என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • பறவைகளின் தலைவனான கருடன், விஷ்ணுவின் வாகனமாக திகழ்கிறார்.
    • கோவிலில் கருட பகவானை வணங்கிய பின்பு பெருமாளை வணங்குவதே சிறப்பாக கருதப்படுகிறது.

    1-8-2025 (இன்று) ஆடி சுவாதி

    பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார், ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதியில் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. பறவைகளின் தலைவனான கருடன், விஷ்ணுவின் வாகனமாக திகழ்கிறார்.

    கசியப முனிவருக்கு கத்ரு, வினதை என்ற இரு மனைவிகள் இருந்தனர். அதில் வினதைக்கு பிறந்தவர் தான் கருடாழ்வார். இவரது சகோதரன் அருணன். இவர் சூரிய பகவானின் தேரோட்டியாக திகழ்கிறார். கசியப முனிவரின் மற்றொரு மனைவியான கத்ருக்கு ஆயிரம் பாம்புகள் குழந்தைகளாக இருந்தனர்.

    ஒரு சமயம் வினதை, வானத்தில் வெள்ளை குதிரை பவனி செல்வதை பார்த்து, அதன் அழகை புகழ்ந்தார். அப்போது கத்ரு, அது முழுமையான வெள்ளைக் குதிரை இல்லை. அதன் வால் கருப்பு என்றாள். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் யார் சொல்வது தவறோ, அவர் மற்றவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இதையடுத்து கத்ரு தனது குழந்தைகளான ஆயிரம் பாம்புகளில் ஒருவரான கார்க்கோடகனை வெள்ளைக் குதிரையின் வாலில் சுற்றி கருப்பு நிறமாக தோன்ற செய்தாள். இதைக் கண்ட வினதை ஏமாந்து, தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். கத்ருவின் அடிமையானாள். இதையடுத்து கத்ரு, வினதைக்கு பல கொடுமைகள் செய்து வந்தாள்.

    தன் தாயின் நிலைமையை கண்டு வருந்திய கருடன், தன் தாயை விடுவிக்க எண்ணினார். அதற்காக தேவலோகத்தில் இருக்கும் அமிர்த கலசத்தை கொண்டு வந்து தன் தாயை அடிமை வாழ்வில் இருந்து மீட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

    பெருமாள் கோவில்களில் பெருமாள் சன்னிதியின் முன்பாக கருடன் வீற்றிருப்பார். கோவிலில் கருட பகவானை வணங்கிய பின்பு பெருமாளை வணங்குவதே சிறப்பாக கருதப்படுகிறது. ஆடி சுவாதி நாளில் விரதம் இருந்து கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும், மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்கும், எதிரிகளின் பயம் விலகும், வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

    • ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு.
    • இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-16 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : அஷ்டமி முழுவதும்.

    நட்சத்திரம் : சுவாதி மறுநாள் விடியற்காலை 4.51 மணி வரை. பிறகு விசாகம்.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகனுக்கு கிளி வாகன சேவை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், வெள்ளி சப்பரத்தில் பவனி. மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கிளி வாகன பவனி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் உற்சவம் ஆரம்பம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுபம்

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-ஆதாயம்

    சிம்மம்-தாமதம்

    கன்னி-விருப்பு

    துலாம்- தேர்ச்சி

    விருச்சிகம்-அலைச்சல்

    தனுசு- வெற்றி

    மகரம்-நன்மை

    கும்பம்-பணிவு

    மீனம்-பக்தி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.

    ரிஷபம்

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உடன்பிறப்புகளால் விரயம் உண்டு. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    மிதுனம்

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். வேலைப்பளுவின் காரணமாக உத்தியோகத்திலிருந்து விடுபடலாமா என்று யோசிப்பீர்கள்.

    கடகம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு கேட்ட இடத்திலிருந்து உதவி கிடைக்கும். மதிய நேரத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும்.

    சிம்மம்

    விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். உடன் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகப் பிரச்சனைக்கு அலைபேசி மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

    கன்னி

    கடன் சுமை குறையும் நாள். காரிய வெற்றி உண்டு. காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவால் புதிய வேலை கிடைக்கும்.

    துலாம்

    துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். பொருளாதார வளர்ச்சி பெருகும். தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள்.

    விருச்சிகம்

    வருமானம் திருப்தி தரும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்திலிருந்து விருப்ப ஓய்வில் வெளிவருவது பற்றி சிந்திப்பீர்கள்.

    தனுசு

    வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி கைகூடும். பழைய கடன்களை கொடுத்து மகிழும் வாய்ப்பு உண்டு.

    மகரம்

    குடும்பச் சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். கூடுதல் சம்பளத்துடன் கூடிய வேலை தேடி வரும்.

    கும்பம்

    வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி ஆதாயம் தரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

    மீனம்

    எடுத்த முயற்சியில் எண்ணற்ற தடைகள் ஏற்படும் நாள். வரவை காட்டிலும் செலவு கூடும். நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோக வாய்ப்பு கைநழுவிச் செல்லலாம்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். சொத்து பிரச்சனைகள் சுமூகமாக முடிவடையும். சொந்த பந்தங்களின் பகை மாறும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    ரிஷபம்

    நன்மைகள் நடைபெறும் நாள். நாடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். வருமானம் திருப்தி தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். தொழில் சீராக நடைபெறும்.

    மிதுனம்

    தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.

    கடகம்

    முயற்சி கைகூடும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும். பாகப் பிரிவினை சுமூகமாக முடியும்.

    சிம்மம்

    தொழில் போட்டிகள் அகலும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

    கன்னி

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். புதிய வேலைவாய்ப்பு பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    துலாம்

    காலையில் பணப் புழக்கமும், மாலையில் மனக்கலக்கமும் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் பிறர் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பாகும் சூழ்நிலை உண்டு.

    விருச்சிகம்

    புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    தனுசு

    ரொக்கத்தால் வந்த சிக்' கல்கள் அகலும் நாள். பூமிப் பிரச்சனை தீரும். புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோக மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.

    மகரம்

    தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். விரயங்கள் மேலோங்கும். உத்தியோக உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.

    கும்பம்

    மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சனைகள் உருவாகும். முயற்சியில் குறுக்கீடு உண்டு.

    மீனம்

    நிதிப்பற்றாக்குறை ஏற்படும் நாள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதையையும் தக்க வைத்துக் கொள்வது அரிது. கையிருப்புக் கரையலாம்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-15 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சப்தமி விடியற்காலை 5.49 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : சித்திரை பின்னிரவு 2.16 மணி வரை பிறகு சுவாதி

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராமர் மூலவருக்கும், ராகவேந்திர சுவாமிக்கும் குருவார திருமஞ்சன சேவை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரிஷப வாகன பவனி. மதுரை மீனாட்சி யம்மன் விருஷப சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இரக்கம்

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-அன்பு

    கடகம்-மேன்மை

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-பொறுமை

    துலாம்- செலவு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- நற்செயல்

    மகரம்-போட்டி

    கும்பம்-ஆதரவு

    மீனம்-ஜெயம்

    • பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
    • தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாக கூறுவர்.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.

    இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

    பாடல்:-

    புனை அழல் ஓம்புகை அந்தணாளர்

    பொன்னடி நாள்தோறும் போற்றிஇசைப்ப

    மனைகெழு மாடம் மலிந்தவீதி

    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

    சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த

    சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

    கனைவளர் கூர்எரி ஏந்தி ஆடும்

    கணபதி ஈச்சரம் காமுறவே.

    - திருஞானசம்பந்தர்

    விளக்கம்:-

    சிறப்பிக்கப்படும் வேள்வித் தீயை தமது கையால் உபசரிக்கும் அந்தணர்களின் திருவடியை நாள்தோறும் போற்றி, வேத கீதத்தால் வணங்கி, அத்தகையோரின் மாட மாளிகைகள் நிறைந்தது திருமருகல் திருத்தலம். இங்கு எழுந்தருளி உள்ள இறைவனே! அரும்புகள் நிறைந்த சோலைகளும், குளிர்ந்த வயல்களும் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியும் நெருப்பை திருக்கரத்தில் ஏந்தி கணபதி ஈச்சரத்தில் விரும்பி நடனம் ஆடுவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!

    • பட்டினத்தார் சொத்துக்களை அவரது சகோதரி அனுபவித்து வந்தார்.
    • பச்சை வாழை மட்டையை அடுக்கி, அதன்மேல் தாயை படுக்கவைத்து பட்டினத்தார் தீ மூட்டினார்.

    ஈசனின் அருளால் துறவியாக மாறிய பட்டினத்தார், ஆரம்ப காலங்களில் தனது சொந்த ஊரிலேயே இருந்து வந்தார். ஆனால் சொத்துக்களின் மீது பற்றில்லாமல் இருந்தார். அதனால் அந்த சொத்துக்களை அவரது சகோதரியும் அனுபவித்து வந்தார். தன் சகோதரன் மீண்டும் மனம் மாறி வந்துவிட்டால், சொத்துக்கள் பறிபோய் விடுமே என்று அச்சப்பட்ட பட்டினத்தாரின் சகோதரி, அவருக்கு அப்பத்தில் விஷத்தை தடவிக் கொடுத்தார். அனைத்தையும் அறியும் சக்தியைப் பெற்றிருந்த பட்டினத்தார், அந்த அப்பத்தை வாங்கி வீட்டின் கூரையில் சொருகி வைத்து விட்டு, ''தன் வினை தன்னைச் சுடும். ஓட்டு அப்பம் வீட்டைச் சுடும்'' என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். மறுநொடியே அந்த வீடு பற்றி எரிந்தது. இதனால் அவரது சக்தியை அனைவரும் அறிந்து கொண்டனர்.

    அதேபோல் தன் தாயிடம், ''அம்மா.. நீங்கள் இறந்ததும் உங்களுடைய இறுதிச்சடங்கை செய்ய கண்டிப்பாக வருவேன்'' என்று வாக்குறுதி அளித்திருந்தார், பட்டினத்தார். அதன்படி தாய் இறந்த செய்தி கேட்டதும், அங்கு விரைந்துசென்றார், பட்டினத்தார். அவர் வருவதற்குள் இறுதிச்சடங்கை முடித்துவிட வேண்டும் என்று அவரது உறவினர்கள் அனைவரும் சிதையை மூட்டும் வேலையில் அவசரம் அவசரமாக ஈடுபட்டனர். கொள்ளி வைக்கப்போகும் தருணத்தில் அங்கு வந்து விட்ட பட்டினத்தார், சிதை மூட்டுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு, பச்சை வாழை மட்டையை அடுக்கி, அதன்மேல் தாயை படுக்கவைத்து தீ மூட்டினார். அவரது சக்தியின் காரணமாக அந்த பச்சை வாழை மட்டைகள் மளமளவென்று எரிந்தன. ஊராரும் உறவினர்களும் வாயடைத்து போய் நின்றனர். ஆனால் அவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் அங்கிருந்து அகன்றுவிட்டார், பட்டினத்தார்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பாடு பட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

    ரிஷபம்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் மகிழ்ச்சி தரும்.

    மிதுனம்

    சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் இடையூறு வரலாம்.

    கடகம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

    சிம்மம்

    நேற்றைய பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். குடும்பப் பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    கன்னி

    எதிரிகள் விலகும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். உடன்பணிபுரிவர்களுடன் உற்சாகப் பயணம் உண்டு.

    துலாம்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வீண்பழிகள் அகலும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.

    விருச்சிகம்

    திருப்தி வருமானம் தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    தனுசு

    உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் மூலம் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

    மகரம்

    புதிய பாதை புலப்படும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். மருத்துவ செலவுகள் உருவாகலாம். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

    கும்பம்

    எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் முடிவடையாது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    மீனம்

    யோகமான நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். அன்னிய தேசத்தில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-14 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சஷ்டி பின்னிரவு 3.59 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : அஸ்தம் இரவு 11.52 மணி வரை பிறகு சித்திரை

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சஷ்டி விரதம், மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை

    இன்று சஷ்டி விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை.

    பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டைஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சன சேவை. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கண்ணியம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-சுபம்

    கடகம்-நன்மை

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-தேர்ச்சி

    துலாம்- நலம்

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- ஆதாயம்

    மகரம்-பரிவு

    கும்பம்-சாந்தம்

    மீனம்-மேன்மை

    • திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி.
    • திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இந்த வார விசேஷங்கள்

    29-ந் தேதி (செவ்வாய்)

    * நயினார்கோவில் சவுந்திரநாயகி தபசுக் காட்சி.

    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

    * நாகப்பட்டினம் நீலாய தாட்சியம்மன் ஊஞ்சல் உற்சவம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    30-ந் தேதி (புதன்)

    * சஷ்டி விரதம்.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி.

    * நயினார்கோவில் சவுந்திரநாயகி மின் விளக்கு தீப அலங்கார ரதத்தில் திருமண கோலத்துடன் பவனி.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேகவல்லியம்மன் தலங்களில் திருக்கல்யாண வைபவம்.

    * சமநோக்கு நாள்.

    31-ந் தேதி (வியாழன்)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

    * மதுரை கள்ளழகர் ஆடி உற்சவம் ஆரம்பம்.

    * மதுரை மீனாட்சி அம்மன் விருட்சப சேவை.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    1-ந் தேதி (வெள்ளி)

    * திருச்செந்தார் சுப்பிரமணியர் கோவிலில் சேரமான்பெருமாள் கைலாசம் போகுதல்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் ஊஞ்சல் சேவை.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் விழா தொடக்கம்.

    * சமநோக்கு நாள்.

    2-ந் தேதி (சனி)

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கிருஷ்ணாவதாரம்.

    * ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் மஞ்சள் நீராட்டு விழா.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.

    * வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.

    * கீழ்நோக்கு நாள்.

    3-ந் தேதி (ஞாயிறு)

    * ஆடிப்பெருக்கு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் பூம்பல்லக்கில் பவனி.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராமவதாரக் காட்சி.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    4-ந் தேதி (திங்கள்)

    * மதுரை மீனாட்சி அம்மன் காலை சட்டத் தேரிலும், இரவு புஷ்பக விமானக்கிலும் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    • பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.
    • புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.

    அமாவாசைக்கு ஐந்தாம் நாளான பஞ்சமி திதியான அன்று கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகிறது.

    எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும். மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். கருடன், மகா பலம் உடையவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் தலங்களில் 'பெரிய திருவடி' என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

    மகா விஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதி சேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் வழிபட சிறந்த நாள் நாக/கருட பஞ்சமி. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.

    அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். நெய்வேத்தியமாக பால் கொழுக்கட்டை, பால் பாயாசம் செய்து வழிபடலாம். அம்பிகையின் ஸ்தோத்திரங்கள், அபிராமி அந்தாதி பாடி வழிபட வேண்டும்.

    கருட பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.

    நாக தோஷத்தை நீக்கக்கூடிய நாளாக நாக சதுர்த்தி, கருட பஞ்சமி அமைகிறது. மீள முடியாத வினைப்பயனில் இருந்து விடுபட சர்ப்ப வழிபாட்டையும், கருட வழிபாட்டையும் ஜோதிட முன்னோடிகள் வலியுறுத்துகின்றனர். சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் இன்னல்களை நீக்கும் வலிமை கருட பகவானுக்கு உண்டு.

    கருட பஞ்சமியன்று அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவானையும் பெருமாளையும் வழிபட்டு வர நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    • சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-13 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பஞ்சமி பின்னிரவு 2.29 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம் : உத்திரம் இரவு 9.47 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். நயினார்கோவில் அன்னை ஸ்ரீ சவுந்திர நாயகி சுபசுக்காட்சி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீகுமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உதவி

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-உயர்வு

    கடகம்-ஆசை

    சிம்மம்-இன்பம்

    கன்னி-உவகை

    துலாம்- ஈகை

    விருச்சிகம்-நிறைவு

    தனுசு- கடமை

    மகரம்-களிப்பு

    கும்பம்-மேன்மை

    மீனம்-முயற்சி

    ×