என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மூன்று டி20, ஒருநாள் தொடர்: வங்கதேசம்- இந்தியா மோதும் அட்டவணை வெளியீடு
    X

    மூன்று டி20, ஒருநாள் தொடர்: வங்கதேசம்- இந்தியா மோதும் அட்டவணை வெளியீடு

    • இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் தொடரிலும், டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
    • இந்த தொடர் ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 25-ந் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரானது ஜூன் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

    இதனையடுத்து இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி அட்டவணையானது இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஆகஸ்ட் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்வார் என்றும் ஒருநாள் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மாவுக்கு ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    வங்கதேசம் - இந்தியா தொடர் அட்டவணை

    முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 17, மிர்பூர்

    இரண்டாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 20, மிர்பூர்

    மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 23, சட்டோகிராம்

    முதல் டி20 போட்டி - ஆகஸ்ட் 26, சட்டோகிராம்

    இரண்டாவது டி20 போட்டி - ஆகஸ்ட் 29, மிர்பூர்

    மூன்றாவது டி20 போட்டி - ஆகஸ்ட் 31, மிர்பூர்

    Next Story
    ×