என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராகு-கேது பகவானை வழிபட்டனர்.
    • பல்வேறு இடங்களில் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

    குனியமுத்தூர்:

    கோவை மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது.மேலும் ராகு-கேது பகவானுக்கு 1008 மலர் அர்ச்சனை, சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராகு-கேது பகவானை வழிபட்டனர்.

    நிகழ்ச்சியில் நிலவேம்பு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் கலந்துகொண்டு ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் குறித்து பேசியதாவது:-

    ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் உலகின் பல்வேறு இடங்களில் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

    ராகு பகவான் மீனராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகி உள்ளதால் நீர் சம்பந்தமான ஆபத்து, புயல், பெருமழை வெள்ளம் போன்றவை இந்தாண்டு ஏற்படும். இந்தியா உலக அரங்கில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழக மாணவர்கள் உலகளவில் சிறப்பு பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.
    • திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-5 (திங்கட்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சப்தமி பின்னிரவு 2.07 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : திருவோணம் மாலை 4.15 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோவிலில் ஒரே இடத்தில் 24 கருட வாகனங்கள் பக்தர்களுக்கு காட்சி

    இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோவிலில் ஒரே இடத்தில் 24 கருட வாகனங்கள் ராஜ வீதிகளின் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.

    திருவிடை மருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம் அலங்காரம், வழிபாடு. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-உறுதி

    கடகம்-தாமதம்

    சிம்மம்-அனுகூலம்

    கன்னி-ஊக்கம்

    துலாம்- பரிசு

    விருச்சிகம்-தனம்

    தனுசு- நேர்மை

    மகரம்-பணிவு

    கும்பம்-பாசம்

    மீனம்-பண்பு

    • இன்று சுபமுகூர்த்த தினம். திருவோண விரதம்.
    • திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-4 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சஷ்டி பின்னிரவு 2.40 மணி வரை. பிறகு சப்தமி.

    நட்சத்திரம் : உத்திராடம் மாலை 4.17 மணி வரை. பிறகு திருவோணம்.

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சி ஸ்ரீவரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் உலா

    இன்று சுபமுகூர்த்த தினம். திருவோண விரதம். சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு திருமஞ்சன சேவை. காஞ்சி ஸ்ரீவரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் உலா. காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன், சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீஅனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீஅங்காரகருக்கும், ஸ்ரீசெல்லமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி, பழனி ஸ்ரீபாலதண்டயுதபாணி சுவாமி கோவில்களில் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதாயம்

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-தெளிவு

    கடகம்-தேர்ச்சி

    சிம்மம்-உதவி

    கன்னி-வெற்றி

    துலாம்- ஆசை

    விருச்சிகம்-உறுதி

    தனுசு- மாற்றம்

    மகரம்-சாந்தம்

    கும்பம்-புகழ்

    மீனம்-உதவி

    • வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்த சரஸ்வதிக்குளம் பொற்றாமரை திருக்குளம் என 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன.
    • அத்தி வரதர் 10 அடி உயரமும் நான்கு 4 அகலமும் கொண்டவர் முழுவதும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர்.

    வரதராஜ பெருமாள் கோவில் சிறப்புகள்

    வரதராஜர்

    பிரம்மா தன்னுடைய மனம் தூய்மை பெறுவதற்காக காஞ்சிபுரம் சென்றார். அப்போது அவர் தனது மனைவி சரஸ்வதியை விட்டுவிட்டு மற்ற மனைவிகளான சாவித்திரி, காயத்ரி ஆகியோரை வைத்து அந்த யாகத்தை செய்தார். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி யாகத்தை அழிப்பதற்காக வேகவதி என்ற ஆறாக உருவெடுத்து பாய்ந்தோடி வந்தால் இதையடுத்து பிரம்மதேவன் மகாவிஷ்ணுவான பெருமாளிடம் வேண்டினார். வெள்ளப்பெருக்கு வரும் வழியில் மகாவிஷ்ணுவான பெருமாள் சயனித்து படுத்து கிடந்தார். இதனால் அவரை தாண்டி ஆற்று நீர் செல்ல முடியவில்லை எப்படி பிரம்மன் வேண்டியதும் வரம் தந்தவர் என்பதால் இந்த கோவில் பெருமாள் வரதராஜர் என பெயர் பெற்று உள்ளார்.

    அனந்தசரஸ் திருக்குளம்

    வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்த சரஸ்வதிக்குளம் பொற்றாமரை திருக்குளம் என 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன. மேற்கு ராஜகோபுரத்தில் வடகிழக்கிலும் நூற்றுக்கால் மண்டபத்திற்கு வடக்கேயும் அனந்த சரஸ்வதி குளம் இருக்கிறது. இந்த குளத்தில் விமானத்துடன் கூடிய 4 கால் நீராடி மண்டபத்தின் அடியில் தான் அத்திவரதர் சயன கோலத்தில் அருள் பாலிக்கிறார் அத்தி வரதர் 10 அடி உயரமும் நான்கு 4 அகலமும் கொண்டவர் முழுவதும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர். இவர் திருக்குளத்தின் உள்ளே இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வெளியே வந்து கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 30 நாட்கள் சயன கோலத்திலும் 18 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளிப்பார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த அற்புதமான நிகழ்வு கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது

    தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லி

    சிருங்கி பேரார் என்ற முனிவரின் இரண்டு மகன்கள் கவுதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். ஒருமுறை பூஜைக்கு அவர்கள் இருவரும் தீர்த்தம் கொண்டு வந்தனர். அந்த தீர்த்தத்தில் பல்லி கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதம முனிவர் அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சபித்தார். பிறகு சீடர்களை காஞ்சிபுரம் சென்று வழிபட்டால் மோட்சம் உண்டு என்று கூறினார். இதையடுத்து இருவரும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

    இறைவன் உங்கள் ஆன்மா வைகுண்டம் செல்லும் அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்சலோகங்களால் எனக்கு பின்புறம் இருக்கட்டும் என அருள்பாளித்தார். மேலும் தன்னை தரிசிக்க வருபவர்கள் உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்க பெறுவார்கள் என அருளினார். அதன்படி இந்த கோவிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லிகளை பக்தர்கள் வணங்கி செல்கின்றனர்.

    • காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
    • வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20-ந்தேதி வரை நடக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உலக புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு மேற்கு பகுதிகளில் 2 ராஜ கோபுரங்களுடன், அனந்த சரஸ் திருக்குளம், பொற்றாமரை திருக்குளம், என இரு திருக்குளங்களுடன், வேணுகோபாலன் சன்னதி, பூவராகவர் சன்னதி, ரங்கநாதர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, நம்மாழ்வார் சன்னதி, மணவாள மாமுனிகள் சன்னதி, உடையவர் மற்றும் ஆழ்வார்கள் சன்னதி, வேதாந்த தேசிகர், தாத தேசிகன் சன்னதி, ராமர் சன்னதி, திருப்பனந்தாள்வான் சன்னதி, கரிய மாணிக்க பெருமாள் சன்னதி, பெருந்தேவி தாயார் சன்னதி, லட்சுமி நரசிம்ம சாமி சன்னதி, ஆண்டாள் சன்னதி, சேனை முதன்மையார் சன்னதி, தன்வந்திரி சன்னதி, வலம்புரி விநாயகர் சன்னதி, மலையாள நாச்சியார் சன்னதி, உள்ளிட்ட சன்னதிகளுடன் விளங்குகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20-ந்தேதி வரை நடக்கிறது.

    நாள்தோறும் வரதராஜ பெருமாள், காலை, மாலை, என இரு வேலைகளிலும் தங்க சப்பரம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரபை வாகனம், தங்கப் பல்லக்கு, யாளி வாகனம், யானை வாகனம், திருத்தேர், குதிரை வாகனம், புண்ணியகோட்டி விமானம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரங்களில் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதி உலா வந்தார்.

    இந்த நிலையில் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    7-வது நாள் விழாவை முன்னிட்டு 100 டன் எடையுள்ள 63 அடி உயரமும் 30 அடி அகலமும் 5 நிலைகளும் கொண்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் பவனி வந்தார்.

    பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் திரண்டு வந்த சாமி தரிசனம் செய்தனர்.

    • திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு அலங்காரம். காரைக்குடி ஸ்ரீகொப்படையம்மன் வெள்ளி கேடயத்தில் பவனி.
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-3 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பஞ்சமி பின்னிரவு 3.33 மணி வரை. பிறகு சஷ்டி.

    நட்சத்திரம் : பூராடம் பிற்பகல் 3.25 மணி வரை. பிறகு உத்திராடம்.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை

    திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு அலங்காரம். காரைக்குடி ஸ்ரீகொப்படையம்மன் வெள்ளி கேடயத்தில் பவனி. மதுரை ஸ்ரீகூடலழகர், ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. காஞ்சீபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் உபய நாச்சியார்களுடன் ரதோற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீஆதிகசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-பாராட்டு

    மிதுனம்-ஆசை

    கடகம்-பண்பு

    சிம்மம்-பயணம்

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- உதவி

    விருச்சிகம்-உறுதி

    தனுசு- பக்தி

    மகரம்-முயற்சி

    கும்பம்-அனுகூலம்

    மீனம்-சாந்தம்

    • 27 நட்சத்திரங்களை தன் மனைவிகளாகக் கொண்டவன் சந்திரன்.
    • மதுரையைப் போலவே இங்கும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ளது, ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயம். சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று வகையிலும் பெருமை உடையதாக உள்ளது. சந்திரன் வழிபட்டு சிவன் அருள் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இக்கோவிலில் மூலவராக சோமேஸ்வரர், உற்சவராக சோமநாதர் ஆகியோர் உள்ளனர். அம்பாள் ஆனந்தவல்லி தாயார். புராண காலத்தில் இந்த ஊர் 'சந்திர பட்டணம்' என்று வழங்கப்பட்டு உள்ளது.

    27 நட்சத்திரங்களை தன் மனைவிகளாகக் கொண்டவன் சந்திரன். அந்த மனைவிகளில் ரோகிணி, கார்த்திகை ஆகிய இருவர் மீது மட்டும் மிகுதியான அன்பு கொண்டவனாக இருந்தான். இதைக்கண்டு கோபமுற்ற அவனது மற்ற மனைவிகள் இதுபற்றி தம் தந்தையான தட்சனிடம் முறையிட்டனர். இதைக் கேட்டு சினமடைந்த தட்சன், சந்திரனுக்குச் சாபம் கொடுத்தான். இதன் காரணமாக வெப்பு நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், பொலிவிழந்து தேயத் தொடங்கினான். தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி வருந்திய சந்திரன், தன் சாபத்துக்கு விமோசனம் என்னவென்று அகத்தியரிடம் கேட்டான். அதற்கு அவர், 'வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள வில்வ வனத்தில் உள்ள லிங்கத்தை கோவில் கட்டி வணங்கினால் இந்தப்பிணி நீங்கும்' என்று கூறினார்.

    அதன்படியே சந்திரனும் செய்து தன் பிணியை நீக்கிக்கொண்டான். மேலும் சந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான் தன் திருமுடியில் சந்திரனுக்கு இடம் தந்ததாக கோவில் தல வரலாறு தெரிவிக்கிறது. சந்திரன் தன்னுடைய கலைகளால் அபிஷேகம் செய்ததால் இங்குள்ள சுயம்பு லிங்கம் வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறது. இத்தலத்தில் சந்திர பகவான், தம் இரு மனைவியரான ரோகிணி, கார்த்திகை ஆகிய இருவருடன் ஒரே கல்லில் சிற்பமாக தனிச் சன்னிதியில் காட்சியளிப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பு.

    மதுரையில் ஆட்சி செய்த நாயக்க வம்சத்திற்குப் பிறகு, வேற்று மதத்தினர் மதுரையம்பதியைக் கைப்பற்ற முனைந்தனர். அப்போது, சிவகங்கை மன்னர் சசிவர்ணரும், சேது காவலரும் இதை எப்படியாவது முறியடிக்க வேண்டுமென முடிவெடுத்தனர். வீரத்திற்கு இலக்கணம் வகுத்த தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரன் தலைமையில் சேது சேனையும், விவேகத்தில் சிறந்த தாண்டவராயப் பிள்ளை தலைமையில் சிவகங்கை மறவர் படையும் வீறு கொண்டு எழுந்தன. அவர்கள் ஆலவாய் அண்ணலையும், அங்கயற்கண்ணியையும் தக்க பாதுகாப்புடன் மானாமதுரைக்குக் கொண்டு வந்து சோமநாதர் கோவிலில் பாதுகாப்பாக வைத்ததாக சொல்லப்படுகிறது. மீனாட்சியும், சொக்கநாதரும் இரண்டு ஆண்டுகள் இவ்வாலயத்தில் வீற்றிருந்து பின்னர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சரித்திரச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

     

    இத்தலத்தில் பல சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிவபெருமான் தனது திருவிளையாடலின் போது தமது அடியார் மாணிக்கவாசகருக்காக இத்தலத்தில்தான் நரிகளைப் பரிகளாக மாற்றிட, கயிறு மாற்றிக்கொடுத்தார். ராமர், அகத்தியரின் ஆலோசனைப்படி இங்கு வந்து இறைவனைப் பூஜித்து, அதன் பின்பு சேது பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்றார். ராமன், ராவணனுடன் போர் புரிந்த போது வானரச் சேனைகளின் பசியை போக்கிய தலம். பலராமர் தனது தீர்த்த யாத்திரையின் போது சூரனைக் கொன்றதால் பாவம் ஏற்பட்டது. அதன்பின் இத்தலத்திற்கு வந்து வில்வ வனத்தில் இருந்த லிங்கத்தினைப் பூஜித்து பாவவிமோசனம் பெற்று பின் துவாரகையை மீட்டார்.

    ஐந்து நிலை கோபுரத்துடன் இக்கோவில் அமைந்துள்ளது. இந்த ராஜகோபுரத்தில் இத்தலத்தில் நிகழ்ந்த அற்புதங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது என்பது இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும். இக்கோவிலில் சோமநாத சுவாமி, ஆனந்தவல்லி அம்மன் சன்னிதிகளுடன், விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சதாசிவ பிரம்மேந்திரர் உபசன்னிதிகளும் உள்ளன. இங்குக் கோவில் தேர், கோவில் கல்வெட்டு போன்றவை உள்ளன. கோவிலின் தல விருட்சமாக வில்வ மரமும், தல தீர்த்தமாக சந்திர புஷ்கரணியும் உள்ளன. காரண ஆகமப்படி கோவிலில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    மதுரையைப் போலவே இங்கும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் என்றால், இங்கு ஆனந்தவல்லி சோமநாதராகக் காட்சியளிக்கிறார். மதுரையில் கள்ளழகர் என்றால், மானாமதுரையில் காட்சி தருபவர் வீர அழகர். மதுரையம்பதியில் மீனாட்சி சொக்கநாதருக்கு நடக்கும் திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், திரி எடுத்து சாமியாடுவது, பீச்சாங்குழல் சேவை என அனைத்தும் இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

    இக்கோவிலில் காரண ஆகம முறைப்படி நான்கு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு சித்திரை திருவிழா, ஆடி திருவிழா, சித்திரை தேரோட்டம், மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா விமரிசையாக நடைபெறும்.

    இங்கிருக்கும் சந்திர புஷ்கரணியில் நீராடி இறைவனை மனமுருகி வழிபட்டால் தீராத சரும நோய்கள் குணமாகும் என்று சொல்லப்படுகிறது. இங்கு, ஆடித் தபசு திருநாளில் சுவாமிக்கு அணிவித்த மாலைகளை அணிந்து கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்வித்தால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    கோவில் தினமும் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் பக்தர் வழிபடுவதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் பிரதான சாலையில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மானாமதுரை சோமநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

    • ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் சுவாமி புஷ்கரணி தீர்த்தம் உள்ளது.
    • தினந்தோறும் அதிகாலையில் ஆகாச கங்கை தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

    ஏழுமலையான் என்று அழைக்கப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி வீற்றிருக்கும், திருமலையில் ஏராளமான புனிதத் தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில தீர்த்தங்களைப் பற்றியும், அதில் நீராடுவதன் பலனையும் பார்க்கலாம்.

    சுவாமி புஷ்கரணி

    ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை 'தீர்த்தங்களின் அரசி' என்று அழைக்கிறார்கள். இங்கு சரஸ்வதிதேவி தவம் இயற்றியதாக தல புராணம் சொல்கிறது. மிகவும் புனிதத்துவம் பெற்ற தீர்த்தம் இது. மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூரிய உதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து, சூரிய உதயத்திற்கு பின்பான 6 நாழிகை வரை திருப்பதி மலையில் உள்ள அனைத்து தீர்த்தங்களும், இந்த தீர்த்தத்தில் கூடுகின்றன. எனவே அன்றைய தினம் இதில் நீராடி வழிபட்டால் இறைவனின் திருவடியை அடையலாம்.

    குமார தீர்த்தம்

    மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசி பவுர்ணமி), சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் நீராடுபவர்கள், ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுவர்.

    தும்புரு தீர்த்தம்

    இறைவனை தன்னுடைய நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர், திருப்பதி வெங்கடாஜலபதியை நினைத்து தவம் இருந்த இடத்தில் இருப்பதால் இதற்கு 'தும்புரு தீர்த்தம்' என்று பெயர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பவுர்ணமி), இதில் நீராடுவோருக்கு இறைவன் அடியைச் சேரும் பாக்கியம் உண்டு.

    ஆகாச கங்கை

    தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாவங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின் அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம். கோவிலில் இருந்து சுமார் 2 மைல் தூரம் நடந்து வரும் இவரின் பக்தியை மெச்சி, அவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும் இத்தீர்த்தத்தில் சித்திரை மாதம் பவுர்ணமியன்று நீராடுவது மிகச் சிறப்பு.

    பாண்டு தீர்த்தம்

    வைகாசி மாதம் வளர்பிறை துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால், அந்த நாளில் இந்த தீர்த்தத்தில் நீராடுவது விசேஷம். இதனால் சகல பாவங்களில் இருந்தும் விடுபடலாம்.

    பாபவிநாசன தீர்த்தம்

    இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக்க சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும், உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில் நீராடுவோர் ஞானம் பெறுவதுடன், பாவங்களில் இருந்து விடுபடுகின்றனர்.

    • இன்று சங்கடஹர சதுர்த்தி. சுபமுகூர்த்த தினம்.
    • திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-2 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தி பின்னிரவு 3.34 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம் : மூலம் பிற்பகல் 2.54 மணி வரை. பிறகு பூராடம்.

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை,

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை

    இன்று சங்கடஹர சதுர்த்தி. சுபமுகூர்த்த தினம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாளன மாமுனிகள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் கைலாச வாகனத்தில் பவனி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர், திருநரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் திருவலஞ்சுழி ஸ்ரீசுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார், ஸ்ரீமாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீமுக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீவெயிலுகந்த விநாயகப் பெருமாள் கோவில்களில் ஹோமம், அபிஷேகம்,

    இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு, ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம் லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-திடம்

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-நலம்

    கடகம்-பணிவு

    சிம்மம்-பண்பு

    கன்னி-ஆசை

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-செலவு

    தனுசு- பரிசு

    மகரம்-தனம்

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-உதவி

    • அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று நடந்தது.

    காலை 5.30 மணியளவில் குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது, சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பம்பை, உடுக்கை, மேள-தாளம் முழங்க அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    பழைய ஆஸ்பத்திரி ரோடு, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக நடைபெற்ற ஊர்வலம் கெங்கையம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, தரணம்பேட்டை முதல்கோபாலபுரம் வரை சாலையின் இருபுறமும் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    சிரசு ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கை யம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்ற சிரசு, கெங்கையம்மன் கோவில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது.

    தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    மேலும் பக்தர்கள் தேங்காய்களை உடைத்தும், ஆடு, கோழி பலியிட்டும், பலர் அலகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராத னைகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மலர் மாலை, எலுமிச்சை மாலை, ரூபாய் நோட்டு மாலை ஆகியவற்றை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனுக்கு அணிவித்து வழிபட்டனர். வழி எங்கும் பக்தர்களுக்கு நீர், மோர், கூழ் இலவசமாக வழங்கினர்.

    தொடர்ந்து இன்று இரவு அம்மன் உடலில் இருந்து சிரசு பிரிக்கப்பட்டு, கவு ண்டன்ய ஆற்றங்கரை யில் அலங்காரம் கலைக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    • இன்று அதிகாலை கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிந்தார்.

    மதுரை:

    மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 12-ந்தேதி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். நேற்று முன்தினம் அங்கிருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். ராமராயர் மண்டபத்துக்கு இரவு 12.30 மணிக்கு வந்தார். அப்போது அங்கு ஏராளமான பக்தர்கள் கூடி கள்ளழகரை வரவேற்றனர்.

    நள்ளிரவு 2 மணிக்கு மேல் தசாவதார திருக்கோலங்களில் காட்சி தொடங்கியது. முதலில் முத்தங்கி சேவையும் அதை தொடர்ந்து மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரங்களில் காட்சி தந்தார். இறுதியாக நேற்று காலை 8.30 மணிக்குமேல் மோகினி அவதாரத்தில் கள்ளழகர் காட்சி தந்தார். விடிய, விடிய தசாவதார திருக்காட்சி நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

    நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பிற்பகலில் ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளி அங்கிருந்து புறப்பட்டார்.

    தொடர்ந்து கோரிப்பாளையம் வழியாக இரவு 11 மணிக்குமேல் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தை அடைந்தார். அங்கு திருமஞ்சனமாகி இன்று அதிகாலை 3 மணிக்கு கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிந்தார்.

    இதையடுத்து அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டார்.

    அங்கு திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் கள்ளழகரை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கள்ளழகர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக நாளை காலை அழகர் மலைக்கு போய் சேருகிறார். 

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகேவந்திரருக்கு சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-1 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திருதியை பின்னிரவு 3.05 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : கேட்டை நண்பகல் 1.24 மணி வரை பிறகு மூலம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் மலைக்குப் புறப்பாடு. காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகேவந்திரருக்கு சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-இன்பம்

    கடகம்-வெற்றி

    சிம்மம்-சாதனை

    கன்னி-வரவு

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-பணிவு

    தனுசு- சுகம்

    மகரம்-பாசம்

    கும்பம்-ஆசை

    மீனம்-லாபம்

    ×