என் மலர்
உலகம்
- வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.
- வங்காளதேசத்தின் இடைக்கால அரசுடன் தொர்பில் இருந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது.
இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனால் இடைக்கால அரசு அமையும் என வங்கதேச ராணுவ தளபதி தெரிவித்தார். இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று இரவு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், வங்காளதேசத்தின் இடைக்கால அரசுடன் தொர்பில் இருந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "வங்காளதேச இடைக்கால அரசுடன் அமெரிக்க அரசு தொடர்பில் உள்ளது. இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசின் பதவியேற்பு விழாவில் அமெரிக்க தூதர் கலந்து கொண்டார். வங்காளதேச மக்களுக்கு ஜனநாயகமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என இடைக்கால அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.
- ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் அடைந்ததால் இடைக்கால அரசும் அமையும் என ராணுவம் அறிவித்தது.
- நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக்கொண்டது.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனால் இடைக்கால அரசு அமையும் என வங்கதேச ராணுவ தளபதி தெரிவித்தார். இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.
இடைக்கால அரசில் மாணவர் அமைப்பினர், பெண்கள், இந்துக்கள் கொண்ட ஆலோசனைக் குழு பதவி ஏற்றது. வங்கதேச வங்கியின் முன்னாள் கவர்னர், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் உள்ளிட்டோர் பதவி ஏற்றனர்.
சுதந்திர போராட்ட வீரர் பரூக்-இ-ஆஸாம், மனித உரிமை ஆர்வலர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பதவி ஏற்றனர். முகமது யூனுஸ் தலைமையில் 17 பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
- செஸ் வீராங்கனை அமினா போட்டி நடைபெறும் இடத்திற்குள் நுழைகிறார்.
- அவர் எதிராளியின் மேசையை அணுகி செஸ் போர்டில் பாதரசம் தெளிப்பது பதிவானது.
மாஸ்கோ:
ரஷியாவின் தாகெஸ்தானில் நடந்த செஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது வீராங்கனையான ஒஸ்மானோவா திடீரென நோய்வாய்ப்பட்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போட்டியில் ரஷிய வீராங்கனை அமினா அபகராவோ தனது எதிரிக்கு விஷம் வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவையும் ஆய்வு செய்தனர்.
அதில், செஸ் வீராங்கனை அமினா போட்டி நடைபெறும் இடத்திற்குள் நுழைகிறார். போட்டி தொடங்கும் முன் அமினா அபகரோவா தனது எதிராளியின் மேசையை அணுகி செஸ் போர்டில் பாதரசத்தை தெளிப்பது பதிவாகியுள்ளது.
இதையடுத்து, அமினா அபகராவோவுக்கு விளையாட தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக அந்நாட்டு விளையாட்டு மந்திரி கூறுகையில், பலரைப் போலவே நானும் என்ன நடந்தது என்பதில் குழப்பம் அடைந்துள்ளேன். அமினா அபகரோவா போன்ற அனுபவம் வாய்ந்த போட்டியாளரின் நோக்கங்கள் புரிந்துகொள்ள முடியாதவை. அவர் நிச்சயம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
A chess tournament in the Russian republic of Dagestan took a dramatic turn when a player was accused of poisoning her opponent with mercury.
— UNITED24 Media (@United24media) August 7, 2024
Amina Abakarova approached her opponent's table before the start of the match and spilled mercury near the chessboard. pic.twitter.com/vh2YpVmpDU
- ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.
- இஸ்மாயில் ஹனியே கொலைக்கு இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் உயர் அதிகார தலைவர் உத்தரவு.
ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்ததன் மூலம் இஸ்ரேல் மூலோபாய தவறு செய்துவிட்டது. ஏனென்றால் இஸ்ரேல் அதற்கான மோசமான விலையை கொடுக்க இருக்கிறது என ஈரான் பொறுப்பு வெளியுறவுத்துறை மந்திரி அலி பகாரி தெரிவித்துள்ளார்.
சவுதி கடற்கரை நகரான ஜெட்டாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டதற்கு அடுத்த நாள் அலி பாகரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பதற்றம், போர் மற்றும் மற்ற நாடுகளுடன் மோதலை விரிவாக்கம் செய்ய இஸ்ரேல் விரும்புகிறது. எனினும் ஈரானுடன் போர் புரியும் நிலையில் இஸ்ரேல் இல்லை. அவர்களுக்கு அதற்கான திறனும் இல்லை. வலிமையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) 57 உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு இஸ்ரேல்தான் முழு பொறுப்பு என பிரகடனம் செய்தனர்.
இதற்கிடையே ஹிஸ்புல்லா ராணுவ கமாண்டர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு முழு வீச்சில் பதிலடி கொடுக்கப்படும் என லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1198 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் 251 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில் 111 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதில் 39 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் 39,699 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் எத்தனை பேர், ஹமாஸ் அமைப்பினர் எத்தனை பேர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரால் கிழக்கு மத்திய பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
- மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
- கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை.
தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
புத்தாளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
- அவாமி லீக் கட்சிக்காக நிச்சயம் வங்காளதேசம் திரும்புவார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற மாணவர்கள் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்துள்ள அவர், இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்டுள்ளார். ஆனால் இங்கிலாந்து இது தொடர்பாக எந்த பதிலும் அளிக்காமல் உள்ளது. இதற்கிடையே இந்தியாவும் அவருக்கு நிரந்தர அடைக்கலம் கொடுக்குமா? என்பதில் கேள்வி எழுந்தது.
இதனால் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடு எது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தனது தாயார் வங்கதேசத்தில் மீண்டும் ஜனநாயகம் திரும்பிய பின், சொந்த நாடு திரும்புவார் என ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் தெரிவித்துள்ளார்.
சஜீப் வசேத் பிடிஐ-க்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
எனது தாயார் ஷேக் ஹசீனா உறுதியாக வங்காளதேசம் திரும்புவார். அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் திரும்புவாரா? அரசியல் செயல்பாட்டுடன் திரும்புவாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஷேக் முஜிபுர் ரஹ்மான் குடும்ப உறுப்பினர்கள் நாட்டு மக்களை கைவிட்டுவிட மாட்டார்கள். அதேபோல் பாதிக்கப்பட்டுள்ள அவாமி லீக் கட்சியையும் கைவிடமாட்டார்கள் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.
தனது தாயைப் பாதுகாத்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வங்கதேசத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச கருத்தை உருவாக்கவும் அழுத்தம் கொடுக்கவும் இந்தியா உதவ வேண்டும் என இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பமாட்டார் என்று நான் சொன்னது உண்மைதான். ஆனால், நாடு முழுவதும் அவாமி லீக் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இப்போது நாங்கள் எங்கள் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க என்ன வேண்டுமானாலும் செய்யப் போகிறோம். நாங்கள் அவர்களை அப்படியே விட்டுவிடப்போவதில்லை.
அவாமி லீக் வங்கதேசத்தின் மிகவும் பழமையான கட்சி. ஆகவே, அக்கட்சி தொண்டர்களிடம் இருந்து அப்படியே விலகிச் செல்ல முடியாது. வங்கதேசத்தில் மீண்டும் ஜனநாயகம் திரும்பும்போது ஷேக் ஹசீனா உறுதியாக வங்காளதேசம் திரும்புவார்.
சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தலையீடு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். தாக்குதல்கள் மற்றும் எதிர்ப்புக்கள் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்டவை, துல்லியமாக திட்டமிடப்பட்டவை மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிலைமையைத் தூண்டிவிட வேண்டுமென்றே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் என்ன செய்தாலும், அவர்கள் நிலைமையை மோசமாக்க முயன்றனர்.
இவ்வாறு சஜீப் வசாத் தெரிவித்துள்ளார்.
- சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் 8 மாதமாகும் என தகவல் வெளியானது.
- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியுடன் அவர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திரும்புகிறார்.
வாஷிங்டன்:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(58), மற்றொரு வீரரான புட்ச் வில்மோர்(61) ஆகியோர் கடந்த மாதம் 5-ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்
அவர்கள் திட்டமிட்டபடி 22-ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயுக்கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்தனர்.
இந்த பிரச்சனையால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளார். அவர்களை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியுடன் அவர்களை அழைத்துவர உள்ளனர். 4 வீரர்கள் குழுவுடன் விண்வெளிக்குச் செல்லும் இந்த டிராகன் விண்கலன் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் பூமிக்கு திரும்புமாம்.
ஸ்டார் லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படாமல் சுனிதா திரும்புவதில் சிக்கல் நீடித்தால் இதுதான் ஒரே வழி ஆகும்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் சென்றவர்கள் 8 மாதம் கழித்தே பூமி திரும்புவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தயார் செய்துவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
- ஜூலை 16-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 4-ந்தேதி வரை 328 பேர் உயிரிழந்துள்ளனர்.
- செவ்வாய்க்கிழமை மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் மிகப்பெரிய வகையில் வன்முறையாக வெடித்தது. இந்த போராட்டம் ஜூலை மத்தியில் தொடங்கிய பின்னர் அமைதி நிலை திரும்பியது.
பின்னர் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டமும் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசு சொத்துக்கள் சூறையாடப்பட்டதுடன் ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
இதனால் ஷேக் ஹசீனா தனது பதிவியை ராஜினாமா செய்தார். ராணுவம் இடைக்கால அரசை அமைப்பதாக தெரிவித்தது.
ஷேக் ஹசீனா கடந்த திங்கட்கிழமை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பினார். அதன்பின்பும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. ஷேக் ஹசீனா கட்சியான அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துக்கள் தீ வைத்து நாசமாக்கப்பட்டன. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஹோட்டலுக்கு தீ வைத்ததில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தபின், வங்காளதேசத்தில் நேற்று மாலை வரை குறைந்தது 232 பேர் உயிரழந்தனர். வங்காளதேசத்தில் நடைபெற்ற போராட்டம் காரணமாக மொத்த உயிரிழப்பு 560-ஐ தாண்டியுள்ளது.

ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன் 328 பேர் உயிரிழந்திருந்தனர். ஜூலை 16-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 4-ந்தேதி வரை 328 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தமாக 23 நாள் போராட்ட வன்முறையில் 560 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை (நேற்று) மட்டும் 21-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
காசிப்பூரில் உளள் காஷிம்புர் உயர்பாதுகாப்பு சிறையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தடுத்து நிறுத்த ஜெயில் வார்டன்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
- ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை.
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகி இருக்கிறது.
நிலநடுக்கம் காரணமாக ஜப்பானியை தீவுகளான குய்ஷூ மற்றும் ஷிகோகு ஆகிய பகுதிகளை ஒட்டிய கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. நிலநடுக்கம் மியாசகியில் இருந்து 20 மைல் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்துள்ளது.
- டெய்லர் ஸ்விப்ட் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார்.
- டெய்லர் ஸ்விப்ட் இசை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட். இவரது பாடல்களுக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்.
அந்த வகையில், டெய்லர் ஸ்விப்டின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரியா நாட்டில் மூன்று நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவரது இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் சதித்திட்டம் தீட்டியதை போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இசை நிகழ்ச்சியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அவர்களது வீட்டில் பல்வேறு ரசாயனங்கள் மற்றும் பொருட்களை போலீசார் கண்டறிந்தனர். அவை வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் அடுத்த 10 நாட்களுக்குள் திருப்பித் தரப்படும் என்றனர்.
- தன்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால் அமெரிக்காவில் ரத்தக் களறி ஏற்படும் என டிரம்ப் மிரட்டல்
- ட்ரம்ப் தோல்வியடைந்தால் அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெறாது
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டுடிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (வயது 81) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தேர்தல் விவாத நிகழ்ச்சியில் டிரம்ப்-ன் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். வேட்பாளரை மாற்ற கட்சியில் பல தலைவர்கள் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார்.
இதனையடுத்து, துணை அதிபர் கமலா ஹாரிஸ் (வயது 59) ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவேளை ட்ரம்ப் தோல்வியடைந்தால் கமலா ஹாரிஸ்க்கு அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெறாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
CBS செய்தி தொலைக்காட்சிக்கு அதிபர் ஜோ பைடன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ட்ரம்ப் கூறியதில் அர்த்தம் உள்ளது. அதிபர் தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்தால் அமெரிக்காவே ரத்த களறியாகும்" என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால் அமெரிக்காவில் ரத்தக் களறி ஏற்படும் என்று கடந்த மார்ச் மாதம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் துனிசியா பிரதமர் நஜிலா கடந்த ஆண்டு நீக்கப்பட்டார்.
- துனிசியா அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
துனிசியா அதிபர் கைஸ் சையத் அந்நாட்டு பிரதமர் அகமது ஹச்சானியை எவ்வித காரணமும் தெரிவிக்காமல் பதவி நீக்கம் செய்துள்ளார். இவருக்கு பதிலாக துனிசியாவின் புதிய பிரதமராக அந்நாட்டு அமைச்சர் கமேல் மதௌரி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக துனிசியா அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஹச்சானி துனிசியா பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இவர் நஜிலா பௌடனை தொடர்ந்து துனிசியா பிரதமராக பதவியேற்றார். முன்னதாக நஜிலா பௌடனும், பிரதமர் பதவியில் இருந்து எவ்வித காரணமும் இன்றி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று கைஸ் சையத் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு ஆணை மூலம் ஆட்சி செய்வதாக அறிவித்தார். இதற்கு ஏற்ப அந்நாட்டு அரசியலமைப்பு 2022 ஆம் ஆண்டு மாற்றி எழுதப்பட்டது.
அதன்படி துனிசியாவில் அதிபருக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு குறைந்த அளவிலான அதிகாரத்தை வழங்கும் வகையில் மாற்றப்பட்டது. தற்போது பிரதமரமாக பொறுப்பேறகும் மௌதரி கடந்த மே மாதம் தான் அமைச்சரவையில் இடம்பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






