என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
    • 21 வயதான கர்நாடகாவை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரை SRH ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பேட் கம்மிஸ்ஸ் தலைமையில் பங்கேற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா காயம் காரணமாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆடம் ஜம்பாவிற்கு பதிலாக 21 வயதான கர்நாடகாவை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரான ஸ்மரண் ரவிச்சந்திரன் என்பவரை அவரது அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

    ஸ்மரண் ரவிச்சந்திரன் கர்நாடகா அணிக்காக இதுவரை 7 முதல்தர போட்டிகளில் விளையாடி 64 ரன்கள் சராசரியுடன் 500 ரன்கள் குவித்துள்ளார். அதில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு இரட்டை சதமும் அடங்கும். அதே போன்று லிஸ்ட் ஏ போட்டியில் 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 72 ரன்கள் சராசரியுடனும் 2 சதங்களுடனும் 433 ரன்களை குவித்துள்ளார்.

    அதேபோன்று 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 170 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 170 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • லக்னோ அணிக்கு எதிராக ரஷீத் 19 பந்தில் 27 ரன்கள் குவித்தார்.
    • ஒரு தவறான ஷாட்டால் அவுட்டாகிவிட்டேன்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை- லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக இளம் வீரர் ஷேக் ரஷீத் அறிமுகமானார். இவர் பவர்பிளேயில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 19 பந்தில் 27 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரி அடங்கும்.

    இந்நிலையில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ஷேக் ரஷீத் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்த வேண்டும் என்றே நினைத்தேன். ஒரு தவறான ஷாட்டால் அவுட்டாகிவிட்டேன். அடுத்தமுறை நிச்சயம் தவறை திருத்திக்கொள்வேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

    என ரஷீத் கூறினார்.

    • அவரது விக்கெட் கீப்பிங் எனக்கு எந்த விதமான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.
    • தோனி மிக நீண்ட காலமாக ஒரே மாதிரியாக விக்கெட் கீப்பிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை 19.3 ஓவரில் 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதுவரை மொத்தம் ஏழு போட்டிகளில் இரண்டாவது வெற்றியை சிஎஸ்கே பெற்று இருக்கிறது. இந்த போட்டியின் ஆட்டநாயகான சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் தோனி தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் எனவும், அவரது கேப்டன்சி துல்லியமாக இருந்ததாகவும் முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தோனி எப்போது ஒரு நகரத்தில் இருந்தாலும் அங்கு மிகவும் சத்தமாக இருக்கும். அவரது விக்கெட் கீப்பிங் எனக்கு எந்த விதமான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்பும் இதை சொல்லி இருக்கிறேன். இப்போதும் அவர் உலகின் மிகச்சிறந்த கீப்பர்.

    தோனி மிக நீண்ட காலமாக ஒரே மாதிரியாக விக்கெட் கீப்பிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அது மிகவும் அற்புதமானது. இன்று அவரது கேப்டன்சியும் துல்லியமாக இருந்தது. மிடில் ஓவர்களில் இரண்டு ஸ்பின்னர்களையும் பயன்படுத்திய விதம், ஓவர்களை வேகமாக வீசி முடித்தது அதன் மூலம் எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது என அவரது கேப்டன்சி சரியாக இருந்தது.

    இன்று நடந்த சிறந்த விஷயம் தோனியின் கேப்டன்சி தான். அவர் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டார். அதற்கு ஏற்ப மாற்றங்களை செய்தார். அவரது சுழற் பந்துவீச்சாளர்களை வரிசையாக வீசவைத்தார். இதைத்தான் தோனி தனது கிரிக்கெட் வாழ்வு முழுவதும் செய்து இருக்கிறார். ஒரு கேப்டனாக இன்று இரவு களத்தில் தோனி செயல்பட்ட விதம்தான் இந்த போட்டியை நமக்கு சிறப்பாக விவரிக்கும்.

    என்று மைக்கேல் கிளார்க் கூறினார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 243 ரன்கள் குவித்தார்.
    • பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றிருந்தார்.

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே, மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.

    சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில், மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் வென்றார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 243 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றிபெற ஸ்ரேயாஸ் ஐயர் பெரிதும் உதவினார்.

    பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் இந்த தொடரில் பவர்பிளேவில் மோசமாக விளையாடினோம்.
    • பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நாங்கள் நினைத்த தொடக்கத்தை பெறமுடியவில்லை.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    இப்போட்டியில் அதிரடி ஃபினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் அசத்திய கேப்டன் எம்.எஸ். தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    ஆட்ட நாயகன் விருது வென்ற பின்பு பேசிய டோனி, "இது போன்ற தொடர்களில் ஆடும் போது உங்களுக்கு வெற்றி என்பது மிகவும் முக்கியம். துரதிர்ஷ்டவசமாக ஆரம்ப கட்டங்களில் எங்களால் சரியாக விளையாட முடிய வில்லை. அதற்கு நிறைய விஷயங்களை சொல்லலாம். வெற்றி பெற்றது ஒட்டு மொத்த அணிக்கும் நம்பிக்கையை அளிக்கிறது.

    இதன் மூலம் எந்த துறையில் இன்னும் முன்னேற வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதற்கு இந்த வெற்றி உதவியாக இருக்கும். கிரிக்கெட்டில் நாம் நினைத்தது போல் நடக்க வில்லை என்றால் கடவுள் நமக்கு அனைத்தையும் கடினமாக மாற்றிவிடுவார். இந்த ஆட்டம் கூட எங்களுக்கு கடினமாகதான் இருந்தது.

    நாங்கள் இந்த தொடரில் பவர்பிளேவில் மோசமாக விளையாடினோம். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நாங்கள் நினைத்த தொடக்கத்தை பெறமுடியவில்லை. சில நேரங்களில் தவறான கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து விடுகின்றோம். இது எல்லாம் எங்கள் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது.

    சேப்பாக்கம் ஆடுகளமும் கொஞ்சம் தோய்வாக இருந்தது. நாங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியே விளையாடும்போது எங்கள் அணியின் பேட்டிங் நன்றாகவே இருக்கிறது. இதுபோன்ற பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாட வேண்டும் என்று நினைக்கின்றோம். இதன் மூலம் எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய ஷாட் ஆடுவதற்கான நம்பிக்கை கிடைக்கும்.

    இதேபோல அஸ்வின் மீது நாங்கள் அதிக நெருக்கடியை அளிக்கிறோம் என்று நினைக்கின்றேன்.முதல் 6 ஓவர்களில் அவர் 2 ஓவர்கள் வீசுகிறார். எனவே இந்த ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்து பார்ப்போம் என்று எங்களுக்கு தோன்றியது. பவுலிங் தாக்குதல் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதே போன்று பேட்டிங்கிலும் நாங்கள் இன்னும் கொஞ்சம் முன்னேற்றத்தை பெற வேண்டும்.

    ஷேக் ரசித் சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று நினைக்கின்றேன். அவர் சில ஆண்டுகளாக எங்கள் அணியில் இருந்தார். தற்போது அவருக்கு நல்ல தொடக்கம் கிடைத்து இருக்கிறது. இயல்பான ஷாட்களை ஆடியே அவர் பவுலர்களை ஆதிக்கம் செலுத்த முடியும். எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்திருக்கிறது. இதை சொன்னவுடன் எனக்கு ஏன் இந்த விருது தருகிறார்கள் என்று தான் யோசித்தேன். ஏனென்றால் நூர் அகமது அபாரமாக பந்துவீசினார்" என்று தெரிவித்தார். 

    • ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு மோதி இருக்கின்றன.
    • 21-ல் கொல்கத்தாவும், 12-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.

    விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்றிரவு நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

    பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் (குஜராத், லக்னோ, சென்னைக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (ராஜஸ்தான், ஐதராபாத்துக்கு எதிராக) சந்தித்துள்ளது. முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சபாப் 245 ரன்கள் குவித்த போதிலும் பந்து வீச்சு கைகொடுக்காததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 8 பவுலர்களை பயன்படுத்தியும் ஐதராபாத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இப்போது சொந்த ஊரில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் தயாராகியுள்ளனர். பஞ்சாப் அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (3 அரைசதத்துடன் 250 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (194 ரன்), பிரப்சிம்ரன் சிங், வதேரா பேட்டிங்கில் மிரட்டுகிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், மார்கோ யான்சென் வலு சேர்க்கிறார்கள். ஆனால் ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் இதுவரை ஜொலிக்கவில்லை. அவர்கள் பார்முக்கு வந்தால், பஞ்சாப் மேலும் வலிமையடையும்.

    ஓராண்டுக்கு முன்பு கொல்கத்தாவுக்கு ஐ.பி.எல். கோப்பையை வென்றுத்தந்து சாதனை படைத்த ஸ்ரேயாஸ் அய்யர், எதிர்பாராத திருப்பமாக அந்த அணியில் தக்க வைக்கப்படவில்லை. அதன் பிறகு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர், இப்போது தனது பழைய அணியை நேக்கு நேர் சந்திக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தின் போது காயத்தால் பாதியில் வெளியேறிய பஞ்சாப்பின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் (4 ஆட்டத்தில் 5 விக்கெட்) காயத்தன்மை தீவிரமாக இருப்பதால் அனேகமாக எஞ்சிய போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்று அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார். அவர் விலகுவது, பஞ்சாப்புக்கு சற்று பின்னடைவு தான்.

    கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி (ராஜஸ்தான், ஐதராபாத், சென்னைக்கு எதிராக), 3-ல் தோல்வி (பெங்களூரு, மும்பை, லக்னோவுக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 103 ரன்னில் சுருட்டிய கொல்கத்தா அணி அந்த இலக்கை 10.1 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. அதனால் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள். பேட்டிங்கில் கேப்டன் ரஹானே (204 ரன்), குயிடான் டி காக், சுனில் நரின், வெங்கடேஷ் அய்யரும், பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஆரோரா, ஹர்ஷித் ராணாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    மொத்தத்தில் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இந்த மைதானத்தில் நடப்பு சீசனில் நடந்துள்ள 2 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணி 200 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி பெற்றுள்ளன. அதனால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

    ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 21-ல் கொல்கத்தாவும், 12-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷசாங் சிங், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் அல்லது ஆரோன் ஹார்டி, மார்கோ யான்சென், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப்சிங், யாஷ் தாக்குர்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயின்டான் டி காக், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப்சிங், மொயீன் அலி, ஹர்ஷித் ராணா, வைபவ் ஆரோரா, வருண் சக்ரவர்த்தி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • லக்னோவுக்கு எதிரான போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார் சிஎஸ்கே கேப்டன் தோனி
    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஃபினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் தோனி அசத்தியிருந்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    இப்போட்டியில் அதிரடி ஃபினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் அசத்திய கேப்டன் எம்.எஸ். தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதன்மூலம் 43 வயதான எம்.எஸ். தோனி, ஐபிஎல் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற மிக வயதான வீரர் சாதனையை படைத்துள்ளார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    இப்போட்டியில் அதிரடி ஃபினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் அசத்திய கேப்டன் எம்.எஸ். தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதன்மூலம் 43 வயதான எம்.எஸ். தோனி, ஐபிஎல் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற மிக வயதான வீரர் சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி யில் பிரவீன் தாம்பே 42 வயது 208 நாட்களில் ஆட்ட நாயகன் விருது பெற்றதே சாதனையாக இருந்தது.

    6 ஆண்டுகளுக்கு பிறகு டோனிக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 2019-ல் டெல்லி கேப்பிடல்சுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் அவர் இந்த விருதை பெற்று இருந்தார்.

    ஆட்ட நாயகனை விருது வென்ற பின்பு பேசிய எம்.எஸ். தோனி, "எனக்கு ஏன் விருதை வழங்குகிறார்கள் என்றுதான் நினைத்தேன். நூர் அகமது மிகவும் சிறப்பாக பந்து வீசினார்.

    ஒட்டு மொத்தத்தில் டோனி 18-வது முறையாக ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் அவர் வீராட்கோலியை சமன் செய்தார். அதிகபட்சமாக ரோகித் சர்மா 19 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் டோனி, கோலி , யூசுப் பதான் (16), ஜடோஜா (16) ஆகியோர் உள்ளனர்.

    ஆட்ட நாயகனை விருது வென்ற பின்பு பேசிய எம்.எஸ். தோனி, "எனக்கு ஏன் விருதை வழங்குகிறார்கள் என்றுதான் நினைத்தேன். நூர் அகமது மிகவும் சிறப்பாக பந்து வீசினார்" என்று தெரிவித்தார்.

    • பும்ராவின் ஒரே ஓவரில் கருண் நாயர் 18 ரன்கள் விளாசினார்.
    • கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது.

    ஐபிஎல் தொடரில் 29 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி-மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக கருண் நாயர் இருந்தார். அவர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். அவருக்கு இந்த ஆண்டு இதுவே முதல் ஐபிஎல் போட்டியாகும்.

    அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர், ட்ரென்ட் போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் பவுண்டரி சிக்சர்களுமாக பறக்க விட்டார்.

    அந்த சூழலில் கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது. பும்ராவின் ஒரே ஓவரில் கருண் நாயர் 18 ரன்கள் விளாசினார். அந்த ஓவரில் 2 ரன்களுக்காக ஓடும் போது பும்ரா மீது எதிர்பாராத விதமாக கருண் நாயர் மோதினார். மோதியவுடன் கருண் நாயர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

    அந்த ஓவர் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்டது. அப்போது பும்ரா கருண் நாயர் அருகே சென்று அவரை சீண்டும் வகையில் பேசினார். தான் எந்த தவறும் செய்யவில்லை என தனது பக்க நியாயத்தை சொல்ல முன் வந்தார் கருண் நாயர்.

    நிலைமை எல்லை மீறி செல்வதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருண் நாயர் அருகே சென்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், டெல்லி-மும்பை போட்டி முடிந்த பின்பு ஜஸ்பிரித் பும்ராவும் கருண் நாயரும் சமாதானமாகி கட்டிப்பிடிக்கும் வீடியோவை டெல்லி அணி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    • எம்எஸ் தோனி லக்னோ வீரர் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங்க் செய்து வெளியேற்றினார்.
    • தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் 155 கேட்சுகளையும் 46 ஸ்டம்பிங்குகளையும் எடுத்துள்ளார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    இப்போட்டியில் எம்எஸ் தோனி லக்னோ வீரர் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங்க் செய்து வெளியேற்றினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 Dismissals செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி பெற்றுள்ளார்.

    தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் 155 கேட்சுகளையும் 46 ஸ்டம்பிங்குகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷேக் ரஷீத் 27 ரன்னிலும், ரவீந்திரா 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் பதிரனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் பதிரனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி வீரர்கள் ஷேக் ரஷீத் 27 ரன்களும், ரவீந்திரா 37 ரன்களும், திரிபாதி 9 ரன்களும், ஜடேஜா 7 ரன்களும், விஜய் சங்கர் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த துபே மற்றும் தோனி சிறப்பாக ஆடினர்.

    துபே 37 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 43 ரன்களும், தோனி 11 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.

    இறுதியில் சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    • மார்கிராம் 6 ரன்னிலும், பூரன் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • நூர் அகமது 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி லக்னோ அணியின் மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே சிஎஸ்கே-வுக்கு விக்கெட் கிடைத்தது. 3ஆவது பந்தில் பவுண்டரி அடித்த மார்கிராம், கடைசி வந்தில் ஆட்டமிழந்தார். கலீல் அகமது வீசிய பந்தை தூக்க அடிக்க முயன்றார் மார்கிராம். ராகுல் டெவாட்டியா சிறப்பாக கேட்ச் பிடித்தார்.

    அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் வழக்கத்திற்கு மாறாக திணறினர். கம்போஜ் 2ஆவது ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 3ஆவது ஓவரில் கலீல் அகமது 5 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    4ஆவது ஓவரில் மார்ஷ் ஒரு சிக்சரும், பூரன் ஒரு பவுண்டரியும் அடித்தனர். கடைசி பந்தில் பூரன் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதனால் 4 ஓவரில் லக்னோ 23 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. பூரன் 9 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3ஆவது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார்.

    லக்னோ முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ்- ரிஷப் பண்ட் ஜோடி மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் கொடுக்க முயன்றனர். இருந்தாலும் ஜடேஜா வீசிய 10ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் மிட்செல் மார்ஷ் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    4ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் ஆயுஷ் பதோனி ஜோடி சேர்ந்தார். 12.1 ஓவரில் லக்னோ அணி 100 ரன்னைத் தொட்டது. ஜடேஜா வீசிய 14ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் ஆயுஷ் பதோனி ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    5ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் அப்துல் சமாத் ஜோடி சேர்ந்தார். லக்னோ 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

    16ஆவது ஓவரில் லக்னோவிற்கு 9 ரன்கள் கிடைத்தது. 17வது ஓவரை நூர் வீசினார். இந்த ஓவரில் லக்னோ 3 ரன்கள் மட்டுமே அடித்தது. 18ஆவது ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தையும், 3ஆவதை பந்தையும் சிக்கருக்கு தூக்கினார். அத்துடன் 42 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் லக்னோவிற்கு 18 ரன்கள் கிடைத்தது. அத்துடன் 139 ரன்கள் எடுத்திருந்தது.

    19ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரில் 2 சிக்சருடன் 16 ரன்கள் அடித்தது லக்னோ. கடைசி ஓவரை பதிரனா வீசினார். 2ஆவது பந்தை பதிரானா வைடாக வீசினார். இதில் ஒரு ரன் எடுக்க முயன்றபோது அப்துல் சமாத் ரன்அவுட் ஆனார். அடுத்த பந்தில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். பண்ட் 49 பந்தில் 63 ரன்கள் எடுத்தார். இந்த ஓவரில் 11 ரன்கள் அடிக்க லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் அடித்துள்ளது.

    சிஎஸ்கே அணி சார்பில் பதிரனா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கலீல் அகமது மற்றும் கம்போஜ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • மார்கிராம் முதல் ஓவரில் ஆட்டமிழந்தார்.
    • பூரன் 8 ரன்னில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி லக்னோ அணியின் மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே சிஎஸ்கே-வுக்கு விக்கெட் கிடைத்தது. 3ஆவது பந்தில் பவுண்டரி அடித்த மார்கிராம், கடைசி வந்தில் ஆட்டமிழந்தார். கலீல் அகமது வீசிய பந்தை தூக்க அடிக்க முயன்றார் மார்கிராம். ராகுல் டெவாட்டியா சிறப்பாக கேட்ச் பிடித்தார்.

    அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் வழக்கத்திற்கு மாறாக திணறினர். கம்போஜ் 2ஆவது ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 3ஆவது ஓவரில் கலீல் அகமது 5 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    4ஆவது ஓவரில் மார்ஷ் ஒரு சிக்சரும், பூரன் ஒரு பவுண்டரியும் அடித்தனர். கடைசி பந்தில் பூரன் எல்.பி.டபிள்யூ ஆனார். இதனால் 4 ஓவரில் லக்னோ 23 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. பூரன் 9 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    லக்னோ முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்தது. இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே முதன்முறையாக பவர்பிளேயில் 50 ரன்களுக்கு கீழ் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது.

    ×