என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 112 ரன்களை அடிக்கமுடியாமல் 95 ரன்களுக்கு சுருண்டு கொல்கத்தா அணி தோல்வி
    • கடந்தாண்டு கொல்கத்தா நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி சேஸ் செய்து சாதனை படைத்திருந்தது

    ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

    இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் மிக குறைந்த ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.

    கடந்தாண்டு இதே கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஸ்கோரை சேஸ் செய்து பஞ்சாப் கிங்ஸ் அணி சாதனை படைத்திருந்தது. கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இமாலய இலக்கை 18.4 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி சேஸ் செய்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 112 ரன்களை அடிக்கமுடியாமல் 95 ரன்களுக்கு சுருண்டு கொல்கத்தா அணி தோல்வி
    • 16 ஆண்டுகளுக்கு சி.எஸ்.கே. அணியின் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் முறியடித்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

    இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் மிக குறைந்த ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.

    இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 116 ரன்கள் அடித்து வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு சி.எஸ்.கே. அணியின் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் முறியடித்துள்ளது.

    • டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 37 ரன்கள் எடுத்தார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் டி காக் 2 ரன்களும், நரைன் 5 ரன்களும், ரஹானே 17 ரன்களும், ரகுவன்ஷி 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

    • நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- சென்னை அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் சிஎஸ்கே சீட்டிங் செய்ததாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- சென்னை அணிகள் மோதின. இதில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் சென்னை அணி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது சென்னை அணி சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஒவ்வொரு போட்டியின் டாஸ் போடும் போது சொந்த மைதானத்தின் கேப்டன் டாஸ் சுண்டுவதும் எதிரணி கேப்டன் எதனை (H or T) தேர்வு செய்வார் என்பதை மைக்கிலும் கூறி வருவது வழக்கம். ஆனால் நேற்றைய போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பு தோனி ரிஷப் பண்ட் தோளில் தட்டிக் கொடுப்பார். அதன் பிறகு டாஸ் போடும் போது மைக்கில் கூறாமல் அருகில் இருந்த போட்டி நடுவரிடம் மட்டுமே தோனி கூறுவார்.

    தோனி கேட்டது டைல் என மைக்கில் கூறப்பட்டது. டாஸில் ஹெட் இருந்தது. ஆனால் தோனிதான் டாஸ் வென்றதாக கூறப்பட்டது. இன்னோரு முக்கியமான விஷயாமாக, டாஸ் சுண்டியதும் நான் தான் டாஸ் வெல்வேன் என்பது போல ரிஷப் பண்ட்டிடம் தோனி ஜாலியாக விளையாடுவார். ஜாலியாக இருந்தாலும் இத்தனை விஷயங்கள் நடக்கும்போது சிறிது சந்தேகம் ஏற்படுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் பலர் தோனிக்காக இந்த போட்டியை விட்டுக்கொடுத்தது போல இருந்ததாகவும் சிலர் விளக்கத்துடன் கூறி வருகின்றனர்.

    கிரிக் இன்போ புள்ளிவிவரங்களின்படி 2020 முதலே தோனி ஸ்பின்னுக்கு எதிராக ஸ்ட்ரைக் ரேட் 94 தான் வைத்துள்ளார். வேகப்பந்து வீச்சை ஏன் கொடுத்தீர்கள். தோனிக்கு ஸ்பின் பந்து வீச்சை ஆட வரவில்லை என்றால் ஸ்பின்னைத்தானே கொடுக்க வேண்டும், அதுதானே லாஜிக் என தெரிவித்து வருகின்றனர். 

    • பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார்.
    • கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதிவருகின்றனர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா 22, ஷ்ரேயாஸ் 0 என ஒரே ஓவரில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • பதிரனா வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்தில் அப்துல் சமதை தோனி அவுட் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
    • அப்போட்டியின் முடிவில் அதை எப்படி செய்தீர்கள் என்று ரிஷப் பண்ட் ஆச்சர்யமாக கேட்டார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவை 5 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்து தங்களது 2வது வெற்றியை பெற்றது.

    முன்னதாக அந்தப் போட்டியில் எம்எஸ் தோனி விக்கெட் கீப்பிங்கில் தலா 1 கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட் செய்து வெற்றியில் பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக பதிரனா வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்தில் அப்துல் சமதை அவர் அவுட் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

    இந்நிலையில் அப்போட்டியின் முடிவில் அதை எப்படி செய்தீர்கள் என்று ரிஷப் பண்ட் ஆச்சர்யமாக கேட்டார். அதற்கு தோனி. "சாதாரணமாக ஸ்டம்பை பார்த்து பந்தை தூக்கி எறிந்தேன். அது ஒன்று அடிக்கலாம் அல்லது தவறப்படலாம். அது போன்ற மனநிலையில் தான் பந்தை எறிந்தேன்" என்று சொன்னார்.

    அதைக் அருகில் இருந்த கேட்ட லக்னோ ஆலோசர் ஜஹீர் கான் "அவ்வளவு சுலபமாவா செய்தீர்கள்?" என்ற வகையில் ஆச்சரியத்துடன் தோனி போல வெறுங்கை யை தூக்கி எறிந்து செய்துப் பார்த்தார். இறுதியில் ரிஷப் பண்ட் "நான் ரன் எடுப்பதற்காக வேகமாக ஓடினேன். அப்போது ரன் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்துடன் திரும்பிச் சென்றேன்" என தோனியிடம் ஜாலியாக கூறினார்.

    • நீங்கள் போதை பழக்கத்தை விட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் ஏற்கனவே கூறியிருந்தார்.
    • வினோத் காம்ளி உடல் நலத்தை கருத்தில் கொண்டு போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு இருக்கிறார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் தொடக்க வீரராக இருந்தவர் வினோத் காம்ளி. சச்சின் டெண்டுல்கரின் இளம் வயது நண்பராக இருந்த வினோத் காம்ளி இந்திய அணிக்காக 104 சர்வதேச ஒருநாள் போட்டிகளும், 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

    திறமை வாய்ந்த வீரராக உருவெடுத்த வினோத் காம்ளி, போதை பழக்கத்திற்கு ஆளாகி பல்வேறு சிக்கல்களை சந்தித்தார். இதன் காரணமாக வினோத் காம்ளிக்கு உடல் நலத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தமக்கு உதவி தேவைப்படுவதாக வினோத் காம்ளி வெளிப்படையாக அறிவித்திருந்தார். இந்த சூழலில் வினோத் காம்ப்ளியின் நிலையைப் பார்த்த கவாஸ்கர் உங்களுக்கு உதவி செய்ய தான் தயாராக இருப்பதாகவும், எனினும் அதற்கு முதலில் நீங்கள் போதை பழக்கத்தை விட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    தற்போது வினோத் காம்ளி உடல் நலத்தை கருத்தில் கொண்டு போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு இருக்கிறார். இதனையடுத்து சுனில் கவாஸ்கர் நடத்தி வரும் சேம்ப்ஸ் என்ற அறக்கட்டளையிலிருந்து மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் வினோத் காம்ளிக்கு வழங்க முடிவெடுத்திருக்கிறார். இதேபோன்று வினோத் காம்ளியின் மருத்துவ செலவுக்காக ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் தரவும் கவாஸ்கர் அறிவித்திருக்கிறார்.

    அவர் வினோத் காம்ளிக்கு உதவ முன்வந்திருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனால் கோடி கோடியாக சம்பளம் பெறும் சச்சின், கோலி போன்ற வீரர்கள் யாரும் வினோத் காம்ளிக்கு உதவ முன் வரவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் 2-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.
    • கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி 3-ல் தோல்வியும் அடைந்துள்ளது.

    விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 18-வது ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் (குஜராத், லக்னோ, சென்னைக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (ராஜஸ்தான், ஐதராபாத்துக்கு எதிராக) சந்தித்துள்ளது.

    கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி (ராஜஸ்தான், ஐதராபாத், சென்னைக்கு எதிராக), 3-ல் தோல்வி (பெங்களூரு, மும்பை, லக்னோவுக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் இருக்கிறது.

    ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 21-ல் கொல்கத்தாவும், 12-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.


    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெர்குசனுக்கு காயம் ஏற்பட்டது.
    • நடப்பு ஐபிஎல் தொடரில் நான்கு ஆட்டங்களில் விளையாடிய பெர்குசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் வலிமையான அணிகளில் ஒன்றாக திகழும் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று 2-ல் தோல்வி அடைந்து 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

    இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 2 பந்துகளை மட்டுமே வீசிய லாக்கி பெர்குசன், தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதான் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் நான்கு ஆட்டங்களில் விளையாடிய பெர்குசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
    • ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபராக தோனி சாதனை படைத்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி முதலில் ரன்களை குவித்தாலும் அடுத்த சிறிது நேரத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த நிலையில் தோனி, ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறவைத்தனர்.

    இந்தப் போட்டியில் கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட், கேப்டன்சி, பேட்டிங் என அசத்திய தோனிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபராக தோனி சாதனை படைத்துள்ளார்.

    இது மட்டுமில்லாமல் சேஸிங்கில் 30 முறை நாட் அவுட் (ஆட்டமிழக்காமல்) இருந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். மொத்தமாக 41 முறை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி அதில் 30 முறை ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.

    வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்தவர்கள்:-

    1. எம்.எஸ்.தோனி -30

    2. ரவீந்திர ஜடேஜா - 27

    3. தினேஷ் கார்த்திக் -24

    4. டேவிட் மில்லர் - 23

    5. விராட் கோலி - 22

    • இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் தொடரிலும், டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
    • இந்த தொடர் ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 25-ந் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரானது ஜூன் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

    இதனையடுத்து இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி அட்டவணையானது இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஆகஸ்ட் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்வார் என்றும் ஒருநாள் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மாவுக்கு ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    வங்கதேசம் - இந்தியா தொடர் அட்டவணை

    முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 17, மிர்பூர்

    இரண்டாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 20, மிர்பூர்

    மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 23, சட்டோகிராம்

    முதல் டி20 போட்டி - ஆகஸ்ட் 26, சட்டோகிராம்

    இரண்டாவது டி20 போட்டி - ஆகஸ்ட் 29, மிர்பூர்

    மூன்றாவது டி20 போட்டி - ஆகஸ்ட் 31, மிர்பூர்

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
    • 21 வயதான கர்நாடகாவை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரை SRH ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பேட் கம்மிஸ்ஸ் தலைமையில் பங்கேற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா காயம் காரணமாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆடம் ஜம்பாவிற்கு பதிலாக 21 வயதான கர்நாடகாவை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரான ஸ்மரண் ரவிச்சந்திரன் என்பவரை அவரது அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

    ஸ்மரண் ரவிச்சந்திரன் கர்நாடகா அணிக்காக இதுவரை 7 முதல்தர போட்டிகளில் விளையாடி 64 ரன்கள் சராசரியுடன் 500 ரன்கள் குவித்துள்ளார். அதில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு இரட்டை சதமும் அடங்கும். அதே போன்று லிஸ்ட் ஏ போட்டியில் 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 72 ரன்கள் சராசரியுடனும் 2 சதங்களுடனும் 433 ரன்களை குவித்துள்ளார்.

    அதேபோன்று 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 170 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 170 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×