என் மலர்
நீங்கள் தேடியது "திருமணத்தடை"
- தற்போது பிள்ளைகள் பெற்றோர்களுக்கு தமது திருமணத்தை தெரிவிக்கும் காலம் வந்துவிட்டது.
- ஒரு ஜாதகர் பிறந்த அன்றே அவருடைய வாழ்க்கைத் துணை யார் என்று நிர்ணயிக்கப்பட்டு விடும்.
ஒரு காலத்தில் ஆண்கள் மட்டும் சம்பாதித்தார்கள் குடும்பப் பொறுப்பு ஆண்களைச் சார்ந்ததாகவே இருந்தது. ஆனால் தற்காலத்தில் இருபாலரும் சம்பாதித்தால் மட்டுமே குடும்பம் நடத்தக்கூடிய சூழ்நிலைகள் சமுதாயத்தில் நிலவி வருகிறது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் சகல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். அதனால் தங்களது திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஜாதகரே தீர்மானிக்கிறார்கள். இந்த சமுதாய மாற்றம் வரவேற்கத்தக்கதாகும். இந்த சமுதாய மாற்றமே பலரின் திருமண வாழ்க்கைக்கு கேள்விக்குறியாக உள்ளது. தற்போது பிள்ளைகள் பெற்றோர்களுக்கு தமது திருமணத்தை தெரிவிக்கும் காலம் வந்துவிட்டது.
திருமணத் தடைக்கு சமுதாய ரீதியான காரணங்கள் என்றால் திருமண வயது வந்தாலும் பலர் நிலையான தொழில், உத்தியோகம் அமைந்த பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள் அல்லது வாழ்க்கைத் துணை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன்பாக தேவையில்லாத வீண் கற்பனைகளை வளர்த்துக் கொள்வதும், எதிர்பார்ப்புகளை உருவாக்கி கொள்வதுடன் பொறுமையும், சகிப்புதன்மையும் இல்லாததும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஒரு ஜாதகர் பிறந்த அன்றே அவருடைய வாழ்க்கைத் துணை யார் என்று நிர்ணயிக்கப்பட்டு விடும். தங்கள் ஜாதகரீதியாக தமக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை எப்படி இருப்பார் என்று தெரிந்து கொண்டு வரன் பார்த்தால் திருமண தடை இருக்காது.
பரிகாரம்: திருமணத்தடை நீங்கி நல்ல வாழ்க்கை துணை அமைய சாஸ்திரத்தில் கூறப்பட்ட ஒரு சிறப்பு பூஜை சுயம்வர பார்வதி ஹோமம் ஆகும்.
திருமணம் ஆனவர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் அதிகரிக்க இந்த ஹோமத்தை செய்யலாம். பார்வதி தேவியின் அருளைப் பெற்றால் திருமணத்தடை நிச்சயம் அகலும். இந்த ஹோமத்தை செய்வதன் மூலம் திருமணத்தடை அகன்று ஏற்ற துணையை விரைவில் அடைய முடியும்.
தமிழ்நாட்டில் தொன்மையான பல்வேறு திருமணத்தடை நீக்கும் தலங்கள் உள்ளது. இதில் சென்னை மாநகரத்தை ஆட்சி செய்யும் பாரிமுனை பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு அதிக சக்தி உள்ளது.
- களத்திரகாரகன் சுக்கிரன் ஏழாம் வீடு மனைவி குறிப்பதாகும்.
- 7-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும்.
களத்திரகாரகன் சுக்கிரன் ஏழாம் வீடு மனைவி குறிப்பதாகும் 7-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும். ஜோதிடரிடம் பெரியோர்கள் மிக ஆர்வமாக கேட்கும் கேள்விகள் மனைவி எவ்வாறு அந்நியமா, எந்தத் திசை, கருப்பா சிவப்பா என்று தான் கேட்பார்கள் இந்த களத்திரகாரகன் சுக்கிரனும் அல்லது களத்திர ஸ்தானாதிபதி இவரில் ஒருவர் நிறத்துக்கு எதுவோ அதுதான் மனைவி இருக்கும் ஒரு ஆக அமையும் மூல நூல்கள் அனைத்திலும் திருமணம் செய்ய வேண்டிய பையனுக்கு அமையக்கூடிய பெண் எந்தத் திசையில் அமைவாள் என்று கூறப்பட்டுள்ளது பெண்ணிற்கு மணமகன் திசை குறித்து குறிப்பு இல்லை. இது ஓரளவுக்கு ஒத்துவரும்.
களத்ரதோஷம்:
1. திருமணம் காலதாமதமாக நடைபெறும் .
2.திருமணம் செய்ய பல ஆண் பெண் ஜாதகங்களைப் பார்த்து அவர்களிடம் அலைந்து பின்னர் நிச்சயமாகும்.
3. நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று போகும் அமைப்பு
4. கூடிவரும் திருமணம் நின்று போகும் அளவிற்கு அல்லது மன வருத்தம். களத்ர தோஷம் ஏற்படக் காரணம்:
1.லக்னத்திற்கு ஏழில் சனி செவ்வாய் சேர்ந்திருத்தல்.
2. லக்னத்திற்கு ஏழில் சுக்ரன் நீசம் பெற்று இருந்து சுக்ர தசை நடத்தல்.
3. லக்னத்திற்கு ஏழுக்குடையவன் , 6,8,12 -ல் தனித்து இருந்தாலும் , பாபக்கிரஹங்களுடன் சேர்ந்து இருப்பதும்.
4. லக்னத்தில் இருந்து 2,7,9 ல் பாபக் கிரஹங்கள் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.
5. லக்னத்தில் இருந்து 7 – க்குடையவன் தசை நடப்பது.
6 . ஏழில் சனி , செவ் , ராகு அல்லது கேது சேர்ந்திருப்பது.
7. நான்காம் இடத்தில் சனி , செவ்வாய் , ராகு அல்லது கேது இருத்தல்.
களத்ர தோஷ பரிகாரங்கள் :
`பெற்ற தாயாருக்கு உடுத்த துணி இல்லை. பையன் காசியில் சென்று வஸ்திர தானம் செய்தானாம். இது பழமொழி. பெற்ற தாயாருக்கு எதுவும் கொடுக்காமல், கோடி கோடியாகத் தானம் செய்தாலும் பலன்தருமா? இதுபோல், திருமணம் ஆக வேண்டிய நிலையில் உள்ளவர்கள் உள்ளூர் தெய்வம் மற்றும் குலதெய்வம் ஆகியவைகளை வணங்காமல், தோஷ பரிகாரம் என்று திருமணஞ்சேரி, காளகஸ்தி, சூரியநானார் கோவில் என்று வழிபாடுகள் நடத்துவதில் என்ன பிரயோசனம்?
எனவே குலதெய்வம் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் வீட்டில் சுமங்கிலியாக இறந்த முன்னோர்களுக்கு அவரவர் குடும்ப வழக்கப்படி சுமங்கிலி பூஜை செய்ய வேண்டும். ஸ்ரீ மஹாலெஷ்மி, கௌரி பூஜைகள் செய்யலாம்.
தீர்க்க சுமங்கலிகளாக வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நல்ல மஞ்சள் குங்குமம் கொடுத்து அவர்கள் ஆசிர்வாதம் பெற வேண்டும். எந்தெந்த கிரஹத்தால் களத்ர தோஷம் ஏற்பட்டுள்ளதோ அந்த கிரஹங்களுக்குரிய கடவுளை வழங்க வேண்டும்.






