என் மலர்
அமெரிக்கா
- ஜான் லான்டௌ உயிரிழப்பை அவரது மகன் உறுதிப்படுத்தினார்.
- இவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால நண்பர் ஆவார்.
உலகளவில் புகழ்பெற்ற திரைப்படங்களான டைட்டானிக் மற்றும் அவதார் உள்ளிட்டவைகளை தயாரித்த தயாரிப்பாளர் ஜான் லான்டௌ (63) உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகன் ஜேமி லான்டௌ உறுதிப்படுத்தினார்.
இவரது உயிரிழப்புக்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இவர் கடந்த வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் உயிரிழந்துள்ளார். இவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால நண்பரும், தயாரிப்பாளரும் ஆவார்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லான்டௌ முதல் முறையாக ஜேம்ஸ் கேமரூனுடன் பணியாற்றுவது பற்றி பேசினார். அப்போது அவர் கூறும் போது, "ஜிம் கொஞ்சம் சந்தேக குணம் கொண்டவர் என்று நினைக்கிறேன். இதனால், நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்," என்றார்.
ஜூலை 23, 1960 ஆண்டு நியூ யார்க்கில் பிறந்தவர் ஜான் லான்டௌ. இவரது பெற்றோர் எலி லான்டௌ மற்றும் எடி லான்டௌ அமெரிக்க ஃபிலிம் தியேட்டரை துவங்கி படங்களை தயாரித்து வந்தனர். இவர் பாராமௌன்ட் உடன் இணைந்து கேம்பஸ் மேன் படத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ஆனார்.
இதைத் தொடர்ந்து இவர் டிஸ்னியுடன் இரண்டு படங்களை இணைந்து தயாரித்துள்ளார். இவர் கடைசியாக அவதார் படத்தின் அடுத்த பாகங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வந்தார்.
- விசாரணையின் போது மிச்செல் கூறிய காரணம் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியது.
- வழக்கு பதிவு செய்து மிச்செல்லை விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள லெபனாவை சேர்ந்த 47 வயதான மிச்செல் என்பவரின் கணவர் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக மனைவி மீது போலீசில் புகாரளித்ததுள்ளார்.
மிச்செல் தனது கணவர் குடிக்க வைத்திருந்த சோடாவில் பூச்சிக்கொல்லி மருத்தை கலந்து குடிக்க வைத்துள்ளார். மிச்செல் கணவர் அந்த சோடாவை குடிக்க ஆரம்பித்தார். வித்தியாசமான சுவையை அலட்சியப்படுத்திவிட்டு சோடாவைக் குடித்துக்கொண்டே இருந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் தொண்டை புண், குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிசிடிவி கேமிரா பதிவுகளை சோதனை செய்த போது மிச்செல் அவர் குடிக்க வைத்திருந்த சோடாவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலப்பது போல் காட்சிகள் பதிவாகி இருந்ததை பார்த்து அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மிச்செல் கைது செய்யப்பட்டார்.
சிசிடிவி கேமிரா பதிவை சோதனை செய்த போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.
விசாரணையின் போது மிச்செல் கூறிய காரணம் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியது.
மிச்செல் தனது கணவருக்கும் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். தான் பிறந்தநாளுக்கு பார்ட்டி கொடுத்ததை குறித்து தனது கணவர் பாராட்டவில்லை ஆகவே கொலை செய்ய முடிவு எடுத்தேன் என்று கூறியுள்ளார்.
அதையடுத்து வழக்கு பதிவு செய்து மிச்செல்லை விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் குருட்டுகுலம் அப்பெண்ணின் உடல்நிலையை சோதித்தார்.
- மயக்கமடைந்த பெண் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியோடு, அவருடைய இதயத்துடிப்பைச் சோதனை செய்தார்.
டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில், மயக்கமடைந்த பயணியை ஆப்பிள் வாட்ச் உதவியுடன் மருத்துவர் காப்பற்றிய சம்பவம் நடந்துள்ளது.
ஜூலை 2 ஆம் தேதி பறந்து கொண்டிருந்த விமானத்தில் 56 வயதான பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல், மயக்கமடைந்துள்ளார்.
அதே விமானத்தில் பயணம் செய்த, கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் குருட்டுகுலம் அப்பெண்ணின் உடல்நிலையை சோதித்தார்.
அப்போது அவரிடம் எந்த மருத்துவ உபகரணமும் இல்லாததால், மயக்கமடைந்த பெண் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியோடு, அவருடைய இதயத்துடிப்பைச் சோதனை செய்தார். மேலும் எலக்ட்ரோ கார்டியோகிராம் சோதனையையும் செய்தார்.
அப்போது அப்பெண்ணின் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததையும், ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததையும் அவர் கண்டுபிடித்தார். பின்னர் விமானத்தில் இருந்த மருந்துகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினார்.
விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மருத்துவர்கள் மருத்துவருக்கான அடையாள அட்டையுடன் விமானத்தில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் யாருக்கேனும் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அவருக்கு நம்மால் சிகிச்சை அளிக்க முடியும். அடையாள அட்டை இல்லாவிட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்க மாட்டார்கள்" என்று மருத்துவ அடையாளத்தின் முக்கியத்துவத்தை மருத்துவர் குருட்டுகுலம் விவரித்தார்.
- கேனை திறக்க கஷ்டப்படும் அவர் படகில் இருந்து உணவு பொருளை ஆற்றில் வீசுவது போல காட்சி உள்ளது.
- வீடியோ எக்ஸ் தளத்தில் பரவி 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் படகில் சென்ற வாலிபர் ஒருவர் பீர் கேனை திறப்பதற்காக முதலையின் உதவியை நாடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 27 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது கையில் ஒரு பீர் கேனுடன் அமர்ந்துள்ளார்.
அந்த கேனை திறக்க கஷ்டப்படும் அவர் படகில் இருந்து உணவு பொருளை ஆற்றில் வீசுவது போல காட்சி உள்ளது. அப்போது படகு அருகே ஒரு முதலை வருகிறது. இந்நிலையில் முதலை படகை நெருங்கியதும் அந்த வாலிபர் முதலையின் வாயில் பீர் கேனை வைப்பது போன்றும், முதலை அதை கடித்ததால் பீர் கேனை திறப்பது போன்றும் காட்சிகள் உள்ளது.
பின்னர் அந்த பீர் கேனை வாலிபர் தனது நண்பர்களுக்கு கொடுக்க அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். 'கேட்டரை கேன் ஓப்பனராக பயன்படுத்துதல்' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பரவி 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
Florida man uses a gator to open a beer can.
— Wall Street Silver (@WallStreetSilv) July 3, 2024
?
pic.twitter.com/EoOT7jsd4A
- பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
- மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பேஸ்புக், வாட்சப், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலிதளங்களை நிர்வகிக்கும் மெட்டா சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்] உரிமையாளரும் ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்தின்போது, கோட் சூட் அணிந்தவாறு ஒரு கையில் அமெரிக்க கோடியை ஏந்தியவாறும், மறு கையில் பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் யாட்ச்சில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோவை இன்ஸ்ட்டாகிராமில் பகிரவே அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இந்த வீடியோ வைரலாக நிலையில் மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் யாட்ச்களில் பொழுதைப்போக்கி கொண்டாட்டங்களில் ஈடுபடட்டும்.அதைவிட நான் வேலை செய்யவே விரும்புகிறேன். I prefer to work என்று தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கைபடி பணக்காரர் பட்டியலில் மார்க் ஜூகர்பெர்கைவிட எலான் மஸ்க் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒரு பிரபல நகைக்கடையில் 4 கொள்ளையர்கள் புகுந்தனர்.
- கட்டுக்கட்டாக பணமும், நகைகளும் இருப்பதைக் கண்டு கொள்ளையர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றனர்.
கொள்ளையடிக்கப் போன திருடர்கள் கட்டுக்கட்டாக பணத்தை கண்டதும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மேற்கு ஹாலிவுட் நகரில் ஒரு பிரபல நகைக்கடையில் 4 கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த 2 பாதுகாப்பு பெட்டகங்களையும் உடைத்தனர். அதில் கட்டுக்கட்டாக பணமும், நகைகளும் இருப்பதைக் கண்டு கொள்ளையர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றனர்.
உடனே ஒருவருக்கொருவர் கைகளை தட்டி 'ஹைபை' செய்தும், கட்டிப்பிடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து பையில் போடுவது பதிவாகி இருக்கிறது. கடையின் முதலாளி, கடை சூறையாடப்பட்டு கிடக்கும் காட்சியையும், கொள்ளையர்களின் கொண்டாட்ட வீடியோவையும் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பதிவிட்டார். அதை ஏராளமானவர்கள் பகிர்ந்து கொள்ளையர்கள் பற்றிய கருத்துக்களையும் பதிவிட்டனர்.
- பறக்கும் தட்டு வடிவில் ஒரு கார் வருவதை அறிந்து மறித்தார்.
- அனுமதியை சரிபார்த்த அவர், செல்பி எடுத்துக் கொண்டு பறக்கும் தட்டு கார் செல்ல அனுமதித்தார்.
பறக்கும் தட்டு வடிவ கார் சாலையில் வந்ததை கவனித்த போலீஸ்காரர் அதை மறித்து சோதனை செய்ததும், பின்னர் செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ காட்சியும் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி உள்ளது.
அமெரிக்காவின் ஒக்லகாமா நகரில் நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார் அந்த போலீஸ்காரர். அப்போது பறக்கும் தட்டு வடிவில் ஒரு கார் வருவதை அறிந்து மறித்தார். நியூ மெக்சிகோ நகரில் பறக்கும் தட்டு தொடர்பான திருவிழா நடைபெற இருப்பதாகவும், அங்கு செல்வதற்காக இந்த கார் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து அனுமதியை சரிபார்த்த அவர், செல்பி எடுத்துக் கொண்டு பறக்கும் தட்டு கார் செல்ல அனுமதித்தார். இதுபற்றிய பதிவை வலைத்தளத்தில் போலீசார் வெளியிட்டனர். அது வைரலாக பரவியது.
- 1950-களில் அவர் மேடை ஏறி பாடியபோது ஊதா நிறத்திலான காலணிகளை அணிவது வழக்கம்.
- பிரெஸ்லி பயன்படுத்திய அந்த காலணிகள் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரினால் ஏலத்துக்கு விடப்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகரும் நடிகருமானவர் எல்விஸ் பிரெஸ்லி. தன்னுடைய இன்னிசையால் 19-ம் நூற்றாண்டு ரசிகர்களை தன்னுடைய காலடியில் கட்டிப்போட்டு வைத்திருந்தார்.
1950-களில் அவர் மேடை ஏறி பாடியபோது ஊதா நிறத்திலான காலணிகளை அணிவது வழக்கம். இந்தநிலையில் எல்விஸ் பிரெஸ்லி பயன்படுத்திய அந்த காலணிகள் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரினால் சமீபத்தில் ஏலத்துக்கு விடப்பட்டது.
ஏலம் விறுவிறுப்பாக நடந்த நிலையில் அந்த ஒரு ஜோடி காலணியை அவரின் அதிதீவிர ரசிகர் ஒருவர் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏலம் எடுத்தார். ஏலம்போன காலணியின் இந்திய மதிப்பு ரூ.1¼ கோடி ஆகும்.
- இந்த விவாத நிகழ்ச்சியால் பைடன் இந்த நிலைமையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.
- அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களம் காண்கின்றனர்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 28 ஆம் தேதி நடந்தது. ஜோ பைடன் இந்த நிகழ்ச்சியில் பலமுறை திக்கித் திணறி பேசத் தடுமாறினார். சில நொடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். 81 வயதாகவும் ஜோ பைடன் சமீப காலங்களாகவே தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறார்.
எனவே இந்த விவாத நிகழ்ச்சியால் பைடன் இந்த நிலைமையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பைடன் அதன்பின் ஆற்றிய உரையிலும்கூட டெலிபிராம்டரில் END OF THE QUOTE - உரை முடிந்தது என்று எழுதப்பட்டிருந்ததையும் சேர்த்து வாசித்தது சர்ச்சையாகியுள்ளது.
அவரது கட்சிக்குள்ளிருப்பவர்களே பைடன் அதிபர் தேர்தலில் நிற்காமல் இருப்பதே நல்லது என்று கருத்து கூறி வருகின்றனர். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்ச்சல் ஒபாமா பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்றும் சிலர் விரும்புகின்றனர். பைடனின் தடுமாற்றம் அமெரிக்க மக்களிடையேயும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிஎன்என் தொலைக்காட்சி தற்போது கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சிஎன்என் கருத்துக்கணிப்பின்படி, டிரம்பா பைடனா என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் டிரம்புக்கும் 43 சதவீதம் பேர் பைடனுக்கும் ஆதரவளித்துள்ளனர்.
அதேசமயம் டிரம்பா கமலா ஹாரிஸா என்ற கேள்விக்கு 47 சதவீத வாக்காளர்கள் டிரம்புக்கு ஆதரவாகவும். 45 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸ் அதிபர் ஆகலாம் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். டிரம்பை விட வெறும் 6 சதவீத வித்தியாசத்தில் மட்டுமே கமலா ஹாரிஸ் உள்ளார். டிரம்பை விட மிட்ச்சல் ஒபாமா 11 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.

ஆனால் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கமலா ஹாரிஸுக்கு பெண் வாக்காளர்களின் ஆதாரவு கணிசமாக உள்ளது. எனவே கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக அதிக வாய்ப்பு உள்ளது என்று இதன்மூலம் தெரியவருகிறது.
- மாயா நீலகண்டன் பாடும் இசை வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
- இசை பிரபலங்களும், முக்கிய பிரமுகர்களும் அவரை வாழ்த்தி கருத்து பதிவிட்டனர்.
இந்தியாவை சேர்ந்த 10 வயது கிட்டார் இசை கலைஞரான மாயா நீலகண்டன், அமெரிக்காவில், திறமைகளை வெளிப்படுத்தும் டி.வி. நிகழ்ச்சியான 'அமெரிக்காஸ் காட் டேலண்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அவர் கிட்டாரில் ராக் இசையமைத்து அமெரிக்கர்களை வியப்பில் ஆழ்த்தினர். அவரது கிட்டார் வாசிப்பு திறமை மற்றும் பாவனைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அவர் பாடும் இசை வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு உள்ளனர். இசை பிரபலங்களும், முக்கிய பிரமுகர்களும் அவரை வாழ்த்தி கருத்து பதிவிட்டனர்.
மாயா நீலகண்டன் வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
கடவுளே... மாயா நீலகண்டனுக்கு 10 வயதுதான் ஆகிறது. ஆம். சைமன். அவள் ஒரு தெய்வம் தான். தேவதைகளின் தேசத்திலிருந்து வந்திருக்கிறாள்.. நாங்கள் மாயா நீலகண்டனுக்கு தேவையானதை செய்ய தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
- அமெரிக்காவின் டெக்சாசில் யு.எஸ். ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது.
- இதில் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி அடைந்தார்.
டெக்சாஸ்:
அமெரிக்காவின் டெக்சாசில் யு.எஸ். ஓபன் பேட்மிண்ட்ன் தொடர் நடைபெறுகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஜப்பான் வீராங்கனை நட்சுகி நிடைரா உடன் மோதினார்.
இதில் மாளவிகா 16-21, 13-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்தப் போட்டி சுமார் 43 நிமிடங்கள் நடந்தது.
- சமூக ஊடகங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
- கடந்த 2017-ம் ஆண்டு கடவுளை சந்தித்ததாக கூறியுள்ளார்.
மெக்சிகோவில் உள்ள ஆலயத்தை சேர்ந்த போதகர் ஒருவர், சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்து வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் பேசு பொருளாகி இருக்கிறது. அங்குள்ள ஒரு தேவாலயத்தை சேர்ந்த போதகர் கடந்த 2017-ம் ஆண்டு கடவுளை சந்தித்ததாக கூறியுள்ளார்.
அப்போது சொர்க்கத்தில் உள்ள நிலங்களை விற்பனை செய்ய கடவுள் அவருக்கு அதிகாரம் அளித்ததாகவும், அவர் தெரிவித்த வீடியோ காட்சிகள் பரவி வருகிறது.
இதன் அடிப்படையிலேயே அந்த தேவாலயத்தினர் சொர்க்கத்தில் நிலங்களை விற்பனை செய்து வருவதாகவும், இதன் மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் குவிந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
முதலில் இதை ஆலய நிர்வாகத்தினர் விளையாட்டாக தொடங்கியதாகவும், பின்னர் இதை சீரியசாக எடுத்துக்கொண்ட சிலர் மனைகளை வாங்கி குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.






