என் மலர்
பிரிட்டன்
- யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.
- டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
இங்கிலாந்து நாட்டின் வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத ஆலயம் அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.
உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குற்றவாளியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.
அவரிடமிருந்து வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வெடிகுண்டு அங்கியை அணித்திருந்ததாக தெரிகிறது. வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி, "திரும்பிப் போங்கள், அவர் ஒரு வெடிகுண்டை வைத்திருக்கிறார், விலகிச் செல்லுங்கள்" என்று பொதுமக்களை நோக்கி சத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் குற்றவாளியை போலீசார் சுட்டுக்கொள்ளும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக இங்கிலாந்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.
- இது ஒரு அவமான செயல், அகிம்சையின் மரபு மீதான தாக்குதல்.
- இது வெறும் சிலையை சேதப்படுத்தியது மட்டுமல்ல. அகிம்சை சித்தாந்தத்தின் மீதான வன்முறை தாக்குதல்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாளை மறுதினம் கொண்டாட இருக்கும் நிலையில், லண்டன் பல்கலைக்கழகம் அருகே உள்ள அவரது சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை கடந்த 1968 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வெண்கல சிலையாகும்.
சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் "இது ஒரு அவமான செயல், அகிம்சையின் மரபு மீதான தாக்குதல். இது வெறும் சிலையை சேதப்படுத்தியது மட்டுமல்ல. இன்னும் 3 நாட்களில் சர்வதேச அகிம்சை தினம் வரும் நிலையில், அகிம்சை சித்தாந்தத்தின் மீதான வன்முறை தாக்குதல்" எனத் தெரிவித்துள்ளது.
- பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் பேசினார்.
- இதே போன்ற தடைகள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டன் பயணத்தின் போது இந்தியாவுடனும் பிரதமர் நரேந்திர மோடியுடனும் தனக்கு வலுவான தனிப்பட்ட உறவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், "நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். நான் இந்தியப் பிரதமருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது" என்று கூறினார்.
சமீபத்தில் தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அதற்கு நன்றி தெரிவித்து மோடி ஒரு அழகான அறிக்கை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்கா விதித்த தடைகளை டிரம்ப் நியாயப்படுத்தினார்.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவுக்கும் இதே போன்ற தடைகள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ரஷியா-உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து பேசிய அவர், "மிக எளிமையாகச் சொன்னால், எண்ணெய் விலை குறைந்தால், புதின் வெளியேறப் போகிறார். அவருக்கு வேறு வழியில்லை. அவர் அந்தப் போரிலிருந்து விலகப் போகிறார்" என்று டிரம்ப் கூறினார்.
முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னையை தான் தீர்த்ததாக டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.
இதற்கிடையே டிரம்ப்பின் இந்த பயணத்தின்போது அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- பீரங்கிகள் முழங்க, குதிரைப்படை வீரர்கள் மற்றும் ராணுவ இசைக்குழுவினருடன் கூடிய பிரம்மாண்டமான வரவேற்பு டிரம்ப்புக்கு அளிக்கப்பட்டது.
- மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமில்லாவுடன் சேர்ந்து குதிரை வண்டியில் பயணம் செய்த டிரம்ப், ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா, பிரிட்டனுக்கு இரண்டாவது அரசு முறைப் பயணமாக வந்துள்ளனர்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, விண்ட்சர் கோட்டையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமில்லா ஆகியோரை சந்தித்து விருந்தில் கலந்து கொண்டனர்.

பீரங்கிகள் முழங்க, குதிரைப்படை வீரர்கள் மற்றும் ராணுவ இசைக்குழுவினருடன் கூடிய பிரம்மாண்டமான வரவேற்பு டிரம்ப்புக்கு அளிக்கப்பட்டது.
மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமில்லாவுடன் சேர்ந்து குதிரை வண்டியில் பயணம் செய்த டிரம்ப், ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.
டிரம்ப் விண்ட்சர் கோட்டையில் இருக்கும் அதே நேரத்தில், மத்திய லண்டனில் நூற்றுக்கணக்கான மக்கள் டிரம்ப் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

- எனது மகன்கள் சட்டப்படி தொழில் செய்கின்றனர். நான் அவர்களுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறேன்.
- எனது வணிகப் பரிந்துரைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சிக்காக.
இந்தியா ஏப்ரல் 2023 இல் நாடு தழுவிய அளவில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை (E20) அறிமுகப்படுத்தியது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் ஒரு முக்கிய படியாக மத்திய அரசு இந்த கொள்கையை முன்வைத்தது.
இருப்பினும், எதிர்க்கட்சிகள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர். பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் பாதிக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.
குறிப்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் 2 மகன்கள் நாட்டின் 2 முன்னணி எத்தனால் உற்பத்தி ஆலையை நடத்துவதால் அவர்களின் சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கலந்த பெட்ரோல் ஊக்குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.
நாக்பூரில் நடந்த வேளாண் நல சங்க நிகழ்ச்சியில் பேசிய அவர், எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது. எப்படி நியாயமாக சம்பாதிக்க வேண்டும் என எனக்கு தெரியும். எனக்கு எந்த பணப் பிரச்னையும் இல்லை. இதையெல்லாம் என் சொந்த நலனுக்காக செய்யவில்லை.
எனது மகன்கள் சட்டப்படி தொழில் செய்கின்றனர். நான் அவர்களுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறேன். எனது மகன் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடுகிறார். அவர்கள் மோசடியில் ஈடுபடுவது கிடையாது. சமீபத்தில், என் மகன் ஈரானில் இருந்து 800 கண்டெய்னரில் ஆப்பிள்களை இறக்குமதி செய்தார்.
அதோடு இந்தியாவில் இருந்து 1000 கண்டெய்னரில் ஈரானுக்கு வாழைப்பழத்தை ஏற்றுமதி செய்தார். எனக்கும் சொந்தமாக சர்க்கரை ஆலை மற்றும் மின் உற்பத்தி மையமும் இருக்கிறது.
நாக்பூரில் உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளேன். எனது வணிகப் பரிந்துரைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சிக்காக" என்று தெரிவித்துள்ளார்.
- நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் காவல் துறையின் மிக முக்கியமான துறைகளை ஷபானா மேற்பார்வையிடுவார்.
- இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் ஒருவரானார்.
பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளராக பதவி ஏற்றுள்ளார்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷபானா மஹ்மூத் உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனத்தின் மூலம், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் காவல் துறையின் மிக முக்கியமான துறைகளை ஷபானா மேற்பார்வையிடுவார்.
பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்கு குடிபெயர்ந்த பெற்றோர்க்கு 1980 இல் பிறந்தார் ஷபானா.
புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று சிறிது காலம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.
2010 இல், பர்மிங்காம் லேடிவுட் தொகுதியிலிருந்து தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் ஒருவரானார்.
கட்சியில் பல முக்கிய நிழல் பதவிகளை வகித்தார். 2024 தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் நீதித்துறை செயலாளராகவும், லார்ட் சான்சலராகவும் நியமிக்கப்பட்டார்.
- பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- பஞ்சாபின் சிரோமணி அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் வலியறுத்தி உள்ளார்.
பிரிட்டனில் இந்தியாவை சேர்ந்த 2 முதிய சீக்கியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி, வால்வர்ஹாம்டன் ரெயில் நிலையத்திற்கு வெளியே மூன்று இளைஞர்கள் இரண்டு சீக்கியர்களைத் தாக்கினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதில் பாதிக்கப்பட்டவர்கள் தரையில் கிடப்பதையும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் அவர்களை உதைப்பதையும், இரு சீக்கியர்களின் அகற்றப்பட்ட தலைப்பாகைகள் தரையில் கிடப்பதையும் காண முடிகிறது.
சம்பவ இடத்திலிருந்து மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆனால் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பஞ்சாபின் சிரோமணி அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் இந்த சம்பவத்தை கடுமையாகக் கண்டித்து, இது ஒரு கொடூரமான இனவெறி குற்றம் என்று தெரிவித்துள்ளார்.
சீக்கிய சமூகம் எப்போதும் மற்றவர்களின் நலனுக்காக பாடுபடுவதாகவும், உலகம் முழுவதும் பாதுகாப்பையும் மரியாதையையும் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தப் பிரச்சினையை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வலுவாக எழுப்புமாறு பாதல் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- வழக்கமான மாதவிடாய் ஏற்படுவதில் எந்த மாறுபாடும் இல்லாமல் இருந்துள்ளது.
- வயிற்று வலியால் கழிவறைக்கு சென்றபோது, பெண் குழந்தை பிறந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் மைக்கேல் க்ரீன். இவரது மனைவி ஹெலன். இவர்களுக்கு 6 வயதில் டார்சி என்ற பெண் குழந்தை உள்ளது.
மைக்கேல் க்ரீன் தனது குடும்பத்துடன் 10 நாள் சுற்றுப் பயணமாக கனடா சென்றுள்ளார். டோரான்டோவில் தங்கியிருந்தபோது ஹெலனுக்கு சற்று வயிறு வலித்துள்ளது. இதனால் கழிவறைக்கு சென்றுள்ளார். திடீரென வயிற்றில் இருந்து வெளியே ஏதோ ஒன்று தள்ளுவது போன்று உணர்ந்துள்ளார். அப்போது கீழே பார்த்தபோதுதான், அவரது வயற்றில் இருந்து குழந்தை பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஹெலன், தான் கர்ப்பிணியாக இருப்பதாக உணர்ந்ததே இல்லையாம். அதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லையாம் எனத் தெரிவித்துள்ளார். இந்த வகையான கர்ப்பத்திற்கு cryptic pregnancy ஆகும். அவருக்கு வழக்கமாக வரக்கூடிய மாதவிடாயில் எந்த மாறுபாடும் ஏற்படவில்லையாம். அப்படி இருந்தும் குழந்தை பிறந்துள்ளது.
என்றாலும், தற்போது தங்களது குடும்பத்தில் கூடுதலான ஒரு பெண் குழந்தை இணைந்துள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளனர். இது மிக மிகப்பெரிய ஷாக். இருந்தாலும் லவ்லி சர்ப்பிரைஸ் என ஹெலன் தெரிவித்துள்ளார்.
- விமானியின் செயலை விமானியில் இருந்த மற்ற பணியாளர்கள் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் தெரிவித்தனர்.
- பின்னர் விமானம் தரையிறக்கப்பட்டபின் அவர் கைது செய்யப்பட்டார்.
இங்கிலாந்தின் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூ யார்க்குக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.
அப்போது, விமானத்தை எப்படி ஓட்டுவது என்பதை அதே விமானத்தில் பயணித்த தனது குடும்பத்தினருக்குக் காட்டுவதற்காக விமானத்தின் காக்பிட்-ஐ (விமானி அறைக்கதவை) விமானி ஒருவர் திறந்து காட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
பொதுவாக, விமானக் கடத்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க பயணத்தின்போது காக்பிட் எப்போதும் பாதுகாப்பாக மூடப்பட்டிருக்கும்.
இந்நிலையில் விதிமுறைகளை மீறியதற்காக விமானி இடைநீக்கம் செய்யப்பட்டார். விமானியின் செயலை விமானியில் இருந்த மற்ற பணியாளர்கள் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் தெரிவித்தனர்.
- 'தி ஐ பேப்பர்' (The i Paper) என்ற நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.
- 20% அதிகமாக வேறொருவருக்கு வாடகைக்கு விட்டார்.
பிரிட்டனின் வீட்டற்றோர் நலத்துறை அமைச்சர் ருஷனாரா அலி சர்ச்சைக்கு சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ருஷனாரா அலி லண்டனில் இருந்த தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை வெளியேற்றி, மாத வாடகையை 700 பவுண்ட் (சுமார் ரூ.73,000) அதிகரித்து வேறொருவருக்கு வாடகைக்கு விட்டதாக 'தி ஐ பேப்பர்' (The i Paper) என்ற நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.
இது சர்ச்சையான நிலையில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு எழுதிய கடிதத்தில், தான் பதவியில் தொடர்ந்தால், அரசின் லட்சியப் பணிகளுக்கு ஒரு குறுக்கீடாக இருக்கும் என்று ருஷனாரா அலி குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், தான் எல்லா நேரங்களிலும் அனைத்து சட்டத் நடைமுறைகளையும் பின்பற்றியதாகவும், தனது பொறுப்புகளை தீவிரமாக எடுத்துக்கொண்டதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ருஷனாரா அலியின் கடின உழைப்பை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்தார்.
- கேரி சம்பவ இடத்திலேயே இறந்ததாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
- 29, 30 மற்றும் 54 வயதுடைய மூன்று பெண்களும் உள்ளனர்.
பிரிட்டனில் சீக்கிய இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் 30 வயதான குர்முக் சிங் அல்லது கேரி என அடையாளம் காணப்பட்டார். அவர் பிரிட்டன் குடிமகன் ஆவார்.
ஜூலை 23 (புதன்கிழமை) கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில் உள்ள ஃபெல்பிரிட்ஜ் சாலையில் அவர் கும்பல் ஒன்றால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கேரி சம்பவ இடத்திலேயே இறந்ததாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் அமர்தீப் சிங் என்ற 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமர்தீப்பைத் தவிர, கேரியைக் கத்தியால் குத்தியதற்காக மற்ற சிலரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 29 வயதுடைய ஒரு இளைஞர், 29, 30 மற்றும் 54 வயதுடைய மூன்று பெண்களும் உள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- லண்டனில் உள்ள ஹீத்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டெட், லூடன், சிட்டி மற்றும் சவுத்எண்ட் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களை பாதித்தது.
- முழுமையான இயல்புநிலை திரும்பும் வரை சிறிது தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய விமானப் போக்குவரத்து சேவைகளில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதன்கிழமை மாலை பிரிட்டன் தலைநகர் லண்டன் வான்வெளி முழுமையாக மூடப்பட்டது.
இந்தப் பிரச்சினையால் இங்கிலாந்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கப்பட்டன. இதனால் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கடுமையான இடையூறு ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானங்கள் தாமதமாகின அல்லது ரத்து செய்யப்பட்டன.
தொழில்நுட்பக் கோளாறு தீர்க்கப்பட்டு லண்டன் பகுதியில் இயல்புநிலை செயல்பாடுகளை மீட்டெடுத்ததாக NATS பொறியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினையால் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக NATS தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு NATS மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இந்த சம்பவம் முக்கியமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டெட், லூடன், சிட்டி மற்றும் சவுத்எண்ட் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களை பாதித்தது.
தற்போதைய பிரச்சினை விரைவாக தீர்க்கப்பட்டாலும், முழுமையான இயல்புநிலை திரும்பும் வரை சிறிது தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






