என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

Best Finisher.. தோனிக்கு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ஐபிஎல் நிர்வாகம்
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
- ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபராக தோனி சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி முதலில் ரன்களை குவித்தாலும் அடுத்த சிறிது நேரத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த நிலையில் தோனி, ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறவைத்தனர்.
இந்தப் போட்டியில் கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட், கேப்டன்சி, பேட்டிங் என அசத்திய தோனிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபராக தோனி சாதனை படைத்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் சேஸிங்கில் 30 முறை நாட் அவுட் (ஆட்டமிழக்காமல்) இருந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். மொத்தமாக 41 முறை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி அதில் 30 முறை ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்தவர்கள்:-
1. எம்.எஸ்.தோனி -30
2. ரவீந்திர ஜடேஜா - 27
3. தினேஷ் கார்த்திக் -24
4. டேவிட் மில்லர் - 23
5. விராட் கோலி - 22






