என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருமணத்தடையை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம்
    X

    திருமணத்தடையை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம்

    • தற்போது பிள்ளைகள் பெற்றோர்களுக்கு தமது திருமணத்தை தெரிவிக்கும் காலம் வந்துவிட்டது.
    • ஒரு ஜாதகர் பிறந்த அன்றே அவருடைய வாழ்க்கைத் துணை யார் என்று நிர்ணயிக்கப்பட்டு விடும்.

    ஒரு காலத்தில் ஆண்கள் மட்டும் சம்பாதித்தார்கள் குடும்பப் பொறுப்பு ஆண்களைச் சார்ந்ததாகவே இருந்தது. ஆனால் தற்காலத்தில் இருபாலரும் சம்பாதித்தால் மட்டுமே குடும்பம் நடத்தக்கூடிய சூழ்நிலைகள் சமுதாயத்தில் நிலவி வருகிறது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் சகல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். அதனால் தங்களது திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஜாதகரே தீர்மானிக்கிறார்கள். இந்த சமுதாய மாற்றம் வரவேற்கத்தக்கதாகும். இந்த சமுதாய மாற்றமே பலரின் திருமண வாழ்க்கைக்கு கேள்விக்குறியாக உள்ளது. தற்போது பிள்ளைகள் பெற்றோர்களுக்கு தமது திருமணத்தை தெரிவிக்கும் காலம் வந்துவிட்டது.

    திருமணத் தடைக்கு சமுதாய ரீதியான காரணங்கள் என்றால் திருமண வயது வந்தாலும் பலர் நிலையான தொழில், உத்தியோகம் அமைந்த பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள் அல்லது வாழ்க்கைத் துணை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

    இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன்பாக தேவையில்லாத வீண் கற்பனைகளை வளர்த்துக் கொள்வதும், எதிர்பார்ப்புகளை உருவாக்கி கொள்வதுடன் பொறுமையும், சகிப்புதன்மையும் இல்லாததும் ஒரு முக்கிய காரணமாகும்.

    ஒரு ஜாதகர் பிறந்த அன்றே அவருடைய வாழ்க்கைத் துணை யார் என்று நிர்ணயிக்கப்பட்டு விடும். தங்கள் ஜாதகரீதியாக தமக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை எப்படி இருப்பார் என்று தெரிந்து கொண்டு வரன் பார்த்தால் திருமண தடை இருக்காது.

    பரிகாரம்: திருமணத்தடை நீங்கி நல்ல வாழ்க்கை துணை அமைய சாஸ்திரத்தில் கூறப்பட்ட ஒரு சிறப்பு பூஜை சுயம்வர பார்வதி ஹோமம் ஆகும்.

    திருமணம் ஆனவர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் அதிகரிக்க இந்த ஹோமத்தை செய்யலாம். பார்வதி தேவியின் அருளைப் பெற்றால் திருமணத்தடை நிச்சயம் அகலும். இந்த ஹோமத்தை செய்வதன் மூலம் திருமணத்தடை அகன்று ஏற்ற துணையை விரைவில் அடைய முடியும்.

    தமிழ்நாட்டில் தொன்மையான பல்வேறு திருமணத்தடை நீக்கும் தலங்கள் உள்ளது. இதில் சென்னை மாநகரத்தை ஆட்சி செய்யும் பாரிமுனை பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு அதிக சக்தி உள்ளது.

    Next Story
    ×