என் மலர்tooltip icon

    உலகம்

    • வழக்கறிஞர்கள் மற்றும் அதிபர் பைடனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
    • ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

    ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டார். ஹண்டர் பைடனின் இந்த செயல், அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மற்றும் அதிபர் பைடனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

    54 வயதான ஹண்டர் பைடன் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். குற்றத்தை ஒப்புக் கொண்டால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கும் சூழல் உருவாகலாம் என்று ஹண்டர் பைடன் இவ்வாறு செய்ததாக தெரிகிறது.

    அமெரிக்க மாவட்ட நீதிபதி மார்க் ஸ்கார்சி வழக்கில் டிசம்பர் 16 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்படலாம். 

    • ஊழியர்களுக்கு இந்த சலுகை இந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த டிண்டர் விடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தாய்லாந்தைச் சேர்ந்த ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம் ஒன்று தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Tinder Leave) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கு இந்த டிண்டர் விடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கூறியதை அடுத்து அந்நிறுவனம் இந்த முடிவை அறிவித்துள்ளது.

    காதல் செய்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும், இது உற்பத்தியை அதிகரிக்க உதவும் என அந்நிறுவனம் நம்புகிறது. 

    • அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் தெரிவித்தார்.
    • நீதித்துறை உள்பட 4 முக்கிய மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    கீவ்:

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கி வருவதால் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.

    ரஷியாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துவைத்து, ரஷியாவின் திட்டத்தை முறியடிக்க உக்ரைன் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையே, அதிபர் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 4 முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

    ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய மந்திரி ஒலெக்சாண்ட்ர் கமிஷின், நீதித்துறை மந்திரி டெனிஸ் மலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை மந்திரி ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் ஆகிய 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    அமைச்சரவை மாற்றம் இருக்கும் என கடந்த வாரம் குறிப்பிட்டிருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பாராளுமன்றத்திற்கான அந்தக் கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் மந்திரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

    மேலும், உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், உக்ரைனுக்கான புதிய வெளியுறவு மந்திரியாக ஆண்ட்ரி சைபிஹாவை நியமனம் செய்து அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டார்.

    ரஷியாவுக்கு எதிராக போர் நடந்து வரும் நிலையில், வெளியுறவு மந்திரி உள்ளிட்ட மந்திரிகள் ராஜினாமா செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியரை அந்நாட்டு அதிபர் மேக்ரான் நியமித்தார்.
    • பல்வேறு பதவிகளை வகித்துள்ள பார்னியர், ஐரோப்பிய ஒன்றிய ஆணையராக இருந்துள்ளார்.

    பாரீஸ்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர் மைக்கேல் பார்னியர் (73). இவர் 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

    பல்வேறு பிரெஞ்சு அரசாங்கங்களில் பதவிகளை வகித்த இவர், ஐரோப்பிய ஒன்றிய ஆணையராகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில், பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியரை அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரான் நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளார் என பிரதமர் இல்ல அதிகாரி தெரிவித்தார்.

    இதன்மூலம் பிரான்சின் மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை மைக்கேல் பார்னியர் பெறுகிறார்.

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
    • ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    ஜனநா யக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்திய கருத்துக்கணிப்பில் இரு வரும் இடையே சிறிய அளவில்தான் வித்தியாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறும்போது, கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் சில விகிதங்களில் முன்னேறி வந்தாலும் தொடக்கம் முதலே டிரம்ப் சராசரியாக 47 சதவீத ஆதரவுடன் உறுதியான இடத்தில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

    விலடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசிய புதின், "அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தான் எங்களது விருப்பமான வேட்பாளராக இருந்தார். ஆனால் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸை ஆதரித்தார். ஆகவே நாங்களும் கமலா ஹாரிஸை ஆதரிக்கிறோம்.

    கமலா ஹாரிஸின் சிரிப்பு தனித்துவமாக உள்ளது. அந்த சிரிப்பே அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உணர்வைத் தருகிறது.

    முன்பு அதிபராக இருந்த ட்ரம்ப், ரஷியாவிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தார். கமலா ஹாரிஸ் அத்தகைய செயல்களை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்.

    ஆனால் இறுதியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் தான் முடிவு செய்வார்கள்" என்று தெரிவித்தார்.

    • ரஷியா சென்ற நிலையில் பிரதமர் மோடி உக்ரைன் சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
    • உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்ப்பு.

    மாஸ்கோ:

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்துவருகின்றன. அமெரிக்காவும் உதவி வருகிறது. இதனால் ரஷியாவிடம் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்த நாடுகளால் பேச முடியவில்லை.

    சீனா ரஷியாவுடன் இணக்கமாக உள்ளது. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தை என வரும்போது விலகி நிற்கிறது. இந்தியா உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் நட்பு நாடாக விளங்குகிறது. சமீபத்தில் ரஷியாவிற்கு சென்ற பிரதமர் மோடி, உக்ரைனுக்கும் சென்றார்.

    இதனால் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என உலக நாடுகள் நம்புகின்றன.

    இதற்கிடையே, பிரதமர் மோடி ரஷியா, உக்ரைன், போலந்து சுற்றுப்பயணத்தை முடிக்கு கொண்டு இந்தியா திரும்பிய நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியிடம் டெலிபோனில் பேசினார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உக்ரைன் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும்.

    இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் போரின் முதல் வாரங்களில் ரஷியா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே எட்டப்பட்ட பூர்வாங்க ஒப்பந்தம் ஒருபோதும் செயல்படுத்தப்படாது. அவை பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமையும் என தெரிவித்தார்.

    • வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
    • இந்தியாவில் இருந்கொண்டு கருத்து தெரிவிப்பதை நல்லதல்ல எனக்கிறார் முகமது யூனுஸ்.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் உள்ளார்.

    இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அவர் எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் அடிக்கடி அரசியல் கருத்து தெரிவித்து வருகிறார். அவர் மீது வங்கதேச இடைக்கால அரசு கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் தொடர்ந்து அவர் இந்தியாவில் இருக்க விரும்பினால் அமைதியாக இருக்க வேண்டும் என முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முகமது யூனுஸ் கூறியதாவது:-

    வங்கதேச அரசு அவரை திரும்ப அழைக்கும் வரை, இந்தியா தொடர்ந்து அவரை வைத்திருக்க விரும்பினால், அவர் அமைதியாக இருக்க வேண்டும். இது நிபந்தனையாக இருக்கும்.

    இந்தியாவில் இருந்து கருத்து தெரிவிப்பது நட்பற்ற சைகையாகும். இந்தியாவில் இருந்து அவர் கருத்து தெரிவிப்பது யாருக்கும் வசதியானது அல்ல. ஏனென்றால் அவரை நாங்கள் மீண்டும் வங்கதேசத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். அவர் இந்தியாவில் இருக்கிறார், சில சமயங்களில் அவர் கருத்து தெரிவிக்கிறார். இது பிரச்சனையாக இருக்கிறது.

    அவர் அமைதியாக இருந்திருந்தால் நாங்கள் மறந்திருப்போம். அவர் தன் சொந்த உலகத்தில் இருந்திருப்பார் என மக்கள் அதை மறந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் அமர்ந்து கொண்டு, பேசிக்கொண்டு இருப்பதோடு அறிவுரைகள் கொடுத்து வருகிறார். இது யாருக்கும் பிடிக்காது.

    ,இவ்வாறு முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    • ரஷியா சென்ற நிலையில் பிரதமர் மோடி உக்ரைன் சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
    • உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்ப்பு.

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்து வருகின்றன. அமெரிக்காவும் உதவி வருகிறது. இதனால் ரஷியாவிடம் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்த நாடுகளால் பேச முடியவில்லை.

    சீனா ரஷியாவுடன் இணக்கமாக உள்ளது. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தை என வரும்போது விலகி நிற்கிறது. இந்தியா உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் நட்பு நாடாக விளங்குகிறது. சமீபத்தில் ரஷியாவிற்கு சென்ற பிரதமர் மோடி, உக்ரைனுக்கும் சென்றார்.

    இதனால் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என உலக நாடுகள் நம்புகின்றன.

    இந்த நிலையில் பிரதமர் மோடி ரஷியா, உக்ரைன், போலந்து சுற்றுப் பயணத்தை முடிக்கு கொண்டு இந்தியா திரும்பிய நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியிடம் டெலிபோனில் பேசினார்.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு தகவல் தொடர்பு ஆலோசகர் ஜான் கெர்பியிடம், இந்தியாவால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என ஜோ பைடன் நினைத்து போன் செய்தாரா? என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு ஜான் கெர்பி "ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சிறப்புரிமைகள், உக்ரைன் மக்களின் சிறப்புரிமைகள், நியாயமான அமைதிக்கான அவரது (ஜெலன்ஸ்கி) திட்டத்திற்கு இணங்க, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவுவதற்கு எந்த நாடும் தயாராக இருந்தால், அத்தகைய பங்கை நாங்கள் நிச்சயமாக வரவேற்போம். இந்திய முக்கிய பங்கு வகிக்கும் என நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உயிரிழந்தவர்களில் 2 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
    • படுகாயம் அடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உயிரிழந்தவர்களில் 2 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் என அடையாளம் காணப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். போலீசார் விசாரணையில் 4 பேரை சுட்டுக்கொன்றவர் 14 வயது மாணவர் என்பது தெரியவந்துள்ளது.

    அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இப்போது நடந்துள்ள சம்பவத்தில் சிறுவனே கொலைகாரனாக மாறி இருப்பது பெரும் வேதனை அளிப்பதாக, அந்நாட்டு கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • நைஜீரியாவில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 81 பேர் பலியாகினர்.

    அபுஜா :

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாக போகோ ஹாரம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தாக்குதல் நடத்தி இதுவரை பல்லாயிரம் பேரை கொன்று குவித்துள்ளனர்.

    இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தினரை குறிவைத்து பயங்கர ஆயுதங்களுடன் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 81 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் மாயமாகினர் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

    • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறிதமிழக மீனவர்கள் கைது.
    • தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை.

    தமிழக மீனவர்கள் 4 பேர் மற்றும் விசைப்படகை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

    எல்லைத்தாண்டி வந்து மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    மேலும், அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

    கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்த அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வேளியாகியுள்ளது.

    • அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் தெரிவித்தார்.
    • நீதித்துறை உள்பட 4 முக்கிய மந்திரிகள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    கீவ்:

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கி வருவதால் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.

    ரஷியாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துவைத்து, ரஷியாவின் திட்டத்தை முறியடிக்க உக்ரைன் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையே, அதிபர் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 4 முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

    ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய மந்திரி ஒலெக்சாண்ட்ர் கமிஷின், நீதித்துறை மந்திரி டெனிஸ் மலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை மந்திரி ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் ஆகிய 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    அமைச்சரவை மாற்றம் இருக்கும் என கடந்த வாரம் குறிப்பிட்டிருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பாராளுமன்றத்திற்கான அந்தக் கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் மந்திரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், உக்ரைன் வெளியுறவு மந்திரியான டிமிட்ரோ குலேபா தனது பதவியை இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

    ரஷியாவுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×