என் மலர்
இத்தாலி
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- முதல் சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், முதல் சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 7-5, 6-1 என வென்றார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்துள்ள வீரர்கள் பங்கேற்கின்றனர்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-3, 7-6 (8-6) என வென்றார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச் காயம் காரணமாக விலகினார்.
துரின்:
ஏதென்ஸ் தலைநகர் கிரீசில் ஹெலனிக் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜோகோவிச் ஏ.டி.பி. ஒற்றையரில் வென்ற 101-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக இத்தாலியில் நடக்கும் ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக இத்தாலியின் லாரன்சோ முசெட்டி வாய்ப்பு பெற்றார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்துள்ள வீரர்கள் பங்கேற்கின்றனர்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் இன்று தொடங்கியது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஜிம்மி கனோர்ஸ் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்டிஸ் டி மினார் இடம்பெற்றனர்.
ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
இந்நிலையில், முதல் நாளில் ஸ்பெயினின் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-5), 6-2 என வென்றார்.
- மிலனில் இருந்து டெல்லிக்குச் செல்லவிருந்த ஏ.ஐ138 விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
- அனைத்து பயணிகளுக்கும் உணவு உள்பட தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா தொடர்ந்து வழங்குகிறது
இத்தாலியின் மிலன் நகரில் டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்த ஏர்-இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. எனவே விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதனால் தீபாவளி பண்டிகைக்காக இந்தியா திரும்பயிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் இத்தாலியில் தவித்து வருகிறார்கள்.
இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
17-ந் தேதி மிலனில் இருந்து டெல்லிக்குச் செல்லவிருந்த ஏ.ஐ138 விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் பணி நடந்து வருகிறது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் வருந்துகிறோம் என்று தெரிவித்து உள்ளது. மேலும் அனைத்து பயணிகளுக்கும் உணவு உள்பட தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா தொடர்ந்து வழங்குகிறது என்றும் தெரிவித்து உள்ளது. மாற்று விமானம் ஏற்பாடு செய்ய தாமதம் ஆகி வருவதால் தீபாவளிக்கு நாடு திரும்ப முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
- காரில் இருந்த குமார் மனோஜ் (34), சிங் சுர்ஜித் (33), சிங் ஹர்விந்தர் (31), மற்றும் சிங் ஜஸ்கரன் (20) ஆகிய நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர்.
- ரோமில் உள்ள இந்தியத் தூதரகம் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
இத்தாலியின் சாலை விபத்தில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சனிக்கிழமை நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மடேரா நகரின் ஸ்கான்சானோ யோனிகோ பகுதியில் ரெனால்ட் ஸ்கெனிக் வகை கார் ஒன்று, சரக்கு லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த குமார் மனோஜ் (34), சிங் சுர்ஜித் (33), சிங் ஹர்விந்தர் (31), மற்றும் சிங் ஜஸ்கரன் (20) ஆகிய நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான காரில் மேலும் ஆறு பேர் இருந்துள்ளனர். அவர்களில் ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரோமில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து இத்தாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயணிக்கும், விமான நிலைய ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- ஆத்திரம் அடைந்த பயணி சுத்தியலை எடுத்து கண்ணாடியை உடைத்தார்.
ரோம்:
இத்தாலியின் மிலன் நகரில் மால்பென்சா விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கு உடைமைகளை சோதனை செய்வதற்காக பயணிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது 1-வது முனையம் வழியாகச் சென்ற ஒரு பயணிக்கும், விமான நிலைய ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணி தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து அங்கிருந்த கண்ணாடியை உடைத்தார். அதன்பின் அங்கிருந்த கவுண்ட்டருக்கு தீ வைத்தார். இதனைப் பார்த்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
தகவலறிந்து உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர்.
- மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள லம்பேடுசா தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
லிபியாவில் இருந்து இரண்டு படகுகளில் அகதிகள் பயணித்துள்ளனர். ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர்.
ஆனால், அந்தப் படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலிய கடலோர காவல்படையினர் ஐந்து கப்பல்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.நா. அகதிகள் முகமையின் (UNHCR) தகவல்படி, படகில் சுமார் 92 முதல் 97 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த ஆண்டு மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளதாக UNHCR-ன் இத்தாலிய செய்தித் தொடர்பாளர் பிலிப்போ உங்காறோ தெரிவித்தார்.
- சிறிய அல்ட்ராலைட் விமானம் சாலையில் மோதி தீப்பிடித்தது.
- இறக்கைகள் 30 அடி நீளம் கொண்டது.
இத்தாலியில் ஒரு சிறிய விமானம் நெடுஞ்சாலையில் மோதி விபத்துள்ளன வீடியோ வெளியாகி உள்ளது.
செவ்வாய்க்கிழமை, பிரெசியா நகருக்கு அருகில் நடந்த இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
சிறிய அல்ட்ராலைட் விமானம் சாலையில் மோதி தீப்பிடித்தது. விமானி உட்பட இரண்டு பேர் விபத்தில் இறந்தனர். மேலும் விமானம் வெடித்ததில் இரண்டு பைக்கர்கள் காயமடைந்தனர்.
அவசரமாக தரையிறங்க முயன்றபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஃப்ரெசியா ஆர்ஜி அல்ட்ராலைட் விமானம் கார்பன் ஃபைபரால் ஆனது. இறக்கைகள் 30 அடி நீளம் கொண்டது. விமானம் அதிவேகத்தில் சாலையில் மோதிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
- மிலன் விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டார்.
- இதில் அவர் பரிதாபமாக இறந்தது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரோம்:
இத்தாலியின் மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையம் அமைந்துள்ளது. இன்று காலை இந்த விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
வோலோடியா விமான நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-319 என்ற விமானம் ஸ்பெயினின் அஸ்டூரியாஸ் செல்ல விமான ஓடுதளத்தில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது அதனருகே ஓடிக்கொண்டிருந்த நபர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டார் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வோலோடியா விமான நிறுவனம் எக்ஸ் வலைதளப் பக்கத்தில், உயிரிழந்தது பயணியோ, விமான ஊழியரோ அல்ல. 154 பயணிகளும் 6 பணியாளர்களும் விமானத்தில் பாதுகாப்பாக இருக்கின்றனர் என பதிவிட்டது.
இச்சம்பவத்தால் அந்த விமான நிலையத்தில் 9 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 6 விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. எட்டு விமானங்கள் நிறுத்தப்பட்டது. மதியத்துக்கு மேல் விமானங்கள் இயக்கப்பட்டன. விமான இன்ஜினால் ஒருவர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- கியாஸ் கசிந்ததால் பயங்கர சத்தத்துடன் கியாஸ் நிலையம் வெடித்து சிதறியது.
- இதனால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
ரோம்:
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கியாஸ் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.
அப்போது கியாஸ் கசிந்ததால் பயங்கர சத்தத்துடன் கியாஸ் நிலையம் வெடித்து சிதறியது. இதனால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதே சமயம் கியாஸ் நிலையம் வெடித்து சிதறியதில் 45 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
- The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
- ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் வரிசையில் இருப்பவர். இந்நிலையில் 61 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்தை வெற்றி கரமாக முடித்துள்ளார்.
தனது நீண்ட நாள் காதலியான 55 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று நடந்தது.
கடந்த 3 நாட்களாகவே அவர்களின் திருமண கொண்டாட்டங்களில் சூப்பர் ரிச்சாக 200 விருந்தினர்கள் சூழ நடைபெற்றது. திருமண செலவு ரூ.430 கோடி என்று கூறப்படுகிறது.
The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றிய லாரன் சான்செஸ் உடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் டேட்டிங் செய்து வருகிறார்.
ஜெஃப் பெசோஸ் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்தின்மூலம் ஜெஃப் பெசோஸ் வைத்திருந்த கணிசமான பங்குகளை பெற்று மெக்கன்சி ஸ்காட் பில்லியனர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.






