என் மலர்
நீங்கள் தேடியது "குரு புஷ்ய யோகம் தினம்"
- குரு புஷ்ய யோகம் தெய்வீக வலிமையைக் கொண்டுள்ளது.
- புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும் நாளைய நாள் ஏற்றது.
நாளை (வியாழக்கிழமை) குரு புஷ்ய யோக தினமாகும்.
குரு புஷ்ய யோகம் தினம் என்பது அட்சய திரிதியையை விட அபூர்வமான தினமாகும்.
குருவுக்குரிய வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் எப்போது இணைகிறதோ அந்த நாளே குரு புஷ்ய யோக நாள். புஷ்யம் என்பது பூசம் நட்சத்திரத்தின் வடமொழி பெயர்.
அட்சய திரிதியை ஆண்டுக்கு ஒரு முறையே வரும். குரு புஷ்ய யோகம் ஆண்டின் இரண்டு, மூன்று நாட்களில் வரும். கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி மாலை 6.12 மணி முதல் 25-ந்தேதி மாலை 5.57 மணி வரை இந்த யோகம் இருந்தது.
ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி காலை 6.11 மணி முதல் மறுநாள் மதியம் 12.08 மணி வரை 30 மணி நேரம் இந்த யோகம் வருகிறது. இதையடுத்து செப்டம்பர் 18-ந்தேதி மட்டும் காலை 6.09 மணி முதல் 9.28 மணி வரை 3 மணி நேரம் மட்டும் இந்த யோகம் இருக்கிறது.
அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் பல்கிப் பெருகும் என்ற நம்பிக்கை எவ்வாறு உள்ளதோ அதை விட சிறந்த நாளாக குரு புஷ்ய யோக நாள் அமைகிறது. குருவுக்குரிய நிறம் மஞ்சள். இதனால் மஞ்சள் நிற தங்கம் வாங்குவது மிக மிக யோகம்.
லட்சுமி தாயார், பூசம் நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து, அந்த நட்சத்திரத்தில் பிறந்த நாள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். குரு புஷ்ய யோக நாளில் தங்கம் வாங்குவது மிக மிக சிறப்பு என பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு வாங்கும் தங்கம் எதிர்காலத்தில் அவர்களை உச்சத்துக்கு உயர்ந்த அடிப்படையாக அமையும் என்கின்றனர்.
இந்த நாளில் குரு கோவில்களான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்குடித் திட்டை குரு கோவில், சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலம் குரு கோவில் உள்ளிட்டவற்றுக்கு சென்று வரலாம்.
இது தவிர ஏராளமான குரு கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. முக்கியமாக இந்த நாளில் திருச்செந்தூரில் முருகப் பெருமானையும், சுற்றுப் பிரகாரத்தில் உள்ள குருவையும் வணங்குவது மிக மிக நலம் தருவதாக இருக்கும்.
செந்தூர் முருகனை, தேவர்களின் குருவான பிரகஸ்பதியே வழிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதனான முருகனை, குருவே வழிபட்டதால் இது இரட்டை குரு தலமாக விளங்குகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளை விட செந்தூர் முருகனை வணங்க ஏற்ற நாள், வியாழன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலங்குடி குருபகவானுக்கு 24 நெய் தீபங்கள் ஏற்றி உட்பிரகாரத்தை 24 முறை மவுனமாக வலம் வந்தால் குருபகவான் திருவருள் கிட்டும்.
சோழவந்தானை அடுத்து குருவித்துறை உள்ளது. இங்கு குருபகவான் தனி சந்நதி கொண்டு அருள்வது அற்புதம். இந்த குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் ஊற வைத்த கொண்டக்கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து அவருருள் பெறுகின்றனர்.
திருவாரூர் கமலாம்பிகை, குருபகவானின் அம்சமாக அருள்கிறார். குருபெயர்ச்சி அன்று இந்த அம்பிகையை தரிசித்தால் குருதோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
காரைக்குடியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பட்டமங்கலத்தில் குருபகவான் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்கிறார். இத்தலத்தில் மட்டுமே ஆலமரத்தோடு அமர்ந்த குருபகவானை தரிசிக்கலாம். இங்குள்ள ஐம்பொன்னாலான குரு பகவானின் திருவுருவை குரு பெயர்ச்சி மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே தரிசிக்க முடியும்.
புஷ்ய யோகம் என்பது ஜோதிடத்தில் மிகவும் நல்ல சேர்க்கைகளில் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமான பணிகள், முதலீடுகள் அல்லது ஆன்மீக நடைமுறைகளைத் தொடங்க இந்தநாள் மிகவும் சாதகமான காலமாக கருதப்படுகிறது.
புதிய சிகிச்சைகள் அல்லது உடற்பயிற்சி நடைமுறைகளைத் தொடங்குவதற்கும் குரு புஷ்ய யோகம் தினம் முக்கியமானதாக உள்ளது.
குரு புஷ்ய யோகம் என்பது ஜோதிடத்தில் மிகவும் புனிதமான காலமாகும், இது வியாழன் (குரு) மற்றும் புஷ்யா என்ற விண்மீன் கூட்டத்தின் அதன் சக்திவாய்ந்த கலவைக்காக மதிக்கப்படுகிறது.
ஜோதிடத்தில், வியாழன் ஞானம், அறிவு, ஆன்மீகம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கும் மிகவும் நன்மை பயக்கும் கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் வியாழன் செல்வாக்கு வலுவாக இருக்கும்போது, அது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
புஷ்ய நட்சத்திரம் என்பது ஜோதிடத்தில் உள்ள 27 விண்மீன்களில் ஒன்றாகும். இது ஊட்டச்சத்து மற்றும் வளர்ப்பு குணங்களுடன் தொடர்புடையது. இந்த நட்சத்திரத்திற்கு தலைமை தாங்கும் தெய்வம் பிரஹாஸ்பதி (வியாழன்) ஆவார். இது வியாழன் உடன் இணைந்திருக்கும் போது அதன் நல்ல தன்மையை மேலும் பெருக்குகிறது.
புஷ்ய நட்சத்திரத்தின் விண்மீன் கூட்டத்தின் வழியாக வியாழன் வரும்போது, இந்த காலம் குரு புஷ்ய யோகக் காலம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த காலம் திருமண விழாக்கள் அல்லது சொத்து வாங்கும் பொருட்கள் போன்ற தனிப்பட்ட மைல்கற்களுக்கும் ஏற்றதாக கருதப்படுகிறது.
நீங்கள் ஒரு புதிய முயற்சியைத் தொடங்க விரும்பினாலும் அல்லது உங்கள் ஆன்மீக பயிற்சியை ஆழப்படுத்த விரும்பினாலும், குரு புஷ்ய யோகக் காலத்தை புரிந்துகொள்வதும் பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்க முடியும்.

ஜோதிட பாரம்பரியத்தின் படி, திதி நட்சத்திரம் மற்றும் கிழமை ஆகியவற்றின் சில சேர்க்கைகள் மிக உன்னதமான நல்ல நாளாக கருதப்படுகின்றன. எனவே சில செயல்களைச் செய்ய அல்லது புதிய செயலைத் தொடங்குவதற்கு ஏற்றதாக இந்த நாட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
இந்த குரு பூசம் யோகம் தினம் லட்சுமி தேவியிடம் பிரார்த்தனை செய்வதற்கும் அவரது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது.
நட்சத்திர மண்டலத்தில் குரு (வியாழன்) புனிதமான சுப கிரகமாகும். கடவுள்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பூசம் நட்சத்திர அதிபதி சனி. பூசம் நட்சத்திரத்தை குருவால் ஆளப்படும் தினம் புனிதமாகிறது, இந்த பூச நட்சத்திரம் இடம்பெற்றிருக்கும் கடக ராசிக்கு அதிபதி சந்திரன், இதன் விளைவாக, குரு மற்றும் சந்திரனின் சாதகமான கலவையானது இந்த நட்சத்திர கூட்டத்திற்குள் உருவாகிறது. எனவே பூசம் நட்சத்திரம் எந்தவொரு புனிதமான செயலையும் செய்ய சிறந்ததாக கருதப்படுகிறது.
அதன்படி தங்கம் வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும், புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும் நாளைய நாள் ஏற்றது.
நாளை தங்க நகை வாங்கினால் யோகம் பெருகும் என்பது நம்பிக்கை.
நிலம், சொத்து, முதலியன வாங்குவதற்கும் நல்லது.
நிலம், சொத்து, வெள்ளி, மின்னணு பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் கொள்முதல் செய்ய இந்த நாள் சிறந்த நாளாக பயன்படுத்தப்படுகிறது.
குரு புஷ்ய யோக நாள் மேலும் எதற்கெல்லாம் புனிதமானதாக பார்க்கப்படுகிறது தெரியுமா?
1) புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல்
2) மந்திரம் மற்றும் தந்திரத்தை கற்றுக்கொள்வது மற்றும் உங்கள் பெரியவர்கள், குரு அல்லது ஆசிரியரிடம் அறிவைப் பெறுதல், ஆசி பெறுதல்
3) ஒரு புதிய வணிக நிறுவனம் தொடங்க
4) இந்த காலகட்டத்தில் தங்கம் அல்லது வெள்ளி வாங்குவதால் நல்ல அதிர்ஷ்டத்தை அளிப்பதாகக் கருதப்படுகிறது
5) புதிய வாகனம் வாங்குவது
6) புதுமனை புகுவிழா நடத்த, செல்வமும் செழிப்பும் என்றென்றும் நிலைத்திருக்க சனியின் ஆதிக்கத்தைப் பெற்றிருக்கும் பூச நட்சத்திரம் குருவுக்கு உகந்த வியாழக்கிழமை அமையும் போது, மங்களகரமாகிறது. இந்த நாளில் புனித செயல்கள் செய்யலாம்.
இந்த தினத்தில் வாங்கும் சொத்து அல்லது பொருள் பல மடங்கு பெருகும். அதே போல் செய்யும் தர்மம், தானம் பெருகும் என்பது ஐதீகம்.
குரு புஷ்ய யோகம் தெய்வீக வலிமையைக் கொண்டுள்ளது. நாளைய தினம் நீங்கள் எடுக்கும் முயற்சி 99.99 சதவீதம் வெற்றியைத் தருவது உறுதி.
ஆன்மீக மற்றும் மத செயல்களைப் பின்பற்றுபவருக்கு குரு புஷ்ய அமிர்த யோகம் மிகவும் பயனளிக்கிறது. இது பல்வேறு வகையான விஷயங்களைத் தொடங்குவதற்கு மிகவும் நல்ல முகூர்த்த தினமாக கருதப்படுகிறது.
இந்த நாளில் எடுக்கப்பட்ட எந்த வகையான ஆன்மிக சிந்தனை, பூஜை, ஹோமம், யாகம் அதற்குரிய வெற்றியைத் தருகிறது, அதனால் இந்த புண்ணிய நாளின் நல்ல அதிர்ஷ்டம், சிறந்த யோகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.






