என் மலர்tooltip icon

    இந்தியா

    24 ஆண்டுகளாக 1 நாள் கூட லீவ் எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி தான் - அமித் ஷா புகழாரம்
    X

    24 ஆண்டுகளாக 1 நாள் கூட லீவ் எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி தான் - அமித் ஷா புகழாரம்

    • முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையை மோடி உருவாக்கினார்.
    • மோடியின் செயல்திறனை அருகிலிருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.

    தேசிய தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பங்கேற்றார்.

    அப்போது பேசிய அவர், "கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத ஒருவரை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அது பிரதமர் நரேந்திர மோடிதான். இத்தகைய அர்ப்பணிப்பு தற்செயலாக வருவதில்லை. பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பால் மட்டுமே இது சாத்தியமானது" என்று தெரிவித்தார்.

    மோடி, உள்ளூர் மட்டத்தில் ஒரு கட்சி ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பாஜகவின் தேசியத் தலைவராக உயர்ந்தார், பின்னர் குஜராத்தின் முதல்வரானார், பின்னர் மிகவும் பிரபலமான பிரதமரானார். மோடியின் செயல்திறனை அருகிலிருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது என்று அமித் ஷா தெரிவித்தார்.

    தொடர்ந்து, முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையை மோடி உருவாக்கியதாக அமித் ஷா நெகிழ்ச்சி தெரிவித்தார்.

    Next Story
    ×