என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் தொடரில் இருந்து பெர்குசன் விலகல்- பஞ்சாப் அணிக்கு பின்னடைவு
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெர்குசனுக்கு காயம் ஏற்பட்டது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் நான்கு ஆட்டங்களில் விளையாடிய பெர்குசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் வலிமையான அணிகளில் ஒன்றாக திகழும் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று 2-ல் தோல்வி அடைந்து 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 2 பந்துகளை மட்டுமே வீசிய லாக்கி பெர்குசன், தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதான் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நான்கு ஆட்டங்களில் விளையாடிய பெர்குசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.






