என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kuladeivam worship"

    குலதெய்வத்தை வீட்டிலேயே வணங்கலாமா? என்று பலருக்கும் சந்தேகங்கள் உண்டு.

    நமக்கு விருப்பமான கடவுள்கள் ஏராளமாக இருந்தாலும், நாம் முதற் கடவுளாக வணங்க வேண்டியது விநாயகரையும், குலதெய்வத்தையும் தான்.. இவர்களை வணங்கிய பிறகே பிற கடவுள்களை வணங்குவது தான் சரியான முறையாகும்..

    ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறையாவது குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது நன்மை தரும்..

    குலதெய்வத்தை வீட்டிலேயே வணங்கலாமா? என்று பலருக்கும் சந்தேகங்கள் உண்டு.

    ஆம்.. குலதெய்வத்தை வீட்டிலேயே வணங்கலாம் அதற்கு தேவையானது ஒரு மண் குடுவை, மற்றும் தீபம் ஏற்றும் விளக்கு.

    முதலில் மண் குடுவையையும் விளக்கையும் நீரில் நன்கு சுத்தம் செய்து, துடைத்துவிட்டு பின்னர் குடுவையின் மஞ்சள் பூசி, அவரவர் குடும்ப வழக்கப்படி பட்டை அல்லது நாமமிட்டு அதனுள் பாதி குடுவை நிறையும் வரை தவிடு சேர்க்கவும்..

    பிறகு, ஒரு வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் 27 அல்லது 29 ஏதேனும் ஒரு எண்ணிக்கையில் ஒரே மாதிரியான ஒரு ரூபாய் நாணயங்களை சேர்த்து அதனை கட்டி முடித்துவிட்டு அதன் மீது ஒரு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து அதன் மீது ஒரு வாசனை பூவை வைத்து அந்த மண் பானைக்குள் வைத்து விடுங்கள்..

    பிறகு இந்த மண் குடுவையை பித்தளை தட்டில் வைத்து அதனை சுற்றி வாசனை மலர்களை வையுங்கள்..

    குடுவையின் மேல் தட்டை வைத்து மூடி, அதன் மீது விளக்கில் நெய் ஊற்றி தாமரை தண்டு திரி அல்லது பஞ்சு திரி போட்டு தீபமேற்றி வீட்டின் பூஜை அறையில் குபேர மூலையில் வைத்து வழிபட வேண்டும்.

    வாரம் ஒரு முறை இந்த விளக்கை ஏற்றி வர வேண்டும். இந்த மண் குடுவையும் அதன் மீது நாம் வைக்கும் விளக்கையும் குடுவைக்குள் போடும் தவிட்டையும் வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

    மாற்றும்போது பழைய குடுவை மற்றும் விளக்கை ஆற்றில் விட்டுவிட வேண்டும். ரூபாய் நாணயங்களை குலதெய்வ உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.

    ஏதேனும் நமக்கு வேண்டுதல் இருப்பின் அதனை மனதில் நினைத்துக்கொண்டு 5 வாரங்கள் சனிக்கிழமை காலை வேளையில் தீபம் ஏற்றி வந்தால் நாம் நினைத்த காரியம் நிச்சயம் கைக்கூடும்..

    • அமாவாசை நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும்.
    • உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள்.

    முன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது. எனவே பஞ்ச பூதங்களையும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் 'தில ஹோமம்', எத்தகைய ஆத்மாவையும் சாந்தி அடைய செய்துவிடும். ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு நாளைய அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.

    முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்யாதவனுக்கு 'பித்ரு தோஷம்' ஏற்படும். ஒரு வேளை அதிகமான புண்ணிய பலத்தால், ஒருவன் தன் வாழ்நாளில் பித்ரு தோஷத்தை அனுபவிக்காமல் போகலாம். ஆனால் அந்த பித்ரு தோஷம் அவனது வம்சத்தினரை பாதிக்கும். ஒருவர் தன் தலைமுறைக்கு சொத்து சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை, பித்ரு தோஷத்தை மட்டும் விட்டுச் செல்லக்கூடாது.

    அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு, வலது ஆள் காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் உள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீரை வார்த்து தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். ஒவ்வொரு அமாவாசையன்றும், இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.

    எனவே அமாவாசை தோறும் கட்டாயம் பித்ரு தர்ப்பணம் கொடுப்பது உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்களுடைய சந்ததியினருக்கும் நல்ல பலன்களை வாரி வழங்கக் கூடியது ஆகும். பித்ரு தர்ப்பணம் செய்ய மறந்தவர்கள் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகளும், நிம்மதி இன்மையும் ஏற்படும். எனவே தவறாமல் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் உங்கள் முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து எளிதாக வீட்டிலேயே கூட பூஜை செய்து வழிபட வேண்டும்.

    அமாவாசையில் உணவு எதுவும் உண்ணாமல் மந்திரங்களை உச்சரித்து விரதமிருந்து வழிபட்டு வந்தால் சகல பாக்கியங்களும் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.

    அமாவாசை நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும். இது உங்களிடம் இருக்கும் கெட்ட சக்திகளை விலகி ஓட செய்யும். வீட்டை சுத்தம் செய்ய அன்றைய நாளில் தண்ணீருடன் சிறிது அளவு கல் உப்பு சேர்த்து துடைத்து எடுக்கலாம். காலை, மாலை இரு வேளையும் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

    குறிப்பாக அமாவாசை நாளில் விரதம் இருப்பவர்கள், விரதம் இல்லாதவர்கள் என்று யாராக இருந்தாலும் அசைவ உணவைத் தவிர்ப்பது நல்லது. அமாவாசை நாளின் போது அசைவம் உணவு உண்ணும் பொழுது உடம்பில் ஒருவித அசவுகரியம் உண்டாகும். இது அறிவியல் ரீதியாகவும் உண்மை என்பதால் அமாவாசை தினத்தில் அசைவ உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லது.

    வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க அன்றைய நாளில் மந்திர ஸ்லோகங்களை உச்சரிக்க வேண்டும். அல்லது ஒலிக்க விடுவதும் செய்ய வேண்டும். உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள். நல்ல பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

    பொன், பொருள் சேரவும், சகல சம்பத்தும் கிடைக்கவும், குலதெய்வ அருள் பெறவும் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. ஒரு மண்பானையில் அல்லது செம்பு, பித்தளை கலசத்தில் தண்ணீரை வைத்து பூஜை அறையில் வையுங்கள். அதில் குலதெய்வத்தை நினைத்து ஆவாகனம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு விளக்கு ஏற்றி தீப வழிபாடு செய்வது குலதெய்வ வழிபாட்டை நிறைவு செய்கிறது. உங்களால் முடிந்தால் நைவேத்தியம் வைத்து வழிபடவும், அப்படி இல்லை என்றால் சிறிதளவு கற்கண்டு வைத்து வழிபடுங்கள்.

    அமாவாசை தினத்தன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது "ஓம் ஸ்ரீம் என்று சொல்லி உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்லி நமஹ" என்று சொல்லவும். அதாவது குலதெய்வத்தின் பெயர் சுப்பிரமணி என்றால் "ஓம் ஸ்ரீம் சுப்பிரமணி நமஹ" என்று 108 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு குலதெய்வம் என் வீட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்று மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும். அன்று நண்பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் சைவ உணவுகளை தயார் செய்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாழை இலையை விரித்து அதில் சைவ உணவுகளை படையலாக போட்டு அந்த வாழை இலைக்கும் முன்பாக ஒரு சிறிய கண்ணாடியை வைக்க வேண்டும். அந்த கண்ணாடிக்கு சந்தனம் குங்குமம் வைத்து அதை குலதெய்வமாகவும் நம்முடைய முன்னோர்களாகவும் பாவித்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு தேங்காய் உடைத்து பழம் வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி அந்த கண்ணாடியை பார்த்தவாறு குலதெய்வத்திடம் பேசுவது போல் பேசி வீட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்று பேச வேண்டும்.



    பிறகு இந்த படையலில் இருந்து சாதத்தை சிறிதளவு எடுத்து காக்கைக்கு உணவாக வைத்துவிட்டு வழிபாட்டை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த முறையில் அமாவாசை தினத்தன்று குலதெய்வத்தை நினைத்தும் முன்னோர்களை நினைத்தும் சைவப்படையல் இட்டு வழிபாடு செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசீர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நம் வாழ்க்கை சிறந்து விளங்கும்.

    குலதெய்வ ஆலயம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலே வழிபாடு செய்யலாம். அதற்கு மாலை வேலையில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு குலதெய்வ படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள் உங்கள் குலதெய்வத்திற்கு பிடித்த நெய்வேத்தியத்தை வைத்து விட்டு நீங்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு உங்கள் குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

    இப்படி பிரார்த்தனை செய்யும் நேரத்தில் உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்லி வசி வசி என்ற வார்த்தையும் சேர்த்து சொல்லுங்கள். குலதெய்வமே தெரியாது என்பவர்கள் ஓம் குலதெய்வமே வசி வசி என்ற இந்த மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும். இதை எத்தனை முறை உங்களால் சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள்.

    குலதெய்வம் தெரியாதவர்கள் மேல்மலையனூர் அங்காளம்மனை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்யலாம். ஏனென்றால் அகிலம் பிறக்கும் முன்பு பிறந்த அங்காளம்மனே அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாய் விளங்குகிறாள் அவளே குலதெய்வங்களுக்கெல்லாம் மூல தெய்வமாக காட்சியளிக்கிறாள்.

    இவ்வாறு அங்காளம்மனை குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்வதனால் தொட்ட காரியங்கள் அனைத்தும் நன்மையில் முடியும், தடைபட்டு வந்த சுப காரியங்கள் விரைவில் நிறைவேறும், வாழ்வில் நிம்மதி ஏற்படும், குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்பட்டு, தோஷங்கள் நிவர்த்தி ஆகி, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.

    குலதெய்வ கோவில்களுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருந்தவாறு குலதெய்வ வழிபாடு செய்து ஏதேனும் ஒரு ஏழைக்கு உணவளித்த பின் உண்ண வேண்டும். இவ்வாறு வழிபட குலதெய்வ கோவில் சென்று வந்த புண்ணியத்தை பெற முடியும்.

    தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூஜைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம்.
    குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூஜைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம்.

    குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும்சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூடஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

    நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறு செய்வது தவறில்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்டதெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

    நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறி சொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.

    இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான்செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

    குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

    குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன. குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.



    நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை. குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

    குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி கால பைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்தகோரிக்கைகளையும் கால பைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் கால பைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.

    மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக உடலுறவு கூடாது. இவ்வாறு செய்துவரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார். யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம் அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும்.

    மேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பேசெய்து வரவும். அசைவத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும். அசைவ உணவு, மது பழக்கம், முறையற்ற உறவு இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

    குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது.
    குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம்.

    அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும்.

    கடந்த காலங்களில் பங்காளிகளுக்குள் ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்கும் இடமாக குலதெய்வக் கோயில்கள் விளங்கின. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்ட குலதெய்வக் கோயில், அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை பரம்பரையாக முழுமுதற் கடவுளாக விளங்குகிறது. அதனால்தான் அந்த சமூகத்தில் எந்த சுபகாரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.



    உதாரணமாக திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிகை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதற்கும் பொருந்தும். ஒரு குழந்தைக்கு, குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடித்தால், அந்தக் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நம்பப்படுகிறது.

    தலைமுறைகள் கடந்து வாழும் நம்மில் பலருக்குத் தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல் பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருக்கிறது. சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும் வழிபாட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குலதெய்வ வரிசையில் வருவதில்லை.

    குலதெய்வம் என்பது ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.

    ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கீகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது. அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.

    இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.

    ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

    குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது பங்குனி உத்திர நாளில் குலதெய்வ கோயிலில் வணங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

    எப்போது வழிபடுவது?

    கிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு குடும்பத்தில் நடைபெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேச நாட்களில் குல தெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் பழக்கம் இருக்கிறது.

    திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து ஆட்டு கிடாவெட்டி பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய்கின்றார்கள்.

    வழிபாடு பலன்கள்

    குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.

    அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.
    ×