என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்"

    • 8-வது நாளாக வருகிற 25-ந்தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறார்.
    • பஞ்சமூர்த்தி சுவாமிகளின் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு விழா கடந்த 18-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தினமும் இரவு சுவாமி மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று (சனிக்கிழமை) மாலை கஜமுகசூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் வெள்ளி யானை வாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு கோவிலை சுற்றி அசுரனை வதம் செய்ய வீதி உலா வருகிறார். பின்னர் இரவு 7 மணி அளவில் கோவில் தெப்பக்குளம் முன்பு சூரனை யானை தந்தத்தால் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து 8-வது நாளாக வருகிற 25-ந்தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறார். 9-வது நாள் திருவிழாவான 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளுகிறார்.

    அதன் பின்னர் ஆண்டிற்கு ஒருமுறை சந்தனகாப்பு அலங்காரத்தில் மூலவர் கற்பகவிநாயகர் காட்சியளிக்கும் வகையில் அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பகவிநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். பின்னர் மாலை தேரோட்டம் நடக்கிறது.

    இரவு சுவாமி யானை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 10-ம் திருநாளான 27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் எழுந்தருளி கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து உச்சிகால சிறப்பு பூஜைகள் மற்றும் மூலவர் கற்பகவிநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை, படையல் படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகளின் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி பழனியப்பச்செட்டியார் மற்றும் நச்சாந்துபட்டி குமரப்பச் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • 6-ம் நாளான வருகிற 23-ந்தேதி, கஜமுக சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • ஆண்டுக்கு ஒரு முறைதான் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேசுவரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் இரவில் விநாயகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். நேற்று இரவு மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்தார். இன்று இரவு சிம்ம வாகனத்திலும், நாளை பூத வாகனத்திலும் உலா வருகிறார்.

    6-ம் நாளான வருகிற 23-ந்தேதி, கஜமுக சூரசம்ஹாரம் நடக்கிறது.

    9-வது நாளான வருகிற 26-ந்தேதி மாலையில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

    இதற்கிடையே அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பகவிநாயகர், சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். ஆண்டுக்கு ஒரு முறைதான், மூலவருக்கு இந்த சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். 10-ம் நாளான வருகிற 27-ந்தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பக விநாயகர் எழுந்தருள்கிறார். அதன் பின்னர் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து உச்சிகால சிறப்பு பூஜைகள் மற்றும் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நடக்கிறது.

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். #VinayagarChathurthi #GaneshChathurthi
    திருப்பத்தூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    தேரோட்ட திருவிழாவையொட்டி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    10-ம் நாளான இன்று காலை கோவில் எதிரே உள்ள குளத்தில் விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதன் பின்னர் கற்பக விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

    இன்று இரவு 11 மணிக்கு ஐம்பெரும் தீர்த்தங்கள் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

    பக்தர்களின் வசதிக்காக காரைக்குடி, புதுக்கோட்டை பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் விநாயகரை தரிசிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.  #VinayagarChathurthi #GaneshChathurthi

    ×