என் மலர்
ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-18.08.25
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
உன்னத வாழ்வமைய உறவினர்கள் ஒத்துழைப்புச் செய்யும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். வருமானம் திருப்தி அளிக்கும். தொழில் வெற்றி நடைபோடும். கடல்பயண வாய்ப்புகள் கைகூடும்.
ரிஷபம்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். விண்ணப்பித்த வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.
மிதுனம்
பிரச்சனையில் இருந்து விடுபடும் நாள். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். தொகை வரவு திருப்தி தரும்.
கடகம்
வாயிலைத் தேடி வரவு வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் வளர்ச்சி உண்டு. தொல்லை தந்தவர்கள் விலகுவர். மனக்குழப்பங்கள் அகலும்.
சிம்மம்
நிர்வாகத் திறமை பளிச்சிடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். சேமிப்புகள் உயரும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்து சேரும். கல்யாண முயற்சி கைகூடும்.
கன்னி
மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். கடன் சுமை குறைய எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
துலாம்
விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வி.ஐ.பி.க்களை விரோதித்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படும்.
விருச்சிகம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கவனம் தேவை.
தனுசு
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அண்ணன் தம்பிகளின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நெருக்கடி அகலும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.
மகரம்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு.
கும்பம்
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீர செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். திடீர் பயணங்களால் சில திருப்பங்கள் ஏற்படும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.
மீனம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பிரச்சனைகள் தீர வழிகாட்டுவர். தொழில் வளர்ச்சி உண்டு. அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.






