என் மலர்tooltip icon

    ஈரான்

    • ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) சமீபத்தில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • தாக்குதல்களை நடத்த அதன் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி நிலையங்களை உடனடியாக குறிவைப்போம் என்று ஈரானின் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன.

    இதற்காக, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) சமீபத்தில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    இஸ்ரேலிடமிருந்து முக்கியமான உளவுத்துறைத் தகவல்களை பெற்றுள்ளதாக ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

    உளவுத்துறை ஆதாரங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி தளங்களை உள்ளிட்ட முக்கிய இலக்குகளை அடையாளம் கண்டுள்ளதாக SNSC தெரிவித்துள்ளது.

    ஈரானிய நலன்களுக்கு எதிராக இஸ்ரேல் ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுத்தால், இந்த இலக்குகள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்த அதன் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக பலர் நம்பினாலும், அந்த நாடு இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. 

    • சுதந்திரம் என்பது அமெரிக்கா போன்றவர்களிடமிருந்து பச்சைக்கொடிக்காகக் காத்திருக்கக் கூடாது.
    • சிலர் பகுத்தறிவு என்றால் அமெரிக்காவிற்கு பணிந்து அடக்குமுறை சக்திக்கு சரணடைவது என்று நினைக்கிறார்கள்.

    அமெரிக்கா ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்ட கடுமையாக முயற்சித்து வருகிறது.

    ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளைத் தொடர முடிவு செய்தனர்.

    இருப்பினும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட ஆரம்ப திட்டத்தில் அவர் அதிருப்தி தெரிவித்தார். அமெரிக்க திட்டம் தனது நாட்டின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது என்று அவர் கூறினார்.

    "நாடு நூறு அணு மின் நிலையங்களை கட்டினாலும், அந்த நாடு பொருளாதார செழிப்பை அடையவில்லை என்றால், அந்த ஆலைகளால் எந்தப் பயனும் இருக்காது. மீண்டும் நிதியுதவிக்காக அமெரிக்காவை அணுக வேண்டியிருக்கும்" என்று கமேனி கூறினார்.

    இருப்பினும், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அவர் முழுமையாக நிராகரிக்கவில்லை. அமெரிக்காவால் வழங்கப்பட்ட திட்டத்தில்

    ஈரானின் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பான அம்சங்களை வலியுறுத்தி உள்ளதாக தெரிகிறது.

    ஈரானின் எரிசக்தி சுதந்திரதுடன் இருப்பதற்கு யுரேனியம் செறிவூட்டல் முக்கியமானது. ஈரான் யுரேனியன் செறிவூட்டல் செய்ய வேண்டுமா இல்லையா என்பதில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்? நீங்கள் எந்தக் கருத்தையும் கூற முடியாது.

    சுதந்திரம் என்பது அமெரிக்கா போன்றவர்களிடமிருந்து பச்சைக்கொடிக்காகக் காத்திருக்கக் கூடாது. சிலர் பகுத்தறிவு என்றால் அமெரிக்காவிற்கு பணிந்து அடக்குமுறை சக்திக்கு சரணடைவது என்று நினைக்கிறார்கள்; இது பகுத்தறிவு அல்ல" என்று தெரிவித்தார். 

    • உள்ளூர் ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல சம்பளத்தில் வேலை வழங்க முன்வந்தது.
    • இருப்பினும், ஈரானுக்கு வந்த பிறகு மூவரும் காணாமல் போனார்கள்.

    ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் மூலம் குடிமக்களை மீட்பது குறித்து அறிவித்துள்ளது.

    தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள வரமின் நகரில் காவல்துறையினர் நடத்திய நடவடிக்கையில் இந்தியர்கள் மீட்கப்பட்டதாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் (MNA) தெரிவித்துள்ளது.

    மே 1 ஆம் தேதி மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தெஹ்ரான் காவல்துறையினர் தெரிவித்தனர்.

    பஞ்சாபைச் சேர்ந்த இந்த மூன்று பேரும் ஆஸ்திரேலியா செல்லும் வழியில் ஈரானுக்கு வந்திருந்தனர். உள்ளூர் ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல சம்பளத்தில் வேலை வழங்க முன்வந்தது.

    இருப்பினும், ஈரானுக்கு வந்த பிறகு மூவரும் காணாமல் போனார்கள். மே 29 அன்று, இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தது.

    அவர்கள் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியான சூழலில் தற்போது அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.   

    • மே 1 ஆம் தேதி தெஹ்ரானில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் காணாமல் போனார்கள்.
    • இந்த விஷயத்தை ஈரானிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளது.

    ஈரானுக்குச் சென்ற மூன்று இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிக்க தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இது தொடர்பாக தூதரகம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பஞ்சாபில் இருந்து ஈரானுக்குச் சென்ற மூன்று இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    காணாமல் போன மூன்று பேர் ஹுஷான்பிரீத் சிங் , ஜஸ்பால் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மே 1 ஆம் தேதி தெஹ்ரானில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் காணாமல் போனார்கள்.

    "ஈரானுக்குப் பயணம் செய்த பின்னர் தங்கள் உறவினர்கள் காணாமல் போனதாக மூன்று இந்தியர்களின் குடும்பத்தினர் இந்திய தூதரகத்தை அணுகியுள்ளனர். தூதரகம் இந்த விஷயத்தை ஈரானிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளது.

    காணாமல் போன இந்தியர்களை உடனடியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது" என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • பிரான்சில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழா நடந்தது.
    • சிறந்த இயக்குனருக்கான விருது ஈரான் இயக்குனர் ஜாபர் பனாஹிக்கு வழங்கப்பட்டது.

    டெஹ்ரான்:

    பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழா நடந்தது. கடந்த 13-ம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடந்து முடிந்தது.

    திரைப்பட விழாவின் இறுதியில் சிறந்த இயக்குனருக்கான 'பாம் டி ஓர்' விருது ஈரானிய இயக்குனர் ஜாபர் பனாஹிக்கு வழங்கப்பட்டது. ஈரான் திரைப்பட இயக்குனர் ஒருவர் கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதை வாங்குவது இதுவே முதல் முறையாகும்.

    இதற்கிடையே, ஈரான் இயக்குனருக்கு கேன்ஸ் திரைப்பட விருது வழங்கப்பட்டதற்கு பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரி 'இது ஒரு விபத்து' என சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.

    இந்நிலையில், பிரான்ஸ் மந்திரியின் இந்தக் கருத்துக்கு ஈரான் அரசு கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும் ஈரான் நாட்டுக்கான பிரான்ஸ் வெளியுறவு தூதரை நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    • தெஹ்ரானில் வைத்து ஷெபாஸ் ஷெரீப் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியை சந்தித்தார்.
    • காமேனியின் கருத்துக்கள் பாகிஸ்தான் பிரதமரின் வார்த்தைகளுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை தெளிவுபடுத்தின.

    பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் ஆகியோர் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளனர்.

    இந்தியாவுடனான மோதலை தொடர்ந்து பாகிஸ்தான் உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. சமீபத்தில் துருக்கி சென்று அந்நாட்டு அதிபர் எர்டோகனை பாகிஸ்தான் பிரதமர் சந்தித்தார்.

    இந்த சூழலில் அவரின் ஈரான் பயணம் நிகழ்ந்துள்ளது. இந்த பயணத்தில் தெஹ்ரானில் வைத்து ஷெபாஸ் ஷெரீப் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியை சந்தித்தார்.

    அவரிடம் இந்தியா மோதல் மற்றும் காஷ்மீர் பிரச்சனையை பிரச்சினையை ஷெபாஸ் ஷெரீப்  எடுத்துரைத்தார்.

    ஆனால் காமேனியின் கருத்துக்கள் பாகிஸ்தான் பிரதமரின் வார்த்தைகளுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை தெளிவுபடுத்தின.

    அதாவது, இந்த சந்திப்பின் பின் காமேனி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்" என்று மட்டுமே பதிவிட்டுள்ளார்.

    இதன் மூலம் ஈரான் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    மே 7 அன்று, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத மறைவிடங்களை இந்தியா தாக்கியது. இதன்பின் இரு நாட்டு ராணுவமும் மோதிக்கொண்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதை அடுத்து மே 10 அன்று மோதல் முடிவுக்கு வந்தது. 

    • ஷபாஸ் ஷெரீப் தனது 4 நாடுகள் பயணத்தின் 2-வது கட்டமாக ஈரானுக்கு சென்றார்.
    • அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக் கிறது.

    காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சித்தது.

    இதை முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் உள்பட ராணுவ நிலைகளை தாக்கியது. அதன்பின் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அதே கருத்தை மீண்டும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

    ஷபாஸ் ஷெரீப் தனது 4 நாடுகள் பயணத்தின் 2-வது கட்டமாக ஈரானுக்கு சென்றார். தனது துருக்கி பயணத்தை முடித்து கொண்டு ஈரான் தலைநகர் தெக்ரானுக்கு சென்றடைந்தார். அங்கு அவரை சாதாபாத் அரண்மனையில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் வர வேற்றார்.

    அப்போது ஷபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக் கிறது. காஷ்மீர் பிரச்சினை, நதிநீர் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம். மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து அண்டை நாடுகளு டன் பேசவும் தயாராக இருக்கிறோம். இந்தியா போரின் பாதையைத் தேர்ந்தெடுத்தால், பதில் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருக்க தேர்வு செய்தால், எங்கள் பிரதேசத்தை நாங்கள் பாதுகாப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓமனில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • ரோமில் ஒரு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

    ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பு மற்றும் அதன் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். மேலும், இது தொடர்பாக ஒப்பந்தத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். முதலில் மறுப்பு தெரிவித்த ஈரான் பின்னர் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது.

    ஈரான்- அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஓமன் மத்தியஸ்தம் செய்கிறது. இரண்டு முறை பேச்சுவார்த்தை ஓபன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. ரோமில் உள்ள தூதரகத்தில் ஒருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த நிலையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஓமனில் நடைபெறும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாச்சி அராக்சி தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    வெள்ளிக்கிழமை பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துடன் ஆலோசனை நடத்த இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்கா உடனான ஒப்பந்தத்திற்கு உதவும்படி ஈரான் ரஷியாவிடம் உதவி கேட்டிருந்தது. அதற்கு ரஷியா சம்மதம் தெரிவித்துள்ளது.

    • ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகம் பந்தர் அப்பாஸ்.
    • பந்தர் அப்பாஸ் துறைமுகம் பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

    டெஹ்ரான்:

    ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.

    இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நின்ற ஒரு கன்டெய்னர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுதும் போர்க்களம் போல காட்சி அளித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 400 பேர் வரை படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் மேலும் பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகம் பந்தர் அப்பாஸ்.
    • பந்தர் அப்பாஸ் துறைமுகம் பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

    டெஹ்ரான்:

    ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.

    இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நின்ற ஒரு கன்டெய்னர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுதும் போர்க்களம் போல காட்சி அளித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 400 பேர் வரை படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் மேலும் பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ஏவுகணை உந்துசக்தியை உருவாக்கப் பயன்படுத்தும் ரசாயனம் வெடித்தது தெரிய வந்துள்ளது.

    • கெமிக்கல் பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததே வெடி விபத்திற்கு காரணம்.
    • வெடிவிபத்து குறித்து விரிவான விசாரணைக்கு ஈரான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்

    ஈரானின் தெற்கு பிராந்தியமான பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ராஜேய் துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கண்டெய்னர் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. பல அடி உயரத்துக்கு தீப்பிழம்பு எழும்பி யது.

    மேலும் தீ மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டன.

    இந்த வெடிவிபத்தில் 5 பேர் பலியானார்கள் என்றும் 700 பேர் காயம் அடைந்தனர் என்றும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. 750-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    ஏவுகணைகளுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்களை சரிவர கையாளாததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

    இந்த எரிபொருள் சீனாவிலிருந்து 2 கப்பல்கள் மூலம் ஈரானுக்கு அனுப்பப்பட்ட அம்மோனியம் பெர்க்ளோரேட்டின் ஒரு பகுதியாகும் என்று கூறப்படுகிறது.

    ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தும் திட எரிபொருளை கொண்டு வந்த கப்பலை முறையற்ற முறையில் கையாண்டதன் விளைவாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தனியார் பாதுகாப்பு நிறு வனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.

    இந்த வெடிவிபத்து சத்தம் சுமார் 50 கி.மீ தொலைவுக்கு கேட்டது. இதில் பல துறைமுக கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன.

    இதற்கிடையே வெடி விபத்து காரணமாக அம்மோனியா, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற ரசாயனங்களால் காற்று மாசுபடுவது குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜேய் துறைமுகம், எண்ணை மற்றும் பெட்ரோ கெமிக்கல்களை கையாளும் வசதிகள் கொண்ட, மிகப் பெரிய கண்டெய்னர் போக்குவரத்துக்கான முக்கிய துறைமுகமாகும் என்பது கவனிக்கத்தக்கது.

    • ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகம் பந்தர் அப்பாஸ்.
    • பந்தர் அப்பாஸ் துறைமுகம் பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

    டெஹ்ரான்:

    ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.

    இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே, பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 400 பேர் வரை படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    ரஜாய் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களில் வெடிப்பு ஏற்பட்டது. தீயை அணைக்கவும் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு துறையினர் முயன்று வருகின்றனர் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஈரான் துறைமுக வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரான்-அமெரிக்கா, ஓமனில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நேரத்தில் பந்தர் அப்பாஸில் வெடிவிபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×