என் மலர்tooltip icon

    வழிபாடு

    4 ராசிக்காரர்கள் திடீர் பணக்காரர்களாக மாறும் வாய்ப்பு: பல்கேரிய ஆன்மீகவாதியான பாபா வாங்காவின் கணிப்பு
    X

    4 ராசிக்காரர்கள் திடீர் பணக்காரர்களாக மாறும் வாய்ப்பு: பல்கேரிய ஆன்மீகவாதியான பாபா வாங்காவின் கணிப்பு

    • டயானாவின் மரணம், சீனாவின் வளர்ச்சி பற்றியும் முன்கூட்டியே கணித்தவர்.
    • 2033-ம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயரும்.

    பல்கேரிய ஆன்மீகவாதியான பாபா வாங்கா, 1911-ம் ஆண்டு பிறந்தார். கண் பார்வையற்ற இவர் எதிர்காலத்தை கணித்துச் சொல்வதில் மிகவும் பிரபலமானவர்.

    இவர் எதிர்காலத்தை பற்றி கூறிய பல தகவல்கள் அப்படியே அரங்கேறியுள்ளது.

    இவரது கணிப்புகள் பல நேரங்களில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இவரது ஆதரவாளர்கள் இவரை ஒரு தீர்க்கத்தரிசியாகவே நம்புகின்றனர்.

    பாபா வாங்கா 1996-ம் ஆண்டே இறந்துவிட்டாலும் இவர் எதிர்காலத்தை பற்றி கணித்து சொன்ன செய்திகள் இன்றும் மக்களிடையே பரவி வருகிறது. அவரது கருத்துகள் மற்றும் எதிர்கால கணிப்புகள் இன்றும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

    உதாரணமாக இவர் 1980 ஆண்டு ரஷ்யாவின் குர்ஸ்க் நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கும் என கணித்துச் சொன்னார். அதேபோல் 2000-ம் ஆண்டில் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்சி 118 பேர் உயிரிழந்தனர்.

    1989 -ம் ஆண்டு எக்குப் பறைவகள் அமெரிக்காவை தாக்கும் என கணித்துச் சொன்னார். அதேபோல் 2001-ம் ஆண்டு இரட்டை கோபுரங்கள் விமானம் மூலம் தாக்கப்பட்டது. 1984-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தியின் படுகொலையை கூட கணித்துச் சொன்னார்.

    டயானாவின் மரணம், சீனாவின் வளர்ச்சி பற்றியும் முன்கூட்டியே கணித்தவர்.

    இப்படி எதிர்காலத்தைப் பற்றி அவர் கணித்துச் சொன்ன பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு முதல் 5079-ம் ஆண்டு வரை அவர் சொன்ன கணிப்புகள் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

    2025-ம் ஆண்டில் ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க மோதல்களால் நிலையற்ற தன்மை ஏற்படும். உலகம் முழுக்க பூகம்பங்கள் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட ஏராளமான இயற்கை பேரழிவுகள் உலகை உலுக்கும். மனிதர்கள் வேற்று கிரகவாசிளுடன் தொடர்பு கொள்ளுவர் எனவும் அவர் கணித்து கூறியுள்ளார்.

    இதேபோல் 2028-ம் ஆண்டு மனிதர்கள் வீனசிற்கு செல்வார்கள்.

    2033-ம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயரும். 2046-ம் ஆண்டு செயற்கை உறுப்புகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும். 2066-ம் ஆண்டு அமெரிக்கா சுற்றுசூழலை அழிக்கும் ஆயுதத்தை கண்டுபிடிக்கும். 2084-ம் ஆண்டு இயற்கை தன்னை புதுப்பிக்க தொடங்கும்.

    2111-ம் ஆண்டு மனிதர்கள் எந்திரங்களாக மாறுவார்கள். 2154-ம் ஆண்டு விலங்குகள் மனிதர்களாக பரிணாமா வளர்ச்சி அடையும். 2170-ம் ஆண்டு பூமி வறண்டு பாலைவனமாகும். 2288-ம் ஆண்டு மனிதனுக்கும் வேற்று கிரகவாசிகளுடன் தொடர்புகள் வலுப்படும். 2341-ம் ஆண்டு விண்கல்லால் பூமிக்கு ஆபத்து வரும்.

    3805-ம் ஆண்டு போர்களால் மக்கள் தொகை சரியும். 3854-ம் ஆண்டு மனித குலம் மீண்டும் பழங்குடிமுறைக்கு திரும்பும்.

    இப்படியாக 5079-ம் ஆண்டுவரை அவர் பல்வேறு கணிப்புகளை கூறியுள்ளார்.

    தற்போது குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கான கணிப்புகள் மற்றும் வரவிருக்கும் கால கட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் பணம் மற்றும் செல்வத்தின் அடிப்படையில் என்ன நடக்கும் பற்றி அவர் கணித்து கூறியுள்ளார்.

    மேஷ ராசி

    மேஷ ராசியை செவ்வாய் ஆட்சி செய்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்களின் தைரியமும் உறுதியும் அவர்களை விரும்பிய இலக்குகளை அடைய உதவும். நல்ல முதலீட்டு தேர்வுகளை செய்வது தொழில் மாற்றம் செய்வது மற்றும் புதிய தொழிலை தொடங்குவது ஆகியவை வரும் மாதங்களில் இவர்களுக்கு கணிசமான நிதி வளர்ச்சியை ஏற்படும்.

    ரிஷப ராசி

    சுக்ரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் நிலையாக இருப்பதால் நல்ல அதிர்ஷ்டத்தை ஈட்டுகிறார்கள். தற்போதைய நிதி நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அவர்களின் ஆளும் கிரகம் எதிர்க்காலத்திற்கான விவேகமான முதலீடுகளை செய்ய அவர்களை தூண்டுகிறது. அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தங்கள் நற்பெயரை உயர்த்தி கொள்ளவும். தங்களின் கடின உழைப்பின் நன்மைகளை பெற வேண்டும். 2025-ம் ஆண்டு கடினமான காலத்திற்கு பிறகு உங்கள் ராசிக்கு புதிய நிலைத்தன்மை உணர்வை தருகிறது.

    மிதுனம் ராசி

    மிதுன ராசிக்காரர்களை புதன் கிரகம் ஆட்சி செய்கிறது. அவர்கள் எதிர்க்காலத்தை திட்டமிடுவதில் சிறந்து விளங்குகிறார்கள். வரவிருக்கும் மாதங்கள் இவர்களுக்கு பலன் அளிக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் மன தெளிவு நிறைந்ததாக இருக்கும். எதிர்ப்பாராத விதமாக வெற்றி கிடைக்கும்.

    சிம்ம ராசி

    சிம்ம ராசிக்காரர்களை சூரியன் ஆளும் கிரகமாக இருப்பதால் அவர்கள் வரும் மாதங்களில் நிறுவனத்தை தொடங்குவார்கள். பல நல்ல சாத்திய கூறுகளின் விளைவாக அவர்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீண்ட கால நிதி இலக்குகளை அடைய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

    இன்று உங்கள் இலக்கை நிர்ணயித்தால் விரைவில் அடுத்த சில மாதங்களுக்குள் தொழில் முறை சாதனை மற்றும் நிதி ஆதாயம் மூலம் நீங்கள் கோடீஸ்வரராக மாறிவீர்கள்.

    இவ்வாறு 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் பணக்கார வாழ்க்கை கிடைக்கும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.

    Next Story
    ×