ஹமாஸ் தலைவரை கொலை செய்ததன் மூலம் இஸ்ரேல் கடும் விளைவுக்கான தவறை செய்துவிட்டது: ஈரான்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.இஸ்மாயில் ஹனியே கொலைக்கு இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் உயர் அதிகார தலைவர் உத்தரவு.
ஹமாஸ் தலைவரை கொலை செய்ததன் மூலம் இஸ்ரேல் கடும் விளைவுக்கான தவறை செய்துவிட்டது: ஈரான்
Published on

ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்ததன் மூலம் இஸ்ரேல் மூலோபாய தவறு செய்துவிட்டது. ஏனென்றால் இஸ்ரேல் அதற்கான மோசமான விலையை கொடுக்க இருக்கிறது என ஈரான் பொறுப்பு வெளியுறவுத்துறை மந்திரி அலி பகாரி தெரிவித்துள்ளார்.

சவுதி கடற்கரை நகரான ஜெட்டாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டதற்கு அடுத்த நாள் அலி பாகரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பதற்றம், போர் மற்றும் மற்ற நாடுகளுடன் மோதலை விரிவாக்கம் செய்ய இஸ்ரேல் விரும்புகிறது. எனினும் ஈரானுடன் போர் புரியும் நிலையில் இஸ்ரேல் இல்லை. அவர்களுக்கு அதற்கான திறனும் இல்லை. வலிமையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) 57 உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு இஸ்ரேல்தான் முழு பொறுப்பு என பிரகடனம் செய்தனர்.

இதற்கிடையே ஹிஸ்புல்லா ராணுவ கமாண்டர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு முழு வீச்சில் பதிலடி கொடுக்கப்படும் என லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1198 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் 251 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில் 111 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதில் 39 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் 39,699 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் எத்தனை பேர், ஹமாஸ் அமைப்பினர் எத்தனை பேர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரால் கிழக்கு மத்திய பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com