்நோக்கு நாள்.

    22-ந் தேதி (வியாழன்)

    * காரைக்குடி கொப்புடை அம்மன் தெப்ப உற்சவம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    23-ந் தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * சர்வ ஏகாதசி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    24-ந் தேதி (சனி)

    * சனிப் பிரதோஷம்.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * தேவகோட்டை ரெங்கமன்னார் புறப்பாடு.

    * திருவரங்கம், திருவள்ளூர், மதுரை தலங்களில் சுவாமி அலங்கார திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    25-ந் தேதி (ஞாயிறு)

    * கழற்சிங்க நாயனார் குருபூஜை.

    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமானுக்கு திருமஞ்சனம்.

    * அகோபிலமடம் 39-வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம்.

    * சமநோக்கு நாள்.

    26-ந் தேதி (திங்கள்)

    * அமாவாசை.

    * கார்த்திகை விரதம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * மதுரை அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி கோவில் கொடியேற்றம்.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் வரிசையில் வைகாசி விசாகத் திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருடத்துக்கான திருவிழா ஜூன் 3-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்ககுதிரை, வெள்ளியானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளிமயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து வைகாசி விசாகத் தேரோட்டம், மறுநாள் 9-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

    திருவிழா நடக்கும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை, வீணை இசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • வாடிபட்டி குலசேகரன் கோட்டை ஸ்ரீ மீனாட்சி கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-6 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: அஷ்டமி நள்ளிரவு 12.43 மணி வரை

    பிறகு நவமி

    நட்சத்திரம்: அவிட்டம் பிற்பகல் 3.48 மணி வரை

    பிறகு சதயம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் ரதோற்சவம். வாடிபட்டி குலசேகரன் கோட்டை ஸ்ரீ மீனாட்சி கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம். திருத்தணி முருகபெருமானுக்கு பால் அபிஷேகம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்த கோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் சிறப்பு அபிஷேகம். திருமா லிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீ பெரும்பு தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-களிப்பு

    கடகம்-மகிழ்ச்சி

    சிம்மம்-வெற்றி

    கன்னி-உயர்வு

    துலாம்- பக்தி

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- உண்மை

    மகரம்-தனம்

    கும்பம்-திடம்

    மீனம்-கடமை

    • விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் மூலஸ்தான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.
    • சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கயிறுகாரன் கொட்டாய் பகுதியில் செல்வ விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கணபதி ஹோமம், கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து முதல் கால யாக பூஜை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடந்தது.

    நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, 2-ம் காலயாக பூஜை, மகா பூர்ணா ஹுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் மூலஸ்தான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    திருப்பூர் சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

    விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று (19-ந் தேதி) முதல் மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவுல் தர்மகர்த்தாக்கள், நிர்வாகக் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    திருவையாறு:

    திருவையாறு அய்யனார் கோவில் தெருவில் உள்ள ஆகாச மாரியம்மன் கோவிலில் 5 நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, முதல் நாளன்று காப்பு கட்டுதலும், 2-வது நாளில் பூச்சாரிதல் விழாவும் நடைபெற்றது. 3-வது நாளான நேற்று பால்குட விழா விமரிசையாக நடந்தது.

    முன்னதாக ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடத்தை தலையில் சுமந்தும், தீச்சட்டியை கையில் ஏந்தியவாறு திருவையாறு காவேரி ஆற்றில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர், மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் தெருவாசிகள் செய்திருந்தனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராகு-கேது பகவானை வழிபட்டனர்.
    • பல்வேறு இடங்களில் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

    குனியமுத்தூர்:

    கோவை மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது.மேலும் ராகு-கேது பகவானுக்கு 1008 மலர் அர்ச்சனை, சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராகு-கேது பகவானை வழிபட்டனர்.

    நிகழ்ச்சியில் நிலவேம்பு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் கலந்துகொண்டு ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் குறித்து பேசியதாவது:-

    ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் உலகின் பல்வேறு இடங்களில் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

    ராகு பகவான் மீனராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகி உள்ளதால் நீர் சம்பந்தமான ஆபத்து, புயல், பெருமழை வெள்ளம் போன்றவை இந்தாண்டு ஏற்படும். இந்தியா உலக அரங்கில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழக மாணவர்கள் உலகளவில் சிறப்பு பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×