என் மலர்tooltip icon

    ராசிபலன்

    weekly rasipalan 24-8-2025 TO 30-8-2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
    X

    weekly rasipalan 24-8-2025 TO 30-8-2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

    • மேஷம்- முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து செயல்களும் வெற்றி வாய்ப்பை தேடித்தரும்
    • ரிஷபம்- வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் சுக்கிர பகவானை சேரும்.

    மேஷம்

    பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும் வாரம். தனஸ்தான அதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மனக் கவலைகள் அகலும்.லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டீர்கள். வாழ்க்கையே போராட்டமாக இருந்த நிலை மாறும்.சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதி கூடும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து செயல்களும் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். செலவுகள், விரயங்கள் குறையும். சேமிப்புகள் கூடும்.

    ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். தடைபட்ட வாடகை வருமானம், குத்தகை பணம் வரத்துவங்கும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். 30.8.2025 அன்று காலை 7.53-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எந்த செயலையும் பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். விநாயகருக்கு அவல், பொரி படைத்து வழிபடவும்.

    ரிஷபம்

    திருமண விஷயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சுக்கிரன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் சுக்கிர பகவானை சேரும். தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும். தேவைக்கு பணவசதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீடுகளால் சுப பலன் ஏற்படும். மேலதிகாரிகள் அதிகப் பணிச்சுமையை தரலாம்.

    சிலர் பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சொந்தங்களையும் சுற்றி இருப்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ராகு கேதுவின் மையப்புள்ளியில் ராசியும் 7ம்மிடமும் இருப்பதால் சுய ஜாதக பரிசீலினைக்குப் பிறகு திருமணம் தொடர்பான முடிவு எடுப்பது நல்லது. சிலருக்கு திருமணம் நடந்தாலும் குடும்பத்தினரின் விருப்பத்திற்காகவோ, மனதிற்கு பிடிக்காத தகுதி குறைந்த திருமணமாகவோ இருக்கும். குங்கும விநாயகர் செய்து வழிபடவும்.

    மிதுனம்

    எதிர்பார்த்த முன்னேற்றங்களால் மகிழும் வாரம். ராசி அதிபதி புதன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வார இறுதி நாளில் வெற்றி ஸ்தானம் செல்கிறார். வருமானம், பெயர், புகழ் அந்தஸ்து உயரும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும். தொழிலில் போட்டிகள் இருப்பினும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் வருமானம் உயரும். மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.

    அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும். திருமணம், வீடு, வாகனம் என சுப செலவுகளும் ஏற்படலாம். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்தி வைப்பது நல்லது. ஒரு முக்கிய கோரிக்கைக்காக குல தெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பீர்கள். பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். வில்வ அர்ச்சனை செய்து விநாயகரை வழிபடவும்.

    கடகம்

    செல்வாக்கு சொல்வாக்கு உயரும் வாரம். ராசி அதிபதி சந்திரன் ராசிக்கு 2,3.4-ம் இடங்களில் சஞ்சரிக்கிறார். வருமானம் உயர்வதால் உங்கள் செல்வாக்கு சொல்வாக்கிற்கு மதிப்பு இருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிறைந்திருக்கும் கடன் சார்ந்த பாதிப்புகள் குறையும். அடமான நகைகளை மீட்கக் தேவையான பண உதவி கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தடைபட்டிருந்த தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும்.

    வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். எதிரிகளின் கை தாழ்ந்து உங்கள் கை ஓங்கும். வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். எல்லாம் முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும் பிறரின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்தி ருப்பது நல்லது. விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்.

    சிம்மம்

    நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று கேது உடன் இணைகிறார். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். தாய்மாமன் மூலம் அனுகூலம் கிடைக்கும். வீடுமனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயங்களை சந்திக்க நேரும்.

    சேமிப்பு கரையும். பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். அஷ்டமச் சனி மற்றும் ஜென்ம கேதுவின் தாக்கம் இருப்பதால் பார்க்கும் வேலையை மாற்ற செய்ய வேண்டாம். குடும்ப நிர்வாகச் செலவு, வீண் விரயங்கள் அதிகமாகும். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சிறு தடைக்குப் பிறகு சாதகமாகும். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் வைத்தியத்தில் கட்டுப் படும். விநாயகருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடவும்.

    கன்னி

    காரிய தடைகள் நீங்கும் வாரம். ராசி அதிபதி புதன் வார இறுதி நாள் வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கிரகங்களின் கூட்டணி கன்னி ராசியினருக்கு மிகச் சாதகமாக உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் விலகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். திட்டமிட்டு செயல்படுவதால் காரிய ஜெயம் உண்டாகும்.

    நோய் பாதிப்புகள் குறைய துவங்கும்.இழுபறியான பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். பெண்கள் வேலை பார்க்கும் இடத்தை மாற்றலாம். குடும்பத்திற்கு பொன், பொருள் வாங்குவீர்கள். புத்திர பாக்கியம், வீடு, வாகன யோகம் போன்ற தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் தேடி வரும்.திருமணம் மற்றும் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். விலகிய குடும்ப உறவுகளின் புரிதல் மகிழ்ச்சி அதிகரிக்கும். விநாயகருக்கு பால் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    துலாம்

    மேன்மையான பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் புதனுடன் சேர்க்கை பெறுகிறார். இது மதன கோபால யோமாகும்.இது உங்கள் தோற்றத்தால் பிறரை ஈர்க்கும் சக்தியை கொடுக்கும். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். நீங்கள் எதிர் கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்ற மும் உறுதி. தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்யலாம். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.வீடு, வாகன, சொத்து யோகம் உணடாகும். பெண்கள் ஆவணி மாத வளர்பிறை கால கட்டத்தில் மாங்கல்யம் மாற்றுவது, தாலி பெருக்கிப் போடுவது போன்றவற்றை செய்யலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும்.லாப கேதுவின் காலம் என்பதால் விநாயகர் வழிபாடு சிறப்பான பலன் தரும்.

    விருச்சிகம்

    எண்ணியது ஈடேறும் வாரம். 10-ம் அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். உங்களை சாதாரணமாக நினைத்தவர்கள் கூட உங்களது திறமைகளை உணர்வார்கள். வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்த சிரமங்கள் சீராகும். நிம்மதியாக இருப்பீர்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு அகலும். வட்டிக்கு வட்டி கட்டிய நிலைமாறும். சொல்வாக்கால் மற்றவர்களால் மதித்திடக்கூடிய நிலையை அடைவீர்கள். வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஐந்தில் உள்ள ராகு தொழில், உத்தியோகத்தில் குறுக்கு சிந்தனையை புகுத்துவார்.

    பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டாகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் சுப. விசேஷங்கள் நடக்கும். தொலைந்த கைவிட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு தாயார் மூலம் திரண்ட சொத்து அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். தாயின் உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு.விநாயகருக்கு வஸ்திரம் சாற்றி வழிபடவும்.

    தனுசு

    நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியைத் தரும் வாரம். பாக்கிய அதிபதி சூரியன் ஆட்சி. உங்களின் கற்பனைகள் கனவுகள் நனவாகும். இளமையாக பரபரப்பாகவும், சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும்.இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுப் பெறப் போகிறீர்கள். குல தெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சொத்துக்கள், அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சுப விசே ஷங்கள் நடக்கும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.தொழி லில் சீரான முன்னேற்றம் இருக்கும். ஊர் மாற்றம், நாடு மாற்றம் வரலாம்.

    தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண வாய்ப்பு கூடி வரும். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். அரசியல் பிரமுகர்களின் பொறுப்புகள் கூடும்.மாணவர்கள் அக்கரையாக படிப்பார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று வெள்ளருக்கு மாலை அணிவித்து விநாய கரை வழிபடவும்.

    மகரம்

    தடைகள் தகர்த்து வெற்றி நடைபோடும் வாரம்.ராசிக்கு புதன் சுக்கிரன் பார்வை உள்ளது. புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனதில் புதிய தெம்பு, தைரியம் குடிபுகும். விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.உங்களை அலங்கரித்துக் கொள்வதி லும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கு வதிலும் விருப்பம் கூடும். குடும்ப உறவுகளின் செயல்களில் நன்மை இருக்கும். கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

    இதுவரை சந்தித்த பிரச்சினைகள் பனிபோல் விலகும்.துக்கத்தால் தூக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி படிப்பில் ஆர்வம் உண்டாகும். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும்.பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு கூடும் 25.8.2025 அன்று காலை 8.29 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணிச் சுமை அதிகரிக்கும். உத்தி யோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னே ற்றத்துக்கு உதவும் விநாயகர் சதுர்த்தி அன்று பால் கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபடவும்.

    கும்பம்

    எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் உண்டாகும் வாரம்.ராசியில் ராகு ஏழில் சூரியன் கேது சேர்க்கை உள்ளது.எந்த சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கூடும். நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.வெளிநாட்டு முயற்சிகள் பலன் தரும். பொருளாதார நிலையில் நல்ல நிரந்தரமான உயர்வு ஏற்படும். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.விவாகரத்து வரை சென்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும். திருமண விசயத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய வரனே சாதகமாக முடியும்.

    அதிக வேலை பளுவால் உரிய நேரத்தில் சாப்பிட முடி யாமல் அல்சர் போன்ற உடல் உபாதைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 25.8.2025 அன்று காலை 8.29 முதல் 27.8.2025 அன்று இரவு 7.21 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எல்லா விஷயத்தையும் பொறுப்புடன் பொறுமையாக கையாள வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். விநாய கருக்கு கடலை உருண்டை வைத்து வழிபடவும்.

    மீனம்

    விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியில் வக்ர சனி பகவான் சஞ்சாரம். ஒழுக்கமே உயர்த்தும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள் வேற்று மொழி கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மொழி பேசும் நண்பர்கள் கிடைப்பார்கள். பெரிய தொகையை கடனாக கொடுக்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். பெரிய முதலீடுகளை குடும்ப உறுப்பினர்களின் பெயரில் முதலீடு செய்வது நல்லது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கைகூடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்துச் சென்றால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும்.

    வாழ்க்கைத் துணையுடன் இருந்த பனிப் போர் மறையும். அரசியல்வாதிகள் மனவுமாக இருந்தால் மன நிம்மதி நிலைக்கும்.விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். 27.8.2025 அன்று இரவு 7.21 முதல் 30.8.2025 காலை 7.53 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் இடம் பொருள் ஏவல் பார்த்து நடத்த வேண்டும் யாரையும் பகைக்க கூடாது.காலத்தின் அருமை அறிந்து செயல்பட வேண்டும்.மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபட பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

    Next Story
    ×