search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plane Accident"

    • 79 வயதான விமானியால் தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாத நிலை
    • விமான ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதி விமானம் தரையிறங்கிய

    அமெரிக்காவின் நியூயார்க், வெஸ்ட்செஸ்டர் கவுன்ட்டியில் இருந்து குட்டி விமானம் ஒன்று சனிக்கிழமை மதியம் புறப்பட்டது. இந்த விமானத்தை ஓட்டிய விமானி, மற்றும் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கனெக்டிகட் இடத்தை சேர்ந்தவர்கள்.

    விமானம் மசாசுசெட்ஸ் வெஸ்ட் டிஸ்பர்ரி மர்தாஸ் வினேயார்டு விமான நிலையம் அருகே பறந்தபோது, திடீரென விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    துரிதமாக செயல்பட்ட பயணி ஒருவர் விமானத்தை தரையிறக்க முயன்றார். இருந்தாலும் அவரால் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. அருகில் உள்ள இடத்தில் விமானத்தை மோதி தரையிறக்கினார். இதனால் விமானத்தின் இடது பக்கம் இறக்கை உடைந்து சேதம் அடைந்தது.

    ஆனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவிலலை. 79 வயதான விமானி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். விமானத்தில் பயணம் செய்தவர்கள் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    • விமானம் மோதியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது
    • உயிரிழந்த விமானிகளின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஜார்ஜியா மெலோனி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ரோம்:

    இத்தாலியின் ரோம் நகரின் அருகே இன்று விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது பயங்கர விபத்து ஏற்பட்டது. இரண்டு விமானங்கள் நடுவானில் நேருக்குநேர் மோதிக்கொண்டன. பின்னர் இரண்டு விமானங்களும் தரையில் விழுந்து தீப்பற்றின. இதில் இரண்டு பயிற்சி விமானத்திலும் பயணித்த விமானிகள் உயிரிழந்தனர். விமானம் மோதியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது

    இந்த சம்பவம் வேதனை அளிப்பதாக பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறி உள்ளார். மேலும் உயிரிழந்த விமானிகளின் குடும்பத்தினர் மற்றும் சக விமானப்படை வீரர்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

    விமானிகள் பயிற்சியில் ஈடுபட்ட விமானம் U-208 என்ற இலகுரக, ஒற்றை என்ஜின் கொண்ட விமானம் ஆகும். இதில் விமானியுடன் சேர்த்து 5 பேர் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 285 கிமீ வேகத்தில் இந்த விமானத்தை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்திற்குள்ளாகிய நிலையில், விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். #AirIndia
    திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. அதிகாலை 1.20 மணியளவில் திருச்சியில் இருந்து 130 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், தொழில்நுட்பகோளாறு காரணமாக குறைவான உயரத்தில் பறந்ததால் விமானத்தின் சக்கரங்கள் விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் அதனருகே இருந்த ஐஎல்எஸ் ஆண்டனா மீது உரசியது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. ஆன்டனா மற்றும் ரன்வே விளக்குகள் உடைந்தன. 

    எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த விபத்தை தொடர்ந்து விமானம் நேராக துபாய் சென்றடைந்ததாக முன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், திருச்சி விமானநிலையத்தில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவித்தார்.



    மேலும் விமானத்தில் பயணம் செய்த 130 பயணிகளும் பத்திரமாக இருப்பதாகவும் அவர் கூறினார். 

    விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து துறைக்கு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #AirIndia #TrichyAirport

    ×