என் மலர்tooltip icon

    நவராத்திரி ஸ்பெஷல்

    நவராத்திரி 3-ம் நாள்: சகல செல்வங்களும் பெற பக்தர்கள் அணிய வேண்டிய நிறம்...
    X

    நவராத்திரி 3-ம் நாள்: சகல செல்வங்களும் பெற பக்தர்கள் அணிய வேண்டிய நிறம்...

    • முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை.
    • வாழ்க்கையில் சங்கடங்கள் நீங்கி, வெற்றி வாய்ப்புகள் பெருகும் என்பது ஐதீகம்.

    புரட்டாசி மாதம் ஒரு புனிதமான மாதமாகும். கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் இம்மாதத்தில் பெண் தெய்வத்தை வழிபாட்டால் பெருமை சேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே சக்தி வழிபாட்டால் சஞ்சலம் தீர்க்கும் மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி விழாவை கொண்டாடினால் நலம் யாவும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

    ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான சிவன், பிரம்மா, விஷ்ணுவின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை பூமாலை சூடியும், பாமாலை பாடியும் வழிபட்டால் பிரச்சனைகள் அகலும். பொருள் செல்வம் கூடும். வாழ்க்கையில் சங்கடங்கள் நீங்கி, வெற்றி வாய்ப்புகள் பெருகும் என்பது ஐதீகம். அந்த அடிப்படையில் உருவானதுதான் நவராத்திரி விழா.

    இந்த நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை. ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும்.

    எனவே தான் 'வீரம்' தரும் துர்கா தேவியை முதல் மூன்று நாட்களும், 'செல்வம்' தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், 'கல்விச் செல்வம்' தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவ்வாறு வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.

    இதனை தொடர்ந்து இல்லங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள்.

    நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று திரிதியை திதியில் வரும் புதன்கிழமையான இன்று அசுரர்களை அழித்த சந்திரகாந்தா தேவிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் ராயல் ப்ளூ நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஏனெனில் இந்நிறம் அமைதியை பிரதிபலிக்கிறது. ராயல் ப்ளூ நிறத்திலான பொருட்களை கொண்டு பூஜை அறையை அலங்கரிக்கலாம்.

    இந்நாளில் வீரியம், துணிவு, கருணை என பன்முகம் கொண்ட சந்திரகாந்தா தேவிக்கு பிடித்தமான வெள்ளை தாமரை மற்றும் மஞ்சள் நிற ரோஜாக்களை சமர்பித்து வழிபட்டு சகல செல்வங்களும் பெறுவோமாக!

    Next Story
    ×