என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
    • ரஷியாவிடம் இருந்து சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளும் எண்ணெய் வாங்கும் போது இந்தியாவுக்கு மட்டும் வரி ஏன்?

    ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

    இந்நிலையில் இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் இடம், ரஷியாவிடம் இருந்து சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளும் எண்ணெய் வாங்கும் போது இந்தியாவுக்கு மட்டும் வரி ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த டிரம்ப், "சில மணி நேரம்தான் ஆகியுள்ளது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள். இரண்டாம் கட்ட தடைகளையும் பார்க்கப் போகிறீர்கள்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக சீனா மீது இரண்டாம் கட்ட வரிகளை அறிவிக்க போவதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே அமெரிக்காவின் நடவடிக்கைகள் இந்தியா, சீனா, ரஷியாவை ஓரணியில் நிறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 31 மோடியின் சீனா பயணமும், விரைவில் புதின் இந்தியா வரவிருப்பதும் இதற்கு அச்சாரம் ஆகும். 

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தார் டிரம்ப்.
    • ஆனால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஜூலை இறுதி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தார். இந்தக் காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அந்தந்த நாட்டில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என வலியுறுத்திருந்தார்.

    அமெரிக்கா- இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதலாக வரி விதிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதன்மூலம் இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    • நான் மீண்டும் சொல்கிறேன். அமெரிக்காவிற்கு இந்தியா தேவை, இந்தியாவிற்கு அமெரிக்கா தேவை.
    • இரு நாடுகளும் உண்மையான நண்பர்களாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்கா-இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    இந்நிலையில், இந்தியாவு, அமெரிக்காவும் நண்பர்களாக பேசுங்கள் என அமெரிக்க பாடகி மேரி மில்பென் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, மில்பென் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள பல சிறு வணிகங்களும் கட்டண இழுபறியில் பாதிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் உண்மையான நண்பர்களாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    நான் மீண்டும் சொல்கிறேன். அமெரிக்காவிற்கு இந்தியா தேவை, இந்தியாவிற்கு அமெரிக்கா தேவை. நமது மூலோபாய கூட்டணியை சீர்குலைக்கும் எந்தவொரு கொள்கை திசையும் தவறான திசையாகும். தடிமனான வார்த்தைப் பரிமாற்றம் நம் அனைவரையும் தொந்தரவு செய்கிறது என பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே மேரி மில்பென், இந்தியா- அமெரிக்கா உறவுக்கு மிகச்சிறந்த தலைவர் பிரதமர் மோடி என புகழாரம் சூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய டிரம்ப் ஆட்சேபனை.
    • அமெரிக்கா யுரேனியம் இறக்குமதி செய்கிறதே? என்ற கேள்விக்கு, அது பற்றி தெரியாது என நழுவல்.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் 3 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் புதின் போரை நிறுத்த விரும்பவில்லை.

    இதனால் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளிடம், எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்து வருகிறார். அப்படி வாங்கினால் அந்த நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.

    அனால் இந்தியா மற்றும் சீனா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன. இந்தியா அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது.

    இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்த டிரம்ப், கூடுதலாக கணிசமான வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இன்று வெளியாகலாம்.

    இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம், மற்ற நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என வலியுறத்துகிறீர்கள். ஆனால் அமெரிக்கா யுரேனியம், உரங்களை ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறதே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு டொனால்டு டிரம்ப் "அது பற்றி ஏதும் எனக்குத் தெரியாது. அதை நான் சரிபார்க்க வேண்டும்" எனத் பதில் அளித்தார்.

    • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது.
    • பாதுகாப்பான, தடையற்ற, வரலாற்றி வெற்றி மிக்க தொடராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்- டிரம்ப்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு தற்போதில் இருந்தே தயாராகுவதற்காக பணிக்குழுவை அமைத்துள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப். இந்த குழுவின் பணி என்ன? என்பதை முழுமையாக வெள்ளை மாளிகை வெளியிடவில்லை.

    "பாதுகாப்பான, தடையில்லாத, வரலாற்று வெற்றி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் அமெரிக்காவிற்கு ஒரு அற்புதமான தருணமாக உருவாகி வருகிறது. இது நம்பமுடியாததாக இருக்கும். இது மிகவும் உற்சாகமாக இருக்கிறது" என டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    2002ஆம் ஆண்டு அமெரிக்கா குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. அதன்பின் 2028 லாஞ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியை நடத்த இருக்கிறது.

    இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட சில போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

    • நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
    • விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாக விபத்து ஏற்பட்டு, தீப்பற்றி எரிந்தது.

    அமெரிக்காவின் வடக்கு அரிசோனாவில் உள்ள நவஜோ நேசனில் மருத்துவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளாகி, தீப்பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மருத்துவமனையை சேர்ந்தவர்கள், நோயாளி ஒருவரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    பீச்கிராஃப் 300 வகையைச் சேர்ந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானது. அப்போது எதிர்பாராத வகையில் விமானம் விபத்துக்குள்ளானது.

    "விபத்து குறித்து அறிந்ததும் மனம் உடைந்தேன். இவர்கள் (மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள்) மற்றவர்களைக் காப்பாற்ற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்" என நவஜோ நேசன் தலைவர் தெரிவித்துள்ளார்.

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தார் டிரம்ப்.
    • ஆனால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஜூலை இறுதி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தார். இந்தக் காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அந்தந்த நாட்டில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என வலியுறுத்திருந்தார்.

    அமெரிக்கா- இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    இதற்கிடையே, அதிபர் டிரம்ப் கூறுகையில், இந்தியா ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து, அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு கவலை இல்லை. இதனால் இந்தியாவுக்கு எதிரான வரிவிதிப்பை கணிசமாக உயர்த்தவுள்ளேன் என்றார்.

    இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • பின்னணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வரவேற்பாளர் குரல் ஒலிக்கிறது.
    • வைரலான வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு துறைகளிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. அதே போல மனிதர்கள் செய்யும் வேலைகளை டிஜிட்டல் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் எளிதாக செய்ய முடிகிறது.

    இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் மெய்நிகர் வரவேற்பாளராக செயல்படும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஓட்டல் மியாமி மாநிலத்தில் அமைந்துள்ளது. அங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தொலைதூரத்தில் இருந்து ஓட்டல் வரவேற்பறையில் உள்ள மேஜையில் டிஜிட்டல் திரை வழியாக இயக்குகிறார். ஓட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு செக்-இன் செயல் முறையில் உதவுகிறார்.

    அப்போது பின்னணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வரவேற்பாளர் குரல் ஒலிக்கிறது. திரையில் அவர் விருந்தினர்கள் முன்பு பேசி அவர்களுக்கு ஓட்டலின் விதிகளை கூறி வாடிக்கையாளர்களுக்கு அறைக்கு செல்ல வழிகாட்டுவது போன்று காட்சிகள் உள்ளது. வைரலான வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், மக்கள் இந்த இடங்களை புறக்கணிக்க வேண்டும். இதனால் பலர் வேலைகள் இழக்க நேரிடும் என பதிவிட்டனர். அதே நேரம் சிலர் இந்த முயற்சியை பாராட்டினர்.



    • இந்தியா ரஷியாவிடம் இருந்து ரஷியா பணத்திற்கு அதிக அளவில் கச்சாய் எண்ணெய் மட்டும் வாங்கவில்லை.
    • அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்து, அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஜூலை இறுதி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தார். இந்த காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அந்தந்த நாட்டில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என வலியுறுத்திருந்தார்.

    அமெரிக்கா- இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தது.

    ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. இந்த நிலையில், இந்தியா ரஷியாவிடம் இருந்து ரஷியா பணத்திற்கு அதிக அளவில் கச்சாய் எண்ணெய் மட்டும் வாங்கவில்லை. அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்து, அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.

    ரஷியா தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு கவலை இல்லை. இதன் காரணமாக நான் இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்பை கணிசமான அளவில் உயர்த்த இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் தொடர்ந்து சொல்லி வருகிறார்.
    • டிரம்பின் பெயரை குறிப்பிடாமல் இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது.

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய படைகள் தாக்கி அழித்தது. இந்த போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால் இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது.

    இந்நிலையில் மீண்டும் அவர் இதே கருத்தை கூறி உள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தன்னுடைய ட்ரூத் எனப்படும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "உலகளவில் 5 போர்களை நான் நிறுத்தி உள்ளேன்.மே மாதம் 10-ந்தேதி நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் உடனடியாக போரை நிறுத்த ஒப்புக்கொண்டது. உலகளவில் ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு போரை நான் முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரியும் நாங்கள் மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம். இதில் 31 ஆண்டுகளாக நீடித்து வரும் காங்கோ-ருவாண்டோ நாடுகளுக்கு இடையேயான போரும் உள்ளடக்கம். நான் நிறைய போர்களை தீர்த்து வைத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் சமீபத்தில்கூறும் போது உலகெங்கிலும் பல மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும். தாய்லாந்து-கம்போடியா, இஸ்ரேல்-ரஷியா, காங்கோ ஜனநாயக குடியரசு-ருவாண்டோ, இந்தியா-பாகிஸ்தான், செர்பியா-கொசோவா, எகிப்து-எத்தியோப்பியா நாடுகளின் மோதலை டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் 4 இந்தியர்கள் மாயமானதாக தேடப்பட்டு வந்தனர்.
    • அந்த 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து பென்சில்வேனியா சென்ற இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயமாகினர். உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களைக் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    விசாரணையில், காணாமல் போன 4 இந்தியர்களும் ஜூலை 29-ம் தேதி பென்சில்வேனியாவில் உள்ள ஒரு கடைக்குச் சென்றதும், அதன்பின் அவர்கள் மாயமானதும் தெரிய வந்தது.

    காணாமல் போனவர்கள் டாக்டர் கிஷோர் திவான் (89), ஆஷா திவான் (85), ஷைலேஷ் திவான் (86), கீதா திவான் (84) ஆகியோர் என தெரியவந்தது. ஹெலிகாப்டர் மூலம் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது.

    இந்நிலையில், காணாமல் போன 4 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மேற்கு விர்ஜினியா நகர ஷெரிப் விசாரணை முடிந்த பிறகு கூடுதல் தகவல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

    • ஜார்ஜின் மொபைல் போன் காரில் கீழே விழுந்தது.
    • மொத்தம் 329 மில்லியன் டாலர்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் பெரும் தொகையை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டு புளோரிடாவின் கீ லார்கோவில் ஜார்ஜ் மெக்கீ என்ற நபர் தனது டெஸ்லா காரை ஓட்டிச் சென்று அதிநவீன ஆட்டோபைலட் அம்சத்தைப் பயன்படுத்தினார்.

    இது டெஸ்லா வழங்கிய தானியங்கி ஓட்டுநர் அமைப்பு. வழியில், ஜார்ஜின் மொபைல் போன் காரில் கீழே விழுந்தது. கார் ஆட்டோபைலட்டில் இருப்பதாக நினைத்து, ஜார்ஜ் குனிந்து தொலைபேசியை எடுக்க முயன்றார்.

    இருப்பினும், அந்த நேரத்தில், கார் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் மோதி, இரண்டு பேர் மீது மோதியது.

    இந்த சம்பவத்தில், 22 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது நண்பர் படுகாயமடைந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர்.

    நீண்ட விசாரணைக்குப் பிறகு, சமீபத்தில் புளோரிடா நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது.

    இந்த விபத்துக்கான இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் 329 மில்லியன் டாலர்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், விபத்துக்கு ஆட்டோபைலட் அமைப்பும் ஒரு காரணியாக இருப்பதைக் கண்டறிந்த நீதிமன்றம், டெஸ்லா நிறுவனம் தன் பங்குக்கு 242 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,996 கோடி) வழங்க உத்தரவிட்டது. மீதமுள்ள தொகையை வாகனத்தின் ஓட்டுநர் செலுத்த வேண்டும்.

    இருப்பினும், புளோரிடா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெஸ்லா மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது.  

    ×