என் மலர்
தலைப்புச்செய்திகள்
- குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி, இன்று முன்னணி நடிகையாக மாறியிருக்கிறார்.
- சமூக ஊடகங்களில் ஒவ்வொரு பதிவிற்கும் ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
டி.வி. நடிகை ஒருவர், தனது 24 வயதிலேயே ரூ.250 கோடி சொத்துக்கு அதிபதி என்றால் நம்பமுடியுமா? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். அந்த நடிகையின் பெயர் ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி. இவர் பாலிவுட் டி.வி. தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி, இன்று முன்னணி நடிகையாக மாறியிருக்கிறார். 'தில் மில்கே', 'காசி: அப் நா ராஹே தேரா கக்கா கோரா', 'புல்வா' போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

இதுதவிர 'பியர் பேக்டர்' போன்ற பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு ரூ.18 லட்சமும், காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு ரூ.2 லட்சமும், சமூக ஊடகங்களில் ஒவ்வொரு பதிவிற்கும் ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
நடிகை என்பதை தாண்டி ரியல் எஸ்டேட் மற்றும் ஜவுளித்துறையிலும் பங்களிப்பை ஈட்டி, தொழில் அதிபராகவும் கலக்கி வருகிறார். இவருடைய சொத்தின் நிகர மதிப்பு மட்டுமே சுமார் ரூ.250 கோடி என கூறப்படுகிறது.
- வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
- பவன் கல்யாணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் நடித்துள்ள 'They Call Him OG' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் பவன் கல்யாணின் வாள் சுழற்சியிலிருந்து அவரது பாதுகாவலர் நூலிழையில் உயிர் தப்பினார்.
விழா மேடைக்கு வந்த பவன் கல்யாண் வாளை சுழற்றியபோது, அது அவரது பாதுகாவலரின் அருகில் சென்றது. இதில் அந்த பாதுகாவலர் சுதாரித்துக்கொண்டதால் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பவன் கல்யாணின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்து வருகின்றனர்.
- முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
- ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.
முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.
பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் இரண்டாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..
இரண்டாவது நாள் போற்றி பாடல்:
ஓம் வளம் நல்குவாய் போற்றி
ஓம் நலந்தரும் நாயகி போற்றி
ஓம் முக்கண் மூர்த்தியே போற்றி
ஓம் அறத்தின் வடிவோய் போற்றி
ஓம் மின் ஒளி அம்மா போற்றி
ஓம் எரி சுடராய் நின்ற தேவி போற்றி
ஓம் ஏற்றத்துக்கரசி போற்றி
ஓம் எரம்பன் தாயானவளே போற்றி
ஓம் எங்களின் தெய்வமே போற்றி
ஓம் ஒளிக்குள் ஒளிர்பவனே போற்றி
ஓம் ஈரேழுலகில் இருப்பாய் போற்றி
ஓம் சூளா மணியே போற்றி
ஓம் சுந்தர வடிவே போற்றி
ஓம் ஞானத்தின் வடிவே போற்றி
ஓம் நட்புக்கரசியே போற்றி
ஓம் திரிமூர்த்தி தேவியே போற்றி!
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
யோகமான நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். சகோதர ஒற்றுமை பலப்படும். அரைகுறையாக நின்ற பணி தொடரும். வரன்கள் வாயில்தேடி வரும்.
ரிஷபம்
குறைகள் அகலும் நாள். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. தொழில் வெற்றி நடைபோடும்.
மிதுனம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் செலவுகள் ஏற்படலாம். திட்டமிட்ட சில காரியங்களால் மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள்.
கடகம்
விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
சிம்மம்
சஞ்சலங்கள் தீரும் நாள். பொருளாதார நிலை உயரும். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
கன்னி
காலையில் கலகலப்பும் மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.
துலாம்
நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.
விருச்சிகம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
தனுசு
முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அகலும்.
மகரம்
நினைத்தது நிறைவேறும் நாள். உறவினர்கள் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவர். அரசியல்வாதிகளின் மூலம் செய்த உத்தியோக முயற்சி கைகூடும்.
கும்பம்
தெய்வ வழிபாட்டின் மூலம் திருப்தி காண வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.
மீனம்
பணவரவு திருப்தி தரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் கொடுப்பர்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- பால விநாயகர் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பச்சையப்பன் தெரு, காமராஜ் தெரு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (24.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
செம்பியம்: உமா நகர், முத்தமிழ் நகர் 1 முதல் 8வது பிளாக், எஸ்பிஓஏ டீச்சர்ஸ் காலனி, செக்ரட்ரியேட் தெரு, அக்பர் நகர், மாதவன் நகர், பிஆர்எச் சாலை, பரிமேகம் நகர், சுதா நகர், விக்னேஷ் நகர், விநாயகர் நகர், பால விநாயகர் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பச்சையப்பன் தெரு, காமராஜ் தெரு, ரெட்ஹில்ஸ் சாலை, மாதா தெரு, பஜனை கோவில் தெரு, பள்ளி சாலை, கிரிஜா நகர், எம்என் நகர், சன்னதி தெரு, சிட்டிபாபு நகர், கக்கன்ஜி காலனி, ராஜா தெரு, கபிலர் தெரு, எம்பிஎம் தெரு, சத்தியவாணி முத்து நகர், கருணாநிதி சாலை, நாகை அம்மையார் தெரு, ராஜாஜி தெரு.
கோயம்பேடு மார்க்கெட்: சீனிவாசநகர், பக்தவச்சலம்தெரு, சேமாத்தம்மன் நகர், இடர்.ரோடு, மேட்டுகுளம், நியூகாலனி, திருவீதி அம்மன்கோவில் தெரு, சின்மயாநகர், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர், மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஷ்வரி நகர்.
- தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
அதன்படி, வருகிற 28-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம்.
- அம்மனுக்கு இடது பக்கம், வலது பக்கம் என இரு பக்கங்களிலும் விளக்கை ஏற்ற வேண்டும்.
நவராத்திரி நாட்களில் சகல கலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி, சவுந்தர்ய லகிரி, லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றை தவறாமல் பாராயணம் செய்தல் வேண்டும். அது போல நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, கன்யா பூஜை ஆகியவற்றை செய்தல் வேண்டும். இது அளவற்ற பலன்களை அள்ளித் தரும்.
வேலை நிமித்தம் காரணமாக எல்லாராலும் இந்த பாராயணம், பூஜைகளை செய்ய முடிவதில்லை.
இத்தகையவர்களுக்காகவே நமது முன்னோர்கள் அகண்ட தீபம் ஏற்றும் ஒரு வழிமுறையை கூறி உள்ளனர். அகண்ட தீபம் என்பது விளக்கை தொடர்ந்து எரிய வைப்பது ஆகும். நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம்.

தேவியை பூஜிக்கும் இடம் அருகில் ஒரு மரப்பலகையில் மூன்று கோணமாக சந்தனத்தால் கோடு போட்டு நடுவில் சந்தனம் குங்குமமிட்டு, பூ போட்டு அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். அம்மனுக்கு இடது பக்கம், வலது பக்கம் என இரு பக்கங்களிலும் விளக்கை ஏற்ற வேண்டும்.
ஒரு விளக்கு மண் அகல் விளக்காகவும் மற்றொன்று வெள்ளி அல்லது பித்தளை விளக்காகவும் இருக்கலாம். நவராத்திரி 9 நாட்களும் இந்த இரு விளக்குகளும் தொடர்ந்து எரிவது நல்லது. இல்லையெனில் கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் விடாமல் எரிய வேண்டும். நவராத்திரி முடிந்ததும் இந்த இரு விளக்குகளையும் தானமாக கொடுத்து விட வேண்டும்.
இந்த அகண்ட தீப வழிபாட்டால், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.
- பிரம்மச்சாரிணி தேவி பார்வதி தேவியின் ஒரு அவதாரம்.
- பிரம்மச்சாரிணி தேவி தவமிருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை வழிபடுவதற்கான காலம்.
நவராத்திரி 2-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் பிரம்மச்சாரிணி தேவி. இவர் பார்வதி தேவியின் ஒரு அவதாரம் ஆவார். மேலும் மகாதேவியின் நவதுர்கா வடிவங்களில் இரண்டாவது அம்சம் ஆவார்.
பார்வதி தேவி சிவனை அடைய விரும்பி கடுமையான தவம் செய்து வந்தார். அப்போது அவர் எடுத்த தவமான, கற்பு நிறைந்த பிரம்மச்சாரி நிலைமையே பிரம்மச்சாரிணி என்ற வடிவமாக கருதப்படுகிறது.
"பிரம்மம் சாரித்தல்" எனப் பொருள் தரும் பெயர் காரணமாக, தவம், கட்டுப்பாடு, பிரம்மச்சரியம் ஆகியவற்றின் சின்னமாக பிரம்மச்சாரிணி தேவி கருதப்படுகிறாள்.
பிரம்மச்சாரிணி தேவி தவமிருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கரத்தில் ஜபமாலை மற்றும் மற்றொரு கரத்தில் கமண்டலத்தை ஏந்தியிருப்பார்.
இந்து தத்துவத்தில் வாழ்க்கையின் நான்கு நிலைகளில் ஒன்றான பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்கும் பெண்ணைக் குறிக்கும் விடாமுயற்சி மற்றும் அமைதியான வலிமையின் சின்னமாக இருக்கிறாள்.
பிரம்மச்சாரிணியின் கதை, அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் சக்தியைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறது. இதில் தீவிர தியானம், உண்ணாவிரதம் மற்றும் காதல் வெளிப்படுவதற்காக பல வருட காத்திருப்பு ஆகியவை அடங்கும். எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் வந்தாலும், தனது பக்தர்கள் தங்கள் இலக்குகளில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.
ஸ்லோகம்:
"ஓம் தேவி பிரம்மச்சாரிணியை நம:" எனும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
- நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர்.
- நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.
புரட்டாசியில் வரும் நவராத்திரியை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், ஆண்டுதோறும் நான்கு விதமான நவராத்திரிகள் வரும். பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி, ஆடியில் வரும் மகா வராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகியவை அவை. இந்த நான்கு நவராத்திரிகளையும் முறையாகக் கடைப்பிடிக்கும் பெண்கள், அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெறலாம். மற்ற மூன்று நவராத்திரிகளை கடைப்பிடிக்காதவர்கள் புரட்டாசி நவராத்திரியைப் பக்தியுடன் கடைப்பிடிக்கலாம்.
நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். மன உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதியை அளித்து, ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் இந்த நவராத்திரி வழிபாடு.
நவராத்திரி விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள்.
நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள்.
நவராத்திரியின் இரண்டாம் நாளும் துவிதியை திதியில் வரும் செவ்வாய்கிழமையான இன்று சிவனை பெற தவம் செய்த பராசக்தியின் வடிவமான பிரம்மசாரிணி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் சிவப்பு நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் சக்தி மற்றும் உறுதியை குறிக்கிறது. மேலும் பிரம்மசாரிணி தேவிக்கு ஜபமாலை, கமண்டலம் சின்னமாக கருதப்படுகிறது.

பக்தர்கள் சிவப்பு ரோஜாக்கள் அல்லது செம்பருத்தி இதழ்களைப் பயன்படுத்தி இல்லத்தில் ரங்கோலி கோலமிட்டும், சிவப்பு நிற மலர்களான ரோஜாக்கள் மற்றும் செம்பருத்திகளை கொண்டு அம்மனுக்கு வழிபாடு நடத்தலாம்.
- முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையை மோடி உருவாக்கினார்.
- மோடியின் செயல்திறனை அருகிலிருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.
தேசிய தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத ஒருவரை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அது பிரதமர் நரேந்திர மோடிதான். இத்தகைய அர்ப்பணிப்பு தற்செயலாக வருவதில்லை. பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பால் மட்டுமே இது சாத்தியமானது" என்று தெரிவித்தார்.
மோடி, உள்ளூர் மட்டத்தில் ஒரு கட்சி ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பாஜகவின் தேசியத் தலைவராக உயர்ந்தார், பின்னர் குஜராத்தின் முதல்வரானார், பின்னர் மிகவும் பிரபலமான பிரதமரானார். மோடியின் செயல்திறனை அருகிலிருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது என்று அமித் ஷா தெரிவித்தார்.
தொடர்ந்து, முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையை மோடி உருவாக்கியதாக அமித் ஷா நெகிழ்ச்சி தெரிவித்தார்.
- பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC) உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் விமர்சித்துள்ளார்.
- நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் 'மை லார்ட்' போன்ற பழமையான சம்பிரதாயங்கள் மாற்றங்கான வேண்டும்.
இந்தியாவின் நீதித்துறை அமைப்பே, நாட்டை ஒரு வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கான மிகப்பெரிய தடையாக உள்ளது என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC) உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் விமர்சித்துள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற 'நியாய நிர்மாண் 2025' மாநாட்டில் பேசிய சன்யால், "வளர்ந்த நாடாக மாறுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் 20-25 ஆண்டுகள் மட்டுமே அவகாசம் உள்ளது.
இந்த நேரத்தில் துரிதமான வளர்ச்சி தேவை. ஆனால், நீதி அமைப்பில் உள்ள மெதுவான நடைமுறைகள், அமலாக்கத்தில் உள்ள பலவீனங்கள் மற்றும் வழக்குகளில் தாமதமான தீர்ப்புகள் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உள்ளன.
நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் 'மை லார்ட்' போன்ற பழமையான சம்பிரதாயங்கள், நீண்ட விடுமுறைகள் மற்றும் நீதித்துறையில் உள்ள படிநிலைகள் ஆகியவை மாற்றங்கான வேண்டும்.
நீதித்துறை என்பது ஒரு பொது சேவை. அதை மற்ற அரசு சேவைகளைப் போலவே நவீனமயமாக்க வேண்டும்
நீதித்துறை அமைப்பு முழுமையாக சீர்திருத்தப்படாவிட்டால், விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) என்ற தொலைநோக்கு இலக்கை நாம் அடைய முடியாது" என்று தெரிவித்தார்.
- ஜே.என்.யூ-வை "பாலியல் ஒழுங்கீனத்தின் கூடாரம்" என்று சித்தரிக்கும் ஆவணத்தைத் தயாரித்ததாகக் கூறப்பட்டது.
- பெரும்பாலான நாடுகளில் அவதூறு ஒரு சிவில் வழக்காக மட்டுமே உள்ளது.
நாட்டில் கிரிமினல் அவதூறு சட்டத்தை நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2016-ல் 'தி வயர்' செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரை தொடர்பாக ஜே.என்.யூ பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் அமிதா சிங் அந்த பத்திரிகை மற்றும் அதன் ஆசிரியர்கள் மீது 2017 இல் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அந்த கட்டுரையில், அமிதா சிங் ஒரு குழுவை வழிநடத்தி, ஜே.என்.யூ-வை "பாலியல் ஒழுங்கீனத்தின் கூடாரம்" என்று சித்தரிக்கும் ஆவணத்தைத் தயாரித்ததாகக் கூறப்பட்டது.
இந்த வழக்கு பல வருடங்களாக நடந்து வரும் நிலையில் உயர்நீதிமன்றம் பலமுறை தி வயருக்கு சம்மன் அனுப்பியது. இந்த வழக்கு இப்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதி சுந்தரேஷ், "இந்த வழக்கு தொடர்பாக, நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. இவ்வளவு காலம் இந்த வழக்கை இழுத்துக்கொண்டே இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "கிரிமினல் அவதூறு சட்டங்களை நீக்கும் நேரம் வந்துவிட்டது" என்றும் அதுகுறித்து பரிசீலித்து வருவதாகவும் நீதிபதி வாய்மொழியாகத் தெரிவித்தார்.
இந்தியாவில் அவதூறு என்பது சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் கிரிமினல் குற்றமாக (criminal offence) கருதப்படுகிறது.
ஆனால் பெரும்பாலான நாடுகளில் அவதூறு ஒரு சிவில் வழக்காக மட்டுமே உள்ளது. அவதூறு செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அபராதம் மட்டுமே விதிக்கப்படும், சிறைத் தண்டனை இருக்காது.
இந்த சூழலில் உச்சநீதிமன்றத்தின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.






