என் மலர்
அமெரிக்கா
- ஜி-20 தலைவர்களின் பிரகடனம், ஆலோசனை மூலம் எட்டப்பட்ட ஒருமித்த முடிவாகும்.
- உச்சி மாநாடு புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை தீர்ப்பதற்கான இடமில்லை.
வாஷிங்டன்:
ஜி-20 உச்சி மாநாடு, டெல்லியில் கடந்த 9, 10-ந்தேதிகளில் நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். ரஷிய அதிபர் புதின், சீனா அதிபர் ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கவில்லை.
ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் நடந்த ஜி-20 உச்சி மாநாடு வெற்றிக்கு இந்தியாவை அமெரிக்கா, சீனா பாராட்டி உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, ஜி-20 ஒரு பெரிய அமைப்பு. பல்வேறு கருத்துக்களை கொண்ட உறுப்பினர்கள் உள்ளனர். டெல்லியில் நடந்த உச்சி மாநாடு ஒரு வெற்றி என்று நாங்கள் முற்றிலும் நம்புகிறோம். இதில் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ ஜிங் கூறும்போது, ஜி-20 மாநாட்டு பிரகடனத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கொண்டது நேர்மறை தகவல்களை அனுப்புகிறது. வளரும் நாடுகளின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், ஒருமித்த முடிவுகளை அடைய வேண்டும் என்பதிலும் சீனா எப்போதும் ஆதரவை அளித்தே வருகிறது.
ஜி-20 தலைவர்களின் பிரகடனம், ஆலோசனை மூலம் எட்டப்பட்ட ஒருமித்த முடிவாகும். டெல்லி உச்சி மாநாடு, ஜி-20 சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்காக முதன்மை மன்றமாக இருக்கிறது.
இந்த உச்சி மாநாடு புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை தீர்ப்பதற்கான இடமில்லை. உக்ரைன் போர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
- கைதிகள் பரபஸ்பர விடுதலைக்கு இரு நாடுகளும் சம்மதம்
- 6 பில்லியன் டாலர் பணப்பரிமாற்றம் மனிதாபிமான பொருட்களை கொள்முதல் செய்ய உதவும்
ஈரானில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் அமெரிக்காவும் ஈரானியர்களை சிறைபிடித்துள்ளது. இவ்வாறு சிறை பிடிக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா- ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஈரானில் உள்ள ஐந்து அமெரிக்கர்கள் சிறையில் இருநது விடுதலை செய்யப்படுவார்கள். அதேபோல் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரை அமெரிக்கா விடுதலை செய்ய இருக்கிறது.
மேலும், தென்கொரியாவில் இருந்து கத்தாருக்கு 6 பில்லியன் அமெரிக்க டாலரை மாற்றம் செய்யவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்டன் கடந்த வாரமே கையெழுத்திட்ட நிலையில், நேற்றுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க துருப்புகள் மற்றம் அவற்றின் துணை நாடு துருப்புகளை ஈரான் மத்திய கிழக்கு கடற்கரை பகுதியில் அச்சுறுத்தி வரும் நிலையில், ஈரானின் பொருளாதாரத்திற்கு இது கூடுதல் உதவியாக இருக்கும் என எதிர்க்கட்சி ஜோ பைடன் அரசை விமர்சிக்கும என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தென்கொரியா- கத்தார் மத்திய வங்கி பண பரிமாற்ற அனுமதி ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசிய வங்கிகள் தொடர்பான அமெரிக்காவின் தடையை மீறியதாகாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மனிதாபிமான பொருட்களை கொள்முதல் செய்வதற்கு இது உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
- தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்
- ஜோ பைடன், ஜில் பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு
2001ல் செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் புகழ் பெற்ற உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களின் மீதும், அமெரிக்க ராணுவ தலைமையகம் இருக்கும் பென்டகன் கட்டிடம் மீதும், கடத்தப்பட்ட விமானங்களை கொண்டு பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். மேலும் வேவ்வேறு இடங்களில் இரு தாக்குதல்களை பயங்கரவாதிகள் நிறைவேற்றும் முன்பாக அவை முறியடிக்கப்பட்டது.
9/11 தாக்குதல் எனப்படும் இந்த நாச வேலையினால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் நினைவு தினம் இன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள ஆன்கரேஜ் (Anchorage) எனும் இடத்தில் இது தொடர்பாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு வியட்னாம் நாட்டிற்கு சென்ற அவர், திரும்பி வரும் போது இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் கூச்லேண்ட் கவுன்டி எனும் இடத்தில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் ஆகிய இடங்களில் நடந்த தாக்குதலுக்கு பிறகு எஞ்சியிருந்த எக்கு தகடுகளை கொண்டு அத்தாக்குதலில் உயிரிழந்தோருக்கு 2013ல் ஒரு நினைவில்லம் அமைக்கப்பட்டது. இங்கு 2 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 25 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த கவுன்டி பகுதியில் பேரிடர் மற்றும் ஆபத்தான நேரங்களில் உதவிக்கு விரைந்து வரும் வீரர்களுக்கு காலையிலும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மாலையிலும் அவர்களை நினைவு கூறும் விதமாக நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மவுன அஞ்சலி, மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலம் உட்பட பல நிகழ்ச்சிகள் அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
மற்றொரு அமெரிக்க மாநிலமான இண்டியானாவில் உள்ள கொலம்பஸ் பகுதியில் அமெரிக்காவின் அவசர மற்றும் ஆபத்து காலசேவை பணியாளர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் அவசர மருத்துவ சேவை பணியாளர்கள் (EMS) ஆகியோருக்கு நன்றி கூறி அவர்களை நினைவுகூறும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
ஆண்கள் மற்றும் பெண்கள் சாரணர் படையினர் மிசோரி மாநில ஃபெண்டன் பகுதியில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சியில் 9/11 தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் தரைமட்டமான உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்களின் நிலப்பகுதி, கிரவுண்ட் ஜீரோ (Ground Zero) என அழைக்கப்படும். இங்கு அமெரிக்க துணை அதிபர் பங்கு பெறும் நிகழ்ச்சியில் மேடையில் அத்தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக படிக்கப்படும்.
முதல் பெண்மணி என அழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் பென்டகனில் உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடந்தது.
இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷிய வீரர் மெத்வதேவுடன் மோதினார்.
ஆரம்பம் முதலே ஜோகோவிச் அதிரடியாக ஆடினார். முதல் செட்டை 6-3 என ஜோகோவிச் எளிதில் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் மெத்வதேவ் பதிலடி கொடுக்கும் விதமாக ஆடினார். இதனால் ஜோகோவிச் 7-6 (7-5) என போராடி கைப்பற்றினார். மூன்றாவது செட்டை ஜோகோவிச் 6-3 என வென்றார்.
இறுதியில், ஜோகோவிச் 6-3, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இது ஜோகோவிச்சின் 24வது கிராண்ட்சிலாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
- அலிஸா மெக்காமன் 2 குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது
- பல குழந்தைகளுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார்
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலம் டென்னிசி. இதன் தலைநகரம் நாஷ்வில்.
டென்னிசி மாநில டிப்டன் கவுன்டி பகுதியை சேர்ந்த கோவிங்டன் நகரத்தில் உள்ளது சார்ஜர் அகாடமி எனும் தொடக்கப்பள்ளி. இங்கு 4-வது வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியையாக பணியாற்றியவர் 38 வயதான அலிஸா மெக்காமன் (Alissa McCommon). இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
2021-ல் இவர் தன்னிடம் படித்த ஒரு 12-வயது முன்னாள் மாணவரிடம் தனது வீட்டில் பாலியல் அத்துமீறல் புரிந்தார். இது மட்டுமின்றி பல மாணவர்களிடம் தகாத பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார்.
இது தெரிய வந்ததும் அந்த மாணவரின் பெற்றோர் பள்ளியில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து இவர் பள்ளியில் இருந்து ஊதியமின்றி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
சில நாட்களுக்கு பிறகு இக்குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த காவல்துறையினர் குற்றச்சாட்டு உண்மை என கண்டறிந்து வழக்கு பதிவு செய்து அலிஸாவை அவரது வீட்டில் கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் பல மாணவர்களுடன் தகாத பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதை அவர் ஒப்பு கொண்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
அந்த ஆசிரியை இவ்வாறு முறைகேடான உரையாடல்களில் ஈடுபட்டதாகவும், பல குழந்தைகளுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பியதாகவும், முறையற்ற உறவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் தற்போது பல குழந்தைகள் புகாரளித்துள்ளனர்.
இதனையடுத்து சுமார் ரூ.20 லட்சம் ($25,000) பிணையில் வெளிவரும் வகையில் காவலில் அடைக்கப்பட்டார். ஆனால் அலிஸா இக்குற்றச்சாட்டுகளை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுடன் காவல்துறை பேசி விவரங்களை சேகரித்து வருகிறது.
அலிஸா பணியிலிருந்து நீக்கப்பட்ட அன்றே பள்ளி நிர்வாகம் அவர் மீது காவல்துறையில் புகாரளித்து அப்போதே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என சில பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அக்டோபர் 13 அன்று அலிஸா அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடந்தது.
- இந்த இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் வென்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகா காப்புடன் மோதினார்.
இதில் முதல் செட்டை சபலென்கா 6-2 என வென்றார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட கோகோ காப் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டி நடைபெற்றது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன.
இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்க இளம் வீரர் பென் ஷெல்டனுடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி தோற்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடந்தது.
இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ராஜீவ் ராம், ஜோ சாலிஸ்பெரி ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி முதல் செட்டை 6-2 என கைப்பற்றியது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அமெரிக்க
ஜோடி அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றியது.
இறுதியில், அமெரிக்க ஜோடி 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
13 ஆண்டுக்குப் பிறகு ரோகன் போபண்ணா அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
- இரு நாடுகளிடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் என்றார்.
வாஷிங்டன்:
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா நிச்சயம் ஆதரவளிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
- இன்று ந்டந்த அரையிறுதி போட்டிகளில் சபலென்கா, கோகோ காப் வென்றனர்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா, கோகோ காப் மோதுகின்றனர்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்கொண்டார்
இதில் 0-6 என முதல் செட்டை இழந்த சபலென்கா, அடுத்த இரு செட்களில் 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதேபோல், மற்றொரு அரையிறுதியில், அமெரிக்காவின் கோகா காப், கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார்.
இதில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோகா காப் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா, கோகோ காப் மோதுகின்றனர்.
- ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடைபெறுகிறது.
- ஸ்டார்லின்க் நிறுவனம் உக்ரைனுக்கு இணைய சேவையை வழங்க துவங்கியது.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ரஷிய கடற்படை தளத்தை உக்ரைன் தாக்காமல் இருக்க நான் தான் காரணம் என்று தெரிவித்து இருக்கிறார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மாஸ்கோ அருகில் உள்ள கருங்கடல் பகுதியில் இணைய வசதியை செயல்படுத்துமாறு உக்ரைன் சார்பில் தனக்கு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். எனினும், இதன் விளைவை கருத்தில் கொண்டு இணைய வசதியை செயல்படுத்தவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போர் துவங்கிய குறுகிய காலக்கட்டத்திலேயே எலான் மஸ்க்-இன் ஸ்டார்லின்க் எனும் செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவை வழங்கும் நிறுவனம் உக்ரைனுக்கு இணைய சேவையை வழங்க துவங்கியது.
"செவஸ்டாபோல் வரை ஸ்டார்லின்க் சேவையை செயல்படுத்துமாறு அரசு அதிகாரிகளிடம் இருந்து அவசர கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ரஷியாவின் கடற்படை தளத்தை முழுமையாக மூழ்க செய்வது தான். நான் அவர்களின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டு இருந்தால், போரில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட ஸ்பேஸ்-எக்ஸ் முக்கிய காரணமாக மாறி இருக்கும்," என்று எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.
- அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி குறிப்பிடப்பட்டிருந்தது.
- இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
நியூயார்க்:
டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி மாளிகையின் சார்பில் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக்கிடம் இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றுவதை ஐ.நா. ஏற்குமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பர்ஹான் ஹக், ''கடந்த ஆண்டு துருக்கி நாட்டின் பெயரை துருக்கியே என மாற்றுவதற்கு அந்த நாட்டின் அரசாங்கத்தால் எங்களுக்கு வழங்கப்பட்ட முறையான கோரிக்கைக்கு நாங்கள் பதிலளித்தோம். அதுபோலவே இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்" என்றார்.






