என் மலர்tooltip icon

    தென் கொரியா

    • இரவில் நியான் விளக்குகள் எரியும் தெருக்களில் மக்ஜியோல்லி [அரிசி மது] குடித்து மகிழ்வார்கள்
    • மேசைக்கு மக்கள் வரிசையில் நிற்பதைக் காணலாம்.

    தென் கொரியாவில் தீவிர குடிப்பழக்கம் கொண்டிருந்த பெரும்பான்மையான மக்கள் அதில் இருந்து வெளிவந்துள்ளதை அங்கு நிலவும் சூழல் எடுத்துக்காட்டுகிறது.

    முந்தைய காலங்களில் இரவு பப்-கள், மதுபான விடுதிகளுக்குப் போவதும் வருவதுமாக நள்ளிரவிலும் ஜன நெருக்கடி நிறைந்த இடங்களும் சாலைகளும் தற்போது வெறிச்சோடி கிடப்பதை பார்க்க முடிகிறது.

    குறிப்பாக தலைநகர் சியோலில் முன்பைப் போலல்லாது இரவில் வெறிச்சோடி கிடக்கும் தெருக்கள் இதை உறுதிப் படுத்துகிறது. மக்களுக்கு குடியின் ஆர்வம் குறைந்துவருவதை பல்வேறு புள்ளிவிவரங்களும் தெளிவுபடுத்துகிறது.

     

     

    சியோலில் பப் நடத்தும் உரிமையாளர் ஜுன் ஜங்-சூக் கூறுகையில்,  சியோலின் ஒரு காலத்தில் துடிப்பான நோக்டு தெருவில் மக்கள் வேலையை முடித்து வந்து இரவில் நியான் விளக்குகள் எரியும் தெருக்களில் உள்ள விடுதிகளும் மக்ஜியோல்லி [அரிசி மது] உள்ளிட்ட மது வகைகள் இல்லாமல் தங்கள் நாளை முடிக்க மாட்டார்கள்.

      

    பாப் - பப் விடுதிகள் நிரம்பி வழியும். மேசைக்கு மக்கள் வரிசையில் நிற்பதைக் காணலாம். ஆனால் இப்போது அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன. அந்த நிலைமை முழுவதும் மாறிவிட்டது என்று கூறுகிறார்.

    மக்கள் மதுவைக் கைவிடுவதற்கு முக்கிய காரணம் தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள நீண்டகால பணவீக்கம் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

     

    கடன் நிறுவனங்கள் அருகி இருக்கும் தென் கொரியாவில் பெரும்பான்மையோர் கடனாளிகளாக மாறியிருப்பதும் வட்டி விகிதங்கள் அதிகரித்தன் காரணமாகவும் மக்கள் தங்கள் பணப் பையைத் திறந்து செலவு செய்யத் தயக்கம் காட்டுகின்றனர்.   

    • அவசர நிலையை செயல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
    • நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

    சியோல்:

    தென்கொரியாவில் அதிபர் யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிரகடனத்தை அதிபர் யூன் சுக்-இயோல் அறிவித்தார். இவரது இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

    இதனையடுத்து அவசர நிலை கைவிடப்பட்டது. எனினும் அவசர நிலையை செயல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

    எனினும், அவருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் அவசர நிலை பரிந்துரை செய்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால், யூன் சுக்-இயோல் தப்பிச் செல்லாமல் இருக்க வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அவருக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

    • அதிபரின் சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது
    • நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு எனது கட்சியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்.

    சியோல்:

    தென் கொரியாவில் கடந்த 3-ந்தேதி அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் திடீரென்று ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக அறிவித்தார்.

    பாராளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும், வட கொரியாவுடன் சேர்ந்து கொண்டு அரசை கவிழ்க்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், அவசரநிலை முடிவை எடுத்ததாக தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    மேலும் அதிபரின் சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது. அதிபர் பிறப்பித்த ராணுவ சட்டத்தை பாராளுமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து 12 மணி நேரத்துக்கு பிறகு ராணுவ அவசரநிலையை திரும்ப பெறுவதாக அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார்.

    இதற்கிடையே தென் கொரிய அதிபரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தன. இத்தீா்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

    300 உறுப்பினா்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 173 இடங்கள் உள்ளன. சிறிய கட்சிகளுக்கு 19 உறுப்பினா்கள் உள்ளனா். இன்னும் 8 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. யூன் சுக் இயோலுக்கு எதிராக அவரது கட்சியின் தலைவரே உள்ள நிலையில், இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

    இந்த நிலையில் அவசர நிலையை அறிவித்ததற்கு அதிபர் யூன் சுக் இயோல் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது கூறியதாவது:-

    அவசரகால ராணுவச் சட்டப் பிரகடனத்தால் நான் மக்களுக்கு கவலையையும் சிரமத்தையும் ஏற்படுத்தினேன். அதற்காக நான் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்னொரு ராணுவச் சட்டப் பிரகடனம் இருக்குமா என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

    அதுபோன்ற நடவடிக்கை மீண்டும் நடக்காது என்று உறுதியளிக்கிறேன். இந்தப் பிரகடனத்தால் ஏற்படும் எந்தவொரு சட்ட மற்றும் அரசியல் பொறுப்புச்சிக்கல்களையும் நான் தவிர்க்க மாட்டேன்.

    எனது பதவிக்காலம் உள்பட நாட்டை எவ்வாறு ஸ்திரப்படுத்துவது என்ற முடிவை எனது கட்சிக்கே விட்டு விடுகிறேன். நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு எனது கட்சியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு நான் தலை வணங்குகிறேன். மக்களுக்கு நான் ஏற்படுத்திய ஏதேனும் கவலைகளுக்கு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நீண்டகால பனிப்போர் சூழல் காணப்படுகிறது.
    • கொரியன் வர்த்தக யூனியன் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    சியோல்:

    கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள தென்கொரியா நாடானது, அமெரிக்கா, ஜப்பானின் கூட்டணி நாடாக உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மற்றொரு நாடான வடகொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. வடகொரியாவோ, ரஷியா மற்றும் சீனா நாடுகளுடன் இணக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

    இதனால், அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நீண்டகால பனிப்போர் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், வடகொரியாவுடன் சேர்ந்து கொண்டு அரசை முடக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என தென்கொரிய அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதனை தொடர்ந்து நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக ராணுவ தலைவர், முக்கிய தளபதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்பு, நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கட்டுப்பாட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்து தடுப்பான்களை அமைத்தனர்.

    எனினும், உறுப்பினர்களை வரும்படி எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு விடுத்ததுடன், அவசரநிலை அறிவிப்பை நீக்குவதற்காக வாக்களித்தனர். இந்த சூழலில், தென்கொரியாவின் அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே (இந்திய நேரப்படி அதிகாலை 1.15 மணி) உரையாற்றினார். அப்போது அவர், அவசரநிலையை வாபஸ் பெறும்படி சில நிமிடங்களுக்கு முன்பு வலியுறுத்தப்பட்டது.


    அவசரநிலை நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்ட ராணுவ வீரர்களை நாங்கள் வாபஸ் பெற்றுள்ளோம். நாடாளுமன்றத்தின் கோரிக்கையை நாங்கள் ஏற்று, மந்திரி சபை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும் என கூறியுள்ளார்.

    இதற்கு முன், யூன் சுக்கின் அவசரநிலை அறிவிப்புக்கு அந்நாட்டின் மிக பெரிய, கொரியன் வர்த்தக யூனியன் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 12 லட்சம் உறுப்பினர்களை கொண்ட கொரியாவின் மிக பெரிய தொழிலாளர் அமைப்பான அதன் தலைவர் கிம் ஜின் யூக் கூறும்போது, சட்டவிரோத அவசரநிலை உத்தரவை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் கூடியிருக்கிறோம். அதிபருக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

    இந்த முட்டாள்தன செயலை அவர் செய்கிறார் என என்னால் நம்பவே முடியவில்லை என கூறினார். இந்த சூழலில், அதிபரின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும், அவசரநிலை அறிவிப்பை அதிபர் யூன் சுக் இயோல், முழுமையாக நீக்கும் வரை இந்த நிலையே தொடரும் என அந்நாட்டின் அரசியல் வட்டாரம் தெரிவித்தது. இந்நிலையில், தென்கொரியாவில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

    • சீனாவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பால் பார்க் மின் ஜே காலமானார்.
    • அவருக்கு பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இருக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    தென்கொரியா நாட்டை சேர்ந்த இளம் நடிகர் பார்க் மின் ஜே (வயது 32). சீனாவில் சுற்றுப்பயணம் செய்து வந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து உள்ளார். இதுபற்றி தென்கொரியாவின் எக்ஸ்போர்ட்ஸ் நியூஸ் என்ற வலைதளம் வெளியிட்டு உள்ள செய்தியில், சீனாவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, நவம்பர் 29-ந்தேதி மாரடைப்பால் பார்க் மின் ஜே காலமானார் என தெரிவித்து உள்ளது.

    இந்த தகவலை அவருடைய பிக் டைட்டில் என்ற நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அதன் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட செய்தியில், நடிப்பை விரும்பிய அழகான ஒரு நடிகர் மற்றும் எப்போதும் சிறந்த முறையில் செயல்பட்ட பார்க் மின் ஜே சொர்க்கத்துக்கு சென்றிருக்கிறார் என தெரிவித்து உள்ளது.

    அவருடைய நடிப்பை இனி நாம் காண முடியாது. ஆனால், அவரை பெருமையுடன் எப்போதும் நாம் நினைவுகூர்வோம் என்றும் தெரிவித்து உள்ளது. சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, அவருக்கு பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இருக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    அவர், மிஸ்டர் லீ (2021), லிட்டில் உமன் (2022), ஸ்னாப் அண்டு ஸ்பார்க் (2023 முதல் 2024 வரை) மற்றும் கொரியா-கீத்தன் வார் (2023 முதல் 2024 வரை) போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். பார்க்கின் இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது.

    • பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் இரு கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை
    • தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் யூன் சுக் யோல் அறிவித்துள்ளார்

    தென் கொரியாவில் இரவோடு இரவாக எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் அமல்படுத்தி உள்ளார்.

    பட்ஜெட் மசோதா தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்து எட்டாத நிலையில் எதிர்க்கட்சிகள் வடகொரிய கம்யூனிச சக்திகளுடன் சேர்ந்து தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அதிபர் யூன் சுக் யோல் குற்றம் சாட்டி அவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அமலப்படுவதாகத் தேசிய ஊடகத்தில் தோன்றி நாட்டு மக்களுக்கு இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    தென் கொரியாவில் அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் அதிபர் யூன் தலைமையிலான ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.

     

    இந்நிலையில் திடீரென தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் யூன் சுக் யோல், வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தென் கொரியாவைப் பாதுகாக்கவும், மக்களின் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைக் கொள்ளையடிக்கும் தேச விரோத சக்திகளை அகற்றவும், நான் இதன் மூலம் அவசரகால இராணுவச் சட்டத்தை அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.

    மேலும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பொருட்படுத்தாமல், எதிர்க்கட்சிகள் தங்கள் தலைவரை, குற்றச்சாட்டுகள்,விசாரணைகள் மற்றும் நீதியிலிருந்து காப்பாற்றுவதற்காக மட்டுமே ஆட்சியை முடக்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

     

    இந்த திடீர் எமர்ஜென்சி ராணுவ சட்டத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும்  பாதிப்புகள் குறித்த அச்சத்தில் தென் கொரிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தென் கொரியாவின் வான் எல்லைக்குள் 11 சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் வட்டமடித்தன.
    • இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.

    தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷிய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது. இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.

    கிட்டத்தட்ட 4 மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின.

    முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்தது.

    சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவுவது சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • அவரது பாடி மாஸ் இண்டக்ஸ் BMI 37.8 வரை அதிகரித்துள்ளது
    • இரண்டு மடங்கு உணவை உட்கொள்ள உதவிய அவரது நண்பருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    தென் கொரியாவில் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கும் உடல் தகுதி உள்ள ஆண்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் கட்டாயம் ராணுவத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் ராணுவ வேலையில் இருந்து தப்பிக்க 26 வயது இளைஞர் ஒருவர் தனது உடல் தகுதியை குறைக்க திட்டமிட்டு அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார்.

    இதன்மூலம் உடல் எடை அதிகரித்து ராணுவ சேவை புரிவதற்காக உடல் தகுதி இல்லாமல் போய்விடும் என்பது அவரது மாஸ்டர் பிளான். இந்த திட்டத்தின்படி மானாவாரியாகச் சாப்பிட்டு 102 கிலோ வரை தனது இயல்பான எடையை மூன்றே மாதங்களில் அவர் அதிகரித்துள்ளார்.

     

    அவரது பாடி மாஸ் இண்டக்ஸ் BMI 37.8 வரை அதிகரித்துள்ளது. இது ஒபிசிட்டி எனப்படும் உடல் எடை அதிகம் என்பதை நிர்ணயிக்கும் அளவாக உள்ளது. ஆனால் இந்த திட்டத்தை கட்னுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் ராணுவ சேவையை தவிர்க்க முயற்சித்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

     

     

    இந்த குற்றத்துக்கு 3 வருடம் தண்டனை வழங்கலாம் என்ற நிலையில் முதல் முறையாக அவர் குற்றம் புரிந்துள்ளதாலும், ராணுவத்திற்கு உண்மையாகச் சேவை செய்வேன் என்று வாக்குறுதி அளித்ததாலும் அவருக்கு 2 வருட சிறை தண்டணை விதிக்கப்பட்டது.

    மேலும் அவர் தினமும் இரண்டு மடங்கு உணவை உட்கொள்ள உதவிய அவரது நண்பருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் விளையாட்டாக இந்த திட்டத்தை சொன்னார் ஆனால் நிஜமாகவே செய்வார் என்று நினைக்கவில்லை என்று பிற நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    • முதல் சீசனில் 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.
    • ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் டீசர் வெளியானது.

    தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு ஸ்குவிட் கேம். கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடரின் பெயரும் அதுவே. முதல் சீசனில் 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.

    இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இந்நிலையில் இந்த ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது.

    வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள 2 வது சீசனின் டீசர் இந்த மாத தொடக்கத்தில் வெளியானது.

    எனவே சீனன் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தொடரின் இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தொடரை இயக்கிய அனுபவம், அதற்காக தான் மெனக்கிட்டு செய்த வேலைகள் என பலவற்றை பற்றி பேசியுள்ளார்.

     

     அதில், முதல் சீசனை இயக்கும்போது அதிக ஸ்ட்ரெஸ் மற்றும் மன அழுத்தத்தில் தனது 8-9 பற்கள் கொட்டிவிட்டதாக தெரிவித்தார். ஆனால் இதை அவர் வருத்தம் இல்லாமலேயே தெரிவித்திருக்கிறார். முதல் சீசனில் மன ரீதியாக நிறைய இன்னல்களை சந்தித்திருந்தாலும் இரண்டாம் சீசனை இயக்கவும் முன்வந்ததாக அவர் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் நடைபெறுகிறது.
    • அரையிறுதியில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி அடைந்தார்.

    சியோல்:

    தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைறுதிச் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், தாய்லாந்து வீரருடன் மோதினார்.

    இதில் கிரண் ஜார்ஜ் 12-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் இருந்து தென் கொரிய தலைநகர் சியோல் நகருக்கு கொரியன் ஏர் விமானம் கிளம்பியது
    • எக்சிட் கதவை நெருங்கி அதை திறக்கப்போவதாக கத்தி கூச்சல்போட்டு மிரட்டியுள்ளார்.

    தென் கொரிய விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது உள்ளே இருந்த பயணி எக்சிட் கதவை திறக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் இருந்து தென் கொரிய தலைநகர் சியோல் நகருக்கு கொரியன் ஏர் விமானமே KE658 பயணிகளுடன் கிளம்பியது.

    அப்போது பயணி ஒருவர் எக்சிட் கதவுக்கு அருகே ஊழியர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துள்ளார். அவரை அங்கிருந்து எழுந்து அவர் புக் செய்த சீட்டுக்கு போக விமான ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஆனால் அங்கிருந்த செல்ல மறுத்த அந்த நபர் திடீரென எக்சிட் கதவை நெருங்கி அதை திறக்கப்போவதாக கத்தி கூச்சல்போட்டு ஊழியர்களையும், சக பயணிகளையும் மிரட்டியுள்ளார்.

    அனால் தரையிறங்கும்வரை நிலைமையை சமாளித்த ஊழியர்கள், விமானம் சியோலில் பாதுகாப்பாக தரையிறங்கியவுடன் இன்சியான் சர்வதேச விமான பாதுகாப்பு படையினரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். பயணி விமானத்தில் ரகளை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    • கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் நடைபெறுகிறது.
    • இதில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    சியோல்:

    தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதினார்.

    இதில் கிரண் ஜார்ஜ் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார்.

    இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்த கிரண் ஜார்ஜ் தாய்லாந்து வீரருடன் மோதுகிறார்.

    ×