என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.

    விஜய் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

    ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

    இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.

    இந்நிலையில் விரைவில் தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தார்.

    ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9 வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

    எனவே  தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த சூழலில் தயாரிப்பாளர் தாணு இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், "வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க , 'தெறி' படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்." என்று அறிவித்துள்ளார்.

     

    ஜன நாயன் ரிலீஸ் தள்ளிபோனதால், கார்த்தியின் வா வாத்தியார், ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில், திரௌபதி 2 ஆகிய படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சிவகார்திகேயனின் பராசக்தி கடந்த ஜனவரி 9 முதல் திரையங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

    • பிப்ரவரி 12, 1965 அன்று கோயம்புத்தூருக்கு இந்திரா காந்தி வருகை புரியவில்லை.
    • முழுப் படமும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள 'பராசக்தி' படத்தை தடைசெய்ய வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அணி தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில துணைத் தலைவர் அருண் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "1965-ல், அனைத்து மாநிலங்களிலும் அஞ்சல் அலுவலகப் படிவங்கள் இந்தியில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்று காங்கிரஸ் அரசாங்கம் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது எங்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்குடன் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான புனைவு ஆகும்.

    திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்திப்பது போன்றும், அதில் இந்திரா காந்தி வில்லத்தனமாகப் பேசுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது முழுவதும் ஒரு கற்பனை சித்தரிப்பு காட்சி. மறைந்த தேசியத் தலைவர்களை அவர்கள் வரலாற்றில் இடம்பெறாத நிகழ்வுகளில் சம்பந்தப்படுத்திச் சித்தரிப்பது சட்டத்திற்குப் புறம்பானது. 

    இந்த சித்தரிப்பை மேலும் வலுப்படுத்தி திரைப்படத்தில் இந்திரா காந்தி பிப்ரவரி 12, 1965 அன்று கோயம்புத்தூருக்கு வருகை தந்ததாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் அப்படி ஒரு வருகை நிகழவே இல்லை. பின்னர், அவர் முன்னிலையில் ஒரு ரயில் எரிக்கப்படுவது போன்ற காட்சிகளும், இந்தி திணிப்புக்கு எதிரான கையெழுத்துக்களை அவர் ஏற்றுக்கொண்டது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் எதுவும் வரலாற்றில் நடக்கவில்லை, இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    அதுபோல திரைப்படத்தின் இறுதியில்,  நமது தலைவர்களான கே. காமராஜர், இந்திரா காந்தி மற்றும் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் உண்மையான புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. அதனுடன், பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி 200-க்கும் மேற்பட்ட தமிழ் மக்களைச் சுட்டுக் கொன்றது என்ற முற்றிலும் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு எந்தவித ஆதாரமும் இல்லாமல் முன்வைக்கப்பட்டு, நமது கட்சியையும், நமது தலைவர்களையும் தவறான மற்றும் அவதூறான தகவல்களின் மூலம் வேண்டுமென்றே கலங்கப்படுத்தும் காட்சி. 

    இது தவிர, காங்கிரஸ் கொடி எரிக்கப்படும் காட்சிகள் கூட படத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த முழுப் படமும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    வரலாற்றில் நிகழாத நிகழ்வுகளைச் சித்தரிக்கும் பராசக்தி திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். திரைப்படத் தயாரிப்புக் குழு பொது மன்னிப்புக் கோர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அநீதிக்கு எதிராகத் தங்கள் குரல்களை எழுப்புமாறு அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

    #பராசக்தி திரைப்படத்தைத் தடை செய்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக நாளை வெளியாகிறது
    • இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

    தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் பராசக்தி படம் ஜனவரி 10 ஆம்ட தேதி வெளியானது.

    பொங்கல் வெளியீடாக பராசக்தி மட்டும் வெளியான நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மற்ற படங்களும் திடீரென்று பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.

    கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக நாளை (ஜனவரி 14) வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், வா வாத்தியார் பட வெளியீட்டை ஒட்டி முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நடிகர்கள் கார்த்தி, சத்யராஜ், ஆனந்தராஜ் ஆகியோர் மரியாதையை செலுத்தினர். இது தொடர்பான புகைப்படங்களை கார்த்தி தந்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் EKO வெளியாகியுள்ளது.
    • EKO படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

    Eko' (எக்கோ) என்ற மலையாள மர்ம த்ரில்லர் திரைப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பிற மொழி ரசிகர்களையும் இப்படம் கவர்ந்துள்ளது.

    சந்தீப் பிரதீப், வினீத், நரேன் போன்றோர் நடித்துள்ள இந்தப் படம், மர்மம் மற்றும் திகில் நிறைந்த ஒரு கதைக்களத்தைக் கொண்டது. குறிப்பாக கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டுகள் எதிர்பார்ப்பவர்களைக் கவரும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில், EKO படத்தை பாராட்டி நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "EKO என்ற மலையாளப் படம் ஒரு மாஸ்டர் பீஸ். எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவர் நடிகை பியானா மோமின். அவர் தலைசிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்" என்று தெரிவித்தார்.

    • நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரம் என்பதால் பராசக்தியை தேர்வு செய்தேன்.
    • பராசக்தி படம் மூலமாக முதல் முறையாக நான் நடித்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் வருகின்றன.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் கடந்த 10-ந்தேதி திரைக்கு வந்த படம் "பராசக்தி".

    டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில் படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.

    விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:-

    படத்தை பார்த்து விட்டு குட்டி பையன் ஒருவன் தீ பரவட்டும், தமிழ் வாழ்க என்று வீடியோ அனுப்பி இருந்தான். அந்த அளவுக்கு மக்களிடம் பராசக்தி படம் சென்று அடைந்துள்ளது.

    நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரம் என்பதால் பராசக்தியை தேர்வு செய்தேன். பராசக்தி படத்தில் நடித்தது என் வாழ்நாள் பெருமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் ஸ்ரீலீலா பேசுகையில், பராசக்தி படத்தில் நடித்தது ரொம்ப திருப்தியாக இருக்கிறது. என்னுடைய நடனம், பாடலுக்கு பாராட்டுகள் வருவது எனக்கு பழகிவிட்டது. பராசக்தி படம் மூலமாக முதல் முறையாக நான் நடித்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் வருகின்றன. இது தமிழ் சினிமாவில் எனக்கு மிகச் சரியான அறிமுக படம் என தோன்றுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பல மொழி படங்களில் நடித்தாலும் கரகாட்டகாரன் படம்தான் அவரது தனி அடையாள சின்னமாக இருந்து வருகிறது.
    • தாயார் தேவிகா திடீர் இறப்பு அவரை நிலைகுலைய செய்தது.

    கரகாட்டகாரன் படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனகா. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியுடன் அதிசயபிறவி மற்றும் தங்கமான ராசா, பெரிய வீட்டுபண்ணைக்காரன், கும்பக்கரை தங்கய்யா, தாலாட்டு கேக்குதம்மா, சரத்குமாருடன் சாமுண்டி என அடுக்கடுக்காக படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார்.

    குறுகிய காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்தாலும் கரகாட்டகாரன் படம்தான் அவரது தனி அடையாள சின்னமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தாயார் தேவிகா திடீர் இறப்பு அவரை நிலைகுலைய செய்தது.

    இதைத் தொடர்ந்து அடையாரில் உள்ள அவரது வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். வீட்டோடு தனிமையில் வாழ்ந்து வந்த கனகாவை நடிகை குட்டி பத்மினி திடீரென சந்தித்து பேசினார். இருவரும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. புகைப்படத்தில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருந்தார்.

    இந்நிலையில் நடிகர் ராமராஜனை கனகா திடீரென தற்போது நேரில் சந்தித்து பேசி உள்ளார். ராமராஜன் வீட்டில் மதிய உணவும் சாப்பிட்டுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு கரகாட்டகாரன் ஜோடியின் திடீர் சந்திப்பு சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.

    • புத்தகம் படிக்கிற பழக்கம் நமக்கு இல்லை.
    • 2 புத்தகத்தையும் வாங்கி விட்டேன்.

    கத்துக்குட்டி, நந்தன் மற்றும் பல படங்களை இயக்கிய இரா.சரவணன் எழுதிய சங்காரம் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர்கள் சசிகுமார், சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சூரி பேசியதாவது:-

    சினிமாவிற்காக ஸ்கிரிப்டை படித்து விடுவேன். அது தொழிலுக்காக படிக்கிறது. புத்தகம் படிக்கிற பழக்கம் நமக்கு இல்லை. கடன் கொடுத்தவர் எதிரில் கூட தைரியமாக சென்று விடுவேன். புத்தகத்தை கொடுத்துவிட்டு தலைவா படித்து விட்டு சொல்லுங்க என்று சொல்வார்கள். எனக்கு பெரிய பதட்டமாகி விடும். அப்படிதான் சமுத்திரகனி ஒரு புத்தகத்தை கொடுத்தார்.

    அப்புறம் இன்னொரு புத்தகம் கொடுத்தார். 2 புத்தகத்தையும் வாங்கி விட்டேன். அப்புறம் அவரை பார்க்கும் போதெல்லாம் புத்தகத்தை படித்தியா என்று கேட்பாரே என சுற்றிக்கொண்டு போய் விடுவேன். அப்படியே திடீரென என சந்தித்து விட்டால். அய்யோ அண்ணே சூப்பர் அண்ணன் என்று கூறி விடுவேன். புத்தகம் என்பது சாதாரண விஷயம் இல்லை. நானும் இப்போது புத்தகம் படிப்பது மட்டுமின்றி அப்பாவின் வாழ்க்கை வரலாறை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றார். 

    • விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
    • வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான ‘மாநாடு’ படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'பராசக்தி'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 10-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

    இந்த நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'மாநாடு' படத்தை போல ஒரு வித்தியாசமான கான்செப்டில் உருவாக இருப்பதாகவும் அப்படத்தை விட 10 மடங்கு அதிக திகில் மற்றும் த்ரில்லுடன் இப்படம் இருக்கும் என்று படக்குழுவில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான 'மாநாடு' படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
    • மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஜன.21-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாள் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

    ஏற்கனவே இந்த வழக்கில் மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை படத்தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதனை தொடர்ந்தே 'ஜன நாயகன்' படம் தொடர்பான வழக்கு வரும் திங்ககிழமை (19.01.2026) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  

    • இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
    • ‘தாய் கிழவி’ அடுத்த மாதம் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு தெரிவித்து இருந்தது.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. டீசர் முழுவதும் நடிகை ராதிகா வயதான கெட்டப்பில் வந்து அடாவது செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    இதனை தொடர்ந்து 'தாய் கிழவி' அடுத்த மாதம் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், 'தாய் கிழவி' படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஓ.டி.டி. தளம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 'தாய் கிழவி' படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது.


    1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் கடந்த ஜனவரி 9 அன்று வெளியானது.

    இப்படத்தில் ரவி மோகனின் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்டோரும் இதில் சிறப்பாக நடித்துள்ளனர்.

    இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

    பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேலும் 2 நாட்களில் ரூ.51 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்நிலையில் பராசக்தி திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அளித்த அன்புக்கு நடிகர் ரவி மோகன் நன்றி கூறியுள்ளார்.

    அவர் வெளியிட்ட பதிவில், "பல நல்ல உணர்வுகளை இப்போது அனுபவித்து வருகிறேன். பராசக்தி திரைப்படத்தில் 'திரு' கதாபாத்திரத்திற்கு நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் காரணமாகவே இது சாத்தியமானது.

    உங்களையெல்லாம் மீண்டும், புதிய புதிய முயற்சிகளுடன் விரைவில் சந்திக்க வருகிறேன்.

    2026 ஆம் ஆண்டு உங்களுக்கெல்லாம் மிகச் சிறப்பானதாக அமைய என் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் தியேட்டர் சென்று படம் பார்த்த வீடியோவையும் ரவி பகிர்ந்துள்ளார். 

    • கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என நிபந்தனை விதித்தது.
    • இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

    தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் இன்று பராசக்தி படம் வெளியானது.

    பொங்கல் வெளியீடாக பராசக்தி மட்டும் வெளியான நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மற்ற படங்களும் திடீரென்று பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.

    கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படம் ரிலீஸ் அறிவிப்பால் கார்த்தியின் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாட தயாராகினர்.

    ஆனால் வா வாத்தியார் படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

    அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் பெற்ற ரூ.21.78 கோடியில் ரூ.3.75 கோடியை இன்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா செலுத்திய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த நிபந்தனையை விதித்தது.

    இத்தானில் படம் ஜனவரி 14 வெளியாகுமா என்ற கேள்வி எழுத்தது. இந்நிலையில், அனைத்து தடைகளும் கிளியரானதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் புதிய போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதில், 'வா வாத்தியார்' படம் வருகிற 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    ×