என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    • இந்த சம்பவங்களில் ஒரு நபர் தான் ஈடுபாட்டார்.

    பெங்களூருவை அடுத்த இந்திரா நகரில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைக்குள் நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வெளியான தகவல்களில் பெங்களூருவில் சீரியல் கில்லர் வலம் வருவதாக கூறப்பட்டது. கொலை முயற்சி சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், கத்திக்குத்து சம்பவங்களின் பின்னணியில் சீரியல் கில்லர் யாரும் இல்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவங்களில் ஒரு நபர் தான் ஈடுபாட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    துணை காவல் ஆணையர் தேவராஜா கடந்த 8-ம் தேதி நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டதை உறுதிப்படுத்தினார். இந்த சம்பவத்தில் கொலை முயற்சி செய்த நபர் மதுபோதையில் குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்ததாகவும், கோபத்தில் நான்கு பேரை கத்தியால் குத்தியதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

    இந்த சம்பவத்தை செய்தவர் மீது சிறு சிறு திருட்டு வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும் போலீசார் உறுதிப்படுத்தினர். இந்திய சட்டங்கள் சீரியல் கில்லர்களுக்கென எந்த வரையறையும் குறிப்பிடவில்லை. பொதுப்படையில் ஒரு தனிநபர் இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்டோரை கொலை செய்தால் அவரை சீரியல் கில்லர் என்று குறிப்பிடப்படுகிறது.

    பெங்களூரு கத்திக்குத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் அவர்களின் உடல்நிலை தற்போது ஆபத்தை கடந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து இந்திராநகர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • முருகன் கோவில்களில் அலைகடலென திரண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முருகன் கோவில்களில் அலைகடலென திரண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், தைப்பூசத் திருநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தனித்துயர்ந்த

    குன்றுகள் தோறும்

    வீற்றிருக்கும்

    தமிழ்நிலக் கடவுள்;

    உலகெங்கும் வாழும்

    தமிழர்களின்

    தனிப்பெரும் கடவுள்

    முருகப் பெருமானைப்

    போற்றுவோம்!

    அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்! என கூறியுள்ளார். 



    • ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.
    • அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைப்பூசம் இன்று கோலகலமாக கொண்டாடப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் அலகு குத்தியும் தைப்பூச திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

    திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை என முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டனர். பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

    முருகப்பெருமானின் முதல்படை வீடாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. குடவரைக்கோயிலான இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டனர். காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து மூலவரான முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பழனி

    அறுபடைவீடுகளில் 3-வது படைவீடான பழனி மலை முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களும் தினமும் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தும் பாதையாத்திரையாக வந்தும் முருகப்பெருமான தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

    திருச்செந்தூர்

    தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திரளான பக்தர்கள் வேல் குத்தி காவடி எடுத்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. உச்சிகால தீபாராதனைக்கு பின் சுவாமி அலை வாயு கந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோவில், கந்தகோட்டம், குன்றத்தூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி முருகன் கோவில்களில் இன்றுகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் வடபழனி முருகன்கோவில் வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    இதேபோல் கந்த கோட்டம், குன்றத்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • ஆன்லைன் மூலம் கடந்த சனிக்கிழமை ஏலம் நடைபெற்று உள்ளது.
    • ஏலம் நடத்தும் டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் உடைமைகளுடன் இப்புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார்.

    இங்கிலாந்து:

    1997ஆம் ஆண்டு ஜே.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்' புத்தகம் வெளியானது. இந்த புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எழுதினார் ரவுலிங். இதனையடுத்து ஹாரி பாட்டர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

    இந்த நிலையில், குப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஹாரி பாட்டர் நாவலின் முதல் பதிப்பு புத்தகம் சுமார் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது. ஆன்லைன் மூலம் கடந்த சனிக்கிழமை ஏலம் நடைபெற்று உள்ளது.

    ஏலம் நடத்தும் டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் உடைமைகளுடன் இப்புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார்.

    500 புத்தகங்களே அச்சிடப்பட்டது என்றும் பொது நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட 300 பிரதிகளில் ஒன்று இது என்றும் கூறப்படுகிறது. 

    • இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன்.

    அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் எம்பெருமான் முருகன், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, ஒளியைத் தரட்டும்.

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று கூறியுள்ளார். 



    • யூடியூபரின் கருத்து பெரும் கண்டத்திற்கு உள்ளானது.
    • யூடியூபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு.

    பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா. பீர்பைசெப்ஸ் என்று அறியப்படும் இவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் India's Got Latent நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம் கோபத்தை ஏற்படுத்தக்கூடிய கேள்வியை கேட்டார். இவரது கேள்வி அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் இருந்தது.

    இதையடுத்து ரன்வீர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ரன்வீர் அல்லாபாடியாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஹேமந்த் பிஸ்வா, "இன்று கவுகாத்தி காவல் துறையினர் சில யூடியூபர்கள் மற்றும் சமூக வலைதளInfluencers மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி அசிஷ் சஞ்சல்னி, ஜஸ்பிரீத் சிங், அபூர்வா மகிஜா, ரன்வீர் அல்லாபாடியா மற்றும் சமய் ரெய்னா மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    India's Got Latent நிகழ்ச்சியில் ஆபாச மற்றும் தரக்குறைவான விவாதத்தில் ஈடுபட்டதாக இவர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, என குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்தடுப்பீர்கள் என்று கேட்டார். 

    • இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.
    • புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    லூக்கா சுப்பி, மிமி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் லக்ஷ்மண் உதேக்கர், 'சாவா' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

    சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே டிரெய்லரில் , மகாராஷ்டிராவின் பாரம்பரிய இசைக்கருவியான "லெசிம்" உடன் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனமாடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது அரசியல் ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மகாராஷ்டிரா அமைச்சர் உதய் சமந்த், ' சாவா ' படத்தில் நடனக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். படத்தில் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நடனம் ஆடுவதைக் காட்டுகிறது. இயக்குநர் இந்தப் பகுதியை நீக்க வேண்டும்.



    படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, வெளியிடுவதற்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காட்ட வேண்டும், முழு படத்தையும் பார்த்த பின்பே படத்தை வெளியிட அனுமதிக்கப்படும்.

    இல்லாவிட்டால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார். இதனையடுத்து சர்ச்சைக்குரிய நடன காட்சிகளை நீக்குவதாகப் படக்குழு உறுதி அளித்தது. இதனை தொடர்ந்து இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.



    இந்த நிலையில் 'சாவா' படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் நடிகர் விக்கி கௌஷல், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் வழிபாடு செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமிதாப்பச்சன் பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
    • பாதி சொத்துக்கு அபிஷேக் பச்சன் மனைவியான ஐஸ்வர்யாராயும் உரிமையாளராக மாறப்போகிறார்.

    இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப்பச்சன் தனது சொத்துகளை மகன் அபிஷேக் பச்சனுக்கும், மகள் சுவேதாவுக்கும் சமமாக பிரித்துக் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சில வருடங்களுக்கு முன்பே இந்த முடிவை எடுத்துவிட்டதாக அமிதாப்பச்சன் பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    அதில் அமிதாப்பச்சன், "எனக்கு பிறகு சொத்துகள் மகன், மகளுக்கு சமமாக பிரித்துக் கொடுக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. நானும், எனது மனைவி ஜெயாபச்சனும் நீண்ட காலத்துக்கு முன்பே இந்த முடிவை எடுத்து விட்டோம்.

    பெண் தனது கணவன் வீட்டுக்கு சென்று விடுகிறாள் என்று எல்லோரும் பேசுகிறார்கள். ஆனாலும் என் பார்வையில் அவள் எங்கள் மகள். அபிஷேக் பச்சனுக்கு இருக்கும் அதே உரிமைகள், எனது மகளுக்கும் இருக்கிறது'' என்று பேசி உள்ளார்.

    அமிதாப்பச்சனுக்கு சொந்தமாக தற்போது ரூ.1,600 கோடி சொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சொத்துகளை பிரிக்கும் நிலையில் பாதி சொத்துக்கு அபிஷேக் பச்சன் மனைவியான ஐஸ்வர்யாராயும் உரிமையாளராக மாறப்போகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    • பணியிடங்களுக்கு ஆரம்ப சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது.

    சென்னை:

    இந்திய ரெயில்வே துறை, நாடு முழுவதும் உள்ள 32 ஆயிரத்து 428 காலிப்பணியிடங்களை ரெயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப உள்ளது. அதில் தமிழகத்திற்கு உட்பட்ட தென்னக ரெயில்வேயில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. அதற்கான அறிவிப்பு https://www.rrbchennai.gov. in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. படித்து இருந்தால் போதுமானது.

    விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு ஆரம்ப சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது. அதில் பெண்கள், முன்னாள் படைவீரர்கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோர் ரூ.250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 22-ந்தேதி கடைசிநாளாகும்.

    • அமெரிக்காவில் மீண்டும் ஓர் விமான விபத்து அரங்கேறியது.
    • விமானத்தின் லேண்டிங் கியர் செயலிழந்ததாக தகவல்.

    அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் தனியார் ஜெட் விமானங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.

    ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தின் விமான திட்டமிடல் மற்றும் அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர் கெல்லி குஸ்டர் கூறும் போது, "நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தனியார் வணிக ஜெட் விமானத்தின் மீது மற்றொரு வணிக ஜெட் விமானம் மோதியது. டெக்சாஸின் ஆஸ்டினில் இருந்து வந்த வந்த ஜெட் விமானத்தின் தரையிறங்கும் கியர் செயலிழந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே மோதல் ஏற்பட்டது," என்று அவர் கூறினார்.

    காயமடைந்தவர்களில் இருவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒருவர் மருத்துவமனையில் உள்ளார் என்று ஸ்காட்ஸ்டேல் தீயணைப்புத் துறையை சேர்ந்த டேவ் ஃபோலியோ தெரிவித்தார். மோதலில் உயிரிழந்த நபரின் உடலை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

    "இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்" என்று ஃபோலியோ கூறினார். விபத்தைத் தொடர்ந்து ஓடுபாதை மூடப்பட்டுள்ளது. 



    • இன்று தைபூசம்.
    • சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவில் தெப்ப உற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு தை-29 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தசி இரவு 7.50 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம்: பூசம் இரவு 7.31 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று தைபூசம். சுவாமிமலை முருகப் பெருமான் போராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். வடலூர் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் அருட்பெருஞ்ஜோதி தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் வண்டியூர் எழுந்தருளி தெப்ப உற்சவம். குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவில் தெப்ப உற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திரு மஞ்சனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார பூஜை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி சமீபம் 3-ம் ஆண்டு நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நட்பு

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-உவகை

    கடகம்-அன்பு

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-உயர்வு

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- கவனம்

    மகரம்-அமைதி

    கும்பம்-செலவு

    மீனம்-சுபம்

    ×