விமானிக்கு திடீர் உடல் நலக்குறைவு: குட்டி விமானத்தை மோதி தரையிறக்கிய பயணி

79 வயதான விமானியால் தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாத நிலைவிமான ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதி விமானம் தரையிறங்கிய
விமானிக்கு திடீர் உடல் நலக்குறைவு: குட்டி விமானத்தை மோதி தரையிறக்கிய பயணி
Published on

அமெரிக்காவின் நியூயார்க், வெஸ்ட்செஸ்டர் கவுன்ட்டியில் இருந்து குட்டி விமானம் ஒன்று சனிக்கிழமை மதியம் புறப்பட்டது. இந்த விமானத்தை ஓட்டிய விமானி, மற்றும் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கனெக்டிகட் இடத்தை சேர்ந்தவர்கள்.

விமானம் மசாசுசெட்ஸ் வெஸ்ட் டிஸ்பர்ரி மர்தாஸ் வினேயார்டு விமான நிலையம் அருகே பறந்தபோது, திடீரென விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

துரிதமாக செயல்பட்ட பயணி ஒருவர் விமானத்தை தரையிறக்க முயன்றார். இருந்தாலும் அவரால் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. அருகில் உள்ள இடத்தில் விமானத்தை மோதி தரையிறக்கினார். இதனால் விமானத்தின் இடது பக்கம் இறக்கை உடைந்து சேதம் அடைந்தது.

ஆனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவிலலை. 79 வயதான விமானி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். விமானத்தில் பயணம் செய்தவர்கள் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com