என் மலர்tooltip icon

    ராசிபலன் - Rasi Palan

    2025 ஆவணி மாத ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
    X

    2025 ஆவணி மாத ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

    • கல்யாணக் கனவுகள் நனவாகும்.
    • 'குரு மங்கள யோகம்' இருப்பதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும்.

    மேஷம்

    மேஷ ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் செவ்வாய் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது, 'விபரீத ராஜயோக' அடிப்படையில் சில நல்ல பலன்கள் உங்களுக்கு நடைபெறும். தொழில் வளர்ச்சி, உத்தியோகத்தில் உயர்வு, கடன் சுமை குறைதல் போன்றவை ஏற்படும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்போது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். பஞ்சம ஸ்தானாதிபதி சூரியன், பஞ்சம ஸ்தானத்திலேயே பலம்பெற்று சஞ்சரிப்பதால் தேக்கநிலை மாறும். தெளிவு பிறக்கும். ஊக்கமும், உற்சாகமும் அதிகரித்து உடனுக்குடன் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்து விட்டு, புதிய வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆபரணச் சேர்க்கை உண்டு. 'அதிக விலைக்கு வாங்கிப் போட்ட இடத்தை குறைந்த விலைக்கு கேட்கிறார்களே' என்ற கவலை அகலும். பூமி விற்பனையில் வரும் லாபத்தைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். இக்காலத்தில் 'புத சுக்ர யோகம்' இருப்பதால் நல்ல சம்பவங்கள் பலவும் நடை பெறும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும்பொழுது பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருக்கும் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோக மாற்றத்திற்கோ அல்லது வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்றோ உங்கள் பிள்ளைகள் விரும்பினால், அதற்காக எடுத்த முயற்சி கைகூடும். உடன் பிறப்புகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். ஒற்றுமை பலப்படும். பூர்வீக சொத்துகளை பிரித்துக்கொள்வதில் சிக்கல் நீங்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். புத-ஆதித்ய யோகம் இருப்பதால் அரசுவழியில் அனுகூலம் உண்டு.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்குஅதிபதி செவ்வாய் 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, அவர் பார்வை உங்கள் ராசியிலேயே பதிகின்றது யோகம்தான். கல்யாணக் கனவுகள் நனவாகும். இழப்புகளை ஈடு செய்ய எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. வீடுகட்டுவது அல்லது கட்டிய வீட்டை பழுதுபார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். தனாதிபதியான சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது தனவரவு தாராளமாக வந்துசேரும். இனத்தார் பகை மாறும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி செழிப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பிரச்சினைகள் வரலாம். கலைஞர் களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 21, 22, செப்டம்பர்: 2, 3, 7, 8, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    ரிஷபம்

    ரிஷப ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். முரண்பாடான இந்தக் கிரகச் சேர்க்கையின் காரணமாக ஏற்றமும், இறக்கமும் கலந்த சூழ்நிலை உருவாகும். ஒரு சமயம் மிதமிஞ்சிய பொருளாதார நிலை இருக்கும். மற்றொரு சமயம் வறட்சி நிலை நிலவும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர், திடீரென மாற்றங்கள் வந்து தேவையைப் பூர்த்தி செய்து கொடுக்கும். அசுர குரு, தேவ குரு ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையும் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால், குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில், உங்கள் ராசிநாதன் சுக்ரன் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும். அவர் அங்குள்ள புதனோடு இணைவதால் 'புத சுக்ர யோகம்' செயல்படுகிறது. எனவே பூமி வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் லாபமும் உண்டு. உடன்பிறப்புகளின் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வழக்குகள் சாதகமாக அமையும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் நடத்துபவர்களுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த மூலதனம் ஏற்படலாம்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 4-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் இருக்கும் தொய்வு அகலும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். அதன்மூலம் வரும் உதிரி வருமானத்தில் குடும்பச்சுமை கொஞ்சம் குறையும். 'வீடு கட்டியும் நீண்ட நாட்களாக வாடகைக்கு விட முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பது யோகம்தான். எதிர்பாராத விதத்தில் இனிமை தரும் மாற்றங்கள் வந்துசேரும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். துணிந்து நீங்கள் எடுத்த முடிவுகளைக் கண்டு அருகில் இருப்பவர்கள் ஆச்சரியப்படுவர். பூமி பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டு. மேல்அதிகாரிகளால் ஏற்பட்ட மனக்குழப்பம் மாறும். கேட்ட நிதியுதவி கிடைக்கும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதி சுக ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரத்தில் மகிழ்ச்சி வந்து சேரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டு முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் அகலும். கொடுக்கல் - வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி நீடிப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சியில் வெற்றி உண்டு. மாணவ - மாணவி களுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு வாழ்க்கைத் தரம் உயரும். வசதி பெருகும். நல்ல தகவல் கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 19, 20, 23, 24, செப்டம்பர்: 5, 6, 9, 10, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மிதுனம்

    மிதுன ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் படிப்படியாக நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். ராசியிலேயே குரு சுக்ர சேர்க்கை இருப்பதால் திடீரென சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதாலும், அதை குரு பார்ப்பதாலும் தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். பயணங்கள் பலன்தரும்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். புத்திர ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், தன ஸ்தானத்திற்கு வருவதால் பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். அவர்களின் எதிர்கால நலன்கருதி திட்டமிட்டு செயல்படுவது நல்லது. 'புத சுக்ர யோகம்' இருப்பதால் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ அல்லது வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டுமென்ற அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வதற்காக எடுத்த முயற்சி கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவம் நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு உண்டு. அதே நேரத்தில் இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் பற்றி சிந்தித்தவர்களுக்கு அதுவும் கைகூடும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் இருப்பவர் புதன். சுக ஸ்தானாதிபதி, சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் எல்லாவிதமான சவுகரியங்களும் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக ஆரோக்கிய பாதிப்புகள் அகலும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். 'புத ஆதித்ய யோகம்' இருப்பதால் பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவீர்கள். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினைகள் அகலும். பெற்றோர் வழியில் சில நல்ல காரியங்கள் நடைபெறும்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் புதிய திருப்பங்கள் ஏற்படும். குறிப்பாக என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். 'குரு மங்கள யோகம்' இருப்பதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் பொழுது பிள்ளைகளால் பெருமை சேரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வேண்டும், அங்கு வேலை பார்க்க வேண்டும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்று கனவு கண்டவர்களுக்கு இப்பொழுது கனவுகள் நனவாகும் நேரமாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் மையப் பகுதி மகிழ்ச்சி தரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு துணிந்து எடுத்த முடிவுகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ- மாணவிகளுக்கு மறதி விலகும். மதிப்பெண் கூடும். பெண்களுக்கு விரயங்கள் ஏற்படும் நேரம் என்பதால், சுப விரயமாக மாற்ற முயற்சிப்பது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 21, 22, 26, 27, 28, செப்டம்பர்: 7, 8, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    கடகம்

    கடக ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியில் விரயாதிபதி புதன் சஞ்சரிக்கிறார். மேலும் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சனி வக்ரம் பெற்றிருப்பதால் ஓரளவிற்கு நன்மை கிடைக்கும் என்றாலும் விரயங்களைக் கட்டுப்படுத்த இயலாது. திட்டமிட்டபடி காரியங்களை முடிக்க பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை உண்டு. இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பாராத விதம் அமையும். குருவின் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் குரு வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், உங்களுக்குரிய பாக்கியங்களும், அனைத்து நலன்களும் வந்துசேரும். ராகு-கேதுக்களுக்குரிய வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால் தடைகள் விலகும்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்கும் இந்த நேரம் பொருளாதார நிலை உயரும். புதிய திருப்பங்கள் ஏற்படும். வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு அது கைகூடி வருவதற்கான அறிகுறிகள் தென்படும். ரண சிகிச்சையில் சிக்கித் தவித்தவர்களுக்கு இப்பொழுது விடிவு காலம் பிறக்கப்போகிறது. மாற்று மருத்துவங்கள் ஒரு சிலருக்கு கைகொடுக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்தியங்க முற்படுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அடகுவைத்த நகைகளை மீட்டுக்கொண்டுவரும் வாய்ப்பு உருவாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கும், அதன் மூலம் நல்ல பொறுப்புகளும் கிடைக்கும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் பொழுது உடன்பிறப்புகளால் விரயம் ஏற்படும். அவர்களின் கடன்சுமை குறைய வழிவகுத்துக் கொடுப்பீர்கள். அல்லது அவர்களின் கல்யாணம் போன்றவற்றை முன்னின்று நடத்த செலவிடுவீர்கள். நாடு மாற்றம் பற்றியும், வீடு மாற்றம் பற்றியும் சிந்திக்கும் நேரம் இது. நாகரிகப் பொருட்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும், மேலதிகாரிகளும் உங்கள் செயல்பாடுகளைக் கண்டு ஆச்சரியப்படுவர். சமூக சேவையில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் பொருளாதார நிலை உயரும்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் பொழுது துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். நல்ல நிகழ்ச்சிகள் இல்லத்தில் படிப்படியாக நடைபெறும். வீடு கட்டுவது அல்லது வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். சொத்து விற்பனையால் லாபம், வியாபாரப் போட்டிகள் அகலும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் பொருளாதாரம் உச்சநிலை அடையவும், பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தவும், தேக்க நிலையில் இருந்த தொழில் சிறப்பாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மிதமிஞ்சிய லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். சுபகாரியம் இல்லத்தில் நடைபெறும் நேரம் இது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 23, 24, 28, 29, செப்டம்பர்: 9, 10, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    Next Story
    ×