என் மலர்
ஆன்மிகம்
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-22 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி மறுநாள் விடியற்காலை 4.52 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : உத்திரம் காலை 6.49 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலை சாற்று வைபவம், இன்று சுபமுகூர்த்த தினம்
இன்று சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் வெள்ளி அனுமன் வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் பவனி. நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி கேடய சப்பரத்தில் புறப்பாடு. பழனி ஸ்ரீ ஆண்டவர் காமதேனு வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலை யப்பன் புஷ்பாங்கி சேவை. திருக்கோஷ்டியர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராக வேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திர ரத வல்லப்பெருமாள் கோவிலில் ஸ்ரீகுரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிந்தனை
ரிஷபம்-வரவு
மிதுனம்-தாமதம்
கடகம்-செலவு
சிம்மம்-முயற்சி
கன்னி-ஆதரவு
துலாம்- வரவு
விருச்சிகம்-தெளிவு
தனுசு- நேர்மை
மகரம்-நன்மை
கும்பம்-உண்மை
மீனம்-அசதி
- வள்ளலார் ராமலிங்க அடிகளார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பை வைகாசி மாதத்தில்தான் தோற்றுவித்தார்.
- தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன.
வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். ஏனென்றால், அன்றைய தினம்தான் அவர் அவதரித்தார்.
வைகாசி என்ற பெயரில் வட இந்திய புண்ணிய தலமான காசி பெயரும் வருவதால், அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. காசிக்கு சென்று கங்கையில் புனித நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.
வள்ளலார் ராமலிங்க அடிகளார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பை வைகாசி மாதத்தில்தான் தோற்றுவித்தார்.
வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும் லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில் இந்த வைகாசி மாதத்தில்தான் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன.
இஷ்வாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாக இருப்பதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராம ராவண யுத்தம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.
மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி, மணிமேகலையிடம் ''வைகாசிப் பவுர்ணமி அன்று கோமுகி என்ற பொய்கையில் அள்ள அள்ளக் குறையாத 'அமுத சுரபி' என்னும் அட்சயப் பாத்திரம் வெளிவரும். உலக மக்களின் பசிப்பிணியை போக்குவதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன்'' என்று கூறி மறைந்தது, இதன்படியே மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்குத் திரும்பினாள்.
ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள பைராத் நகரின் எல்லையோரத்தில் ஓடும் பான் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது, ராதாகிருஷ்ணன் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைஷாக பவுர்ணமி நாளில் பான்கா விழா நடக்கிறது. இந்நாளில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பான் கங்கா நதியில் நீராடி பூஜைகளும், யாகங்களும் செய்து ராதாகிருஷ்ணனை வழிபடுவார்கள்.
தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன. அவ்வகையில், வைகாசி விசாகம் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாகவும் கொண்டாடப்படுகிறது.
பழனி, திருச்செந்தூர், சுவாமி மலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும்.
பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில்தான். இந்நாள் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சிதரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப்பொலிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.
கன்னியாகுமரி அம்மனுக்கு ஆராட்டு விழா வைகாசி விசாக நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரூரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.
இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.
- மனக்கவலை நீங்க சாய் பாபா மந்திரத்தை கூறி வர, மனம் லேசாகும்.
- சாய் பாபா கோவிலுக்கு செல்லும்போது மஞ்சள் நிறம் அணிந்து செல்வது கூடுதல் சிறப்பாக இருக்கும்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு சிறப்புவாய்ந்த நாளாகவும் அந்த தெய்வத்திற்கான வழிபாட்டு நாளாகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வியாழக்கிழமை என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது சாய்பாபா தான்.
எந்த பக்தர்கள் அவரை உண்மையான பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வணங்குகிறார்களோ, சாய்பாபா அவர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறார் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும்
வியாழன் அன்று சாய்பாபாவை வழிபடுவது மங்களகரமானதாகவும் மிகப்பெரிய நெருக்கடிகள் நீங்கி, பலன் தருவதாகவும் நம்பப்படுகிறது அல்லது கருதப்படுகிறது.
சாய் பாபாவின் சிறப்பு ஆசிகளைப் பெற, வியாழன் அன்று விரதம் இருப்பது நன்மை தரும். இது தவிர இந்த நாளில் சாய்பாபாவை வழிபட வேண்டும் என்ற விதியும் உள்ளது. இது உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும்.
வியாழன் வழிபாடு:
வியாழன் அன்று வீட்டின் அருகில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். இது தவிர, சாய்பாபாவை வணங்கும் போது, சாய் கதாவை மனதிலிருந்து கூறவும். இதன் மூலம் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். மத நம்பிக்கையின்படி, சாய் பூஜையின் போது சாய் பாபா தொடர்பான மகா மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இந்த விசேஷ நாளில் இதயத்தில் உண்மையான பக்தியுடன் சாய்பாபாவின் பஜனையும் கீர்த்தனையும் செய்யும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.
வியாழக்கிழமை சொல்ல வேண்டிய மந்திரங்கள்:
மனக்கவலை நீங்க சாய் பாபா மந்திரத்தை கூறி வர, மனம் லேசாகும். மனக்குறை நீங்கி வீட்டில் மகிழ்ச்சி பெருகும். அதிலும் குறிப்பாக வியாழக்கிழமைகளில் இந்த மந்திரத்தை சொல்லி வர வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பது ஐதீகம்...
1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்.
தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
2. ஷீரடி சாய் பாபாவின் த்யான ஸ்லோகம்:
பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி.
3.நினைத்த காரியம் நடக்க:
"ஓம் சாய் குருவாயே நமஹ
ஓம் ஷீரடி தேவாயே நமஹ
ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ"
தினமும் காலையில் குளித்து முடித்த பின்பு இறைவனை வணங்கி "ஸ்ரீ சாய் பாபாவை" மனதார நினைத்து இம்மந்திரத்தை 9 முறை கூறவேண்டும். இதன் மூலம் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும். உங்கள் மனதில் இருந்த இனம் புரியாத பயம் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
சாய் பாபாவிற்கு உகந்த நிறம்:
மஞ்சள் நிறம் வியாழக்கிழமைக்கு மிகவும் அதிர்ஷ்டமான நிறமாக கருதப்படுகிறது. இந்த நிறம் சாய் பாபாவுக்கும் பிடித்த நிறமாக இருக்கிறது. எனவே இந்த நாளில் சாய் பாபா கோவிலுக்கு செல்லும்போது மஞ்சள் நிறம் அணிந்து செல்வது கூடுதல் சிறப்பாக இருக்கும்.
குருவும், சாய் பாபாவும்:
குருவுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. ஆனாலும் தினமும் குருவை வணங்குவது மகத்துவமானது என்கிறார்கள் சாய் பாபா பக்தர்கள். அதுபோல தினமும் சாய் பாபாவை ஒரு பத்துநிமிடமாவது வணங்கிவிட்டு, அன்றாடப் பணிகளைச் செய்யும் போது, அவர்களின் எல்லா காரியங்களிலும் பாபா உடனிருந்து நிறைவேற்றித் தந்தருள்கிறார் என்பது சாய் பக்தர்களின் நம்பிக்கை.
- வாஸ்து பகவான் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.
- வீடு, மனை, கட்டிடங்களின் அமைப்பை தீர்மானிப்பது தான் வாஸ்து சாஸ்திரம்.
வாஸ்து பகவான் கண்விழிக்கும் நாள் தான் வாஸ்து நாள் என்று அழைக்கப்படுகிறது. யார் அந்த வாஸ்து பகவான் அவர் எப்படி தோன்றினார் என்று பார்க்கலாம்.
சிவ பெருமான் அந்தகாசுரன் என்பவனை வதம் செய்தார். அப்போது சிவன் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தியை பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், "இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்," என்று கூறினர். மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.
வாஸ்து நாள் எப்போது வரும்:
ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் எட்டு நாள்களிலும் வாஸ்து பகவான் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.
வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களில் ஒருநாளில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே விழித்திருப்பார் என்கிறார்கள் ஜோதிடர்கள். அப்படி அவர் விழித்ததும் காலையிலேயே நீராடுவார் என்றும் பூஜைகள் செய்வார் என்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். இதையடுத்து பூஜைக்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்வார். அப்படி நிம்மதியும் நிறைவுமாக இருக்கும் தருணம்தான், வாஸ்து பூஜைக்கான நேரம். பூமி பூஜைக்கான நேரமாகும்.
வாஸ்து புருஷனை, கீழே தள்ளி அவன் மேல் 53 தேவதைகள் அவன் முதுகில் அமர்ந்த இடம் தான் வாஸ்து மண்டலம் என்று குறிப்பிடப்படுகிறது. வாஸ்து மண்டலம் சதுரமாக அமைந்திருக்கும். வாஸ்துவை பிரம்மதேவன் காப்பாற்றி அருளியதால், வீட்டின் நடு பாகம் பிரம்மாவுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. மனையடி சாஸ்திரம் இதனை பிரம்ம ஸ்தானம் என்றே விவரிக்கிறது.

வாஸ்து சாஸ்திரம்:
வீடு, மனை, கட்டிடங்களின் அமைப்பை தீர்மானிப்பது தான் வாஸ்து சாஸ்திரம். முன்னர் சொன்னது போல் வாஸ்து பகவான் அந்த எட்டு நாள்களிலும் ஒன்றரை மணிநேரம் கண்விழித்திருக்கும் நேரம் தான் வாஸ்து பூஜை, பூமி பூஜை செய்வதற்கு உகந்த நேரம் ஆகும். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லவிதமாக வளர்ச்சி பெறும்.
வாஸ்து பூஜை எப்போது செய்யலாம்:
சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். வாஸ்து பூஜை செய்ய திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் சிறந்தவை. ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப லக்கினம் சிறந்தது.
ஆகவே, வீட்டிற்கு வாஸ்து பூஜை செய்ய நினைப்பவர்கள் வைகாசி 21-ந்தேதி ஆன நாளை செய்யலாம். மேலும் புதன்கிழமையும் சேர்ந்து வருவதால் வாஸ்து செய்ய உகந்தநாளாகும்.
- சோழவந்தான் ஸ்ரீ ஜனக மாரியம்மன் யாளி வாகனத்தில் பவனி.
- விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-21 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : நவமி பின்னிரவு 3.17 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : உத்திரம் (முழுவதும்)
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
இன்று வாஸ்து நாள் (காலை 9.58 மணிக்கு மேல் 10.34 மணிக்குள் வாஸ்து பூஜை செய்ய நன்று). சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் ரதோற்சவம். ஆழ்வார் திருநகரில் ஸ்ரீ நம்மாழ்வார் சந்நிதியில் 9 கருட சேவை. சோழவந்தான் ஸ்ரீ ஜனக மாரியம்மன் யாளி வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.
விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளி யம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதரவு
ரிஷபம்-ஆசை
மிதுனம்-அன்பு
கடகம்-ஆதரவு
சிம்மம்-ஆர்வம்
கன்னி-நற்சொல்
துலாம்- சுகம்
விருச்சிகம்-கடமை
தனுசு- வெற்றி
மகரம்-முயற்சி
கும்பம்-நன்மை
மீனம்-இன்பம்
- கொடி கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
- விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 8ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்றாகும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை நடைபெற்றது. கொடி கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
பின்னர் கொடி படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உட்பிரகாரமாக வலம் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடி மண்டபத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி ரதவீதிகளில் தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 8ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அன்று இரவு 8.30 மணிக்கு மேல் மணக்கோலத்தில் சுவாமி எழுந்தருளி வெள்ளி தேரில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 9ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் தேரேற்றம் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்குமேல் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறும். 4 ரதவீதிகளில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
வருகிற 12ம் தேதி காலை திருவூடல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
- திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் வெள்ளி ரத உற்சவம்.
- திருப்பத்தூர், திருத்தணிநாதர் மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்ப உற்சவம்.
இந்த வார விசேஷங்கள்
3-ந் தேதி (செவ்வாய்)
* திருமோகூர் காளமேகப் பெருமாள் அனுமன் வாகனத்தில் உலா.
* மதுரை கூடலழகர் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.
* பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.
* நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி கேடய சப்பரத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (புதன்)
* சிவகாசி விசுவநாதர் ரத உற்சவம்.
* காளையார்கோவில் சிவ பெருமான், திருப்பத்தூர், திருத்தணிநாதர் தலங்களில் திருக்கல்யாணம்.
* பழனி ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யாளி வாகனத்தில் உலா.
* மேல்நோக்கு நாள்.
5-ந் தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் வெள்ளி ரத உற்சவம்.
* மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் பவனி.
* திருவாடானை, நயினார் கோவில், திருப்பத்தூர் தலங்களில் சுவாமி வெள்ளி விருட்சப சேவை.
* மேல்நோக்கு நாள்.
6-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* சுமார்த்த ஏகாதசி.
* மாயவரம் கவுரிமாயூர நாதர் திருக்கல்யாணம்.
* காஞ்சிபுரம் கோட்டம் குமரக் முருகப் பெருமான் ரத உற்சவம்.
* சமநோக்கு நாள்.
7-ந் தேதி (சனி)
* சர்வ ஏகாதசி.
* மதுரை பெருமாள் கூடலழகர் யானை வாகனத்தில் பவனி.
* காட்டுபருவூர் ஆதி கேசவப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருட்சப சேவை.
* சமநோக்கு நாள்.
8-ந்தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* பழனி ஆண்டவர் திருக்கல்யாணம், இரவு வள்ளி திருமணம்.
* நாட்டரசன் கோட்டை கண்ணுடையநாயகி வெள்ளி ரத உற்சவம்.
* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்.
* சமநோக்கு நாள்.
9-ந் தேதி (திங்கள்)
* வைகாசி விசாகம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சங்காபிஷேகம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் பால் அபிஷேகம்.
* திருப்பத்தூர், திருத்தணிநாதர் மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்ப உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம்
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-20 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : அஷ்டமி நள்ளிரவு 2.05 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : பூரம் மறுநாள் விடியற்காலை 4.52 மணி வரை பிறகு உத்திரம்
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருக்கண்ணபுரம், காட்டுபருவூர், அரியக்குடி கோவில்களில் உற்சவம் ஆரம்பம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் தங்கப்புலி வாகனத்தில் பவனி. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் ஸ்ரீ அனுமன் வாகனத்தில் புறப்பாடு. பழனி ஸ்ரீ ஆண்டவர் உற்சவம் ஆரம்பம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை கோவில்களில் அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நற்சொல்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-பாசம்
கடகம்-அன்பு
சிம்மம்-மாற்றம்
கன்னி-இன்பம்
துலாம்- மகிழ்ச்சி
விருச்சிகம்-வெற்றி
தனுசு- முயற்சி
மகரம்-நன்மை
கும்பம்-கண்ணியம்
மீனம்-உதவி
- வெற்றிலை மற்றும் பாக்கு மகாவிஷ்ணு மற்றும் பார்வதி தேவியின் மறு உருவம் எனவும் கூறுவர்.
- வெற்றிலை தீபத்தை தொடர்ச்சியாக 9 வாரங்கள் ஏற்ற வேண்டும்.
தமிழ்க் கடவுளான முருகனை மனம் உருகி வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் அதிகளவில் உள்ளது. வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் முருகனுக்கு மிகவும் பிடித்த நாளாக உள்ளது செவ்வாய் கிழமை. செவ்வாய்க்கிழமையில் வெற்றிலை தீபம் ஏற்றி முருகனை வழிபட்டால் முருகன் அகமகிழ்ந்து நாம் கேட்ட வரங்களை அள்ளிக் கொடுப்பான் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வெற்றிலைக்கு மட்டும் அப்படியென்ன மகிமை என்று கேட்டால், "வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும் காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக வரலாறு சொல்கிறது" அந்த அளவிற்கு வெற்றிலையானது புராண காலங்களை எல்லாம் தாண்டி தற்போதும் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற ஒரு புனிதப் பொருள் ஆகும்.
அனைத்து செடிகளும் மொட்டாகி பூவாகி காயாகி பழமாகும் மீண்டும் அதிலிருந்து விதை கிடைக்கும். ஆனால் வெற்றிலை மட்டும் ஒரே ஒரு உருவம் எடுத்தாலும் அது கடவுளையே சேரும். வெற்றிலை மற்றும் பாக்கு மகாவிஷ்ணு மற்றும் பார்வதி தேவியின் மறு உருவம் எனவும் கூறுவர்.
இப்படிப்பட்ட ஒரு தனி சிறப்பு மிகுந்த வெற்றிலையை தீபமேற்றி வழிபட வெற்றிகள் வந்து சேரும். வெற்றியில் தீபம் ஏற்றுவது என்பது ஒரு வழிபாட்டு முறையாகும்.
வெற்றிலை தீபத்தின் நன்மைகள்:
நெய் தீபம், எலுமிச்சை தீபம் போன்ற தீபங்களை ஏற்றுவதோடு முருகனுக்கு மிகவும் பிடித்த வெற்றிலை தீபத்தை தொடர்ச்சியாக 9 வாரங்கள் ஏற்ற வேண்டும். மனம் உருகி வெற்றிலை தீபம் ஏற்றி முருகனை வழிபடும் போது நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம். குறிப்பாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் முதல் திருமணம் விரைவில் கைக்கூட வேண்டும் என்று நினைப்பவர்கள் வெற்றிலை தீபம் ஏற்றுவதால் விரைவாக அனைத்தும் கைக்கூடும்.
வெற்றிலை தீபம் ஏற்றும் முன் கட்டாயம் செய்ய வேண்டியது:
வெற்றிலை தீபம் ஏற்றுவதற்கு முன்னதாக பூஜை அறையை நன்கு சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பனீர் தெளித்து சுத்தம் செய்யும் போது வாசனை நமது மனதை அமைதியாக்கும்.
வெற்றிலை தீபத்தை எப்போது ஏற்றினாலும் நுனி இல்லாத வெற்றிலையைப் பயன்படுத்தக்கூடாது. மேலும் வெற்றிலையில் காம்போடு விளக்கேற்றக்கூடாது.
வெற்றிலை தீபம் ஏற்றும் முறை:
முதலில் 12 வெற்றிலைகளை எடுத்துக்கொண்டு முதல் ஆறு வெற்றிலைகளை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து மயில் தோகை போல் வட்டமாக அடுக்கி வைக்கவேண்டும்.
அடுக்கி வைக்கப்பட்ட வெற்றிலைக்கு நடுவில் தீபமேற்றி வழிபட வேண்டும். வீட்டில் சிறிய வேல் இருந்தால் அதையும் வைத்துக் கொள்ளலாம். பிறகு அதில் இரண்டாவது ஆறு வெற்றிலையில் காம்புகளை கிழித்து காம்புகளை எல்லாம் விளக்கிலிருக்கும் நல்லெண்ணெயில் போட்டு விடவேண்டும் விளக்கு எரியும் பொழுது ஒரு நல்ல நறுமணம் வீசும். இவ்வாறான வெற்றிலை வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.
வெற்றிலை தீபம் எப்போது ஏற்ற வேண்டும்?
முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த நாள் செவ்வாய் கிழமை. இந்த நாளில் வெற்றிலை தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. எனவே செவ்வாய் ஹோரையில் விளக்ககேற்ற வேண்டும். அதாவது அதிகாலை 3 மணியிலிருந்து 4 மணி வரையும், காலை 6 மணியிலிருந்து 7 மணி வரையும், மதியம் 1 மணியிருந்து 2 மணி வரையும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையும் விளக்கேற்றுவது நல்லது.
- பத்மநாப சுவாமி கோவில் வளாகம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டுள்ளது.
- கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் வரும் நாட்களில் நடைபெறும்.
கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில். விஷ்ணுவுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தநிலையில் பத்மநாப சுவாமி கோவிலில் 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து பத்ம நாபசுவாமி கோவிலின் மேலாளர் ஸ்ரீகுமார் கூறியிருப்பதாவது:-
கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின்படி கோவிலின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் காரணமாக முடங்கிய புனரமைப்பு பணிகள், கடந்த 2021-ம் ஆண்டு முதல் மீண்டும் தொடங்கி நடந்து வந்த நிலையில், தற்போது நிறைவு பெற்றிருக்கிறது.
இதனால் பத்மநாபசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 8-ந்தேதி நடத்தப்படுகிறது. மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரத்தில் மூன்று புதிய கலசங்கள், சன்னதியின் முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபத்தின் மேல் கோபுரத்தில் இருக்கும் கலசம் என 4 கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
புதிய விஷ்வக்சேனன் சிலை பிரதிஷ்டை, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் சன்னிதியில் அஷ்டபந்த கலசம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் கும்பாபிஷேக நாளில் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் வரும் நாட்களில் நடைபெறும்.
பத்மநாப சுவாமி கோவில் வளாகம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகெங்கிலும் உள்ள பத்மநாபசுவாமி பக்தர்களுக்கு கும்பாபிஷேக சடங்குகளை காணும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கோவிலின் மரபுகளை பின்பற்றி புனித நிகழ்ச்சிகள் நடைபெறுவதை உறுதி செய்ய கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-19 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி நள்ளிரவு 1.22 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : மகம் பின்னிரவு 3.27 மணி வரை பிறகு பூரம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழககு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். நயினார் கோவில் ஸ்ரீ நாகநாதர் காலை இந்திர விமானத்திலும் இரவு சுவாமி பூத வாகனத்திலும் அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி. திருப்புகழூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் ராஜாங்க சேவை. இரவு சிம்ம வாகனத்தில் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-பணிவு
கடகம்-நட்பு
சிம்மம்-பண்பு
கன்னி-பாசம்
துலாம்- மகிழ்ச்சி
விருச்சிகம்-சுகம்
தனுசு- வரவு
மகரம்-சுபம்
கும்பம்-மாற்றம்
மீனம்-கடமை
- குழந்தைகளுக்கு காது குத்துவதற்கு ஜூன் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உகந்த நாளாகும்.
- 18-ந்தேதி வரை 6 நாட்கள் சபரிமலை ஆலயம் திறந்து இருக்கும்.
மே மாதம் நிறைவடைந்து ஜூன் மாதம் பிறந்துள்ளது. இம்மாதம் முழுவதும் நடைபெறக்கூடிய ஆன்மிக நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்கள் இதோ உங்களுக்காக...
சுபமுகூர்த்த நாட்கள்
ஜூன் 5-ந்தேதி வியாழக்கிழமை, தசமி திதி, உத்திரம் நட்சத்திரம், லக்னம் ரிஷபம். நல்ல நேரம்- காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை
ஜூன் 6-ந்தேதி வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி, அஸ்தம் நட்சத்திரம், லக்னம்-ரிஷபம். காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
ஜூன் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை, திரயோதசி திதி, சுவாதி நட்சத்திரம், லக்னம்-ரிஷபம். காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை.
ஜூன் 16-ந்தேதி திங்கட்கிழமை, பஞ்சமி திதி, அவிட்டம் நட்சத்திரம், லக்னம்-மிதுனம், காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
ஜூன் 27-ந்தேதி வெள்ளிக்கிழமை, துவிதியை திதி, புனர்பூசம் நட்சத்திரம், லக்னம்-மிதுனம், காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை.
தர்ப்பண தினங்கள்
ஜூன் 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)
ஜூன் 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)- போதன அமாவாசை
ஜூன் 25- (புதன்கிழமை)- அமாவாசை
பவுர்ணமி கிரிவலம்
ஜூன் மாதம் 10-ந்தேதி பவுர்ணமி தினமாகும். செவ்வாய்க்கிழமையான அன்று மதியம் 12.27 மணிக்கு பவுர்ணமி தொடங்குகிறது. மறுநாள் (11-ந்தேதி புதன்கிழமை) மதியம் 1.53 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது நன்மை தரும்.
மகாபெரியவா அனுஷ தினம்
காஞ்சி மகா பெரியவரின் ஜென்ம நட்சத்திரமான அனுஷ தினம் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வழிபாடு தினமாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஜூன் மாதம் 10-ந்தேதி (செய்வாய்க்கிழமை) அனுஷ நட்சத்திர தினமாகும்.
சபரிமலை கோவில் நடை திறக்கும் நாட்கள்
சபரிமலை அய்யப்பன் கோவில் ஜூன் மாதம் 4-ந்தேதியும் 5-ந்தேதியும், பிரதிஷ்டை தின பூஜைக்காக 2 நாட்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படும். ஜூன் 14-ந்தேதி வழக்கமான மாத பூஜைக்காக நடை திறக்கப்படும். 18-ந்தேதி வரை 6 நாட்கள் சபரிமலை ஆலயம் திறந்து இருக்கும்.
வாஸ்து பூஜை
ஜூன் 4-ந்தேதி வாஸ்து பூஜைகள் செய்வதற்கு ஏற்ற சுபநாளாகும். புதன்கிழமையான அன்று வாஸ்து புருஷன் 8 நாழிகை விழித்து இருப்பார். அதாவது அன்றைய தினம் காலை 9.58 மணி முதல் 10.34 மணி வரை அவர் விழித்து இருக்கும் காலமாகும். இந்த நேரத்தில்தான் வாஸ்து பகவான் பல்தேய்த்து, குளித்து, சாப்பிட்டு, வெற்றிலை போடும் நேரமாகும். இந்த சமயத்தில் வாஸ்து பூஜை செய்து புதிய கட்டிடங்கள் கட்ட தொடங்குவது மிக மிக சிறப்பானதாக இருக்கும்.
புனித நீராடும் தினம்
ஜூன் 9-ந்தேதி (திங்கட்கிழமை) புனித நீராட சிறந்த தினமாகும். அன்று நதிகளில் நீராடி முருகனையும், துர்க்கையையும் மனமுருக வழிபட்டால் வியாபாரிகளுக்கு அவர்களது வியாபாரத்திலும், தொழிலிலும் வெற்றி மீது வெற்றி கிடைக்கும்.
காது குத்துதல்
குழந்தைகளுக்கு காது குத்துவதற்கு ஜூன் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உகந்த நாளாகும். அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் காது குத்தலாம். அதுபோல ஜூன் 14-ந்தேதி (சனிக்கிழமை) பகல் 11 மணி முதல் 12 மணிக்குள் காது குத்துவது நல்லது. புது வாகனங்கள் வாங்கி ஓட்ட தொடங்குபவர்கள் ஜூன் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் 8 மணிக்குள் புதிய முயற்சிகளை தொடங்குவது நல்லது.
முக்கிய தினங்கள்
ஜூன் 1-ந்தேதி- உலக பால் தினம்.
ஜூன் 2- சர்வதேச பாலியல் தொழிலாளர் தினம், இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த தினம்.
ஜூன் 3- கலைஞர் கருணாநிதி பிறந்த தினம், நடிகர் ஜெய்சங்கர் நினைவு தினம். உலக சைக்கிள் தினம்.
ஜூன் 4- உலக பாதிக்கப்பட்ட குழந்தைகள் தினம், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்த தினம், வ.வே.சு.அய்யர் நினைவு தினம்.
ஜூன் 5- உலக சுற்றுச்சூழல் தினம்.
ஜூன் 6- உலக பூச்சிகள் தினம், தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம்.
ஜூன் 7- உலக உணவு பாதுகாப்பு தினம்.
ஜூன் 8- தேசிய நண்பர்கள் தினம்.
ஜூன் 9- உலக அங்கீகார தினம்.
ஜூன் 10- நாகரிகங்களுக்கிடையில் உரையாடலுக்கான சர்வதேச தினம், பால்பாயிண்ட் பேனா தினம்
ஜூன் 11- சர்வதேச விளையாட்டு தினம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம்
ஜூன் 12- உலக குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான தினம், தேசிய சிவப்பு ரோஜா தினம்.
ஜூன் 13- தேசிய தையல் எந்திரம் தினம், ஒளியும் ஒலியும் அனுப்புவது கண்டுபிடிப்பு தினம்.
ஜூன் 14- உலக ரத்ததான தினம். சேகுவோரா பிறந்த தினம்.
ஜூன் 15- உலக காற்று தினம், உலக தந்தையர் தினம்.
ஜூன் 18- உலக சுற்றுலா தினம், கக்கன் பிறந்த தினம்.
ஜூன் 20- ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்த தினம், உலக அகதிகள் தினம், சுரதா நினைவு தினம்.
ஜூன் 21- உலக யோகா தினம், உலக இசை தினம்.
ஜூன் 24- கவிஞர் கண்ணதாசன், இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த தினம்.
ஜூன் 25- உலக வெண்புள்ளி தினம்.
ஜூன் 26- ம. பொ.சி. பிறந்த நாள், உலக போதை ஒழிப்பு தினம், சித்ரவதைக்கு எதிரான சர்வதேச தினம்.
ஜூன் 27- உலக நீரிழிவு நோய் ஒழிப்பு தினம்.
சித்தர்கள் குருபூஜை தினம்
ஜூன் 7 - அஸ்தலிங்க சுவாமிகள் 175-வது குரு பூஜை இடம் அய்யன்பேட்டை (காஞ்சிபுரம்-தாம்பரம் சாலை)
ஜூன் 8-ந்தேதி- மகான் சாங்கு சித்தர் ஜீவசமாதி கும்பாபிஷேகம் (கிண்டி)
ஜூன் 9-ந்தேதி - சிதம்பரம் சுவாமிகள் 365-வது குரு பூஜை, திருப்போரூர். சிவப்பிரகாச தேசிகர் குரு பூஜை, திருவண்ணாமலை, வீரசேகர ஞானதேசிகர் 114-வது குரு பூஜை, திருக்களார் (மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலை), தாண்டவராய சுவாமிகள்- நன்னிலம், எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள் 43-வது குரு பூஜை, கோட்டையூர் (காரைக்குடி அருகே), சண்முக பரதேசி சுவாமிகள் 83-வது குரு பூஜை, சிவராமபேட்டை (தென்காசி-மதுரை சாலை)
ஜூன் 10-ந்தேதி- நாகமுனி சுவாமிகள் 129-வது ஜெயந்தி விழா, பூங்கோடு (ஆற்காடு-திண்டிவனம் சாலை), பரமஹம்ச ஓங்கார சுவாமிகள், கோடம்பாக்கம்.
ஜூன் 12-ந்தேதி - திருஞான சம்பந்தர் குரு பூஜை
ஜூன் 14-ந்தேதி- குமரகுருபரர் குரு பூஜை
ஜூன் 25-ந்தேதி - சோமப்ப சுவாமிகள் 57-வது குரு பூஜை, திருப்பரங்குன்றம் (மதுரை)
ஜூன் 26- சிவஞான பாலசித்தர் குரு பூஜை, மயிலம் முருகன் ஆலயம், சற்குரு சுவாமிகள் 115-வது குரு பூஜை, மாயகுண்டு (தேனி அருகே), மவுனகுரு சுவாமிகள் 89-வது பூஜை, பெரியகுளம் வராகநதி பாலம் அருகே.
ஆன்மிக குறிப்புகள்
ஜூன்1- சஷ்டி விரதம், ஆரணய கவுரி விரதம்
ஜூன் 2- சாமிதோப்பு வைகுண்ட கோவில் தேர்
ஜூன் 3- அஷ்டமி திதி
ஜூன் 4- வாஸ்து நாள், ஆழ்வார்திருநகரியில் 9 கருட சேவை
ஜூன் 6 - சுமார்த்த ஏகாதசி
ஜூன் 7 - வைஷ்ணவ ஏகாதசி, பக்ரீத் பண்டிகை
ஜூன் 8 - பிரதோஷம்
ஜூன் 9 - வைகாசி விசாகம், நம்மாழ்வார் திருநட்சத்திரம்
ஜூன் 10 - பவுர்ணமி, காஞ்சீபுரம் குமரகோட்ட முருகன் திருக்கல்யாணம்.
ஜூன் 12 - திருஞானசம்பந்தர் குருபூஜை
ஜூன் 14 - சங்கடகர சதுர்த்தி, குமரகுருபரர் குரு பூஜை, திருதியை திதி.
ஜூன் 15 - கரிநாள், திருவோண விரதம்.
ஜூன் 16 - பஞ்சமி, வராகி வழிபாடு தினம்
ஜூன் 17 - சஷ்டி விரதம்
ஜூன் 18 - அஷ்டமி
ஜூன் 20 - கரிநாள்
ஜூன் 21 - சர்வ ஏகாதசி
ஜூன் 22 - கூர்மஜெயந்தி, கார்த்திகை விரதம்
ஜூன் 23 - பிரதோஷம், சிவராத்திரி
ஜூன் 24 - சதுர்த்தசி திதி, சிதம்பரம் நடராஜர் பவனி
ஜூன் 25 - அமாவாசை, திருவள்ளூர் வீரராகவர் தெப்பம்
ஜூன் 26 - ஆஷாட நவராத்திரி தொடக்கம்
ஜூன் 29 - மாணிக்கவாசகர் குரு பூஜை
ஜூன் 30 - ஸ்கந்த பஞ்சமி
வராகி நவராத்திரி
ஜூன் மாதம் 26-ந்தேதி (வியாழக்கிழமை) வராகி நவராத்திரி தொடங்குகிறது. ஜூலை மாதம் 4-ந்தேதி இந்த நவராத்திரியை கொண்டாட வேண்டும். இந்த 9 நாட்களும் தினமும் மாலை அம்பிகையை பூஜை செய்து வழிபட்டால் சலக முன்னேற்றமும் கிடைக்கும்.
கணபதி ஹோமம்
வீட்டில் கணபதி ஹோமம் நடத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜூன் 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), ஜூன் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை), ஜூன் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாட்களில் கணபதி ஹோமம் செய்யலாம். இந்த நாட்களில் சுதர்சன ஹோமம் மற்றும் தோஷ பரிகார சாந்திகள் செய்வது சிறப்பான பலன்களை தரும்.
வட சாவித்திரி விரதம்
ஜூன் 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வட சாவித்திரி விரத தினமாகும். அன்று பெண்கள் விரதம் இருந்து வீட்டில் கவுரி பூஜை செய்வது மிக மிக மேன்மையானது ஆகும். அன்று பெண்கள் சத்தியவான் சாவித்திரி கதையை படித்தால் தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பலன்களை பெறுவார்கள்.c
ஆபரேஷன் செய்து குழந்தை பெற
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் ஜூன் மாதம் 5-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 1 மணி முதல் 1.30 மணிக்குள் அஸ்தம் நட்சத்திரத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெறலாம். ஜூன் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் சித்திரை நட்சத்திரத்திலும், ஜூன் 7-ந்தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் 4 மணிக்குள் சுவாதி நட்சத்திரத்திலும், ஜூன் 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் 8 மணிக்குள் அனுஷம் நட்சத்திரத்திலும், ஜூன் 14-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் 8 மணிக்குள் மிதுனம் லக்னத்திலும் அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை பெற்றெடுக்கலாம்.
பகவதா அஷ்டமி
ஜூன் மாதம் 18-ந்தேதி (புதன்கிழமை) வரும் அஷ்டமியை பகவதா அஷ்டமி என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் காலை சிவபெருமானையும், மாலை சூரியன் மறையும் நேரத்தில் காலபைரவரையும் வழிபட வேண்டும். இந்த வழிபாடு மூலம் தெரிந்தும், தெரியாமலும் பெரியோர்களை அவமரியாதை செய்து இருந்தால் அந்த தோஷம் விலகும். அதோடு கடன் சுமைகளும் நீங்கும்.
அமிர்த லட்சுமி விரதம்
ஜூன் மாதம் 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மகாலட்சுமியை வழிபட்டு விரதம் இருப்பதற்கு உகந்த தினமாகும். அன்றைய தினம் பெண்கள் வீட்டில் கலசம் வைத்து லட்சுமி பூஜை செய்ய வேண்டும். வீட்டில் லட்சுமி படத்தின் முன்பு விளக்கு ஏற்ற வேண்டும். கோவிலுக்கு செல்வதாக இருந்தால் விளக்கு ஏற்றி விட்டு வரவேண்டும். இந்த வழிபாடு மூலம் வீட்டில் லட்சுமி அருள் கிடைத்து சகல செல்வங்களும் பெறலாம்.
லட்சுமி நரசிம்மர் வழிபாடு தினம்
ஜூன் மாதம் 9-ந்தேதி (திங்கட்கிழமை), 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) லட்சுமி நரசிம்மரை வழிபடுவதற்கு சிறந்த நாட்கள் ஆகும். ஜூன் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) லட்சுமி நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திர தினமாகும். எனவே அன்றும் லட்சுமி நரசிம்மரை அவசியம் வழிபட வேண்டும்.
அம்பாளுக்கு உகந்த நாள்
ஜூன் 10-ந்தேதி வீட்டில் பெண்கள் அம்பாளை வழிபட்டால் கணவருக்கு உடல்நலம் உண்டாகும். ஜூன் 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெண்கள் வீட்டில் சமிகவுதி விரதம் இருக்கலாம். இதனால் தாயும் சேயும் நலமாக இருப்பார்கள். வீட்டில் கலச பூஜை செய்வது மிக மிக நல்லது.
பராசக்தி பூஜை
ஜூன் 2-ந்தேதி (திங்கட்கிழமை) தூமாவதீ ஜெயந்தி தினமாகும். அதாவது இது பராசக்தியின் வடிவங்களில் ஒன்றாகும். இந்த வடிவத்தை திருமாலின் மச்ச அவதாரத்துக்கு இணையானதாக புராணங்களில் புகழ்ந்து கூறியுள்ளனர். எனவே 2-ந்தேதி இரவு பராசக்தியை நினைத்து பூஜைகள் செய்தால் அம்பாள் அருள் பெற முடியும். இந்த பூஜைகள் மூலம் கேது தோஷங்கள் உடனடியாக விலகி சென்று விடும்.
ஜூன் 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) குல தெய்வ வழிபாட்டுக்கு முக்கிய நாளாகும். அன்றைய தினம் குல தெய்வத்தை நினைத்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அந்த பிரார்த்தனையை வைக்க வேண்டும். சுப காரியங்கள் நிறைவேற அன்றைய தின பூஜை முக்கியம். அன்று மதியம் தயிர் சாதம் நைவேத்தியம் செய்தால் சகல விதமான தோஷங்களும் விலகி நீங்கள் நினைத்ததை குல தெய்வமும், பித்ருக்களும் நடத்தி தருவார்கள்.






